Saturday, March 7, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 72

பிரதிபலனை எதிர்பார்க்காதீர்கள்
-------------------------------------------------

பிறருக்கு உதவித் தேவைப்படும்போது .நம்மால் முடிந்தால் அவர்களுக்கு அவ்வுதவியினைச் செய்திட வேண்டும்.

அப்படி செய்த உதவிக்கு, எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்கக் கூடாது.எப்படியாம் தெரியுமா?

அந்தந்த காலங்களில் தவறாது பொழிந்து, மக்கள் வாழ்வினை செழிக்க வைக்கிறது மழை.அதற்கு
பதிலாக மக்களிடம் இருந்து அது எதனையும் எதிர்பார்ப்பதில்லை அதுபோலவாம்


கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு (211)

கைம்மாறு கருதி மழை பொழிவதில்லை.அந்த மழையைப் போன்றவர்கள் கைம்மாறுகருதி எந்த உதவியும் செய்பவர்கள் அல்லர்.
என்கிறார்.

உதவி செய்வோரிடமிருந்து பலனை எதிப்பார்க்காதீர்கள்..நமக்கு உயிர் வாழ உதவி செய்யும் மழை நம்மிடம் இருந்து என்ன பிரதிபலனை எதிப்பார்த்து பெய்கிறது.(சூரியனைக் கூட பொங்கல் அன்று வணங்கும் நாம்..மழையை என்றாவது துதிக்கிறோமா? )


ஆகவே..எந்த ஒரு செயலுக்கும் பிரதிபலனை எதிப்பார்க்காதீர்..கடமையை செய்யுங்கள்..

No comments: