Thursday, October 16, 2008

இன்று கவியரசு கண்ணதாசன்நினைவு நாள்

கவிஞர்கள் வாக்கு பொய்க்காது என்பார்கள்..கி.பி.2000 பற்றி கவியரசு என்ன எழுதினார் தெரியுமா?


கி.பி.2000
__________


ஒருநூறு கோடியாய்
மக்கட் தொகைகூடி
உணவுக்கு தத்தளிக்கும்

ஓராயிரம் கட்சி
பேதங்கள் தோன்றியே
உள்நாட்டுயுத்தம் மூளும்

பொருள்நூறு கொண்டவர்
பூட்டை உடைக்கின்ற
புரட்சியை நாடுகாணும்

பூஞ்சோலை காடுகள்
ஏதுமில்லா திந்தப்
பூமியை மக்கள் சூழும்

உருவான தொழிலெல்லாம்
உதவாது போய் எங்கும்
உற்சாக மற்றுவிடுமே

ஒளிதொன்றும் நெஞ்சிலே
இருள் தோன்று கின்றதே
உணர்கபா ரததேச மே!

6 comments:

நசரேயன் said...

அவரும் அவரின் வார்த்தைகளும் நிரந்தரமானது, என்றும் அழியாது

பூச்சாண்டியார் said...

கண்ணதாசனின் வரிகள் ஒவ்வொன்றும் நமது வாழ்கையோடு ஒன்றியுள்ளது.. அவர் ஒரு தீர்கதரசி தான்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
அவரும் அவரின் வார்த்தைகளும் நிரந்தரமானது, என்றும் அழியாது//

நிரந்தரமானவன் அழிவதில்லை..எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்றவர் அவர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பூச்சாண்டியார் said...
அவர் ஒரு தீர்கதரசி தான்..//
உண்மைதான்

சின்னப் பையன் said...

//அவரும் அவரின் வார்த்தைகளும் நிரந்தரமானது, என்றும் அழியாது//

ரிப்பீட்டே....

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// ச்சின்னப் பையன் said...
//அவரும் அவரின் வார்த்தைகளும் நிரந்தரமானது, என்றும் அழியாது//
ரிப்பீட்டே....///


ரிப்பீட்டே...