ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த தாமஸ், அந்த பதவிக்கு வந்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு.
மேலும் உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்பில்..
'முக்கிய பதவிக்கு ஆட்களை நியமிக்கும் போது அவர்களின் நேர்மையும் கணக்கில் கொள்ள வேண்டும்.இனி வரும் காலத்தில் எந்தப் பதவியாக இருந்தாலும், அதிகாரிகளின் பெயரை மட்டும் பரிசீலிக்காமல்,பொது வாழ்க்கையில் நேர்மையாகவும், மக்கள் நலனுக்காக உழைக்கும் அனைவரின் பெயரையும் பரிசீலிக்க வேண்டும்' என்றும் எடுத்துச் சொல்லி இருக்கிறது.
இந்த கருத்துகள் அரசு அதிகாரிகள் நியமனத்திற்கு மட்டுமல்ல அவர்களை நியமனம் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.
ஆம்..இந்த அரசியல்வாதிகளை நியமிப்பது யார்..?
கண்டிப்பாக இவர்களைத் தெர்ந்தெடுக்கும் மக்கள் தானே..
ஆகவே மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் போதும்...
வேட்பாளர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், எந்த ஜாதியைச் சேர்ந்தவர் ,எந்த கூட்டணியைச் சேர்ந்தவர் என்றெல்லாம் கணக்கில் கொள்ளாது..
வேட்பாளர்..நல்லவரா..நேர்மையானவரா..அவரைத் தேர்ந்தெடுத்தால் மக்களுக்கும்..நாம் சேர்ந்துள்ள தொகுதிக்கும் நல்லது செய்பவராக இருப்பாரா..என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு தகுந்தவருக்கு வாக்களிக்க வேண்டும்..
உண்மையான ஜனநாயகம் மலர்வது என்பது மக்கள் கையில்தான் உள்ளது.
இதை மக்கள் உணர்ந்தால்...
நாடு சிறக்கும்..ஊழல் ஒழியும்.
7 comments:
முதன் முதலாக முதன் முதலாக பரவசமாக பரவசமாகத்தான்...
>>>வேட்பாளர்..நல்லவரா..நேர்மையானவரா..அவரைத் தேர்ந்தெடுத்தால் மக்களுக்கும்..நாம் சேர்ந்துள்ள தொகுதிக்கும் நல்லது செய்பவராக இருப்பாரா..என்பதையெல்லாம் கணக்கில் கொண்டு தகுந்தவருக்கு வாக்களிக்க வேண்டும்..
இது நடைமுறைக்கு வந்தா எல்லா தொகுதிலயும் சுயேட்சைகளே வெற்றி பெறுவார்கள். நாட்டுக்கு நல்ல காலம் பொறக்கும்
well said..
இந்த கருத்துகள் அரசு அதிகாரிகள் நியமனத்திற்கு மட்டுமல்ல அவர்களை நியமனம் செய்யும் அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்.
....உண்மை...உண்மை...உண்மை!
வருகைக்கு நன்றி செந்தில்குமார்
வருகைக்கு நன்றி சமுத்ரா
வருகைக்கு நன்றி Chitra
Post a Comment