Friday, October 24, 2008

இன்றைய தமிழனின் நிலை

தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா என்றார் நாமக்கல் கவிஞர்..ஆனால் இன்று ..

அண்டை நாடுகளில் அவன் பிரச்னை..அகதிகளாக..அவன் வரும் நிலை..இவையெல்லாம் இருக்கட்டும்..
சொந்த நாட்டிலேயே அவன் இரண்டாம் தர குடிமகனாகவே இருக்கிறான்..என்பது..மறுக்கமுடியாத உண்மை.
பாருங்கள்..1974ல் முடிந்த ஒப்பந்தம்..புதுப்பிக்காததால்..காவிரி தண்ணீர் பிரச்னை..இன்றுவரை தீர்ந்தபாடில்லை.நாட்டின் உச்ச மன்ற தீர்ப்புக்குக்கூட அடிபணியாத மாநில அரசுகள்..நவம்பர் மாதம் இறுதி தீர்ப்பு வருகிறதாம்..பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..
அடுத்து..கேரளா..முல்லைப்பெரியாறு அணை விவகாரம்..இதிலும் இதுவரை தமிழன் விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
சற்று..யோசித்துப்பார்த்தால்...ஹிந்தி தெரியாத மக்கள் உள்ள ஒரே மாநிலம்.நமது..
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்கூட..எம்மாநிலத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் ஹிந்தியில் பேசிக்கொண்டிருக்கும் போது..அங்கும் தமிழன் தனித்து விடப்படுகிறான்.
இதெற்கெல்லாம் காரணம்..அரசியல்..
இன்றைய தமிழக அரசியல் ..தலைவர்களிடையே உள்ள தனிப்பட்ட பகைமை உணர்ச்சியிலேயே ..நடந்துக் கொண்டிருக்கிறது.
இப்படியே போய்க்கொண்டிருந்தால் 'தமிழன் என்று சொல்லடா...தலை குனிந்து நில்லடா'என்ற நிலை வந்துவிடுமோ என்ற பயம் ஏற்படத்தான்செய்கிறது

15 comments:

மணிகண்டன் said...

********
சொந்த நாட்டிலேயே அவன் இரண்டாம் தர குடிமகனாகவே இருக்கிறான்..என்பது..மறுக்கமுடியாதஉண்மை
********

நீங்கள் சொல்வது சற்று மிகைப்படுத்தப்பட்ட வாதம் சார். உண்மை எல்லாம் கிடையாது.

அனைத்து மாநில மக்களும் இரண்டாம் தர குடிமக்களாகவே தங்களை கருதுகின்றனர்.

மணிகண்டன் said...

******** ஹிந்தி தெரியாத மக்கள் உள்ள ஒரே மாநிலம்.நமது..
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்கூட..எம்மாநிலத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் ஹிந்தியில் பேசிக்கொண்டிருக்கும் போது..அங்கும் தமிழன் தனித்து விடப்படுகிறான். **********

இங்கிலிஷ்ல பேசிக்கிட்டு தான் இருக்கோம். அப்படி எல்லாம் ஒன்றும் தள்ளி வைக்கப்படுவதில்லை. இப்பொழுது வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் ஹிந்தியில் பேசுவதற்கும் தயங்குவது இல்லை.

அசோக் said...

100% True, I faced the same problem. People are asking your Indian & why your speaking in English. Our Politicians are very bad and their generation know all languages including Hindi.

மணிகண்டன் said...

***********இன்றைய தமிழக அரசியல் ..தலைவர்களிடையே உள்ள தனிப்பட்ட பகைமை உணர்ச்சியிலேயே ..நடந்துக் கொண்டிருக்கிறது **********

இது கொடுமையான உண்மை.

மணிகண்டன் said...

***** 100% True, I faced the same problem. People are asking your Indian & why your speaking in English ******

You got to explain to them that people in south of india do not speak Hindi but a different language. This question is nothing but an ignorant question and we should not be taking offence on these. If you know Hindi, it is easy at times but there is no need for us to know hindi to survive in india or to identify ourselves with india.

நசரேயன் said...

/*You got to explain to them that people in south of india do not speak Hindi but a different language. This question is nothing but an ignorant question and we should not be taking offence on these. If you know Hindi, it is easy at times but there is no need for us to know hindi to survive in india or to identify ourselves with india.*/
அருமையா சொன்னீங்க மணிகண்டன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

மணிகண்டன்..எனக்கு அதுபோன்ற அனுபவம்..எற்பட்டிருக்கிறது...நான் யு.எஸ்.,சென்றபோது ஃப்ராங்க்ஃபர்ட்டில் connecting flight க்கு காத்திருந்தேன்..நம் அண்டை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், என்னிடம் அந்த மானில மொழியில் பேசினார்..எனக்கு தமிழ்தான் தெரியும் என்றதும்..ஹிந்தி என்றார்.தெரியாது என்றதும்..ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தார்.அப்போது மும்பையைச் சேர்ந்த ஒரு குடும்பம் வந்தது.ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.பின் ..என்னை அம்போ என்று விட்டு விட்டு அவர்கள்தான் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தனர்.நான் ஒருவன் இருப்பதையே மறந்து விட்டனர்.
மணி..நீங்கள் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள் என்றால்...ஒன்று..உங்களுக்கு ஹிந்தி தெரியும்..அல்லது..இது போன்ற நிலை உங்களுக்கு இதுவரை ஏற்படவில்லை..அவ்வளவுதான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அசோக் said...
100% True, I faced the same problem. People are asking your Indian & why your speaking in English. Our Politicians are very bad and their generation know all languages including Hindi.//
thank you,sir.,

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணிகண்டன் said...
***********இன்றைய தமிழக அரசியல் ..தலைவர்களிடையே உள்ள தனிப்பட்ட பகைமை உணர்ச்சியிலேயே ..நடந்துக் கொண்டிருக்கிறது **********

இது கொடுமையான உண்மை.//

இதை ஒப்புக்கொண்டதற்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி..நசரேயன்

Mohan said...

வாழ்வது யாராயினும் வீழ்வது தமிழனே. (தமிழன் மட்டுமே)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நாம் உண்மைச் சொன்னால்..சிலருக்கு கசக்கிறதே மோகன்

சுப.நற்குணன்,மலேசியா. said...

முதன் முறையாக உங்கள் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறேன். பல நல்ல இடுகைகளைக் கண்டு மகிழ்ந்தேன்.

உலகமெங்கிலும் தமிழர்கள் இருந்தாலும் நீங்கள் சொல்லுகின்ற பல சிக்கல்களில் சிக்குண்டுதான் கிடக்கிறார்கள்.

மலேசியாவில் அரசு சட்டப்படி தமிழுக்கும் தமிழருக்கும் உரிமைகள் இருக்கின்றன. ஆயினும், இங்கும் பல சிக்கல்கள் உலவுகின்றன.

தமிழ் உணர்வையும் தமிழன் என்ற உணர்ச்சியையும் முன்னெடுப்பது ஒன்றே உலகத் தமிழருக்குத் தீர்வாக அமையும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

தங்கள் வருகைக்கு நன்றி..சுப.நற்குணன்
இதற்கு முக்கியகாரணம் என்னவெனில்....
வந்தவர்களை வாழவைக்கும் தமிழன்...தன் இனத்தில் ஒருவன் தன்னை முந்துவதை சகித்துக்கொள்ள முடிவதில்லையே..அதுதான்..
மீண்டும் வாருங்கள்..

மணிகண்டன் said...

sir, i too have had experiences like that in my life. For the past 4-5 years i am living in non-english speaking countries and so, i am used to stand in a group without understanding a word of what they speak ! That is probably one of the reason on why i have not noticed that.

I can understand hindi but my speaking skills are very limited !

Does these incidents justify your heading ?