Wednesday, March 10, 2010

உண்மையான துறவிகள் யார்..ஒரு விளக்கம்


திருமணம் முடித்து..குழந்தை பெற்று, வியர்வை சிந்தி உழைத்து ஊதியம் பெற்று..வாழ்வை சிறப்பாக அனுபவித்தவர்கள் மட்டுமே துறவியாக இருப்பதற்கும், குருவாக வாழவும் தகுதியுள்ளவர்கள் ஆவர்.

உண்ணாமல்..உறங்காமல் தவ நிலையில் பதினான்கு ஆண்டுகள் விழித்திருந்து நினைத்தபோது பரம்பொருளை தெய்வீகக் கண்களால் பார்க்கவும்..உணரவும் முடிய வேண்டும்.

நாளை நடக்கப்போவதை இன்றே அறந்து கொள்ளும் சூட்சமம்..எந்த குருவிடமும் கற்றுக்கொள்ளாமல் இறை அருளால் ஆய கலைகள் கற்றுத் தேர்ந்திருத்தல்..

அரையாடை தவிர சொந்தமென எதுவும் இல்லாத பற்றற்ற தன்மை.

புற்படுக்கையும், வானமே கூறையெனவும் பாதணி அணியாமலும் இருத்தல்

நாடிவந்த சீடர்களுக்கு தனக்குத் தெரிந்ததை பிரதிபலன் எதிர்பாராது கற்றுக் கொடுத்தல்

இறைவனுக்கு நடுவே இடைத்தரகர் என்றில்லாமல், பூஜைகள், புனஸ்காரங்கள், சடங்குகள் செய்விக்க மக்களுக்கு பயிற்சி அளித்தல்

தானாக கிடைக்கும் பொருட்களை மறுகணமே தானமாக வழங்கிவிடல்

மூன்று மாதங்களுக்கு மேல் ஓர் இடத்தில் தங்காமை மற்றும் கடல் கடந்து செல்லாமை

உயிரினங்கள் அனைத்தையும் சமமாக பாவித்தல்.இறைவனை நம்பாதவர் மற்றும் மாற்றுக் கருத்து உடையவர்க்கு எவ்வித சாபமும், பாபமும் சுமத்தாமை

ஒருவேளை உணவு, ஒரு ஜாம தூக்கம், கோபமில்லா பேச்சு இவையே தேவையான முக்குணங்கள்

சாதாரண மனிதர் போல உணவு, தூக்கம்,பிணி,துன்பம் அண்டாமல் எல்லாவகையிலும் ஒரு படி உயர்ந்து இருத்தல்..தனக்கென்றோ, தன் சீடர்களுக்கென்றோ அல்லது தங்களை மதிக்கும் மக்கள் கூட்டத்திற்கென்றோ சொந்தமாக கட்டிடம், செல்வம் சேர்க்காமலிருத்தல்.

தன்னை வணங்குபவர்களைக் கண்டு சீறிவிழும் பாம்பாய் இருத்தல்.ஏனெனில் வணக்கம் பெற தகுதி படைத்தவர் இறைவன் மட்டுமே..


மேலே சொன்னவை கடைப்பிடிப்பவர்கள் மட்டுமே உண்மையான சாமியார் என்கின்றது வேதங்கள்.

(சமிபத்தில் நான் இவற்றை ஒரு புத்தகத்தில் படித்தேன்)

கையில் இருந்த சில்லறைக் காசுகளையும் குளத்தில் வீசிவிட்டு தபசில் ஆழ்ந்த ரமணர், 'காசும்,பணமும் ஆட்கொல்லி' என்றார்

பக்கத்தில் ஒரு குச்சி..கையில் விசிறி..இரண்டு சிரட்டைகள் ஆகியவற்றை மட்டுமே சொத்தாய் வைத்திருந்த யோகி ராம்சுரத்குமார்' ஐ யாம் எ பெக்கர். உனக்கும் சேர்த்து ஆண்டவனிடம் பிச்சை கேட்கிறேன்' என்பார். (நன்றி-விகடன்)

39 comments:

goma said...

மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம் பழித்தது ஒழித்து விடின்

ரெண்டு வரிகளில் அழகாக சொல்லியிருக்கிறார்

Sivamjothi said...

I feel it's applicable to olden days. Kings at those time took care of people(lived for people) and there were no issues(unlike now).

Today's kings are not ready to take care of people. They are filling their pockets(most of them).

Today's populations is also more.

Then who will take care of the problem of people?

Only selfless person can do it. If we see from out it may look like todays saints earned money like anything.

They always think about people and worry about them. Each and every activity they will do for others.

I think true morden saints also don't stay in a place for long time.


Time is becoming worse. Lots of stress are there for people. TV bombards programs induces sex feelings. You need some place to filter them out.

I feel philosophy are not applicable to all the time. It should be applicable to a situation.

பின்னோக்கி said...

இந்த நேரத்திற்கு தேவையானதை எழுதியிருக்கிறீர்கள்

பின்னோக்கி said...

இந்த நேரத்திற்கு தேவையானதை எழுதியிருக்கிறீர்கள்

வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

http://davidgodman.org/rteach/atiasrami1.shtml

இந்த லிங்க் துறவிகளைப் பற்றி தெரிய உதவும்.

பித்தனின் வாக்கு said...

நீங்கள் சொல்வது உண்மைதான். கடவுளும் கோவில்கள் தொடரில் சாமியார்கள் பற்றி எழுதும் போது சொல்லலாம் என்று இருந்தேன். மிக நல்ல கருத்துக்கள்.

அய்யா இப்ப புதுசா ஒரு சாமியார் வந்துருக்கார். அவர் ஆசி வேணுமின்னா என் பதிவில் வந்து சிரித்து விட்டுப் போங்க. நன்றி.

Ashok D said...

ஆச்சரியம் சார் ஒரு பாயிண்ட தவிர மத்தெல்லாம் எனக்கும் பெருந்துகிறது :)

இப்படிக்கு
இன்னொரு துறவி

சிநேகிதன் அக்பர் said...

நீங்க சொல்றதுக்கு எதிர்மறையா இருந்த தான் மக்கள் ஏத்துகிடுவாங்க சார்.

என்னா நல்ல சாமியார்கள்ட்ட மக்களோட பேராசையை சொன்னா அவர் அது நடக்காதுன்னு சொல்வார். நம்ம மக்களுக்கு உண்மையை சொல்றவங்களை பிடிக்காது. (என்னையும் சேர்த்து)

நல்ல பகிர்வுக்கு நன்றி சார்.

vasu balaji said...

ம்கும். இதுக்கு சம்சாரியாவே இருந்துட்டு போலாம்னு இருப்பாங்க சார். :))

மங்குனி அமைச்சர் said...

சாரி தல இது நமக்கு தெரியாத , தெரிஞ்சுக்க விரும்பாத ஆன்மிக சப்ஜெக்ட் , சோ நோ கமெண்ட்ஸ்

ரவி said...

அந்த திருவண்ணாமலையில் இருந்து வந்தவர் தான் இவரும் என்று நினைக்கும்போது வேதனை தான் மிஞ்சுகிறது.

கட்டபொம்மன் said...

அருமையான கருத்துக்கள்..

Starjan (ஸ்டார்ஜன்) said...

போலிச்சாமியார் வேஷம் இனியாரும் போடமுடியாது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இங்கு தரப்பட்ட தரவு சட்டதிட்டத்தின் படி இப்போ சாமியோ? ஞானியோ? இல்லை.
இந்த காவிக்கே வருவது அவர்கள் நோகாமல் யாவற்றையும் அனுபவிக்கவே.
மேலும் வாசித்த விடயத்தை, (தமிழ் ஓவியா என நினைக்கிறேன். ) தெளிவுறவே உங்களுடன்
கேட்கிறேன். ரமணர் ,ரமண ஆச்சிரமச் சொத்துக்களை அவர் சகோதரர் பெயரில் எழுதி வைக்க முற்பட்டபோது
அவர் தொண்டர்கள் விரும்பாது; நீதிமன்றம் சென்றபோது; நீதி மன்றத்தில் துறவிக்குச் சொந்த பந்தமில்லை என வழக்கறிஞர் வாதிட்டபோது; நான் துறவியில்லை எனக் கூறி, சகோதரருக்கு ஆச்சிரம
சொத்தைச் சேர்க்க முற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இச் சம்பவம் நடந்ததா? அல்லது திரிக்கப்பட்டதா?
விளக்கவும்.

வீரராகவன் said...

திரு.யோகன் பாரிஸ் அவர்களே, இரமணரை பற்றிய செய்தியில் தவறு உள்ளது. அவரது தாயார் பலமுறை கேட்டும் மன்றாடியும் துறவு நிலையிலிருந்து மாறாதவர். அவரது சகோதரர் இரமணரின் மறைவுக்கு பின்னரே சொத்து பற்றி வழக்கு தொடுத்தார். இன்னும் திருச்சுழியில் இரமணர் வீட்டில் உறவினர்கள் ஆக்ரமித்துள்ளனர். அவரது திருச்சுழியில் உள்ள மான்கள் உலாவும் தபோவனம் ஆசிரம பரமாரிப்பில்தான் உள்ளது. அவர் இருந்தவரை பற்றற்றவராகத் தான் இருந்து இறந்தார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

அழகாக சொல்லிட்டீங்க கோமா..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Balu

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின்னோக்கி said...
இந்த நேரத்திற்கு தேவையானதை எழுதியிருக்கிறீர்கள்//

நன்றி பின்னோக்கி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வந்தவாசி ஜகதீச பாகவதர் said...
http://davidgodman.org/rteach/atiasrami1.shtml

இந்த லிங்க் துறவிகளைப் பற்றி தெரிய உதவும்.//

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி வந்தவாசி ஜகதீச பாகவதர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//D.R.Ashok said...
ஆச்சரியம் சார் ஒரு பாயிண்ட தவிர மத்தெல்லாம் எனக்கும் பெருந்துகிறது :)

இப்படிக்கு
இன்னொரு துறவி//

அசோகானந்தாவின் வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
நல்ல பகிர்வுக்கு நன்றி சார்.//

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
ம்கும். இதுக்கு சம்சாரியாவே இருந்துட்டு போலாம்னு இருப்பாங்க சார். :))//

:)))

வருகைக்கு நன்றி Bala

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்குனி அமைச்சர் said...
சாரி தல இது நமக்கு தெரியாத , தெரிஞ்சுக்க விரும்பாத ஆன்மிக சப்ஜெக்ட் , சோ நோ கமெண்ட்ஸ்//

நோ கமெண்ட்ஸ் :))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//செந்தழல் ரவி said...
அந்த திருவண்ணாமலையில் இருந்து வந்தவர் தான் இவரும் என்று நினைக்கும்போது வேதனை தான் மிஞ்சுகிறது.//

என்ன செய்வது ரவி..ம்..ம்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கட்டபொம்மன் said...
அருமையான கருத்துக்கள்....//

நன்றி கட்டபொம்மன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
போலிச்சாமியார் வேஷம் இனியாரும் போடமுடியாது.//
வருகைக்கு நன்றி Starjan

T.V.ராதாகிருஷ்ணன் said...

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இங்கு தரப்பட்ட தரவு சட்டதிட்டத்தின் படி இப்போ சாமியோ? ஞானியோ? இல்லை.
இந்த காவிக்கே வருவது அவர்கள் நோகாமல் யாவற்றையும் அனுபவிக்கவே.
மேலும் வாசித்த விடயத்தை, (தமிழ் ஓவியா என நினைக்கிறேன். ) தெளிவுறவே உங்களுடன்
கேட்கிறேன். ரமணர் ,ரமண ஆச்சிரமச் சொத்துக்களை அவர் சகோதரர் பெயரில் எழுதி வைக்க முற்பட்டபோது
அவர் தொண்டர்கள் விரும்பாது; நீதிமன்றம் சென்றபோது; நீதி மன்றத்தில் துறவிக்குச் சொந்த பந்தமில்லை என வழக்கறிஞர் வாதிட்டபோது; நான் துறவியில்லை எனக் கூறி, சகோதரருக்கு ஆச்சிரம
சொத்தைச் சேர்க்க முற்பட்டதாக கூறப்பட்டிருந்தது. இச் சம்பவம் நடந்ததா? அல்லது திரிக்கப்பட்டதா?
விளக்கவும்.//

ரமணர் இருந்தவரை அப்படி ஏதும் நடந்ததாகத் தேரியவில்லை..
வீரராகவன் பின்னூட்டம் உங்களுக்கான பதிலாக எடுத்துக் கொள்ளவும்

வருகைக்கு நன்றி யோகன் பாரிஸ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி வீரராகவன்

Unknown said...

//பூஜைகள், புனஸ்காரங்கள், சடங்குகள் செய்விக்க மக்களுக்கு பயிற்சி அளித்தல்
//

இதன்படி சித்தர்கள் துற்விகளாக முடியா. அவர்கள் பூஜை, புனஸ்காரங்கள, சடங்குகளை மறுத்தவர்கள்.

Unknown said...

//மாற்றுக் கருத்து உடையவர்க்கு எவ்வித சாபமும், பாபமும் சுமத்தாமை
//

//தன்னை வணங்குபவர்களைக் கண்டு சீறிவிழும் பாம்பாய் இருத்தல்//

Conflict?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ellaichaami

? said...
This comment has been removed by the author.
? said...

யோகன் பாரிஸ்-க்கு வீரராகவன் தந்த விளக்கம் சரியானதில்லை போலுள்ளது. நித்யானந்தாருக்கு சிஷ்யனாகி ஆப்பு வைத்த லெனினைப் போல் ரமணருக்கு பெருமாள் சுவாமி!
ரமணர் ஆசிரம சொத்துக்களை சகோதரரின் கஸ்டடிக்கு விட்டுவிட்டாராம். இப்போதும் ஆசிரமத்தை ரமணரின் சகோதரரின் குடும்பத்தினர்தான் நிர்வகிப்பதாக தெரிகிறது.
1. http://nonspiritual.net/Ramana_Maharishi#cite_note-5
2. http://www.sriramanamaharshi.org/ramanasramam.html
3. http://www.davidgodman.org/rteach/atiasrami1.shtml

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நான் வாசித்தறிந்த ரமணர் சொத்துப் பிரச்சனை பற்றி திரு.வீரராகவன்; திரு.நந்தவனத்தான் இருவருமே
இரு வேறு நிலையில் நிற்கிறார்கள். நான் மேலும் குழம்பி விட்டேன். ஆங்கிலத்தைத் தெளிவாகப் புரியுமறிவு இல்லை. அதனால் ஆங்கிலத் தளங்களைச் சென்று ஆயமுடியாது. எனவே யாராவது இதை
ஆய்ந்து தமிழில் தெளிவு படுத்தவும்.
எவருமே தயவு செய்து பற்றுதலால் உண்மையை மறைக்கவும் வேண்டாம்; வெறுப்பால் பொய்யுரைக்கவும் வேண்டாம்.
உண்மையைத் தெரியத் தாருங்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

எனக்குத் தெரிந்தவரையில் ரமணரின் சகோதரர்..ஆஸ்ரம கட்டடங்களைப் பராமரிக்கும் வேலையிலும்..ஆஸ்ரமத்தின் நடவடிக்கைகளையும் பார்த்து வந்தார்.1953ல் அவர் இறக்க..அவர் மகன் பார்த்தார்..1994ஆம் ஆண்டு அவரும் ஓய்வு பெற (ஞாபகம் வைக்கவும்..ரிடைர்மெண்ட்)அவரது மகன் மேற்பார்வையில் ஆஸ்ரமம் நடந்து வருகிறது..ரமணரைப் பொறுத்தவரை கடைசி வரை பற்றற்றே இருந்தவர்

? said...

திரு.யோகன் பாரிஸ் உங்களைப் போலவே ஆர்வத்தின் காரணமாகவே இதை தேடி படித்தேன். உண்மை அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். 1930-ல் பெருமாள் ஸ்வாமி எனும் சிஷ்யர் மடத்தினை நிர்வகித்து வருகிறார். ரமணர் அவரது பொறுப்பினை பறித்து சகோதரர் சின்னஸ்வாமிக்கு தருகிறார். பெருமாள் ஸ்வாமி நீதிமன்றம் சென்று, ரமணர் துறவி ஆதலால் அவருக்கு சொத்துரிமை இல்லை, தனது சகோதரை ரமணர் நிர்வாகியாக நியமித்தது தவறு, தானே இன்னமும் நிர்வாகி என வழக்காடுகிறார். ரமணர் கோர்ட்டில் தான் துறவி அல்லன், குடும்பஸ்தனும் அல்லன் இவையனைத்தையும் கடந்தவன் (அதிதர்மத்தினை கடை பிடிப்பவன்).ஆதலின் எனக்கு சொத்துரிமை உண்டு. எனச்சொல்லி ஆசிரம சொத்துக்களை தம்பியின் பராமரிப்பில் விடுகிறார். பராமரிக்க வேறு சிஷ்யரே கிடைக்கவில்லையா? அவருக்கு பிறகு அவர்களின் குடும்ப சொத்தாகிவிட்டது ஆசிரமம். இதனை எப்படி பார்க்கிறோம் என்பது நமது பார்வையினை பொறுத்தது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//ஊரார், உலகத்தார் கொட்டிக் கொடுத்த கோடி கோடி ரூபாய் சொத்துக்களை எல்லாம் பகவான் ரமணர் தனது தம்பி வாசுதேவன் பெயருக்கே உயில் எழுதி வைத்தார்.

இந்தச் செய்தி வெளிவந்தபோது திருவண்ணாமலை மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் பகவான் - பொதுச் சொத்தை_ குடும்பச் சொத்தாக ஆக்கி தம்பிக்கு உயில் எழுதி வைத்ததை எதிர்த்து ஒரு வழக்கு போடப்பட்டது.

அந்த வழக்கினையொட்டி_ பகவான் ரமணர் ஒரு வாக்கு மூலம் கொடுத்தார். அது என்ன?

நான் சன்னியாசம் வாங்க வில்லை. அதனால் நான் சன்னியாசி அல்ல! நான் குடும்பஸ்தன்தான்! நான் எனது சொத்துக்களை உயில் எழுதியது எவ்விதத்திலும் தவறல்ல என்பதே அந்த வாக்குமூலம்!//

http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post_6427.html
இதுவே நான் படித்த செய்தி! இது தமிழ் ஓவியா வில் 26/08/09 வந்த பதிவு, மேலும் விபரங்கள் உள்ளது.
அவற்றைப் பார்க்கும் போது, சொத்து ப் பிரச்சனை எழுந்துள்ளது. என்பது தெரிவாகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

திரு நந்தவனத்தான், திரு யோகன் பாரிஸ்..இது பற்றி பேசினால் ..பேசிக் கொண்டே இருக்கலாம்..வாரிசுகள் பண்ணும் அட்டூழியங்கள்..பல இன்றும் கண்கூடு..இந்த பதிவு..சாமியார்கள் எப்படி இருக்க வேண்டும் என நம் வேதங்கள் சொன்னதுதான்..ரமணரைப் பற்றியது அல்ல..பல உள்குத்து அரசியலில் போகவேண்டாம்..ரமணரைப் பொறுத்தவரை..அவர் ராஜ வாழ்வை..துறவி எனச் சொல்லிக் கொண்டு அனுபவிக்கவில்லை என்பதே..இத்துடன் இப்பிரச்னை முற்றுப்புள்ளி வைக்கப்படட்டுமே..