Wednesday, March 16, 2011

இனி வைகோ என்ன செய்ய வேண்டும்..





அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது.

ம.தி.மு.க.விற்கு இடமில்லை..

இதற்கு மேல் வைகோ இறங்கி வந்து...கொடுத்த தொகுதிகளை ஒப்புக் கொள்வார் என்று தோன்றவில்லை.அப்படியே ஒப்புக் கொண்டாலும் அது அவரது தன்மானத்திற்கு இழுக்கு.

ஆக..இந்நிலையில் வை.கோ., செய்ய வேண்டியது என்ன..

தமிழனின் முதல் எதிரி காங்கிரஸ்..காங்கிரஸ் எங்கெல்லாம் போட்டியிடுகிறதோ..அங்கெல்லாம் அதைத் தோற்கடிக்க வேண்டும்.

வை.கோ.,வின் முயற்சி அதுவாய் இருக்கட்டும்.

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து..அங்கு தன் கட்சி வேட்பாளர்களை நிறுத்தட்டும்..வெற்றி முக்கியமல்ல..காங்கிரஸ் தோல்வி முக்கியம்..அதைத் தன்னால் ஓரளவு செய்ய முடியும் என நிரூபிக்கட்டும்.

அப்படி போட்டியிடும் தொகுதியில்..வாங்கும் ஒவ்வொரு ஓட்டும்..விலை மதிப்பற்றது.

வை.கோ., சீமான்..ஆகியோர் இனி இதைத்தான் செய்ய வேண்டும்.

தேவைப்பட்டால்..கருத்து ஒருமித்த சில சிறு கட்சிகளுடன் வை.கோ., கூட்டு சேர்வதில் தவறில்லை.

13 comments:

goma said...

காங்கிரஸ் தோல்வியில் வெற்றி யாருக்கு ?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

விஜயகாந்த் பாணியில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தட்டும்.

தாய்கழக தொண்டர்களை சந்தித்து கலைஞர் பாணியில் நெஞ்சுருகப் பேசட்டும். உதய சூரியன் இல்லாத தொகுதிகளில் தங்களுக்கு ஓட்டுப் போட வைக்கட்டும். இன்றைய சூழலில் அதுவும் மிகவும் சாத்தியமே.

குறிப்பிட்ட சதவிகித ஓட்டுக்களை வென்று காட்டட்டும். பிறகு அவர்களும் அடுத்த தேர்தலில் பெரிய அளவில் பேரம் பேச முடியும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//வை.கோ., சீமான்..ஆகியோர் இனி இதைத்தான் செய்ய வேண்டும்.//

இருவரும் ஒரே நிலை அரசியல்வாதிகளாகத்தான் வைகோவிற்கு பரிதாபப் படும் நீங்களே எழுதி இருக்கிறீர்கள். அப்படி என்றால் சீமானுக்கு ஒதுக்கும் அளவிற்குத்தானே ஒதுக்க முடியும்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வைகோ கட்சியில் வென்ற வேட்பாளர்கள் மீண்டும் தாய் கழகத்தில் சேர மாட்டார்கள் என்று வைகோவால் உறுதி கொடுக்க முடியுமா! முடியவே முடியாது. கண்கள் பனிக்க இதயம் கணக்க மீண்டும் தாய் கழகத்தில் இணைய தயாராகவே இருப்பார்கள்.

குடுகுடுப்பை said...

வாக்கு பிரிந்து காங்கிரஸ் வெல்ல வழி வகுக்குமே?

தி.மு.கவினர் ஒட்டுமொத்தமாக மதிமுக விற்கு வாக்களித்தால் மட்டுமே மதிமுக வெற்றி சாத்தியம். வைகோவை எதிர்த்தே காங்கிரஸை வெல்ல வைத்தவர்களை நம்பி இதெல்லாம் சாத்தியமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வீராங்கன் said...

இருவரும் ஒரே நிலை அரசியல்வாதிகளாகத்தான் வைகோவிற்கு பரிதாபப் படும் நீங்களே எழுதி இருக்கிறீர்கள். அப்படி என்றால் சீமானுக்கு ஒதுக்கும் அளவிற்குத்தானே ஒதுக்க முடியும்//



வைகோ., சீமான் இருவருக்கும் காங்கிரஸ் தோற்கடிப்பட வேண்டும் என்ற எண்ணம் இருப்பதால்..அவர்கள் இருவர் பெயரையும் எழுதினேன்.மற்றபடி வைகோ ஒரு அரசியல் கட்சியை நடத்தி வருபவர்.கிட்டத்தட்ட 4 விழுக்காடு மக்கள் ஆதரவு பெற்றவர்.ஆகவே தொகுதி பங்கீடு எனச் சொல்லப்படும் போது இருவரையும் ஒன்றாக ஒப்பிடக்கூடாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குடுகுடுப்பை said...
வாக்கு பிரிந்து காங்கிரஸ் வெல்ல வழி வகுக்குமே?

தி.மு.கவினர் ஒட்டுமொத்தமாக மதிமுக விற்கு வாக்களித்தால் மட்டுமே மதிமுக வெற்றி சாத்தியம். வைகோவை எதிர்த்தே காங்கிரஸை வெல்ல வைத்தவர்களை நம்பி இதெல்லாம் சாத்தியமா?//



நீண்ட நாட்கள் கழித்து வருகை புரிந்தமைக்கு நன்றி.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில்..அதை விரும்பாதவர் எல்லாக்கட்சியிலும்(!!) இருப்பர்.அவர்கள் அ.தி.மு.க.,விற்கு வாக்களிக்கமாட்டார்கள்.அப்படிப்பட்டவர்கள் வை.கோ.,விற்கு வாக்களிக்கக் கூடும்.நான் சொல்ல வருவது புரிகிறதா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வீராங்கன் said...
வைகோ கட்சியில் வென்ற வேட்பாளர்கள் மீண்டும் தாய் கழகத்தில் சேர மாட்டார்கள் என்று வைகோவால் உறுதி கொடுக்க முடியுமா! முடியவே முடியாது. கண்கள் பனிக்க இதயம் கணக்க மீண்டும் தாய் கழகத்தில் இணைய தயாராகவே இருப்பார்கள்.
//

எந்தக் கட்சித் தலைவராலும் உறுதி மொழி தரமுடியாது.தி.மு.க., வில் இருந்து அ.தி.மு.க., செல்லவில்லையா?அ.தி.மு.க., விலிருந்து தி.மு.க., போகவில்லையா..அப்படித்தான் இதுவும்.

Pranavam Ravikumar said...

யோசிக்க வேண்டிய ஒரு விஷயம்!

பொ.முருகன் said...

மதிமுக,வுக்கு தேர்தல் தானே பிரச்சனை,பேசாமல் வீரமணியின் திக போல மதிமுக வையும் ஆக்கிடுங்க பிரச்சனை ஓவர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kochuravi

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி B.murugan