Thursday, October 9, 2008

விஜய்காந்த்திற்கு ஒரு கடிதம்

விஜய்காந்த் அவர்களுக்கு
வணக்கம்.,
நீங்களும் ஒரு கட்சி ஆரம்பித்து...எம்.எல்.ஏ.,ஆகவும் ஆகிவிட்டீர்கள்.அதை பாராட்டும் அதே நேரத்தில்..இப்போதெல்லாம் உங்கள் பேச்சில் ஆணவம் தொனிக்க ஆரம்பித்து விட்டது.,
அதற்கேற்றாற்போல லாயோலா கல்லூரியினர் எடுத்த கருத்துக்கணிப்பில் உங்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு 3ம் இடத்தில் இருக்கிறது என்றதும்..உங்களுக்கு சனி உச்சத்தில் வந்துவிட்டது.,கருத்துக்கணிப்பெல்லாம் தவறாக ஆகி விடுவதுண்டு.கோடிக்கணக்கான வாக்காளர்களில் ஒரு சில ஆயிரம் பேரிடமே வாக்கெடுப்பு நடைபெறுகிறது.அதை மறக்க வேண்டாம்.,
தேர்தலில் கட்சிகள் ஜெயிப்பது என்பது..அக்கட்சிகளுடன் வைக்கப்படும் கூட்டணி.,எந்த கட்சியும் சேராத வாக்காளர்களின்..தேர்தல் நாளன்று எடுக்கும் முடிவு ஆகியவை பொறுத்தே இருக்கிறது.,இதை உணராமல் பெரிய தலைகள் கூட தவறு செய்வதுண்டு.,2001ல்..தனது முந்தைய ஆட்சி சிறப்பாக செயல்பட்டதால்..இம்முறை ஜெயித்து விடலாம் என்ற கலைஞரின் எண்ணம் பொய்த்தது.,அ.தி.மு.க., கூட்டணி பலம் பொருந்தியதாய் இருந்ததால் வென்றது.,இதை அறிந்த கலைஞர் 2006ல் பலமான கூட்டணி அமைத்தார்.தி.மு.க.ஆட்சிக்கு வந்தது.,இதை ஏன் சொல்கிறேன் என்றால்..உங்களுக்கு யானை பலம் இருப்பதாக கனவு கண்டால் அது தவறு.,மக்களிடம் தான் பலம் இருக்கிறது. அவர்கள் ஆதரவு பெற அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.,

கலைஞருடன் பலருக்கு கருத்து வேறுபாடு உண்டு.,அவரால் தூற்றப்படும் பார்ப்பனர்கள் வாக்குகள் கூட தி.மு.க.விற்கு பெருமளவில் விழுகிறது.,இது நான் முன்னமே சொன்னபடி...தேர்தல் அன்று..மக்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு.,கலைஞரின் நிர்வாகத் திறமை.,கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் திறன் இவைகளுக்கு விழும் வாக்குகள்.அவர் ஒரு ராஜதந்திரி.,70 வருஷங்கள் பொது வாழ்வில் இருந்தவர்.,பல தில்லி தலைவர்களையும்..மாநில தலைவர்களையும் பார்த்தவர்.,

அப்படிப்பட்டவர்..நேற்று முளைத்த உங்களை அழிக்க வடிவேலு போன்றவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறார்..என்று நீங்கள் சொல்வதைப்பார்த்து..சிரிப்புத்தான் வருகிறது.,இது உங்கள் அனுபவக் குறைவையே காட்டுகிறது.
தமிழுக்காக தண்டவாளத்திலே தலை வைக்கிறேன் என்று ரயில் நிற்கும் போது த்லையை நீட்டறதெல்லாம் பெரிய விஷயமா?என்று எள்ளி நகையாடுகிறீர்கள்.
தமிழன்னை அக்கலைஞனுக்கு..கவிதை எழும் திறன்,கதை,வசனம்,எழுதும் திறன்,பிறமொழி காவியத்தை தமிழ் படுத்தும் திறன்,பேச்சுத் திறன் என வாரி வழங்கியிருக்கிறார்.ஒரு சிலரிப்போல 'ழ"க்கூட உச்சரிக்கத் தெரியாதவர் அல்ல இவர்.
தி.மு.க.,இரண்டுமுறை பிளவுப்பட்டும்..(முதல்முறை அ.தி.மு.க.உருவானது அடுத்த முறை ம.தி.மு.க.) அதற்கான தொண்டர்களை இழக்கவில்லை.,
கலைஞரின் நள்ளிரவு கைதுக்கூட கேலி செய்யப்பட்டாலும்(ஐயயோ..கொலை பண்றாங்கப்பா)..அதிலிருந்தது கலைஞரின் ராஜதந்திரம்.அவர் கைதைப் பார்த்த அனைத்து மக்களும் கட்சி வேறுபாடின்றி இதைக் கண்டனம் செய்து...தங்கள் ஆதரவை கலைஞருக்கு காட்டினர்.
அப்படிப்பட்ட ஒரு தலைவனை..வயதிற்குக்கூட மரியாதைத் தராமல்...இனி கலைஞர் இல்லை கருணாநிதின்னு தான் கூப்பிடப்போறேன் என்கிறீர்கள் ஆணவத்தோடு.
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள்....
கடைசியாக ஒன்று சொல்ல விழைகிறேன்..
'பெருக்கத்து வேண்டும் பணிவு"

இப்படிக்கு
அப்பாவி தமிழன்

22 comments:

தமிழன் said...

விடுங்க தமிழா இவரை மாதிரி ஆளுங்க திட்டும் போது தான், என்னை போன்ற ஆளுங்களுக்கு கலைஞரின் மீது உள்ள கோபம் மறைந்து பாசம் பிறக்கிறது. இவர் கலைஞர் என்று கூப்பிடவில்லை என்றால் என்ன தமிழகம் தலைகீழ் ஆகிவிடுமா? உண்மையில் ஆணவம் மண்டையின் உச்சியில் ஏறி உட்கார்ந்து உள்ளது.ஆணவம் அழிவின் ஆரம்பம் விஜயகாந்த் மறந்து விடாதிர்கள்.

மணிகண்டன் said...

/***** இப்படிக்கு
அப்பாவி தமிழன் *****/

கலைஞரா இருந்து இருந்தா இந்த கடுதாசுக்கு "ஆரியரின் சூதுன்னு" பதில் சொல்லி இருப்பாரு. அந்த அளவுக்கு வரலாற்று அறிவோ, மொழி அறிவோ இல்லாம இருக்காரே விஜயகாந்த்ன்னு சந்தோஷப்படுங்க.

Prabhusankar said...

உண்மையில் விஜயகாந்தை நினைத்து பரிதாபம்தான் வருகிறது. அவர் போட்ட கணக்குகள் தவறாக கோடிகள் கரைய நாளா பக்கமும் அஸ்திரங்கள் பாய, கலைஞரோ நாளுக்கு ஒரு திட்டம் அறிவித்து செயல்படுத்த, எதைச் சொல்லி அரசியல் செய்வது என புரியாமல் மதுவின் பிடியில் அகப்பட்டு உளறிக்கொண்டு இருக்கிறார் . பாவம் அவர் விட்டு விடுங்கள். தலைவர் தலைவர் என்று வாய்க்கு வாய் அழைத்த அவர் கூப்பிட்டு விட்டு போகட்டும் விடுங்கள்.

Dr. சாரதி said...

நீங்கள் கூறியவை முற்றிலும் உண்மை. நன்று

நசரேயன் said...

ஐயா,
அம்மாவும் கருணாநிதின்னு தான் கூப்புடுராங்க.
எங்க கணணி துறையிலே எவ்வோளவோ பெரிய ஆளுங்களை எல்லாம் பேரை சொல்லி தான்
கூப்பிடுறோம்.
மரியாதையை மனதில் இருந்தால் போதும் வார்த்தையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
நாளை ஒரு நாள் தி.மு.க தே.மு.தி.க வுடன் கூட்டு வைத்தாலும் ஆச்சரிய பட முடியாது,
அப்போது கலைஞர் என் அன்பு தம்பி விஜயகாந்த், அவர் முத்தமிழ் அறிஞ்சர் கலைஞர் என்றும் சொல்லுவார்கள்.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதை சொன்னதே கலைஞர் ஐயா தான்.
எல்லா வற்றிக்கும் புள்ளி விவரங்களோடு பதில் தரும் கலைஞர்,
வாரிசுகளை ஏன் முன்னிலை படுத்துகிறார் என்பதற்கும்
பதில் சொன்னால் என்ன ?
௮.தி.மு.க,தி.மு.க என்ற இரண்டு கட்சிகளுக்கு வாய்ப்புக்களை மாறி மாறி வழங்கிய வள்ளல்களாகிய நாம்
விஜயகாந்துக்கு வாய்ப்பு கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.
கடசியா ஒன்னே ஒன்னு
குறை இல்லாம ஒரு மனிதன் இருந்த அவர் தான் தெய்வம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தீலிபன் said...
விடுங்க தமிழா இவரை மாதிரி ஆளுங்க திட்டும் போது தான், என்னை போன்ற ஆளுங்களுக்கு கலைஞரின் மீது உள்ள கோபம் மறைந்து பாசம் பிறக்கிறது. இவர் கலைஞர் என்று கூப்பிடவில்லை என்றால் என்ன தமிழகம் தலைகீழ் ஆகிவிடுமா? உண்மையில் ஆணவம் மண்டையின் உச்சியில் ஏறி உட்கார்ந்து உள்ளது.ஆணவம் அழிவின் ஆரம்பம் விஜயகாந்த் மறந்து விடாதிர்கள்.//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி தீலிபன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
ஆரியரின் சூதுன்னு//

:-)))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//.பிரபுசங்கர் said...
உண்மையில் விஜயகாந்தை நினைத்து பரிதாபம்தான் வருகிறது. அவர் போட்ட கணக்குகள் தவறாக கோடிகள் கரைய நாளா பக்கமும் அஸ்திரங்கள் பாய, கலைஞரோ நாளுக்கு ஒரு திட்டம் அறிவித்து செயல்படுத்த, எதைச் சொல்லி அரசியல் செய்வது என புரியாமல் மதுவின் பிடியில் அகப்பட்டு உளறிக்கொண்டு இருக்கிறார் . பாவம் அவர் விட்டு விடுங்கள். தலைவர் தலைவர் என்று வாய்க்கு வாய் அழைத்த அவர் கூப்பிட்டு விட்டு போகட்டும் விடுங்கள்.//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றிஇரா.பிரபுசங்கர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Dr. சாரதி said...
நீங்கள் கூறியவை முற்றிலும் உண்மை. நன்று//


வருகைக்கும்..பாராட்டுதலுக்கும் நன்றி Dr.சாரதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நசரேயன்..நாகரிகம் கருதி நான் விஜய்காந்த் பேசியவற்றை சொல்லவில்லை...'கருணாநிதி மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடுச்சு.நேற்றுவரை கலைஞர்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் இனிமே கருணாநிதின்னு தான் சொல்லப்போறேன்'.அப்படின்னு சொல்லி இருக்கார்.
கலைஞர் இவர் வயசைவிட அதிக அனுபவம் உள்ளவர்.அதற்காகவாவது மரியாதை கொடுக்க வேண்டாமா?
ஜெயலலிதாவை விடுங்கள்.அவரை நான் கணக்கிலேயே எடுக்கவில்லை.

நசரேயன் said...

/*நசரேயன்..நாகரிகம் கருதி நான் விஜய்காந்த் பேசியவற்றை சொல்லவில்லை...'கருணாநிதி மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடுச்சு.நேற்றுவரை கலைஞர்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் இனிமே கருணாநிதின்னு தான் சொல்லப்போறேன்'.அப்படின்னு சொல்லி இருக்கார்.
கலைஞர் இவர் வயசைவிட அதிக அனுபவம் உள்ளவர்.அதற்காகவாவது மரியாதை கொடுக்க வேண்டாமா?
ஜெயலலிதாவை விடுங்கள்.அவரை நான் கணக்கிலேயே எடுக்கவில்லை.
*/
உங்கள் கருத்துக்கு 1000% உடன் படுகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// நசரேயன் said...
/*நசரேயன்..நாகரிகம் கருதி நான் விஜய்காந்த் பேசியவற்றை சொல்லவில்லை...'கருணாநிதி மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடுச்சு.நேற்றுவரை கலைஞர்னு சொல்லிக்கிட்டு இருந்தேன் இனிமே கருணாநிதின்னு தான் சொல்லப்போறேன்'.அப்படின்னு சொல்லி இருக்கார்.
கலைஞர் இவர் வயசைவிட அதிக அனுபவம் உள்ளவர்.அதற்காகவாவது மரியாதை கொடுக்க வேண்டாமா?
ஜெயலலிதாவை விடுங்கள்.அவரை நான் கணக்கிலேயே எடுக்கவில்லை.
*/
உங்கள் கருத்துக்கு 1000% உடன் படுகிறேன்//


நன்றி

Anonymous said...

அருமையான கடிதம். விசயகாந்த் தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு இப்படி பேசிக் கொண்டு இருக்கிறார். வரும் தேர்தலில் கண்டிப்பாக தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

Unknown said...

முன்பெல்லாம் அரசியல் கோமாளித்தனம் என்றால் சுப்பிரமணிய சுவாமி நினைவிற்கு வருவார். தற்போது அவருடன் சேர்த்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நினைவிற்கு வருகிறார்.


யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம் அதுதான் ஜனநாயகம். ஜனநாயகத்தின் இந்த ஒரு பலவீனத்தை வைத்துக் கொண்டு, அடிப்படை அறிவு அற்றவர்கள் சினிமாவில் பூச்சாண்டி காட்டியதைப்போல் அரசியலிலும் காட்டத்தொடங்கி விட்டார்கள்.


முன்பொருமுறை பா.ஜ.க. மதவாதக் கட்சி என்று அவர்களே (அதாவது ப.ஜ.காவினர்) சொல்லவில்லை பின்னர் அது எப்படி மதவாதக் கட்சியாகும் என்று கருத்துத் தெரிவித்து தனது கோமாளித்தனத்தை விஜயகாந் அரங்கேற்றினார்.


பெரியாரே கடவுள் இல்லை என்று சொல்லவில்லையே என தனது அறிவை மற்றுமொருமுறை வெளிக் காட்டியிருந்தார். அந்த வரிசையில் அவரது அரைவேக்காட்டுத்தனம் மறுபடியும் ஒரு முறை அரங்கேறியிருக்கிறது.


இலங்கை அரசிற்கு இந்தியா இராணுவ உதவி செய்வது தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழழை புதுடில்லியில் வைத்துக் கருத்து தெரிவிக்கும்போது விஜயகாந்த் பின்வருமாறு பதிளித்திருந்தார்.


``இந்தியா தமிழர்களுக்கு எதிராகக் கொடுப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள். அது வியாபார ரீதியாகக்கூட இருக்கலாம் சீனாவையும், பாகிஸ்தானையும் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்ள இலங்கை விரும்புகிறது. அது நடக்கக்கூடாது என்று இந்தியா கருதுகிறது. அதுதான் அங்கிருக்கும் சின்னச் சின்னப் பிரச்சினைகள். அதனால், அதுபற்றி நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்பீபீ


அட ஞானசூனியமே!


அந்த ஆயுதங்கள் காட்சிப் பொருட்களாக அருங்காட்சியத்தை அலங்கரிக்கவா பயன்படப் போகின்றன? இந்த அடிப்படை அறிவுகூடவா இல்லை!


இவரது பதில் நமக்கு மற்றுமொரு உண்மையையும் புலப்படுத்துகின்றன. ஏற்கனவே விஜயகாந்தின் மனதில் ஒளிந்திருக்கும் இந்துத்துவமும் இந்தியத் தேசிய வெறியும் புற்றிலிருந்து வெளியே தலைநீட்டியிருக்கின்றன.


வாக்கு வங்கி அரசியலுக்காக ஈழத்தமிழர் இரத்தத்தில் குளிர் காயும் இவர்களை தமிழினம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்


- இளங்கோ

balachandar muruganantham said...

சிறப்பான கடிதம். அச்சிட்டு விசயகாந்துக்கு அனுப்புங்கள். அவர் சினிமாவில் காட்டும் விளையாட்டுக்கள் நிஜ வாழ்வில் காட்ட முடியாது என்று.

வர வர, விசயகாந்துக்கு கட்சி மோகம் வந்து விட்டது. அதனால் மற்றவர்களை அவதூறாக பேசுகிறார். ஒரு பெரிய தலைவரை நாய் குரைத்து அது பிரபலமானதை போல....

- பாலச்சந்தர் முருகானந்தம்,
http://balachandar.net சொந்த வலைப்பதிவு
http://ulagam.net
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை

மதிபாலா said...

நல்லதொரு கடிதம் திரு.ராதாகிருஷ்ணன்.....!!!!

ஆணவத்தின் உச்சியில் நின்று ஆடிக்கொண்டிருக்கிறார் திரு.விஜயகாந்த்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அப்பாவி இந்தியன் said...
அருமையான கடிதம். விசயகாந்த் தமிழர்களை முட்டாள்கள் என்று நினைத்துக்கொண்டு இப்படி பேசிக் கொண்டு இருக்கிறார். வரும் தேர்தலில் கண்டிப்பாக தமிழ் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.//

வருகைக்கு நன்றி அப்பாவி இந்தியன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சேவியர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் ..உங்கக் கருத்துக்களுக்கும் நன்றி பாலசந்தர் முருகானந்தம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மதிபாலா
உங்கள் பதிவுகளையும் படித்து வருகிறேன்..ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் அருமையான பதிவுகள்.
வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Xavier said...
முன்பெல்லாம் அரசியல் கோமாளித்தனம் என்றால் சுப்பிரமணிய சுவாமி நினைவிற்கு வருவார். தற்போது அவருடன் சேர்த்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் நினைவிற்கு வருகிறார்.//
;-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Xavier said
யார் வேண்டுமானலும் அரசியலுக்கு வரலாம் அதுதான் ஜனநாயகம். ஜனநாயகத்தின் இந்த ஒரு பலவீனத்தை வைத்துக் கொண்டு, அடிப்படை அறிவு அற்றவர்கள் சினிமாவில் பூச்சாண்டி காட்டியதைப்போல் அரசியலிலும் காட்டத்தொடங்கி விட்டார்கள்.//
unmaithaan xavier