கடந்த நான்கு நாட்களாக நடந்துவந்த நாடகம் முடிந்தது.
நாடகத்தின் கிளைமாக்ஸ் எதிர்பார்த்ததுதான் என்றாலும்..கடைசிவரை நம்மை இருக்கையின் ஒரம் வரை வந்து உட்காரவைத்த கலைஞரின் நாடகமாக்க அமைப்பிற்கு நன்றி.
காங்கிரஸ் கடைசிவரை தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் 63 தொகுதிகள் என்ற கோரிக்கையில் வெற்றி பெற்றது. தி.மு.க., ராஜிநாமா நாடகம் ஆடினாலும் கடைசியில் விட்டுக் கொடுத்தது தெரிகின்றது.
பிற்கால ஆதாயத்தை எண்ணி பா.ம.க., தன் தொகுதிகளில் ஒன்றை விட்டுக் கொடுத்துள்ளது.அதுபோலவே தனக்குக் கிடைத்த மூன்று தொகுதிகளில் ஒன்றை முஸ்லிம் லீக் விட்டுக் கொடுத்துள்ளது.
தி.மு.க., 121 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடப் போகிறது.வென்று ஆட்சி அமைத்தாலும் அது மீண்டும் மைனாரிட்டி ஆட்சியாய்தான் இருக்கப் போகிறது.இந்த முறை கூட்டணி ஆட்சி அமைந்தாலும் ஆச்சர்யபட தேவையிராது.
தேர்தலுக்குப் பின் இன்னும் நிறைய அரங்கேற்றங்கள் உள்ளது.
இன்றைய நிலையில் காங்கிரஸ்,தி.மு.க., சமரசம்...சம்பந்தப் பட்ட கட்சியினரை திருப்தி படுத்த முடியவில்லை என்றாலும்..
இந்த சமரசத்தால் ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.
தி.மு.க., வின் சாதாரணத் தொண்டனைப் பொறுத்தவரை கட்சியை பிடித்திருந்த ஏழரை விட்டுவிட்டதாக எண்ணி பட்ட சந்தோசம் இவ்வளவு விரைவில் அகன்ற வருத்தம் கண்டிப்பாக இருக்கும்.
3 comments:
கேவலங்கள் இப்ப தான் தொடங்கியிருக்கிறது. தேர்தல் முடிவு வரை அது தொடரும், நாடகங்களும்.
இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ?
இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ?
யார் கண்டது
Post a Comment