திமுக, காங்கிரஸ் இடையே மீண்டும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சி எப்படியாவது தனது அணிக்கு வரும் என்ற எதிர்பார்ப்புக்கு போய் விட்டது அதிமுக. இதனால் நேற்று சிபிஎம்மைக் கூப்பிட்டு ஒப்புக் பேசி அனுப்பி வைத்த அதிமுக, இன்று மதிமுக, சிபிஐ ஆகிய இரு கட்சிகளையும் கூப்பிடாமல் மீண்டும் கிடப்பில் போட்டுள்ளது.
இதை விட ஒரு அரசியல் கட்சியைக் கேவலப்படுத்த முடியாது என்ற நிலைக்கு சிபிஎம், சிபிஐ மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. காலடியில் விழுந்து கிடக்காத குறையாக இந்த மூன்று கட்சிகளும் ஜெயலலிதாவிடம் தீவிரமான நட்பைக் கொண்டிருந்தன. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்திற்காக முதல்வர் கருணாநிதியையு, திமுக அரசையும் மிகக் கடுமையாக சாடி விமர்சனம் செய்து பேசி வந்தன.
ஆனால் இன்று இந்த மூன்று கட்சிகளையும் மிதியடிக்குச் சமமான நிலைக்குக் கொண்டு போய் விட்டார் ஜெயலலிதா.
காங்கிரஸ் கட்சி கூட்டணிக்கு வரக் கூடிய திடீர் வாய்ப்புகள் உருவானதால், இந்த மூன்று நட்புக் கட்சிகளையும், விரும்பத்தகாத கட்சிகளாக கருதத் தொடங்கி விட்டார் ஜெயலலிதா என்கிறார்கள். விஜயகாந்த் கூட்டணிக்கு வந்து விட்ட தெம்பும், காங்கிரஸும் வந்தால் இன்னும் சிறப்பு என்ற எண்ணமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் கூட்டணிக்கு வரக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் சிபிஎம், மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளை மறுபடியும் கூப்பிட்டுப் பேசாமல் காலம் தாழ்த்தி வந்தது அதிமுக. இதனால் இந்த மூன்று கட்சிகளும் அதிருப்தி அடைந்தன. ஆனாலும் அதற்கு மேல் செய்ய இவர்களால் முடியாது என்பதால் வாய் மூடி மெளனம் காத்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று திடீரென திமுக, காங்கிரஸ் இடையே சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தோன்றவே, ஆடிப் போன அதிமுக, சிபிஎம்மை அவசரமாக கூப்பிட்டு, ஒரு ஹோட்டலில் வைத்து ஒப்புக்குப் பேசி அனுப்பி வைத்தது.
இதையடுத்து தங்களையும் அதிமுக தரப்பு கூப்பிடும் என்ற எதிர்பார்ப்பில் சிபிஐ, மதிமுக ஆகியவை இருந்தன. ஆனால் அழைப்பு வரவில்லை. திமுக, காங்கிரஸ் இடையே மீண்டும் சிக்கல் என்ற செய்தியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி முறிந்தால் உடனே இழுத்துப் போட்டு விடத் தயாராக இருக்கிறது அதிமுக. அப்படி காங்கிரஸ் வந்தால், சிபிஎம், சிபிஐ, மதிமுக ஆகியவை தேவையில்லை என்பது அதிமுகவின் கருத்து. எனவேதான் மதிமுகவையும், சிபிஐ கட்சியையும் கூப்பிடாமல் மீண்டும் அதிமுக தொங்கலில் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இப்படி ஒரு கேவலமான நிலை மதிமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் வரும் என்பதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். விஜயகாந்த் கட்சியை விடவா இவர்கள் குறைந்து போய் விட்டார்கள் என்ற ஆதங்கம் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
(நன்றி தட்ஸ்தமிழ் )
2 comments:
இன்று சோனியாவை பார்த்து பேச அழகிரி போறார்.....
ஆமா அழகிரி எந்த பாஷையில் பேசுவார் சோனியா ராஜீவ் கூட???
santhaiyil, maadu virkka ,oru thundu poottu kai viral pidichu thaane peyram paNNanum ?,for that,y do u want language?
Post a Comment