Monday, March 14, 2011

வை.கோ., என்னும் மாமனிதன்..


அரசியலில் பல தலைவர்கள், குட்டித் தலைவர்களையெல்லாம் நாம் நாளும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால்..தான் கொண்ட கொள்கைகளை எங்கிருந்தாலும் கடைப்பிடிக்கும் தலைவர்களைப் பார்ப்பது அபூர்வம்.
அப்படிப்பட்ட ஒரு தலைவர் வை.கோ., எனலாம்.
அவர் எம்.பி.யாய் இருந்த போதும் சரி..இல்லாத போதும் சரி மத்திய அரசு பிரதமர்களால் மதிக்கப் பட்டவர்.வாஜ்பாயி ஆனாலும் சரி..இன்றைய மன் மோஹன் சிங்கும் சரி வைகோ வை மதிப்பவர்கள்.
வை.கோ., வும் தான் கொண்ட கொள்கையிலிருந்து மாறுபட்ட கூட்டணி தலைமைமையில் தான் இருந்த போதும் அக்கூட்டணியை மதிப்பவர்.
அதனால் தானோ என்னவோ.. அவர் அதிகம் அவர்களால் அலைக்கழிக்கப் படுகிறார்.
2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., ஒதுக்கிய தொகுதி போதாது..என ஒரு சில தொகுதிகளை அ.தி.மு.க., தந்ததால் அந்த கூட்டணியில் இணைந்தார்.இன்றுவரை ஒரு சில கட்சித் தலைவர்களைப் போல இல்லாமல் தான் சார்ந்த கூட்டணித் தலைமைக்கு உண்மையாய் இருக்கிறார்.
ஆனால்..அதற்கு பலன்..இந்த நிமிடம்வரை அவருக்கு அ.தி.முக.,, உடன் தொகுதி உடன் பாடு ஏற்படவில்லை.
கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆனாற் போல போனமுறை 35 தொகுதிகள் பெற்றவர்..இப்போது 25..18..12 என 10தொகுதிகளே கொடுக்க முடியும் என்ற நிலையில் உள்ளார்.
வை.கோ.,வின் பிரச்சாரம் இந்த முறை அவசியம் தேவை என்பதை கூட்டணித் தலைமை உணரவில்லை.
வை.கோ., இப்போது என்ன செய்ய வேண்டும்..
கொடுத்த 10 தொகுதிகளை வாங்கிக் கொண்டு..அந்த 10 தொகுதிகளிலும் வென்று காட்ட வேண்டும்.
தனது முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும்.
எந்த கூட்டணியாய் இருந்தாலும்..ம.தி.மு.க., முக்கியக் கட்சி என புரிய வைக்க வேண்டும்.இழந்த அதிகாரத்தை மீட்க வேண்டும்..
வை.கோ., என்ற பண்பாளர், மாமனிதன் இதைச் செய்வாரா?

18 comments:

goma said...

ப்ண்பாளர்களுக்கு இடமில்லை இந்த பாழும் அரசியலில்,பகுத்தறிவாளனுக்கு மதிப்பில்லை இன்றைய ஆட்சிபீடத்தில்.
பணம் பண்ணும் வழி தெரிய வேண்டும்,ஏய்த்து பிழைக்கும் நரித்தனம் ஓங்க வேண்டும்.
நாட்டின் செழிப்பை ஓரம் கட்டி ,
வீட்டில் பணநோட்டால் கோபுரம் கட்டி வாழத் தெரிந்தால் போதும்

Kandumany Veluppillai Rudra said...

குப்பையில் கிடந்தாலும்,குண்டுமணி பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கும்.எது குப்பை, எது குண்டுமணி,நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.

சமுத்ரா said...

எல்லாம் சரி தான்...அவர் நாட்டுக்கு எதுவும் பண்ண மாதிரி தெரியலையே

MANO நாஞ்சில் மனோ said...

அவர் காட்டும் விசுவாசத்தின் விலை நாற்பது கோடின்னு பேச்சு இருக்கே மக்கா.....

nellai அண்ணாச்சி said...

இப்படியே உசுப்பேத்துங்க

சிநேகிதன் அக்பர் said...

நடைமுறை அரசிய‌ல் இன்னும் கற்காத தலைவர்.

தீபா நாகராணி said...

அதிக நூல்களை கற்று அறிந்த அறிஞர், மும்மொழிகளிலும் சிறப்பாக உரையாற்ற தெரிந்தவர்களில் முக்கியமானவர், இந்திய அரசியல்வாதிகளில் மேடை பேச்சால் கூட்டத்தை அதிகமாக ஈர்க்கும் தலைவர்களில் ஒருவர்...
மத்திய அமைச்சர் பதவி பெறும் வாய்ப்பு இருந்தும், உடன் இருந்தோருக்கு(குடும்பத்தினருக்கு அல்ல ) விட்டு கொடுத்த ஒருவர் ,மொத்தத்தில் திறமையான மனிதர், என்ன சாணக்கியத்தனம் மிக குறைவு...
இவரின் தற்போதைய நிலையை பார்க்கும் பொழுது, பேசாமல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, மரியாதையுடன் அவருக்கு பிடித்த மாதிரி மீதி வாழ்நாளை கழிக்கலாம் என்றே வருத்தத்துடன் சொல்ல தோன்றுகிறது...

jothi said...

//மொத்தத்தில் திறமையான மனிதர், என்ன சாணக்கியத்தனம் மிக குறைவு...
இவரின் தற்போதைய நிலையை பார்க்கும் பொழுது, பேசாமல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, மரியாதையுடன் அவருக்கு பிடித்த மாதிரி மீதி வாழ்நாளை கழிக்கலாம் என்றே வருத்தத்துடன் சொல்ல தோன்றுகிறது...//

ச‌ரியென‌தான் தோன்றுகிற‌து

Anonymous said...

ம.தி.மு.க., முக்கியக் கட்சி என புரிய வைக்க வேண்டும்//
ஆம் இதை உடனே சரிசெய்ய சோரம் போகாமல் புரியவைக்கவேண்டும்

Anonymous said...

ம.தி.மு.க., முக்கியக் கட்சி என புரிய வைக்க வேண்டும்//
ஆம் இதை உடனே சரிசெய்ய சோரம் போகாமல் புரியவைக்கவேண்டும்

ராம்ஜி_யாஹூ said...

கிடைக்கும் ஒன்பது/பத்து தொகுதிகளிலும் மதிமுக வெற்றி பெற்று விடும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

தீபா ராணி அவர்கள் மும்மொழிகளில் சிறப்பாக பேசுவார் என்று எழுதி உள்ளார். (இயல் இசை நாடகம் குறித்து சொல்கிறாரா அல்லது தமிழ் ஆங்கிலம் ஹிந்தி/தெலுங்கு)

RK Anburaja said...

அம்மையார் திருந்தமாட்டார்

வைகோ - இலட்சியத்தில் உறுதி, அரசியலில் துணிவு ! http://t.co/LGORybK

RK Anburaja said...

நீலவானத்தை அலட்சியப்படுத்திவிட்டு நிலவு சிரிக்கமுடியாது; ம.தி.மு.க.வையும் வைகோவையும் அலட்சியப்படுத்திவிட்டு அ.தி.மு.க. வெற்றிபெற முடியாது

RK Anburaja said...

என்ன சொன்னாலும் ஒரு நல்ல பேச்சாளரை இந்த கூட்டணி இழந்துவிட்டது. இங்கு மற்றவர்கள் எல்லாம் 'தண்ணி' இல்லாமல் பேச தெரியாதவர்கள்.

RK Anburaja said...

வைகோவை கூட்டணியிலிருந்து விலக்கியது பிரச்சனை இல்லை, இப்படி நாகரிகமற்ற முறையில் செய்தது தான் வேதனை

rajasekaran duraisami said...

வைகோ என்கின்ற மாமனிதர் பத்து வருடங்களுக்கு முன்பு மக்கள் மனதில் பிரகாசித்தது போல தற்போது இல்லை அது தான் உண்மை

தாராபுரத்தான் said...

சரியான பார்வைங்க..ஆனாலும் பத்து...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி