Tuesday, March 22, 2011

தி.மு.க., வெற்றி உறுதி



கூட்டணி அமையும் விதத்தையும்..கட்சிகள் சென்ற தேர்தலில் வாங்கிய ஒட்டு விகிதத்தையும் வைத்து..யாருக்கு எவ்வளவு விழுக்காடு வாக்குகள் கிடைக்கும் என தீர்மானித்து வெற்றியை அனுமானிப்பது ஒரு வகை..இது ஒரு வகையில் சரியில்லை எனலாம்.

உதாரணமாக 119 இடங்களில் மட்டுமே போட்டியிடும் தி.மு.க., விற்கு விழும் வாக்குகளை விட 160 தொகுதிகளில் விழும் அ.தி.மு.க., வின் வாக்குகள் அதிகமே இருக்கும்..உடன் அ.தி.மு.க., ஆதரவு பெருகுகிறது என்று சொல்லுவது சற்று அபத்தம்.அதுபோல காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் அதற்கு விழும் தி.மு.க., வாக்ககளை கணக்கில் கொள்ளாமல் காங்கிரஸிற்கு ஆதரவு பெருகுகிறது என்பதும் அபத்தம்.

ஆனால் நடைமுறையில் சர்வே இப்படித்தான் பத்திரிகைகள் எடுக்கின்றன.அவர்கள் வாதம் மற்ற தொகுதியில் போட்டியிடும் அந்தக் கூட்டணிக் கட்சியின் ஓட்டுகளும் அதே சதவிகிதத்தில் உள்ளன ..என்பதே.

அதே முறையில் இந்த முறை சர்வே சொல்வது என்ன..

தி.மு.க., பா.ம.க., வி.சி.கே., காங்கிரஸ் இவை வாங்கும் வாக்குகளின் சதவிகிதம்..அ.தி.மு.க.,தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்ட்கள் வாக்கும் வாக்குகளை விட அதிகம்..இருக்கும்

ஆகவே இன்றைய நிலையில் தி.மு.க., அணிக்கு வெல்லும் வாய்ப்பு அதிகம்.

ம.தி.மு.க., அ.தி.மு.க., அணியில் இருந்திருந்தால்..இரண்டு கூட்டணிகளுக்கும் சம பலம் இருக்கும்..யார் வெல்வார்கள் என கணிப்பதும் சற்று கடினம்.

மதி.மு.க., பா.ம.க., போலவோ, வி.சி.கே.,போலவோ ஒரு சில மாவட்டங்களில் வலிமை பெற்றதல்ல.வை.கோ.வின் ஆதரவாளர்கள் தமிழம் முழுதும்..அனைத்துத் தொகுதிகளிலும் உள்ளனர்.

ம.தி.மு.க., தேர்தலை புறக்கணிப்பதாய் கூறினாலும்..அந்தக் கட்சியின் தொண்டர்கள் வாக்களிக்காமல் இருக்கப் போவதில்லை.

அவர்கள் வை.கோ.,வை உண்மையில் நேசிப்பவர்கள்.

அதனால்..தன் தலைவனுக்கு ஜெ யால் ஏற்பட்ட அவமானத்தை அவர்கள் மறக்க மாட்டார்கள்..ஆகவே அவர்கள் வாக்குகள் ஜெ க்கு எதிர் அணிக்கே விழும்..

அப்போது தி.மு.க., விற்கு வாக்குகள் விழுக்காடு அதிகமாகி வெல்லக் கூடிய தொகுதிகள் அதிகமாகும்.

தி.மு.க., வெற்றி கூட்டணியாய் இம்முறை திகழ கணிசமாய் வை.கோ., ஆதரவாளர்கள் வாக்குகள் இருக்கும் என உறுதியாய் கூறலாம்

இன்றைய நிலையில்..தி.மு.க., மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என உறுதியாய் கூறலாம்.

24 comments:

koodai said...

அப்படியெல்லாம் கற்பனை வேண்டாம்?அதிமுக கூட்டணிக்கு 198 இடங்கள் உறுதி.

ramya said...

neengal solvathu sarithan mdmk vote ellam dmkkuthan

அஹோரி said...

அப்டின்னா .... அந்த பாடிகாட் முனீஸ்வரன் தான் தமிழ்நாட்ட காப்பாத்தணும். ஐயோ ... கப்ளிங் மண்டையனோ, மாட்டுகார வேலனோ முதல்வரா ஆனா .... நினைச்சு கூட பாக்க முடியலையே .....

ramya said...

admk candidate selectonil tholviadaithuvittathu kodanattil ippome poi rest edukkalam

ramya said...

vijayakanth iruppathal vetri perruvidalam enru jj ninaikkirar may 13 parungal vijayakanthai kootaniyil serthathal admk tholvi adaithathu enru solla pogirar wait and see

கோவி.கண்ணன் said...

திமுக கூட்டணி ஆந்திரா கர்நாடக சட்டசபை தேர்தலில் நின்றாலும் வெல்லும்.
:)

ராஜேஷ், திருச்சி said...

அஹோரிக்கு அம்மா பாசம் ஐயோ பாவம்.. !

யாரப்பா அது அம்மாக்கு 198 ??? இதெல்லாம் ஓவரு.. துங்கினது போதும் கெட் அப்

தி மு க விற்கும் மெஜாரிட்டி கிடைக்காது.. ஆனால் பா ம க , வி சி ஆதரவுடம் தி மு க ஆட்சி தான்..

ராவணன் said...

நல்ல கனவு.......

நசரேயன் said...

கண்டிப்பாக

bandhu said...

தி மு க இப்போதைக்கு இலுப்பைப்பூ சக்கரை! ஆலை எதுவும் இல்லாததால் வெற்றி பெற்றுவிடும் போல தோன்றுகிறது! சட்டசபையில் மீண்டும் சேலை அவிழ்ப்பு, மைக் எறிதல் போன்ற வீர விளையாட்டுகளை காணும் நேரம் வந்துவிட்டது!

முகவை மைந்தன் said...

//கண்டிப்பாக//
இந்தக் "கண்டிப்பாக"வ எப்ப வுடுவ மாப்பு:-)

சி.பி.செந்தில்குமார் said...

ஆமா.. வேற வழி இல்லை.. கதாநாயகி முன்னாள் கதாநாயகியை ஜெயிக்கப்போகுது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Koodai

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ramya

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அஹோரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.கண்ணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராஜேஷ்,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ராவணன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி bandhu

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி முகவை மைந்தன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
சாமி யார்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்

zing513320 said...

தி மு க விற்கும் மெஜாரிட்டி கிடைக்காது.. ஆனால் பா ம க , வி சி ஆதரவுடம் தி மு க ஆட்சி தான்..