1)காங்கிரஸ் ஏன் 63 தொகுதிகள் கேட்டங்களாம்
ஜெ தான் கூட்டுத்தொகை 9 வரமாதிரி கேட்கச் சொன்னாங்களாம்
2)ராமதாஸ் தனக்கு ஒதுக்கிய தொகுதியில் இருந்து ஒரு தொகுதியை எப்படி விட்டுக் கொடுத்தார்
ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் கேட்டாப்போல மேலவைல ஒரு சீட் அவர் சொல்றவருக்குத் தரதா கலைஞர் சொல்லி இருப்பார்
3)சரத்குமாருக்கு இரண்டு தொகுதியை ஜெ ஒதுக்கி இருக்காரே
இரண்டாவது யார்
4)நாட்டில எவ்வளவு ஜாதிகள் இருக்கு
ஒரு சீட்,இரண்டு சீட் வாங்கின கட்சியெல்லாம் லிஸ்ட் எடுத்துப் பார் ..தெரிஞ்சிடும்
5)இந்த முறை ஆட்சிக்கு வந்தா மக்களுக்கு இலவசமா என்ன தருவாங்க
அல்வா தருவாங்க
6)தலைவர் டில்லிக்குப் போய் தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினாரே..அங்கே என்ன மொழியிலே பேசியிருப்பார்
அவங்க சொல்றதெல்லாம் புரியாம..மௌனமாகவே இருந்திருக்கார்..மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு நினைச்சு ..பேச்சுவார்த்தை வெற்றின்னு அவங்க அறிவிச்சுட்டாங்க
7)63 தொகுதிக்கு பின்னும் கட்சிக்குள்ள பேச்சு வார்த்தை நடக்குதாமே
மொத்தம் கட்சியிலே 9 கோஷ்டி இருக்கே..ஒரு கோஷ்டிக்கு ஒன்பது தொகுதிகள் கேட்டு பேச்சு வார்த்தை நடந்துக் கிட்டு இருக்கு
8)விபீஷணன் சரணாகதிக்கும்..தி.மு.க., சரணாகதிக்குமான ஒற்றுமை .வேற்றுமை என்ன
ஒற்றுமை ஆட்சியை தனதாக்கிக் கொள்ள..வேற்றுமை..அநீதியை ஒழிக்க விபீஷணன் சரணாகதி..நீதியை ஒழிக்க தி.மு.க., சரணாகதி
9)இந்த தேர்தல்ல யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு நினைக்கறே..
யார் ஜெயிச்சு ஆட்சி அமைப்பாங்கன்னு தெரியாது..ஆனா யார் தோப்பாங்கன்னு தெரியும்..ஜனநாயகம் தோற்கும்
10) சரத்குமார் அ.தி.மு.க., கூட்டணிக்குப் போயிட்டாரே..இனி என்னவாகும்
செல்லமே ஜெ ல வரும்
11 comments:
இன்னும் சிரிச்சிகிட்டே இருக்கேன் நண்பா..
செல்லமே ஜெ ல வராதுங்க ..சரத்தோட வீட்டுக்காரம்மா உஷார் பார்ட்டி ...ராடன் அவங்களோடது
>>>காங்கிரஸ் ஏன் 63 தொகுதிகள் கேட்டங்களாம்
ஜெ தான் கூட்டுத்தொகை 9 வரமாதிரி கேட்கச் சொன்னாங்களாம்
ஹா ஹா செம
>>>>
அவங்க சொல்றதெல்லாம் புரியாம..மௌனமாகவே இருந்திருக்கார்..மௌனம் சம்மதத்திற்கு அறிகுறின்னு நினைச்சு ..பேச்சுவார்த்தை வெற்றின்னு அவங்க அறிவிச்சுட்டாங்க
கலக்கல்
//ஜெ தான் கூட்டுத்தொகை 9 வரமாதிரி கேட்கச் சொன்னாங்களாம்//
ஒன்பதுக்கு வேறொரு அர்த்தமும் ஒண்டு ஹே ஹே ஹே ஹே...
ஊரோரம் புளியமரம்....
வருகைக்கு நன்றி Chitra
வருகைக்கு நன்றி கருன்
வருகைக்கு நன்றி பூங்குழலி
வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்
வருகைக்கு நன்றி Mano
:))
Post a Comment