Sunday, March 21, 2010

பேருந்தில் காதல் (தொடர் பதிவு)

காலையில்..அரக்க பறக்கக் கிளம்பி..பேருந்தில் வியர்வை நாற்றங்களை சமாளித்துக் கொண்டு..கும்பலோடு கும்பலாய் நின்று..ஒவ்வொரு நிறுத்தத்திலும்..நம் முன்னேற்றத்தில் ஆசைக் கொண்ட நடத்துநருக்கு பயந்து முன்னேறி..பிரேக்கை அழுத்தி..நம்மை அவரிடம் அழைக்கும் ஓட்டுநரின் அழைப்பை புறக்கணித்து..நமது நிறுத்தம் வருகையில்....நமக்குப் பின்னால் இறங்கப் போகிறவரால் இறக்கி விடப் பட்டு ..காலையில்..சலவையிலிருந்து எடுக்கப்பட்ட சட்டை..மீண்டும் ஒரு சலவைத் தேவை என உணர்த்தும் விதத்தில் கசங்கி..ஒழுங்காக வாரிய தலை மைக்கேல் ஜாக்சன் தலையைப் போல ஆக..அடடா..தினசரி அலுவலகம் சென்று வரும் மத்திய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் படும் பாடு...சொல்லி மாளாது..இதன் நடுவே..காதலாவது..மரபணு கத்திரிக்காயாவது.

இவ்வளவிற்கும் நடுவே திரை இயக்குநர்களால் மட்டுமே..காதலை பேருந்தில் காட்ட முடியுமா? என எண்ணினால்..இல்லை..நடை முறையிலும் முடியும்.முடிந்திருக்கிறது..முடியப் போகிறது...பல திருமணங்கள் இப்போது பேருந்திலேயே நிச்சயிக்கப் படுகின்றன.

பேருந்தில் இடம் இல்லை..படிக்கட்டில் தொங்கிக் கொண்டு செல்பவனிடமிருந்து..அவன் கையில் இருந்த டிஃபன் பாக்ஸையோ..பத்திரிகையையோ..ஜன்னலோரம் அமர்ந்திருக்கும் பெண் ஒருத்தி..மனித நேயத்துடன் வாங்கி வைத்துக் கொண்டால்..அவன் ஜென்ம சாபல்யம் அடைகிறான்.'ஆகா..நம் மீது இவளுக்கு எவ்வளவு அன்பு" என எண்ணத் தொடங்குவதுடன்..தன்னை அம்பிகாபதியாக எண்ண ஆரம்பிக்கிறான்.

அடுத்த நாள்..ஜன்னலோரம் அவளைக் காணாது..பேருந்தில் அடித்து..பிடித்து உள்ளே வருபவன் கண்கள் அவளையேத் தேடுகிறது.அவள் ஜன்னலோர இருக்கைக் கிடைக்காது வேறு ஒரு இருக்கையில் அமர்ந்திருக்கிறாள்...மடியில்..அருகில் நின்றுக் கொண்டிருப்பவனின் பை. இவன் காதல் சுக்கு நூறாய் உடைகிறது..

அவன் கண்கள்..இப்போது வேறு ஒரு அமராவதியைத் தேடுகிறது..

தன் முயற்சியில் மனம் தளரா விக்ரமாதித்தனாய்..மீண்டும் வேதாளம் என்னும் காதலைத் தேடுகிறது மனம்..

ஒரு நாள் அப்படி ஒருத்தியைப் பார்க்கிறான்..

அண்ணலும் நோக்க..அவளும் நோக்க..காதல் மொட்டு விடுகிறது..தினம்..தினம் ..பார்வை பரிமாற்றங்கள்..ஒரு நாள் பஸ்ஸில் 'சில்லறையா கொடுங்க..' என்ற நடத்துநரிடம்..இல்லை என பல்லிளிக்க..அவனுக்கு அவளே டிக்கெட் எடுக்கிறாள்...இவன் மனம்..'தனனம்..தனனம்..' என பாட ஆரம்பிக்கிறது. அவனுக்கும் ஒரு ஜூலியட் கிடைத்து விட்டாள்.

மெதுவாக.."நீங்க எங்க..வேலை செய்யறீங்க"ள்லேஆரம்பித்து..படிப்படியாக...காதல் மலர ஆரம்பிக்கிறது.

பேருந்து காதல்..பின் பெற்றோர்கள் சம்மதத்தினோடோ..அல்லாமலோ கல்யாணத்தில் முடிகிறது..பின் மனைவி..குழந்தைகள்..சர்ச்சை...இப்படி வாழ்வு செல்ல..பேருந்து வில்லனாய் தெரிகிறது.

ஆமாம்..உன் அனுபவங்களைக் கூறு என்றால்..இது என்ன என்கிறீர்களா?

எங்கக் குடும்பம் ரொம்பப் பெரிசு..அதனால்..இளமையில் வறுமை..வயிற்றுப் பசிக்கே பதில் சொல்லமுடியாத போது..காமப்பசிக்கு ஏது இடம்..

திருமணத்திற்கு பின்னர்தான் மனைவியை காதலிக்க ஆரம்பித்தேன்..

(என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த சங்கவிக்கு நன்றி )

24 comments:

Chitra said...

திருமணத்திற்கு பின்னர்தான் மனைவியை காதலிக்க ஆரம்பித்தேன்..

........ super!

பிரபாகர் said...

ஆஹா,

மனைவியை காதலிக்க ஆரம்பித்தேன் என சொல்லி கலக்கிட்டீங்களே!

நாமதான் தேவையில்லாம வாய கொடுத்துட்டோமோ?

அருமை அய்யா உங்கள் பகிர்வு!

பிரபாகர்.

vasu balaji said...

Chitra said...

திருமணத்திற்கு பின்னர்தான் மனைவியை காதலிக்க ஆரம்பித்தேன்..//

ச்ச்சும்மா தல கீழா பொறட்டிப் போடணுமாமே. போட்டுதா சார்:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Chitra
பிரபாகர்
வானம்பாடிகள்

sathishsangkavi.blogspot.com said...

//திருமணத்திற்கு பின்னர்தான் மனைவியை காதலிக்க ஆரம்பித்தேன்..//

சார் கலக்கீட்டிங்க......

என் அழைப்பை ஏற்று உங்க காதலை சொன்னதற்கு நன்றி சார்....

Vidhya Chandrasekaran said...

அங்கங்கே நச்சுன்னு இருந்தது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said...என் அழைப்பை ஏற்று உங்க காதலை சொன்னதற்கு நன்றி சார்//

வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
அங்கங்கே நச்சுன்னு இருந்தது.//

நன்றி வித்யா

பனித்துளி சங்கர் said...

/////////திருமணத்திற்கு பின்னர்தான் மனைவியை காதலிக்க ஆரம்பித்தேன்..////////////


என்ன நண்பரே பக்கத்துல இருக்காங்களோ ????

பனித்துளி சங்கர் said...

//////////இவ்வளவிற்கும் நடுவே திரை இயக்குநர்களால் மட்டுமே..காதலை பேருந்தில் காட்ட முடியுமா? என எண்ணினால்..இல்லை..நடை முறையிலும் முடியும்.முடிந்திருக்கிறது..முடியப் போகிறது...பல திருமணங்கள் இப்போது பேருந்திலேயே நிச்சயிக்கப் படுகின்றன. //////////


நீங்க சொல்வது உண்மைதான் . பல திருமணங்கள் பேருந்திலேயே நிச்சயிக்கப் படுகின்றன .

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
என்ன நண்பரே பக்கத்துல இருக்காங்களோ ????//

இந்த இடுகையில் காணப்படுவது எல்லாம்..நானே சுயமாய் எழுதியது என உறுதி கூறுகிறேன்..போதுமா?
:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சங்கர் .♥..♪ ♫

SUREஷ்(பழனியிலிருந்து) said...

காகித ஓடம் கடல் அலைமீது போவது போல ..,

"உழவன்" "Uzhavan" said...

நல்ல சுவராஸ்யமா இருக்கு :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
காகித ஓடம் கடல் அலைமீது போவது போல ..,//

ஆகா..சுரேஷுக்கு மட்டுமே இப்படித் தோணும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// "உழவன்" "Uzhavan" said...
நல்ல சுவராஸ்யமா இருக்கு :-)//


நன்றி உழவன்

DREAMER said...

அருமை...

-
DREAMER

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
DREAMER

நசரேயன் said...

//திருமணத்திற்கு பின்னர்தான் மனைவியை காதலிக்க ஆரம்பித்தேன்..//

இது நல்லா இருக்கு ஐயா

இராகவன் நைஜிரியா said...

ம்... ரைட்டு... ஓகே...

நல்லாவே அவதானிச்சு இருக்கீங்க.

காதலிச்சு கல்யாணம் பண்ணாலும், கல்யாணம் பண்ணி காதலிச்சாலும்... காதல் நிரந்தரமா இருந்தால் அதுவே சுகம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராகவன் நைஜிரியா

Engineering said...

//திருமணத்திற்கு பின்னர்தான் மனைவியை காதலிக்க ஆரம்பித்தேன்..//

இங்கே தான் டச் பண்ணிடீங்க...........

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Engineering said...
//திருமணத்திற்கு பின்னர்தான் மனைவியை காதலிக்க ஆரம்பித்தேன்..//

இங்கே தான் டச் பண்ணிடீங்க...........//

நன்றி Engineering