Tuesday, March 10, 2020

வள்ளுவத்திலிருந்து தினம் ஒரு தகவல் - 75


ஆந்தணர் என்பவர் யார்?
--------------------------------------
நன்மை, தீமை ஆகியவற்றை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களை உலகில் பெருமைக்குரியவர்களாவார்கள்..என்று சொல்லும் வள்ளுவர், துறவறம் மேற்கொள்ள ஐம்பொறிகளையும் அடக்கி ஆள வேண்டும் என்கிறார்.


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார் (26)

என்கிறார்.பெருமை தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும்,சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குரிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்து விடமுடியும்

இப்படிச் சொல்வதுடன் நில்லாது..அந்தணர் என்பவர்கள் யார்? என்பதையும் சொல்கிறார்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (30)

அனைத்து உயிகளிடத்தும் அன்பு கொண்டு அருள் பொழியும் சான்றோர் (எவராயினும் சரி) எவராயினும்..அவர் அந்தணர் எனப்படுவார்.

நாமும் எல்லா உயிர்களிடத்தும் அன்பாய் இருப்போமாக!

No comments: