மதிப்பிற்குரிய வை.கோ., அவர்களுக்கு
வணக்கம்.
உங்கள் மீது..உங்கள் கொள்கைகள் மீது சற்று பற்று கொண்டவன் என்னும் முறையில் இம்மடலை எழுதுகிறேன்.
நீங்கள் தி.மு.க., விலிருந்து வெளி வந்து ம.தி.மு.க., ஆரம்பித்த போது...மற்ற திராவிடக் கட்சிகள் இரண்டுக்கும் மாற்றாக..கொள்கை பிடிப்புள்ள ஒரு தலைவரால் ஆரம்பிக்கப் பட்ட கட்சி என அனைவரும் எண்ணினர்.
தாங்கள் ஒரு தேர்தலில் தனித்து நின்று..எந்தத் தொகுதியில் வெல்லாத போதும்..வை.கோ., விற்கு கணிசமான வாக்கு சதவிகிதம் இருப்பதை அனைவரும் உணர்ந்தனர்.
ஏதாவது திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தால் தான் சட்டசபைக்குள் நுழைய முடியும் என்னும் துரதிருஷ்ட நிலை இன்று தமிழகக் கட்சிகள் எல்லாவற்றிருக்கும் ஆன தலையெழுத்து.நீங்களும் அவ் வலையில் விழுந்து..
உங்கள் மீது கொலை பழி சுமத்திய கட்சியுடன் கூட்டு வைத்தீர்கள்..
பின் சில அதிகத் தொகுதிகள் கிடைத்தது என மாற்று கட்சி அணியில் சேர்ந்தீர்கள்..அக்கட்சி 'பொடா' வில் உங்களை சிறையில் அடைத்ததையும் மறந்து.
ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்காத..தி.மு.க., வையும் காங்கிரஸையும் வசை பாடிய நீங்கள்...
போரென்றால் அப்பாவி மக்கள் கொல்லப் படுவது சகஜம் ..என்று சொன்ன உங்கள் கூட்டணித் தலைவிப் பற்றி வாய் மூடி மௌனியானீர்கள்..கூட்டணி தர்மம் என.
இன்று கூட்டணியில் நீங்கள் இல்லையென்றதும்..ஜெ மீது வசை பாடுகிறீர்கள்.
அது தவறு என நான் சொல்லவில்லை...ஏனெனில் ஜெ பற்றி அனைவருக்குமே தெரியும்.. ஆனால் அவருடன் இருந்ததால் அவர் செய்யும் செயலுக்கெல்லாம் துணை போனீர்கள்.
சரி விஷயத்திற்கு வருகிறேன்..
இந்த முறை அ.தி.மு.க., உடன் கூட்டணி முறிவு என்றதும்...
தி.மு.க., கூடாரத்திலும் இடமில்லை..
உடன்..தனியே நின்றால் வெற்றி பெற முடியாது என்பதால்..தேர்தல் புறக்கணிப்பு என்கிறீர்கள்..
இதனால் என்ன நடக்கும்..உங்களுக்கான வாக்குகள் யாருக்கு விழும்..
உங்களை நம்பிய உங்கள் கட்சிக்காரர்களும்..ஈழத் தமிழர் ஆதரவாளர்களான பொது மக்களும், தமிழக மீனவர்களும்...அ.தி.மு.க., மீது கோபமாய் இருப்பார்கள்.அவர்கள் வாக்கு ஜெ விற்கு விழாது.
அதற்கு பதில் தி.மு.க.உடன் ஆன காங்கிரஸிற்கு விழும்..
உங்கள் தயவால்..காங்கிரஸ் சில இடங்களில் வெல்லும் நிலை வரக்கூடும்..
அப்படி ஒரு நிலை உங்களால் ஏற்படலாமா?
கூடாது..கண்டிப்பாய் கூடாது..
ஆகவே..நீங்கள் செய்ய வேண்டியது என்ன..
குறைந்த பட்சம் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளிலாவது..ம.தி.மு.க., போட்டியிட வேண்டும்..
வெல்கிறோமா..இல்லையா..என்பது..பிரச்னையல்ல..காங்கிரஸ் வெல்லக் கூடாது..
இந்தக் கோணத்தில் யோசியுங்கள்..
அப்போது..உங்களுக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும்..காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு வைக்கப் பயன் படட்டும்.
ம.தி.மு.க., பல இடங்களில் வெல்லும்..நாமும் வென்றிருப்போம் அக்கட்சியுடன் கூட்டு சேர்ந்திருந்தால்..என சம்பந்தப் பட்டவர்களுக்கும் புரியும்.
ம.தி.முக., வின் வாக்கு சதவிகிதம் எப்படியுள்ளது என அனைவருக்கும்..நீங்கள் உட்பட தெரியும்.
செய்வீர்களா?
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
18 comments:
உண்மை தான்... ஒரு நல்ல அரசியவாதியை தமிழகம் இழந்து கொண்டிருக்கிறது.
எனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு!
நான் வழிமொழிகிறேன்..
நீங்கள் சொல்வதை மட்டும் செய்தால் சத்தியமாக தமிழர்கள் மீண்டும் ஒன்றுகூடி காங்கிரசுக்கு பாடை கட்டுவார்கள். ஜெயாவின் அகங்காரத்தை தூக்கிலிடுவார்கள். செய்வாரா?
சார் . உங்கள் லாஜிக் தவறு . காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் மதிமுக போட்டியிட்டால் , காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகள் சிதறும் . காங்கிரஸ் சுலபமாக வெல்லும் .
//2006-ல் தி.மு.க. அணியில் இருந்து அ.தி.மு.க. அணிக்கு வைகோ சென்றதால்தான், தி.மு.க.வுக்கு அந்தத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.//
ஒருவேளை 2006 -ல் தி.மு.க.வுக்கு தனிப் பெரும்பான்மை பலம் கிடைத்திருந்தால்,2008 -ல் கருணாநிதி-மாநில அரசுக்கு பாதிப்பில்லை என்ற பட்சத்தில் ,மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கி இருந்திருக்க முடியும்.அதன் மூலம் ஈழ தமிழர் படுகொலையை ஓரளவுக்கு தடுத்திருக்க முடிந்திருக்கும். 19 மாதம் சிறையிட்ட பின்னும் ,கருணாநிதியையே நம்பவைத்து கழுத்தறுத்த வைகோ போன்ற துரோகிகள் அழிவதே தமிழர்க்கு நல்லது.
முன்னர் ஒரு தொகுதிக்காக ஓடிப்போன 'இது' (ஒரு நல்ல அரசியவாதி!!)தற்போது கண்ணியம் காத்ததாம்.வெட்ககேடு
நியாயமான கோரிக்கை.
//ஒரு நல்ல அரசியவாதியை தமிழகம் இழந்து கொண்டிருக்கிறது.//
ஒரு சந்தர்ப்பவாதியை என்று சொல்லுங்கள்.
இதுதான் ஒவ்வொரு தன்மானத் தமிழனின் கருத்தும் கூட
perfect!.
வருகைக்கு நன்றி Prakash
வருகைக்கு நன்றி Bala
வருகைக்கு நன்றி VJR
வருகைக்கு நன்றி
கே.ஆர்.பி.செந்தில்
வருகைக்கு நன்றி பார்வையாளன்
வருகைக்கு நன்றி murasoli mran
வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்
வருகைக்கு நன்றி DrPKandaswamyPhD
வருகைக்கு நன்றி தியாவின் பேனா
Post a Comment