Sunday, February 28, 2010

வாய் விட்டு சிரியுங்க..

1)ஆசிரியர்- (மாணவனிடம்) ஏண்டா..அவன் உன்னை Blade ன்னு..திட்டினதற்கு..அவன் கிட்ட சண்டை போடலாமா?
மாணவன்-அவன் என்னை வெறும Blade ன்னு சொல்லி இருந்தா சண்டை போட்டிருக்க மாட்டேன்..சார்..வாத்தியாரைப் போல நீயும் ஒரு Blade ன்னான்

2)தலைவர் திடீர்னு நீச்சல் கத்துக்க ஏன் ஆசைப்படறார்..
தன் கட்சி 'தேசிய நீரோட்டத்தில்' கலக்கும்னு சொல்லிட்டாராம்..அதனால்தான்

3)இடைத்தேர்தல்னா என்னென்னு தலைவருக்குத் தெரியல
எதை வைச்சு சொல்ற
இடைத் தேர்தல்ல வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்போம்ங்கறாரே!

4)தயாரிப்பாளர்- (இயக்குநரிடம்) நம்மப் படத்தைப் பார்க்கற ரசிகர்களிடையே..படத்தில் நான் ரசித்தக் காட்சின்னு ஒரு போட்டி வைக்கலாம்..அதை எழுதி அனுப்புபவருக்கு ஒரு லட்சம் பரிசு வழங்குவோம்னா.. படம் ஒடும்
இயக்குநர்- அப்படி யாராவது எழுதி அனுப்பிட்டா..
தயாரிப்பாளர்-நம்ம படத்தில அப்படி ரசிக்கற காட்சிதான் எதுவுமே இல்லையே

5)எல்லாருடைய வீட்டிலும் திருடறவங்க..அரசியல்வாதிங்க வீட்ல மட்டும் ஏன் திருடறதல்ல
சக தொழில் செய்யறவங்க வீடாச்சேன்னுதான்

6)சார்..நான் பழைய பஞ்சாங்கம் தான்..என்னை சுறுசுறுப்பு பத்தாது,காலி பெருங்காய டப்பா..அப்படி..இப்படின்னு என்ன வேணும்னா திட்டுங்க..ஆனா தயவு செஞ்சு போடா பொதிகைன்னு திட்டி இழிவு படுத்தாதீங்க..

11 comments:

vasu balaji said...

:)). அநியாய லொள்ளு சார். அதும் பொதிகை பாவம் பாவம்:))

Anonymous said...

:0

மங்குனி அமைச்சர் said...

public 1: நம்ம தமிழா தமிழா ப்ளாக்-ல இன்னைக்கு ஏன்டா இவ்வளவு கூட்டம்.
public 2:நேத்து நைட் யாரோ அவரு ப்ளாக்-ல திருட்டுத்தனமா ஜோக் எழுதிட்டு போயிட்டாங்களாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Chitra said...
:-)//

வருகைக்கு நன்றி Chitra

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வானம்பாடிகள் said...
:)). அநியாய லொள்ளு சார். அதும் பொதிகை பாவம் பாவம்:))//

வருகைக்கு நன்றி bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சின்ன அம்மிணி said...
:0//

:0 ???

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
public 1: நம்ம தமிழா தமிழா ப்ளாக்-ல இன்னைக்கு ஏன்டா இவ்வளவு கூட்டம்.
public 2:நேத்து நைட் யாரோ அவரு ப்ளாக்-ல திருட்டுத்தனமா ஜோக் எழுதிட்டு போயிட்டாங்களாம்//

அட..இது கூட நல்லாயிருக்கு

சிநேகிதன் அக்பர் said...

1,4 சூப்பர்
மற்றவையும் அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

"உழவன்" "Uzhavan" said...

5ம் 6ம் அட்டகாசம் :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி உழவன்