மதிமுகவை கூட்டணியை விட்டு ஜெயலலிதா விரட்டியதில் கர்நாடகம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த இரு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாகப் பேசப்படுகிறது.
முதலில் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சட்டமன்றத் தொகுதி என்ற கணக்கில் அதிமுகவிடம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிய இடங்கள் மொத்தம் 39. இப்படித்தான் அவருக்கு்ம் இரு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பித்தது.
ஜெயலலிதாவின் முன்னாள் உட்கார்ந்து இருக்கிறார்களா.. இல்லை நின்று கொண்டிருக்கிறார்களே என்று யூகிக்க முடியாத அளவுக்கு 'எஸ் டைப் சேர்'மாதிரியே உட்கார்ந்து தரையை மட்டுமே பார்க்கும் அதிகாரம் கொண்டவர்களான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் தான் வைகோவிடம் இந்த 39 தொகுதி பட்டியலை வாங்கிச் சென்றனர். போனவர்கள் போனது தான். அதிமுகவிடமிருந்து அடுத்த 20 நாட்கள் எந்த பதிலும் வரவில்லை.
21வது நாள் திரும்பி வந்த இருவரும் வைகோவிடம், அம்மா உங்களுக்கு 8 தொகுதிகள் தருவதாக சொல்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, வைகோவிடம் திட்டு விழும் என்று பயந்து அதே வேகத்தில் திரும்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து 25 தொகுதியாவது வேண்டும் என்று பதில் அனுப்பினார் வைகோ. அடுத்த இரு நாட்களில் திரும்பி வந்த இந்த இருவரும் ''அண்ணே.. 8 தான் தர முடியும்னு அம்மா சொல்லச் சொன்னாங்க'' என்று பழைய ராகம் பாடினர்.
அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் வைகோவை சந்திக்க வந்த இந்த இருவரும் நீண்ட நேரமாக பேசாமல் தரையையே பார்த்து தவித்துக் கொண்டிருக்க.. அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்ட வைகோ.. ''உங்கள் தலைவி என்ன சொன்னார்னு சும்மா சொல்லுங்க.. நான் உங்க மேலே எரிச்சல் பட்டு என்ன ஆகப் போகுது'' என்று தைரியம் தந்ததோடு, காபியும் தந்தார்.
காபி டம்ளரை கையில் கூட எடுக்காமல், அண்ணே, அண்ணே என்று தயங்கிய இருவரும்.. மொதல்ல 8 தொகுதினு சொன்ன அம்மா இன்னிக்கி காலைல எங்களை கூப்பிட்டு 7 இடம் தர முடியும்னு உங்கிட்ட சொல்லிட்டு வரச் சொன்னாங்க என்று கூறிவிட்டு, அதே வேகத்தில் அந்த இடத்திலிருந்து வேகமாக வெளியே காரில் ஏறிப் பறந்துவிட்டனர்.
அவர்கள் போய் பல மணி நேரம் ஆகியும் அவர்கள் சொன்ன தகவல் தந்த அதிர்ச்சியிலிருந்து வைகோ மீளவில்லை என்கிறார்கள். இது குறித்து தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் மட்டும் வைகோ பகிர்ந்து கொண்டார். அப்போது அவர்கள், ''நம்மை கூட்டணியை விட்டு வெளியே போகுமாறு ஜெயலலிதா மறைமுகமாகச் சொல்கிறார்'' என்பதை யூகித்து வைகோவிடம் சொல்ல, நானும் அதே தான் நினைக்கிறேன் என்றிருக்கிறார்.
மீண்டும் மீண்டும் 9,8,7,8,7,9,7 என்று அதிமுக தரப்பிலிருந்து தொகுதிகளின் எண்ணிக்கை ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மாறிக் கொண்டே இருக்கவே வைகோ என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். இப்படி அவரை அதிமுக டார்ச்சர் செய்ததற்குக் காரணம், அவர் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான். ஆனால், அவரோ கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாகப் போய்க் கொண்டுள்ளதாக தனது கட்சி நிர்வாகிகள் மூலம் அறிவிப்பு வெளியிட்டு ஜெயலலிதாவை கடுப்பாக்கினார்.
சரி.. இனியும் வைகோ தானாகவே போக மாட்டார் என்பதால் தான் 160 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டார். இதற்கு முக்கிய காரணம் இரு தொழிலதிபர்கள் அதிமுகவுக்கு நீட்டியுள்ள 'உதவி' தான் என்கிறார்கள்.
தூத்துக்குடியில் ஒரு ஆலைக்கு எதிரான வைகோ நடத்திய போராட்டமும் இதனால் பாதிக்கப்பட்ட அந்த ஆலையினர் அதிமுக தரப்பை சந்தித்துப் பேசியதாகவும் சொல்கிறார்கள்.
இன்னொருவர் ஜெயலலிதாவுக்கு அவ்வப்போது ஹெலிகாப்டர், விமானம் தந்து
உதவும் கர்நாடக தொழிலதிபர். விடுதலைப் புலிகள் ஒடுக்கப்பட்ட நிலையில், இவர் தனது நிறுவனத்தை இலங்கையில் விரிவாக்கவுள்ளார். இதற்காக இவருக்கு உதவிகள் செய்ய முன் வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே தரப்பு, இந்தத் தொழிலதிபர் மூலமாக ஜெயலலிதாவுக்கு நெருக்கடி தந்து வைகோவை கூட்டணியிலிருந்து வெளியே விரட்டிவிட்டுவிட்டது என்கிறார்கள்.
வைகோவை கூட்டணியிலிருந்து வெளியேற்றினால் திமுகவின் பண பலத்தை எதிர்கொள்வதற்கான 'சக்தியை' இவர்கள் அதிமுகவுக்கு நீட்ட முன் வந்துள்ளனர். மேலும் ராஜபக்சே தரப்பும் கூட கூட அதிமுகவுக்கு மறைமுகமாக உதவலாம் என்கிறார்கள்.
(நன்றி தட்ஸ்தமிழ்)
14 comments:
ஜோதிடத்தில் சரபேந்திர முறை சற்று வித்தியாசமானது:
ஆறாம் வீட்டில் சனியும், ஒன்பதாம் வீட்டில் மகரமும் இருந்தால் மக்கள் சிரமப்படுவார்கள்
பச்சை புடவை ஒன்பதாம் கதவு இலக்கமும்
மஞ்சள் துண்டுவின் கதவு இலக்கம் ஆறும் எனக்கு தெரியாது!
ஈரோட்டு ஜோசியர்தான் அலசி ஆராய வேண்டும்!
ஒரு பக்கம் காபரா டான்சர்!
இன்னொரு பக்கம் கதை விசனகர்த்த!
இடையில் இத்தாலிய பிசா
தமிழ்நாட்டின் நிலையை எண்ணி கண்ணிற் வடிக்கிறேன்
ரைட்டு
//இவருக்கு உதவிகள் செய்ய முன் வந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே தரப்பு,//
அடபாவி இந்த நாதாரி பய இங்கேயும் வந்துட்டானா.....?!
ஜெயலலிதாவின் முன்னாள் உட்கார்ந்து இருக்கிறார்களா.. இல்லை நின்று கொண்டிருக்கிறார்களே என்று யூகிக்க முடியாத அளவுக்கு 'எஸ் டைப் சேர்'மாதிரியே //
சிரித்தேன்
//மேலும் ராஜபக்சே தரப்பும் கூட கூட அதிமுகவுக்கு மறைமுகமாக உதவலாம் என்கிறார்கள்.//
ஊகங்கள் எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை.இதே மாதிரியான சந்தேகத்தை நான் முன்வைக்கும் போது பின்னூட்டம் போட வந்த ஓலை இது வீண் கற்பனையென்றார்.
கற்பனையாக இருந்தால் மகிழ்ச்சியே.
பாவம் அவர்.
டிபியன்
ஜோதிடமும் ஒரு காரணமாம், வைகோ சுதாங்கன் பெட்டியில் சொல்கிறார்.
யாரோ ஒரு சோதிடர் அம்மாவிடம் சொன்னாராம், கருப்புத் துண்டு போட்ட நபர் அருகில் (கறுப்பபு நிறம் அருகில் இருந்தால்) இருந்தால் பதவி உயர்வு தடைப் படும் என்று
//ஜெயலலிதாவின் முன்னாள் உட்கார்ந்து இருக்கிறார்களா.. இல்லை நின்று கொண்டிருக்கிறார்களே என்று யூகிக்க முடியாத அளவுக்கு 'எஸ் டைப் சேர்'மாதிரியே //
நல்ல வர்ணனை....
உலகமே அஞ்சும் தாமிரம் என்ற நச்சு கழிவை தூத்துகுடி மாவட்டம் முழுவதும் பரவவிட்ட ஸ்டெர்லிங் கம்பெனியை எதிர்த்து உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடி அந்த கம்பெனியின் செயல்பாட்டை நிறுத்த உத்தரவு வாங்கி வந்த "வை கோ" உயர்த்தவரா.... இல்லை அந்த கம்பெனி முதலாளிகளின் பேச்சை கேட்டு "வை கோ" வை அவமான படுத்தி வெளியேற்றிய ஜெயலலிதா உயர்ந்தவரா..?
இது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்...
"வை கோ" நினைத்திருந்தால ் ஒரு பெரும் தொகையை வாங்கி ஸ்டெர்லிங் குரூப்புடன் சமாதானமாகி போய் இருக்கலாம்.. ஜெயலலிதா, கருணாநிதியாக இருந்தால்
இதை தான் செய்திருப்பார்க ள்.. ஆனால் அவர் இறுதி வரை போராடினார்.. அவர் பிழைப்பு வாத அரசியல் செய்ய வில்லை அதுவே தான் அவரது இன்றைய நிலைக்கும் காரணமாக இருக்கிறது...
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்...
"வை கோ" வை ஜெயலலிதா நடத்திய விதம் சற்றும் ஏற்று கொள்ள முடியாத அநாகரிகமான ஒன்று...
இதை விட இவரை ஆதரிப்பதாக தினமலர்(மலம்) செய்தி தாள் அடிக்கும் கூத்து தாங்க முடியவில்லை.. நமது எம் ஜி யார் பத்திரிகையே தோற்றுவிடும் போல... இன்றைய தலைப்பு செய்தியில் "வை கோ ஓட்டம்" என்று பெரிதாக போட்டு அவரை அவமான படுத்தியுள்ளது...
"வை கோ" எப்போதும் எங்கும் ஓட மாட்டார்... இந்த அம்மா தான் தோற்றால் கொட நாடு ஓடி ஒளிந்து கொள்ளும்...
இந்த முடிவுக்கான விளைவ ஜெ அனுபவிக்க போகிறார்.
வைகோவை பொறுத்தவரை, தேர்தலே இல்லாமல் சமுதாய இயக்கமாக செயல்படக்கூட முடியும்
வைகோ வும் சராசரி அரசியில்வாதியே. இலங்கை தமிழர்கள் நலனுக்காக பேசினால் மட்டும் நல்ல
அரசியல்வாதி ஆக முடியாது. வைகோ எதற்காக ம தி மு க ஆரம்பித்தார்? அப்போது எத்தனை
தொண்டர்கள் தீ குளித்தார்கள் என்று தெரியுமா? பின்பு மீண்டும் தி மு க வுடன் கூட்டணி வைத்தார்.
அப்போது கலைஞர் வைகோவை பார்த்து கூறிய வசனம் உங்களுக்கு நினைவிருக்கிகறதா??
"தம்பி நான் உன்னை பிரிந்தேனா காலம் நம்மை பிரித்ததா". அப்போது வை கோ கலைஞரை பார்த்து
அழ , கருணாநிதி அழ நாடகம் நடை பெற்றது. பின்பு தி மு க வை விட்டு பிரிந்து
தனியே நின்றார். எல்லா தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார் . இலங்கை தமிழருக்காக பேசிய போது
ஜெயலலிதா POTA சட்டத்தில் வைகோவை சிறைக்கு அனுப்பினார். பின்பு எல்லாவற்றையும் மறந்து
அ தி மு க விடம் கூட்டணி சேர்ந்தார். இப்போது ஜெயலலிதா 32 தொகுதிகளை தரவில்லை என்பதற்காக
கூட்டணியில் இருந்து மீண்டும் பிரிந்து விட்டார்.
வை கோ விற்கு என்ன கொள்கை இருக்கிறது?? சிந்தியுங்கள்??
என்னை பொறுத்த வரை வைகோ வும் RAMDOSS போல தான், சந்தர்ப்ப வாத அரசியல் வாதி.
ஜெயாவுக்கு வைக்கப்போறாங்க ஆப்பு.. அரசனை நம்பி புருஷனை கைவிட்டக் கதையா.. விஜயகாந்தை நம்பி வைகோவை கைவிட்டாச்சு . தமிழக மக்களுக்கு ஆப்பு வைச்சாச்சு.. பேய் பிசாசு இரண்டுக்கும் நடுவுல மாட்டிக்கின்னு தமிழக மக்கள் தவிக்கிறாங்க ...
Post a Comment