Wednesday, October 29, 2008

அரசியல் புதிர் போட்டி

தமிழக அரசியலை உன்னிப்பாய் கவனித்து வருபவரா..நீங்கள்...அப்போது கீழ்கண்ட வினாக்களுக்கு பதில் தெரிகிறதா என்று பாருங்கள்..

1.சுடுகாடு ஷெட் ஊழல்..செய்ததாக யார் மீது புகார் எழுந்தது ?தற்போது அவர் எந்த கட்சியில் உள்ளார்?

2.காலில் மனைவி யுடன் விழுந்து...ஆசி வாங்கிய முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர்..இன்று தி.மு.க.அரசிலும் அமைச்சர்..இவர் யார்?

3.தன் பிறந்த நாள் அன்று...அந்த தலைவர் ஒரு பத்திரிகை ஆசிரியரிடம் ஆசி பெற்றார்..அந்த தலைவர் யார்?

4.அ.தி.மு.க.,ஆதரவாளர் முதலில்..பின் தி.மு.க.தயவால் ராஜ்யசபா உறுப்பினர் ஆகி..மீண்டும் பதவி போனதும் அ.தி.மு.க.வில் சேர்ந்து..இன்று அதிலிருந்து விலகி ஒரு கட்சியும் ஆரம்பித்துள்ளார்.இவர் யார்?

5.தமிழக அமைச்சரவையில் ..இலாகா இல்லாத அமைச்சராக செயல் படும் அமைச்சர் யார்?

6.கலைஞருக்கு தங்கபேனா கொடுத்தவர்..இன்று பரம வைரி..யார் இவர்?

7.தன் முதுகில் குத்து அடிக்கடி வாங்கி...தன் ஜாதகம் அப்படின்னு சொல்லும் பகுத்தறிவு வாதி யார்?

8.பல தலைவர்கள்..பிரபல எழுத்தாளர்கள் படைப்பெல்லாம் அரசுடமை ஆக்கப்பட்டும்..இவருடையது ஆகாமல்.முட்டுக்கட்டை போடப்பட்டுள்ள தலைவர் யார்?

9.புத்தகக் கண்காட்சியில்..தன் பணத்தில் ஒரு கோடி நன்கொடை கொடுத்து..ஒவ்வொரு வருடமும்..சிறந்த எழுத்தாளருக்கு பரிசு வழங்கச் சொன்னவர் யார்?

10.2009ல் எம்.பி., 2011ல் முதல்வர் என கனவு காண்பவர் யார்?

ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 5 மதிப்பெண்.,
நீங்கள் 50 மதிப்பெண்களையும் பெற்றிருந்தால்...வருங்கால முதல்வர் நீங்கள் தான்...
40 மதிப்பெண் என்றால்..அமைச்சர் ஆகலாம்..
35 மதிப்பெண் என்றால் ஒரு எம்.எல்.ஏ.,ஆகலாம்..
அதற்கும் குறைவு என்றால்..பேப்பர் படிப்பதைக் கூட நீங்கள் விட்டு விடலாம்..காசு மிச்சம்.

9 comments:

குடிமகன் said...

//35 மதிப்பெண் என்றால் ஒரு எம்.எல்.ஏ.,ஆகலாம்..
அதற்கும் குறைவு என்றால்..பேப்பர் படிப்பதைக் கூட நீங்கள் விட்டு விடலாம்..காசு மிச்சம்.//

பழையவைகள் மறந்தால் தான் ..பிரதமராகலாம் ..

சின்னப் பையன் said...

இது ரொம்ப அநியாயம். 100க்கே 35 எடுத்தா பாஸ்னு இருக்கும்போது. நீங்க 50க்கே 35 எடுக்கணும்றீங்களே?????

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// குடிமகன் said...
//35 மதிப்பெண் என்றால் ஒரு எம்.எல்.ஏ.,ஆகலாம்..
அதற்கும் குறைவு என்றால்..பேப்பர் படிப்பதைக் கூட நீங்கள் விட்டு விடலாம்..காசு மிச்சம்.//

பழையவைகள் மறந்தால் தான் ..பிரதமராகலாம் ..///




இது மாநில சட்டசபைகளுக்கான போட்டி..பார்லிமென்ட் அங்கத்தினருக்கும்..மத்திய அமைச்சர்களுக்கும் தனி புதிர் போட்டி வருகிறது.
வருகைக்கு நன்றி
குடிமகன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ச்சின்னப் பையன் said...
இது ரொம்ப அநியாயம். 100க்கே 35 எடுத்தா பாஸ்னு இருக்கும்போது. நீங்க 50க்கே 35 எடுக்கணும்றீங்களே?????///


அரசியல் நுணுக்கம் எல்லாம் தெரியணும்னா..கிரிமினல் அறிவு வேணும்..அதற்கு 70% மதிப்பெண் கண்டிப்பாக தேவை.
வருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்

rapp said...

1. செல்வகணபதி, 2 .கேகேஎஸ்எஸ்ஆர், 3. ஜெயலலிதா-சோ,5. ராஜா இன்னும் அமைச்சராவா இருக்கார்?, 6.விஜயகாந்த்,8. பெரியார்,9. கலைஞர்,10. சரத்குமார்ல இருந்து காமடியன் கார்த்திக் வரைக்கும் எல்லாரும்தான் ஆசைப்படறாங்க:):):)

rapp said...

நாலாவதும், ஏழாவதும் யார்?

rapp said...

நாலாவது சரத்குமாரா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

ராப் வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

ராப்...தமிழகத்தின் எம்.எல்.ஏ.,ஆகும் வாய்ப்பை பெறுகிறீர்கள்..வாழ்த்துகள்