தி.மு.க., வின் தேர்தல் அறிக்கை சிறிதுமுன் வெளியிடப்பட்டது.
அதில் அறிவிக்கப் பட்ட சில இலவசங்கள்
ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தொடர்ந்து வழங்கப்படும்.வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 18.64 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் படும்.
2)பெண்களுக்கு வீடு தோறும் கிரைண்டர் இலவசம்..கிரைண்டர் வேண்டாதோர்க்கு மிக்ஸி இலவசம்.
3) 60 வயதைக் கடந்த முதியோர்க்கு இலவசமாக பேருந்தில் செல்லும் திட்டம் அமுல்படுத்தப்படும்.
4)அரசு கல்லூரியில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மாணவர்களுக்கு மடிக்கணிணி இலவசமாக வழங்கப்படும்.
5)மாணவர்களுக்கு ஆண்டுக்கு 3 சீருடை வழங்கப்படும்
6)தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு பிரசவ விடுப்பு 4 மாதமாக உயர்த்தப் படும்
7)மகளிர் சுயநல ஊழைப்பு குழுவினருக்கான கடன் தொகை 4 லட்சமாக உயர்த்தப்படும்.அதில் 2 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
8)நெல்,கரும்பிற்கு நியாயவிலை
9)மீனவருக்கான காப்பீடுதிட்டம் தொடங்கப் படுவதுடன்..அவர்கள் வேலைக்கு போக முடியா நாட்களை கணக்கிட்டி நிதி வழங்கப்படும்.
10) கட்சத்தீவை திரும்பப் பெற மைய அரசை வலியுறுத்தும்
11)ஈழத் தமிழர் அமைதியாக வாழ இலங்கை அரசை வலியுறுத்தச் சொல்வோம்
12)சொட்டு நீர் பாசனத்திற்கு விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும்
மேலும் நதிகள் தேசிய மயம்,மதுரை,திருச்சியில் மன நல மருத்துவ மனைகள்..முதியோர்க்கு மாதம் ஒருமுறை வீடுதேடி வந்து மருத்துவ சிகிச்சை,நுகர்வோர் சந்தை போன்ற பல கவர்ச்சிகர அறிவிப்புகள் அறிக்கையில் காணப்படுகின்றன..
இரு தினங்களுக்கு முன் கலைஞர் சொன்னது போல இந்த அறிக்கை கதாநாயகி அறிக்கையே.
8 comments:
கலைஞரின் "கதாநாயகி" முற்றிலும் இலவசமாக கடைகளில் கிடைக்கும். மக்களே சண்டை போடாமல் வரிசையில் நின்று வாங்கவும்.
எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு
//ஈழத் தமிழர் அமைதியாக வாழ இலங்கை அரசை வலியுறுத்தச் சொல்வோம்//
ஸ்டுப்பிட்........
//கட்சத்தீவை திரும்பப் பெற மைய அரசை வலியுறுத்தும்//
கொய்யால தேர்தல் வந்ததும் என்னவெல்லாம் உளருரானுங்க நாதாரி பரதேசி நா....ங்க.....
ஈழத்தமிழர் ஒரு வியாபாரப் பொருளாய் போடுதடியாய் ஆகிவிட்டோம் எல்லாருக்கும் !
அரசு அலுவலகங்களில் லஞ்சம் ஊழல் இல்லாத அளவுக்கு துரிதமான கண்காணிப்பு பணி. //////// ayyo.. ayooo...
வருகைக்கு நன்றி Prakash
வருகைக்கு நன்றி Mano
வருகைக்கு நன்றி Hema
Post a Comment