அதிமுக அணியில் இருக்கும் மதிமுக முதலில் 35 தொகுதிகளை கேட்டது. அதிமுக தரப்பு மறுக்கவே பின்னர் 21 தொகுதிகளை கேட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்த அதிமுக 7 அல்லது 8 தொகுதிகள் வேண்டுமானால் தருகிறோம் என்றது.
இதனால் விரக்தியடைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்காமல் இருந்தார்.
இதையடுத்து மதிமுகவை கூட்டணியில் சேர்க்காமல் அதிமுக தொகுதிகளை அறிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கூட்டணிக்கட்சியினர் மதிமுகவையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினர்.
பின்னர் அதிமுக கொஞ்சம் இறங்கிவந்து 12 சீட் தருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் இதை ஏற்க மறுத்துள்ளார் வைகோ. அதுமட்டுல்ல வரப்போகும் சட்டமன்ற தேர்தலையே புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார்.
அவர், ‘’தொகுதி ஒதுக்கீட்டில் அதிமுக நடந்து கொண்டவிதம் பிடிக்கவில்லை. 21 தொகுதிகள் கேட்ட நிலையில் 12 தருவதாக அதிமுக கூறியதால் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
சுயமரியாதையை இழந்து பதவியைப் பெற வேண்டிய அவசியம் மதிமுகவிற்கு இல்லை. தமிழகம் - புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும், 3-வது அணி அமைத்து தேர்தலை சந்திக்கவும் விரும்பவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
(நன்றி நக்கீரன் )
3 comments:
test
சுடச் சுட செய்திகளா? :)
வருகைக்கு நன்றி D R Ashok
Post a Comment