Tuesday, March 23, 2010

ஆண்டவன் கிருஷ்ணனும்..ராதாவும் லிவிங் டுகெதர்

உச்சநீதி மன்றம்..திருமணமாகாத ஆணும்..பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பதை குற்றம் என்று சொல்ல முடியாது என தன் கருத்தை சொல்லியுள்ளது.

வயது வந்த இருவர் சேர்ந்து வாழ நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?இது குற்றமும் அல்ல..குற்றம் என்று சொல்லவும் முடியாது என்று உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியும்..மற்றும் இரு நீதிபதிகளும் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடவுளான கிருஷ்ணரும்..ராதாவும் கூட இதிகாசத்தில் ஒன்று சேர்ந்து தான் வாழ்ந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

நடிகை குஷ்பூ கற்பு பற்றி 2005ல் சில பத்திரிகைகளில்..கல்யாணத்திற்கு முன் உறவு வைப்பதை குறித்து தன் ஆதரவான கருத்தைத் தெரிவித்திருந்தார்.அதனால் கொதித்து (!!!!) எழுந்த மக்களால் 22 வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அவற்றை தள்ளுபடி செய்யச் சொல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனு மீதான விசாரணையில்..தங்களது தீர்ப்பை தள்ளி வைத்துள்ள நீதிபதிகள்..மேற் கூறியவாறு தங்களது கருத்தையும் கூறியுள்ளனர்.

மேலும் நீதிபதிகள்..குஷ்பூவிற்கு எதிராக வாதாடும் வக்கீல்களிடம் 'இது எந்தப் பிரிவின் கீழ் குற்றம்' எனக் கேட்டதுடன்..ஆர்ட்டிகள் 21 ன் படி..வாழும் உரிமையையும்..சுதந்திரமும் ஒருவரின் அடிப்படை உரிமை என்பதையும் நினைவூட்டினர்.மேலும் அவர்கள் கூறுகையில் 'குஷ்பூ தன் தனிப்பட்டக் கருத்தைக் கூறியுள்ளார்....இது எந்த விதத்தில் உங்களை பாதித்துள்ளது..அவர் கூறியது அவரது தனிப்பட்டக் கருத்து.அது எந்த பிரிவின் கீழ் குற்றமாகிறது..குஷ்பூ..இப்படிக் கூறிய்தைக் கேட்டு எவ்வளவு பெண்கள் வீட்டை விட்டுச் சென்றனர்..எனக் கூற முடியுமா?' என்றும் கேட்டார்கள்.மேலும் வாதம் செய்பவருக்கு பெண் குழந்தைகள் இருக்கிறதா எனக் கேட்டவர்கள் 'இல்லை' என்றதும் நீங்கள் எந்த வகையில் இதனால் பாதிக்கப் பட்டுள்ளீர்கள்.. என்றும் கேட்டனர்.

உச்ச நீதி மன்றத்தில் இவ்வழக்கிற்காக ஆஜரான குஷ்பூ..வக்கீல்கள் அமரும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

இச்சமயத்தில் நான் சமீபத்தில் படித்த ஒரு செய்தியையும் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்..

இப்போதெல்லாம்..திருமணமாகி..விவாகரத்து பெறும் தம்பதிகள்..தங்கள் நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்து..மன மகிழ்வோடு நட்போடு பிரிகின்றனர்..'இனி நாம் கணவன் மனைவி இல்லை..நண்பர்கள்' என்று.

கணவனும் ..மனைவியும் நண்பர்கள் இனி என பிரியும் போது..நண்பர்கள்..கணவன்..மனைவியாக திருமணமாகாமல் லிவிங்க் டுகெதரும் தவறு இல்லை போலும்!!

32 comments:

புருனோ Bruno said...

இந்த செய்தியை படித்தவுடன் தமிழ் ஓவியாவிடமிருந்து பதிவு வரும் என்று எதிர்பார்த்தேன் .. . நீங்கள் முந்திக்கொண்டீர்கள் :) :)

Chitra said...

கணவனும் ..மனைவியும் நண்பர்கள் இனி என பிரியும் போது..நண்பர்கள்..கணவன்..மனைவியாக திருமணமாகாமல் லிவிங்க் டுகெதரும் தவறு இல்லை போலும்!!

.............அதானே! தமிழ் நாடு என்றால் சும்மாவா!

vasu balaji said...

சேர்ந்து வாழும் வழக்கில் தீர்ப்பு ‘தள்ளிவைப்பா’:))

மங்குனி அமைச்சர் said...

//கணவனும் ..மனைவியும் நண்பர்கள் இனி என பிரியும் போது..நண்பர்கள்..கணவன்..மனைவியாக திருமணமாகாமல் லிவிங்க் டுகெதரும் தவறு இல்லை போலும்!!//
//தவறு இல்லை போலும்!!//


சார் டைரக்டா உங்க கருத்து என்ன சொல்லுங்க பாக்கலாம் ( அசிரிறி: அப்பாட ஒரு பொது நல வழக்கு தொடர எல்லோருக்கும் வாய்ப்பு ஏபடுத்தி கொடுத்த மங்குனி அவர்களுக்கு நன்றி , நன்றி ,நன்றி ...)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புருனோ Bruno said...
இந்த செய்தியை படித்தவுடன் தமிழ் ஓவியாவிடமிருந்து பதிவு வரும் என்று எதிர்பார்த்தேன் .. . நீங்கள் முந்திக்கொண்டீர்கள் :) :)//

ம்..ம்...ம்...

சிநேகிதன் அக்பர் said...

சிறு அளவில் நடந்து கொண்டிருந்தது இனி மாறுமோ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Chitra

Vidhya Chandrasekaran said...

விவாதற்குரிய விஷயம். அவரவர் நியாயம் அவரவர்க்கு:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
சேர்ந்து வாழும் வழக்கில் தீர்ப்பு ‘தள்ளிவைப்பா’:))//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மங்குனி அமைச்சர் said... சார் டைரக்டா உங்க கருத்து என்ன சொல்லுங்க பாக்கலாம் ( அசிரிறி: அப்பாட ஒரு பொது நல வழக்கு தொடர எல்லோருக்கும் வாய்ப்பு ஏபடுத்தி கொடுத்த மங்குனி அவர்களுக்கு நன்றி , நன்றி ,நன்றி ...)//

இது சற்று அடக்கி வாசிக்க வேண்டிய நேரம்
வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்

எம்.எம்.அப்துல்லா said...

:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
சிறு அளவில் நடந்து கொண்டிருந்தது இனி மாறுமோ?//

ஆம்..நானும் அப்படித்தான் நினைக்கிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வித்யா said...
விவாதற்குரிய விஷயம். அவரவர் நியாயம் அவரவர்க்கு:)//

விவாதற்குரிய விஷயம்

வருகைக்கு நன்றி வித்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

// எம்.எம்.அப்துல்லா said...
:))//


வருகைக்கு நன்றி அப்துல்லா

Radhakrishnan said...

நல்லதொரு பதிவு ஐயா, தப்பாப் பார்க்கலைன்னா எதுவுமே தப்பு இல்லைனு சொல்றதுதான் உலகம். ஆனா வலிக்கும்போதுதான் அதன் வேதனை தெரியும்.

"உழவன்" "Uzhavan" said...

தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை.

goma said...

living 2gether colony என்று ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//V.Radhakrishnan said...
நல்லதொரு பதிவு ஐயா, தப்பாப் பார்க்கலைன்னா எதுவுமே தப்பு இல்லைனு சொல்றதுதான் உலகம். ஆனா வலிக்கும்போதுதான் அதன் வேதனை தெரியும்.//

உண்மைதான்
வருகைக்கு நன்றி V.Radhakrishnan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//"உழவன்" "Uzhavan" said...
தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை.//

விவாதற்குரிய விஷயம்.
வருகைக்கு நன்றி Uzhavan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
living 2gether colony என்று ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...//

:-)))
வருகைக்கு நன்றி goma

நசரேயன் said...

நீங்க சொன்ன சரிதான் ஐயா

இராகவன் நைஜிரியா said...

லிவிங் டு கெதர்...

கல்யாணம் ஆன சிலரே அப்படித்தானே... அன்னியோன்யம் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.

டு கெதரை விட - அன்பு, பாசம் முக்கியம் என்பதை உணர மாட்டேன் என்கிறார்களே..

ரவி said...

இப்போதெல்லாம்..திருமணமாகி..விவாகரத்து பெறும் தம்பதிகள்..தங்கள் நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்து..மன மகிழ்வோடு நட்போடு பிரிகின்றனர்..'இனி நாம் கணவன் மனைவி இல்லை..நண்பர்கள்' என்று.
..........

is it ??? in TN ?

கோவி.கண்ணன் said...

//கணவனும் ..மனைவியும் நண்பர்கள் இனி என பிரியும் போது..//

இருவருக்கும் இனி 'அது' இல்லை என்ற போது நண்பர்களாக பிரிகிறார்கள். சரி.

//நண்பர்கள்..கணவன்..மனைவியாக திருமணமாகாமல் லிவிங்க் டுகெதரும் தவறு இல்லை போலும்!!//

இருவருக்கும் இடையே 'அது' இல்லை என்றால் நண்பர்கள், பிறகு எப்படி நண்பர்களுக்குள்ளே 'அது' இருக்க முடியும் ? லாஜிக் இடிக்குது.

கோவி.கண்ணன் said...

டிவி இல்லாமல்
ராதா கிருஷ்ணன் லிவிங் டுகெதர் !

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
நீங்க சொன்ன சரிதான் ஐயா//

நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
டு கெதரை விட - அன்பு, பாசம் முக்கியம் என்பதை உணர மாட்டேன் என்கிறார்களே..//

:-((

T.V.ராதாகிருஷ்ணன் said...

//செந்தழல் ரவி said...
இப்போதெல்லாம்..திருமணமாகி..விவாகரத்து பெறும் தம்பதிகள்..தங்கள் நண்பர்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்து..மன மகிழ்வோடு நட்போடு பிரிகின்றனர்..'இனி நாம் கணவன் மனைவி இல்லை..நண்பர்கள்' என்று.
..........

is it ??? in TN ?//

இந்தியாவில்....பத்திரிகை செய்தி
ஆமாம்..ரவி நீங்க டி.வி.ல DOCOMO விளம்பரம் ஒன்னு வருதே..கிட்டத்தட்ட இப்படி..பார்த்தீங்களா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

////கோவி.கண்ணன் said...
//கணவனும் ..மனைவியும் நண்பர்கள் இனி என பிரியும் போது..//

இருவருக்கும் இனி 'அது' இல்லை என்ற போது நண்பர்களாக பிரிகிறார்கள். சரி.

//நண்பர்கள்..கணவன்..மனைவியாக திருமணமாகாமல் லிவிங்க் டுகெதரும் தவறு இல்லை போலும்!!//

இருவருக்கும் இடையே 'அது' இல்லை என்றால் நண்பர்கள், பிறகு எப்படி நண்பர்களுக்குள்ளே 'அது' இருக்க முடியும் ? லாஜிக் இடிக்குது.////


அதுவும் வேண்டும்..இதுவும் வேண்டும்..ஆனால் அது மட்டும் வேண்டாம்
(என்ன கோவி..புரிகிறதா)

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோவி.கண்ணன் said...
டிவி இல்லாமல்
ராதா கிருஷ்ணன் லிவிங் டுகெதர் !

:)///

:-)))

DREAMER said...

நீதிமன்றத் தீர்ப்பில் மீண்டும் பகிரங்க அறிவிப்பா..!

ஏற்கனவே ஓரினச்சேர்க்கைக்கு பச்சைக் கொடி காட்டி உசுப்பிவிட்டிருக்கிறார்கள்... இப்போது, புராணக்கதைகளை ஆதாரம் காட்டி இந்தத் தீர்ப்பு வேறயா..! அருமை..! நடத்தட்டும்..!

//living 2gether colony என்று ஒரு கன்ஸ்ட்ரக்‌ஷன் தோன்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.//

Goma அவர்கள் கூறியுள்ள இந்த வார்த்தைகள் வெகுவிரைவில் நடந்துவிடும் போலிருக்கிறது...

பகிர்வுக்கு நன்றி சார்..!

-
DREAMER

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி DREAMER