இந்திய அணிக்கு என்னதான் பேட்டிங் லைன் அப் ஸ்ட்ராங்காய் இருப்பதாய் சொல்லிக் கொண்டாலும்...கடைசி சில ஓவர்களில் நம் இந்திய வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல்..அல்லது சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழப்பது வழக்கம்.
இந்த விஷயத்தில் இந்திய அணியினருக்கும்..பெரிய டீம்..சின்ன டீம் என பாராபட்சமே கிடையாது.
அதே போன்று எவ்வளவு ரன்கள் அணி எடுத்தாலும்..எதிர் அணியுடன் விளையாடுகையில் பார்ப்பவர் நகங்களை கடித்து விழுங்கும் அளவு டென்ஷனில் வைப்பதும் கை வந்த கலை.
நேற்றைய சவுத் ஆஃப்ரிக்காவுடன் ஆன ஆட்டத்திலும் அதுவே நடந்தது.
டெண்டுல்கரும்,ஷேவாகும்,கம்பீரும் அருமையாய் அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்கள் நேற்று.267 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட் என்ற நிலையில்..மீத மிருந்த பத்து ஓவர்களில் இந்தியா கிட்டத்தட்ட 350 ஓட்டங்களை நெருங்கும் என எதிர் பார்க்கப்பட்டது ஆனால் 69 ஒட்டங்களில் 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்கள் எடுத்தது. அணி 50 ஓவர்கள் கூட முழுமையாக விளையாட முடியாதது வெட்கங்கெட்ட விஷயம்
சவுத் ஆஃப்ரிக்கா நன்கு ஆடி, கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்..
கடைசி ஓவர் போடும் சந்தர்ப்பத்தை கேப்டன் தோனி ஆஷிஷ் நெஹ்ராவிற்கு அளித்தார்..ஹர்பஜன் சிங்கிற்கு ஒவர் மீத மிருந்தது.
தவிர்த்து..கடைசி ஓவர்களில் பௌலர்ஸிற்கு சச்சின் சில அறிவுரைகளை வழங்கியதைப் பார்த்த போது..அவருக்கும் இரண்டு மூன்று ஓவர்கள் கொடுத்திருக்கலாம் எனத் தோன்றியது.
விஷயத்திற்கு வருவோம்...
கடைசி ஓவர் நெஹ்ராவிற்கு என்றதும்..என்னுடன் அமர்ந்து மேட்சைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு பத்து வயது சிறுவன் எழுந்து விட்டான்..
'எதுவும் சொல்லமுடியாது..மேட்சைப் பார்' என்றேன்.
'13 ரன் எடுக்கணும் சவுத் ஆஃப்ரிக்கா..போடப் போவது சொத்தை பௌலர்..அதனால் அவங்க ஈஸியா ஜெயிச்சுடுவாங்க' என்றான்.
நெஹ்ராவும்..கொஞ்சமும் யோசிக்காது..4,6,2,4 என ரன்களை அள்ளி வழங்கினார்.
வீரர்களின் ஈடுபாட்டை சற்று யோசிக்கவைத்த மேட்ச்.
4 comments:
ரைட்டுப்பா!
சரி சரி கோபபடாதீங்க....
வருகைக்கு நன்றி விக்கி உலகம்
வருகைக்கு நன்றி Mano
Post a Comment