Saturday, October 11, 2008

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நம் எண்ணங்களையும்...செய்திகளையும் ..நிகழ்வுகளையும் பதித்து வைக்க நமக்கு இப்போது blogsம்..இன்டெர்நெட் உள்ளன.
நல்ல எழுத்துத் திறமை இருந்தும்..நம் எழுத்துக்கள் அச்சேறாததை ..நமது தாகத்தை.. ஓரளவுக்கு தணித்துக்கொண்டிருக்கின்றன இணைய இதழ்களும்...வலைப்பூக்களும்.
அதை நல்லமுறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டியது நமது கடமை.
ஆனால் அப்படியா நடந்துக் கொண்டிருக்கின்றது இன்று?
ஒரு கணினி கையில் கிடைத்து விட்டது..ஒரு blog ஆரம்பித்துவிட்டோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவதா?
சமீப காலமாக இந்த அநாகரிக போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
பார்ப்பன ஜாதி என ஜாதியத்தை தூற்றுவதை விட்டு விட்டு..பார்ப்பனியத்தை தூற்றுங்கள்..இது சமுதாயத்தை திருத்தும் வழியாகக்கூட அமையலாம்.
ஒரு அரசியல்வாதி..நேர்மையாக செயல் படவில்லையானால்..அதை எழுதுங்கள்.
அவன் ஊழலை எழுதுங்கள்.அவனுக்கு கோடி கோடியாக பணம் எப்படி வந்தது என வினா எழுப்புங்கள்.
அவனது தனிப்பட்ட அவன் வாழ்வை விமரிசிக்காதீர்கள்.
ஒரு நடிகனின் நடிப்பை விமரிசியுங்கள்..அவன் நடிக்கும் போது..தண்ணி அடித்தான்..சிகரட் பிடித்தான் என சொல்லாதீர்கள்.அப்படி செய்தது அவன் ஏற்றுக்கொண்டுள்ள பாத்திரம்.
அவன் கோடியாக சம்பாதிக்கிறான் என்றால்..அது அவன் உழைப்புக்கு கொடுக்கப்படும் கூலி..அதை விமரிசிக்க நமக்கு உரிமை இல்லை.
உங்கள் மேலதிகாரி..சாதாரணமாக ..குரலை உயர்த்தி பேசினாலே..மனம் வருந்தும் நாம்...
நடிப்புத் தொழில் செய்பவனை..செருப்பால் அடிப்பேன்..என்றெல்லாம் சொல்வது..பண்பாடற்ற செயல்.
ஒரு சிறு நிகழ்ச்சி ஒன்றை கூற ஆசைப்படுகிறேன்..
ஒரு சமயம் தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக.என்.எஸ்.கே.பேசினார்..அவர் பேசும்போது எதிர்க்கட்சி வேட்பாளரை புகழ்ந்தாராம்..
அவர் சிறந்த மருத்துவர்,ஏழைகளிடம் பணம் வாங்காதவர்,இறக்கும் நிலையில் உள்ள பலரை காப்பாற்றி இருக்கிறார்..என்றெல்லாம்.
அனைவருக்கும் குழப்பம்...கடைசியில் சொன்னார்..'அப்படிப்பட்ட மனிதரை நீங்கள் உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள்..ஏன்..பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறீர்கள்'என்று .
அவருக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்பதையும் எவ்வளவு பண்போடு சொன்னார் பாருங்கள்.
ஆகவே ..தயவு செய்து..அநாகரிகமாக எழுதுவதை தவிர்ப்போம்..
நம் காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள இந்த வசதியை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வோம்.

26 comments:

Subash said...

கடைசிப்பத்தியில் சொன்ன கதை போல சொல்ல வந்த விடயத்தையும் நாசூக்காக சொல்லியிருக்கீங்க!!!

Subash said...

ஐ!!!
மீ த பஷட்டு

பழமைபேசி said...

இது வரையிலும், அந்த மாதிரி எல்லாம் எழுதலைன்னு நினைச்சுட்டு இருக்காறேன். ஆனா, கண்டிப்பா இதை வரும் காலங்களில் மனதில் கொள்வேன். மிக்க நன்றி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Subash said...
கடைசிப்பத்தியில் சொன்ன கதை போல சொல்ல வந்த விடயத்தையும் நாசூக்காக சொல்லியிருக்கீங்க!!!//

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி சுபாஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// Subash said...
ஐ!!!
மீ த பஷட்டு//

முதல் பின்னூட்டத்திற்கு சபாஷ்..சுபாஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

// பழமைபேசி said...
இது வரையிலும், அந்த மாதிரி எல்லாம் எழுதலைன்னு நினைச்சுட்டு இருக்காறேன். ஆனா, கண்டிப்பா இதை வரும் காலங்களில் மனதில் கொள்வேன். மிக்க நன்றி//

மிக்க நன்றி!பழமைபேசி

மணிகண்டன் said...

மக்களுக்கு எழுதற ஆர்வம் இருக்கு. ஆனா எழுதற மேட்டர் கிடைக்க மாட்டேங்குது. அப்படி இருக்கும் போது எதையாவது திட்டிக்கிட்டு இருக்காங்க. ஒருத்தருக்கும் தீய எண்ணம் எல்லாம் கிடையாது.

குடுகுடுப்பை said...

நீங்கள் சொல்வது மிகச்சரி, தேவையில்லாமல் எந்த ஒரு சமூகத்தையும் புண்படுத்த வேண்டியதில்லை.

ஆனால் இங்கு தனி மனித தாக்குதல்கள் நிறையவே நடக்கிறது.

ஒரு நாள் மாறும் என நம்புவோம்

dondu(#11168674346665545885) said...

//பார்ப்பன ஜாதி என ஜாதியத்தை தூற்றுவதை விட்டு விட்டு..பார்ப்பனியத்தை தூற்றுங்கள்.//
ஒட்டுமொத்தமாக பார்ப்பனரல்லாத மற்ற உயர்சாதியினர் செய்யும் கொடுமையை விவரிக்க பார்ப்பனீயம் என்னும் வார்த்தையை போடுவதை நிறுத்த வேண்டும். உயர்சாதீயம் என்று ஒரு வார்த்தை இருக்க பார்ப்பன சமூகத்தை குறிவைத்து ஏன் அந்த வார்த்தையை போட வேண்டும்?

தேவையானால் சம்பந்தப்பட்ட சாதியினரை குறிக்கும்விதமாக பிள்ளையியம், கவுண்டரியம், தேவரியம், நாயுடுவியம் என்று வேண்டுமானால் போடலாம். அவ்வாறு பார்ப்பனர் யாரேனும் செய்தால் மட்டும் பார்ப்பனியம் என போடலாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் said...

//பார்ப்பன ஜாதி என ஜாதியத்தை தூற்றுவதை விட்டு விட்டு..பார்ப்பனியத்தை தூற்றுங்கள்..இது சமுதாயத்தை திருத்தும் வழியாகக்கூட அமையலாம்.//

நச் !

'உயர்' என்ற அடிப்படையில் பேசுவது பார்பனர்களே, அவர்களை பின்பற்றிய மற்ற சாதியினரும், அதனால் பொதுவாக உயர் சாதியத்தைச் சாடும் சொல்லாக 'பார்பனீயம்' என்று சொல்வது சரியாகத் தான் தெரிகிறது.

பிள்ளையியம், தேவரியம் என்றெல்லாம் சொன்னால் தமிழ் நாடு தாண்டி யாருக்கும் புரியாது.

நசரேயன் said...

உங்கள் கருத்தை முற்றிலும் ஆமோதிக்கிறேன், எல்லாரும் என்னையும் சேத்து தான் பின் பற்ற வேண்டிய நடை முறைகள்.

dondu(#11168674346665545885) said...

//பிள்ளையியம், தேவரியம் என்றெல்லாம் சொன்னால் தமிழ் நாடு தாண்டி யாருக்கும் புரியாது.//
இது என்ன போங்கு? தமிழ் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்களா? தமிழ் தெரிந்தவர்கள் அனைவருக்கும் கவுண்டரியம், பிள்ளையியம், தேவரியம் என்றெல்லாம் சொன்னால் புரியும். மற்றப்படி வேற்று மொழிக்காரர்களா இங்கு வந்து தமிழ் வலைப்பூக்களை படிக்க போகிறார்கள்?

அவ்வாறு புரியாது என்றால் சரியாகச் சொல்லி புரியவையுங்கள். அதை விட்டு பார்ப்பனியம் என்று ஜல்லியடிப்பது முக்கால்வாசி மற்ற உயர்சாதியினரே. முக்கால்வாசி அவர்கள் தத்தம் சாதி சங்கங்களிலும் பெரிய ஆளாக இருப்பார்கள்.

இதில் முக்கியமாக பார்ப்பனரல்லாத, தங்களை இணைய தாசில்தாராக பாவித்து கொண்டு உளறுபவர்களிடம் நல்ல பெயரை வாங்க வேண்டுமென்பதற்காக, பார்ப்பன பதிவர்கள் சிலர் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பார்ப்பனர்களை திட்டுவது பரிதாபத்துக்குரியது.

அவர்களுக்கு ஒரு வார்த்தை. நீங்கள் என்னதான் அழுது புரண்டாலும் பார்ப்பனரல்லாதவர்கள் உங்களுக்கு நிரந்தரமாக நல்ல பெயர் தரமாட்டார்கள். தேவையானால் கிராஸ்பெல்ட் என ஒரே வார்த்தையாக கூறிவிட்டு சென்று விடுவார்கள். இந்த அவமானம் யோக்கியதை அற்றவர்களிடமிருந்து உங்களுக்கு தேவையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

மணிகண்டன் said...

****மற்றப்படி வேற்று மொழிக்காரர்களா இங்கு வந்து தமிழ் வலைப்பூக்களை படிக்க போகிறார்கள்? *****

:)-

மணிகண்டன் said...

டோண்டு சார், ஏன் இந்த கொல வெறி ? ராதாகிருஷ்ணன் சாரின் நோக்கம் புரியலையா ?

மணிகண்டன் said...

****** 'உயர்' என்ற அடிப்படையில் பேசுவது பார்பனர்களே, அவர்களை பின்பற்றிய மற்ற சாதியினரும், ******

"பார்பனர்களே" இந்த வார்த்தைக்கு பிறகு கமா போட்டு இருக்கீங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
மக்களுக்கு எழுதற ஆர்வம் இருக்கு. ஆனா எழுதற மேட்டர் கிடைக்க மாட்டேங்குது. அப்படி இருக்கும் போது எதையாவது திட்டிக்கிட்டு இருக்காங்க. ஒருத்தருக்கும் தீய எண்ணம் எல்லாம் கிடையாது.//


முன்னொருபதிவின் பின்னூட்டத்தில் நீங்கள் வெகுளி என்று சொல்லி இருந்ததை நிரூபிக்கிறீர்கள் மணிகண்டன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//dondu(#11168674346665545885) said...
//பார்ப்பன ஜாதி என ஜாதியத்தை தூற்றுவதை விட்டு விட்டு..பார்ப்பனியத்தை தூற்றுங்கள்.//
ஒட்டுமொத்தமாக பார்ப்பனரல்லாத மற்ற உயர்சாதியினர் செய்யும் கொடுமையை விவரிக்க பார்ப்பனீயம் என்னும் வார்த்தையை போடுவதை நிறுத்த வேண்டும். உயர்சாதீயம் என்று ஒரு வார்த்தை இருக்க பார்ப்பன சமூகத்தை குறிவைத்து ஏன் அந்த வார்த்தையை போட வேண்டும்?

தேவையானால் சம்பந்தப்பட்ட சாதியினரை குறிக்கும்விதமாக பிள்ளையியம், கவுண்டரியம், தேவரியம், நாயுடுவியம் என்று வேண்டுமானால் போடலாம். அவ்வாறு பார்ப்பனர் யாரேனும் செய்தால் மட்டும் பார்ப்பனியம் என போடலாமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்//


அந்தணர் ஆகிய ஆண்டையினிடமே
அம்பலன் செல்லவே விடை கேட்டான்
பண்ணையில் வேலைகள்
பாங்குடன் முடித்தே
பறையா..நீ போய் வா என்றார்

இது நந்தனார் படத்தில் வந்த ஒரு பாடலின் வரிகள்.
இவ்வரிகளை நினைத்திருந்தால் அந்த கவிஞரோ,தயாரிப்பாளரோ மாற்றியிருக்கலாம்.
பாப்பாத்தி என்று ஒரு படம்..நினைத்திருந்தால்..அந்த பெயரை மாற்றி இருக்கலாம்.
அவர்களும் மாற்றவில்லை...பார்ப்பனர்களும் மாற்றச்சொல்லி எந்த போராட்டமும் நடத்தவில்லை.
ஆனால்..அதுவே..குமுதத்தில்..சுஜாதா..ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வைத்து..ஒரு கதை எழுதியபோது குமுதம் இதழ்கள் கொளூத்தப்பட்டன.தொடர் நின்றது.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..பார்ப்பனர்களை வெறுப்பவர்கள் தான் அதை உயர் ஜாதி என்கிறார்கள்.அதை நீங்களும் சொல்ல வேண்டாமே!உயர் ஜாதியின் அக்கிரமங்களை சொல்பவர்களை பார்ப்பனியவாதிகள் என சொல்வதில் தப்பில்லை என்றே எண்ணுகிறேன்.
முதலியார் ஜம்பம்,ஆத்தில போட்டாலும் செட்டி அளந்துதான் பொடுவான் ..என்றெல்லாம் சொல்வதைப்போல் இதையும் எடுத்துக்கொள்ளலாமே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
//பார்ப்பன ஜாதி என ஜாதியத்தை தூற்றுவதை விட்டு விட்டு..பார்ப்பனியத்தை தூற்றுங்கள்..இது சமுதாயத்தை திருத்தும் வழியாகக்கூட அமையலாம்.//

நச் !

'உயர்' என்ற அடிப்படையில் பேசுவது பார்பனர்களே, அவர்களை பின்பற்றிய மற்ற சாதியினரும், அதனால் பொதுவாக உயர் சாதியத்தைச் சாடும் சொல்லாக 'பார்பனீயம்' என்று சொல்வது சரியாகத் தான் தெரிகிறது.//



நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்.
பார்ப்பனீயம் என்பதை பார்ப்பன ஜாதியுடன் சேர்த்து பார்க்கக்கூடாது என்பதே என் கருத்து.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
உங்கள் கருத்தை முற்றிலும் ஆமோதிக்கிறேன், எல்லாரும் என்னையும் சேத்து தான் பின் பற்ற வேண்டிய நடை முறைகள்.//

பதிவின்..கருத்தை புரிந்துக்கொண்டு..பாராட்டுதலுக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// dondu(#11168674346665545885) said...
//பிள்ளையியம், தேவரியம் என்றெல்லாம் சொன்னால் தமிழ் நாடு தாண்டி யாருக்கும் புரியாது.//
இது என்ன போங்கு? தமிழ் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்களா? தமிழ் தெரிந்தவர்கள் அனைவருக்கும் கவுண்டரியம், பிள்ளையியம், தேவரியம் என்றெல்லாம் சொன்னால் புரியும். மற்றப்படி வேற்று மொழிக்காரர்களா இங்கு வந்து தமிழ் வலைப்பூக்களை படிக்க போகிறார்கள்?


இதில் முக்கியமாக பார்ப்பனரல்லாத, தங்களை இணைய தாசில்தாராக பாவித்து கொண்டு உளறுபவர்களிடம் நல்ல பெயரை வாங்க வேண்டுமென்பதற்காக, பார்ப்பன பதிவர்கள் சிலர் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பார்ப்பனர்களை திட்டுவது பரிதாபத்துக்குரியது.///


நீங்கள் சொல்ல வருவது என்ன என்று விளங்கவில்லை..பதிவுகள் அவரவர் எண்ணங்களை தெரிவிப்பது..நீங்கள் சொல்லும் அந்த துணை தாசில்தார்கள் (அப்போது தாசில்தார்கள் யார்?)
திருப்தி படுத்த..அவர்களிடம் நல்ல பெயர் எடுக்க என்பதெல்லாம் மிகை.எழுதியது யார் என்று பார்க்காமல் ..எழுதப்பட்ட விஷயங்கள் நன்றாக இருந்தால்..பாராட்ட ஜாதிகள் ஏன் குறுக்கே வரவேண்டும்.
பதிவின்..இரு வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு விவாதம் ஏன் செய்ய வேண்டும்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

// dondu(#11168674346665545885) said...
இந்த அவமானம் யோக்கியதை அற்றவர்களிடமிருந்து உங்களுக்கு தேவையா?//

:-)))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// மணிகண்டன் said...
****மற்றப்படி வேற்று மொழிக்காரர்களா இங்கு வந்து தமிழ் வலைப்பூக்களை படிக்க போகிறார்கள்? *****

:)-///

;-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணிகண்டன் said...
டோண்டு சார், ஏன் இந்த கொல வெறி ? ராதாகிருஷ்ணன் சாரின் நோக்கம் புரியலையா ?//

:-))))

ஜியா said...

//சமீப காலமாக இந்த அநாகரிக போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.//

தமிழ் எழுத்துரு கண்டுணர்ந்த நாள் முதல் இப்படியேத்தான் இருக்குதுங்க... இப்போ கொஞ்சம் பரவாயில்லைன்னுதான் சொல்லனும்... :(((

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// ஜி said...
//சமீப காலமாக இந்த அநாகரிக போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.//

தமிழ் எழுத்துரு கண்டுணர்ந்த நாள் முதல் இப்படியேத்தான் இருக்குதுங்க... இப்போ கொஞ்சம் பரவாயில்லைன்னுதான் சொல்லனும்... :(((///

நீங்கள் சொல்வது உண்மைதான்..ஆனால் சமிப காலமாக சூடான இடுகையில் வரவேண்டும் என்பதற்காகவே தலைப்புகள் வைக்கப்படுகின்றன.தனிப்பட்ட முறையில் பெயரைப்போட்டு செருப்பால் அடிப்பேன் என்ற பதிவு...என்னை இப்பதிவிட சொல்லியது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
டோண்டு சார், ஏன் இந்த கொல வெறி ? ராதாகிருஷ்ணன் சாரின் நோக்கம் புரியலையா ?//

டோண்டு சாருக்காவது..கொலவெறியாவது..அதெல்லாம் ச்சும்மா