Sunday, March 1, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 66

 இக்குறளைப் பாருங்கள்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் (475)

மயில் இறகாய் இருந்தாலும், அதிகமாக (ஒரு வண்டியில்) ஏற்றப்பட்டால் வண்டியின் அச்சு முரிகின்ற அளவிற்கு அதற்குப் பலம் வந்து விடும்.

இது என்ன குறள்..இந்த விஷயம் அனைவரும் அறிந்ததுதானே! பின், வள்ளுவர் எதற்காக இப்படிச் சொல்கிறார்? என்று பார்ப்போமா..?

இக்குறள் வலியறிதல் அதிகாரத்தில் வருகிறது.

வலிமை அறிதல்...

அரசர்களுக்கு சொல்லப்பட்ட குறளாக இதைப் பார்ப்போமாயின்..

சின்ன பகைவன் தானே என பகைவர்களை அதிகரித்துக் கொண்டேப் போனால்..அவர்கள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்தால் பலம் பெற்று உன்னை (மன்னனை)அழித்துவிடுவர்...என சொல்லுவதாகக் கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்திலும் இக்குறள் அரசியலுக்கு உதவுகிறது..

சின்னக் கட்சிதானே..என பெரிய கட்சிகள் ஒதுக்கினால், அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து பலம் பெற்று பலமான கட்சியினைத் தேர்தலில் வென்று ஆட்சி அமைப்பது கண்கூடு.

தனிப்பட்ட மனிதனுக்கான அறிவுரையாக எடுப்போமாயின்..

கொஞ்சம் கொஞ்சமாக உண்ண ஆரம்பித்து..கண்டதையெல்லாம் சாப்பிட்டு உடல் எடையைக் கூட்டிக் கொண்டே போனல் உடலை இயக்கும் அச்சாணியான இதயம் பளு தாங்காது செயலிழந்து மரணத்தைத் தழுவ நேரிடலாம்.ஆகவே..நாம் நம் உடல் நலத்தில் கவனாய் இருக்க வேண்டும்.

அப்போது சாப்பிடவேக் கூடாதா? என்று கேட்டால்..

வள்ளுவர் சாமன்யரா? நீங்கள் இப்படிக் கேட்பீர்கள் என் அதற்கான பதிலையும் அதில் வைத்துள்ளார்.

"சால மிகுத்துப் பெயின்"  என்று "சால" என்ற வார்த்தையைப் போட்டுள்ளார்.சால என்றால், அதிகமாக..அதாவது அளவிற்கு அதிகமாக உண்டால்..அந்நிலை ஏற்படலாம் .  

"அளவிற்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு"

சுருங்கச் சொல்லி..அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை யோசித்தோமானால் எல்லா குறள்களுமே மனிதனுக்கு வள்ளுவர் கூறும் அறிவுரையாகவேத் தோன்றுகிறது. 

  


.

No comments: