காங்கிரஸ் கட்சிக்கும், பா.ம.க.,விற்கும்,வி.சி.கே.,விற்கும் தி.மு.க., கூட்டணியில் ஒதுக்கியுள்ள தொகுதிகளைப் பார்த்தால் சற்று வியப்பே ஏற்படுகிறது.
நிச்சயம் நம்மால் வெல்ல முடியும் என தி.மு.க., எண்ணும் தொகுதிகள் பல கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
1991ல் சட்டசபைத் தேர்தலில்...ராஜிவ் மறைவு அனுதாப அலை வீசிய போதும்...துறைமுகம் தொகுதி தி.மு.க., வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தது.வென்றவர் கலைஞர் என்பது வேறு விஷயம்.
சென்னையைப் பொறுத்தமட்டில் 16ல் 6 தொகுதிகள் கூட்டணிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.இதில் அண்ணாநகர், வேளச்சேரி, துறைமுகம் ஆகியவை தி.மு.க.,வின் தொகுதிகள் எனலாம்.
பல முக்கியத் தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக் கொடுத்துள்ளது நன்றாகவே தெரிகிறது.
ஜெ வையே தோற்கடித்து அன்றைய புதுமுகம் சுகவனத்தைத் தேர்ந்தெடுத்த பர்கூர் பா.ம.க., விற்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
அதே போன்று புதிதாக உருவாகியுள்ள ஆவடி தொகுதி தி.மு.க., வெல்ல முடிந்த தொகுதி.அது காங்கிரஸ் கட்சிக்கு.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் என பா.ம.க.,விற்கும், காங்கிரஸிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில் தி.மு.க., பல வலுவான தொகுதிகளை...கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துள்ளது புரிகிறது.
இஸ்லாமிய சகோதரர்கள் நிறைந்தவை என்ற அளவில் துறைமுகமும்,வாணியம்பாடியும் முஸ்லீம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது புரிகிறது..ஆனால் நாகப்பட்டிணம்..கம்யூனிஸ்ட் எளிதில் வெல்லும் தொகுதியை ஏன் முஸ்லீம் லீக்கிற்குக் கொடுத்தார்கள்.தி.மு.க., முஸ்லீம் லீக் காங்கிரஸிற்கு விட்டுக் கொடுத்த ஒரு தொகுதியை..தி.மு.க., மீண்டும் தருவதாகத் தந்தது இத் தொகுதியைத்தான் என புரிகிறது.
மதுரையில்..மதுரை வடக்கு,மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம் ஆகியவை காங்கிரஸிற்கும்..சோழவந்தான் பா.ம.க., விற்கும் கொடுத்துள்ளது புருவத்தை உயர்த்த வைக்கிறது.
தி.மு.க., வின் தொகுதிகள் பல பறிபோயுள்ளது புரிகிறது.
இது.....
தி.மு.க., வின் நிலையை புரிய வைக்கிறது
14 comments:
யார் தோற்றால் என்ன?
என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம் பொறுத்திருந்து பார்ப்போம்....
ஊத்திக்கிறதுன்னு ஆச்சு..பங்கு போட்டு ஊத்திக்கலாம்னு நினைச்சாரோ?
எல்லாம் மிரட்டி வாங்கிட்டாங்க பாஸ்...
யார் ஜெயிச்சாலும் தோல்வி மக்களுக்கே
வருகைக்கு நன்றி
vignaani
வருகைக்கு நன்றி karun
வருகைக்கு நன்றி
Mano
வருகைக்கு நன்றி
Bala
வருகைக்கு நன்றி பாட்டு ரசிகன்
வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்
இன்றைய தேதிக்கு வெற்றி வாய்ப்பு சமம்தான்...
வருகைக்கு நன்றி .செந்தில்
Post a Comment