ஒரு நாளில் ஒரு பாக்கெட் சிகரெட் பிடிப்பவர்கள் ஒரு வாரத்தில் உள்ளிழுக்கும் நிகோடின் அளவு 400 மில்லிகிராமாம்.இந்த அளவு நிகோடினை ஒரே சமயத்தில் ஒருவர் உட்கொண்டால் உடனே மரணமாம்.வெள்ளை எமனை ரத்தின கம்பளம் போட்டு வரவேற்க வேண்டுமா?
2)பிரைன் டெட் எனப்படும் மூளை இறப்பு எற்பட்ட 88 பேரிடமிருந்து இதுவரை தமிழக அரசு 18 இதயம்,2 நுரையீரல்,34 கல்லீரல்,166 சிறுநீரககங்கள், 99 இதய வால்வுகள்,126 விழி வெண்படலங்கள் தானமாகப் பெறப்பட்டு நோயாளிகளுக்கு பொருத்தப் பட்டுள்ளவனவாம்.இதனால் 479 பேர் பயனடைந்துள்ளனராம்.
3)ஆண்டுதோறும் காடு வளர்ப்பதில் தீவிரமாக ஈடுபட்டு காட்டுப் பகுதியை அதிகரித்து வருகிறதாம் சைனா..இந்த செய்தியைக் கேள்விப்பட்ட அன்றே படித்த ஒரு செய்தி..கும்மிடிபூண்டி அருகே காடுகளை அழித்து ஒரு தொழிற்சாலை உருவாகிறதாம்.
4)ஒரு பொன்மொழி..
பணத்தை குவிப்பதிலேயே குஷியாய் இருப்பதை விட பரந்த மனப்பான்மையுடன் இருப்பது அவசியம்.பரந்தமனப்பான்மை என்பது அனைவரையும் நேசிப்பதும், வாழ்க்கையின் அருமையான விஷயங்களை பாராட்டுவதும் தான்.நம்முடன் எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்ற நினைப்பு எப்போதும் இருக்கட்டும்.
5)மகாத்மா காந்திக்கும், பாடலாசிரியர் வாலிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்ன தெரியுமா?
காந்தி தன் வாழ்நாளில் ஒரு முறை கூட. .விமானப் பயணம் செய்ததில்லை..வாலியும் அப்படித்தான்.
6)வாரப்பத்திரிகைகளில் பாக்யா வில் கேள்வி பதில் எனக்குப் பிடித்த ஒன்று.இந்த வாரம் அன்புமணி என்பவர் 'அறிவு என்பதில் பிரிவு இருக்கிறதா?' என்று கேட்ட கேள்விக்கு பாக்யராஜின் பதில்..
உடலால் மட்டும் உணர்வு ஓரறிவு தாவரங்களுக்கு
உடல்,நாக்கால் உணர்வது ஈரறிவு..இது கடல்வாழ் உயிரினங்களுக்கு
உடல்,நாக்கு,மூக்கால் உணர்வது மூன்றறிவு..இது ஊர்வினங்களுக்கு
உடல்,நாக்கு,மூக்கு,கண் இவற்றால் உணர்வது நான்கறிவு..இது பூச்சி இனங்களுக்கு
உடல்,நாக்கு,மூக்கு,கண்,காது ஆகிய ஐந்தால் உணர்வது ஐந்தறிவு..இது விலங்கினங்களுக்கு
உடல்,நாக்கு,மூக்கு,கண்,காது,மூளை ஆகியவற்றால் அறிவது ஆறறிவு..இது மனிதர்களுக்கு
அருமையான பதில் அளித்தமைக்கு வாழ்த்துகள் பாக்யராஜ்.
17 comments:
பாக்யாவில் வந்த பதில் ரொம்ப நல்லா இருக்குது. பகிர்வுக்கு நன்றிங்க.
அண்ணன் பல புக்ஸ் படிக்கறார் போல.. ம் ம்
தகவல்கள் அருமை. பாக்யா பதிலும் அருமை.
ரொம்ப நல்ல பகிர்வுங்க
அட நல்ல தகவலா இருக்கே....
சிகரெட்,பொன்மொழி,கேள்வி பதில் எல்லாமே பிரயோசனமானவை !
//
>5)மகாத்மா காந்திக்கும், பாடலாசிரியர் வாலிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு என்ன தெரியுமா?
>காந்தி தன் வாழ்நாளில் ஒரு முறை கூட. .விமானப் பயணம் செய்ததில்லை..வாலியும் அப்படித்தான்.
//
அப்ப எனக்கும் ஒற்றுமை இருக்கே...
இத்த்த்து சுண்டல். பெர்ஃபெக்ட் மிக்ஸ்
நல்ல பகிர்வு. அறிந்துகொண்டோம்.
வருகைக்கு நன்றி Chitra
வருகைக்கு நன்றி Jey
வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்
வருகைக்கு நன்றி Mano
வருகைக்கு நன்றி கமலேஷ்
வருகைக்கு நன்றி
ஹேமா
வருகைக்கு நன்றி 'அ'னா 'ஆ'வன்னா
வருகைக்கு நன்றி மாதேவி
Post a Comment