Monday, October 13, 2008

காலம் மாறுது..ரசனை மாறுது..

காலம் மாறிக்கொண்டேருக்கிறது..
தலைமுறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
ரசனையும் மாறிக்கொண்டே இருக்கிறது.
பாலசந்தரை அன்று ரசித்த தலைமுறை..இன்றுள்ள இயக்குநர்களை ரசிக்கமுடியவில்லை.
இன்றுள்ள தலைமுறை பாலசந்தரையும்..பாரதிராஜாவையும்..பாலு மகேந்திராவையும் ரசிப்பதில்லை.
அதனால்தான் சமீப காலங்களில் இவர்கள் படங்களால் வெற்றி கிடைப்பதில்லை.
இதுதான் யதார்த்தம்..இதை ஒப்புக்கொள்ள முடியாதவர்கள்..ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.
அந்த நாளில் 30..35..பாட்டுக்களுடன் தியாகராஜ பாகவதரை ரசித்தார்கள்..
அடுத்த தலைமுறை..சிவாஜியையும்..எம்.ஜி.ஆரையும் ரசித்தார்கள்
பின் வந்த தலைமுறை ரஜினியும் ,கமலையும் ரசித்தார்கள்
இப்போது கில்லியும்,சாமியும் ரசிக்கப்படுகின்றன.
சுதர்சனம்,எஸ்.எம்.எஸ்.,ஜி.ராமநாதன் ரசிக்கப்பட்டனர்.
விஸ்வனாதன்-ராமமூர்த்தி,கே.வி.மஹாதேவன் பின்னர் வந்தனர்.
இளையராஜா..ரஹ்மான்..பரத்வாஜ்..வித்யாசாகர்..யுவன்..ரசனைகள் மாறிக்கோண்டே இருக்கின்றன.
பீம்சிங்,கோபாலகிருஷ்ணன்,ஸ்ரீதர்,பாலச்ந்தர்,பாரதிராஜா.மகேந்திரன்,பாலுமஹேந்திரா..இப்போது..ஹரி,கௌதம்,அமீர் இப்படி
இதை அனைவரையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக..நடிகர்கள் சிலர் மட்டும்..இரண்டு..மூன்று தலைமுறைக்கும் நிற்கிறார்கள்.
அவர்கள்..சிவாஜி,எம்.ஜி.ஆர்., ரஜினி,கமல் ஆகியோர்தான்.

6 comments:

மணிகண்டன் said...

சார், நீங்க கோவி சார் எழுதற ப்லோகோட தொடர்ச்சி எழுதற மாதிரி இருக்கு ! ரசனைகள் வேறுபடுவது இயல்பே. அதையும் மீறி ஒரு கலைஞன் வெற்றி பெற்றால் அது மிகவும் சிறப்பே !

சோ ராமசுவாமி ஒரே மாதிரி தான் எழுதிகிட்டு வராரு ! ஆனாலும் 35 வருஷமா அவருடைய வாசகர்களை அவர் இழக்கவில்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

எழுத்து என்பது வேறு என்றே கருதுகிறேன்..கல்கி..தேவன்.. புதுமைப்பித்தன் ஆகியவர்களின் படைப்புகள் இன்றும் படிக்கப்படுகின்றன.ஆனால் அதே கல்கியின் தியாகபூமி..தேவனின் மிஸ்டர் சம்பத்..போன்ற திரைப்படைப்புகள் ரசிக்கப்படாது போகின்றன.

மணிகண்டன் said...

நீங்க சொல்றது ரொம்பவே சரி. நான் சும்மா மக்களை வரவழிக்கரதுக்காக சோ பேரை இழுத்தேன்.

ஆனா உங்க கூற்றுப்படி பாத்திங்கனா, இன்னுமே பாலசந்தர் / பாரதிராஜா இயக்கிய பழைய படங்கள பாக்க ரசிகர்கள் இருக்காங்க. (இளைய தலைமுறையினர் உட்பட )

T.V.ராதாகிருஷ்ணன் said...

நீங்கள் சொல்லும் இயக்குநர்களால் இன்று ஓடக்கூடிய புதிய படம் எடுக்கமுடியாது மணிகண்டன்

நசரேயன் said...

அப்ப திரை உலகை ஆளுகிறவர் நாட்டை ஆளலாம்னு சொல்லலாங்களா? :):):)
மன்னிக்கவும் பதிவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைதான்.
பதிவுக்கு வரேன்.
அவங்க ராசனையை எங்களால புரிஞ்சுக்கு முடியலையா?
எங்க ரசனைக்கு அவங்களால படம் எடுக்க முடியலையா?
யோசிக்க வேண்டிய விஷயம்.

rapp said...

:):):)