Friday, October 31, 2008

தீபாவளிக்கு வெளியான பட விமரிசனம்..

இந்த தீபாவளிக்கு வந்த இந்த படம்..வசூலில் ஒரு சாதனையை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

படத்தின் பெரும் பகுதி..கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர்..மலேசியா,தாய்லாந்த்,ஹாங்காங்,ஜப்பான் இவற்றிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது.தமிழில் ஒரு படம்..இவ்வளவு வெளிநாடுகளில் எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை எனலாம்.

காமிராவும்..அந்நாடுகளின் இயற்கை அழகை எல்லாம்..அப்படியே அள்ளி..அள்ளி தந்திருக்கிறது.அவ்வழகில் கண்டிப்பாக நாம் மயங்கிவிடுவோம்.இதில் கதானாயகனுக்கு நாலு கதாநாயகிகள்.ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி.

அதே போன்று..எது வெளிப்புறக் காட்சி..எது அரங்க அமைப்பு என்றே தெரியாதவாறு..செட் .போட்டிருக்கும் ஆர்ட் டைரக்டருக்கு ஒரு சபாஷ்.

படம் வெளியாகும் முன்னே பாடல்கள் அனைத்தும் வெளிவந்து விற்பனையில் சக்கைப் போடு போட்டுள்ளதால்..இசையைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

படத்தின்...தயாரிப்பாளரும்..இயக்குநரும்..ஏற்கனவே இரண்டு மாபெரும் வெற்றிகளை கொடுத்தவர்.இதில் ஹேட்ரிக் அடித்துள்ளார்.

படம்-உலகம் சுற்றும் வாலிபன்
இயக்குநர்,தயாரிப்பாளர்-எம்.ஜி.ஆர்.
இசை-எம்.எஸ்.வி.

4 comments:

குடுகுடுப்பை said...

லொள்ளு ரொம்ப அதிகமா போச்சே.
ஆனாலும் உலகம் சுற்றும் வாலிபன் மஞ்சுளாவுக்காக பார்க்கலாம்:)

நசரேயன் said...

ஒ.. இப்படியும் விமர்சனம் எழுதலாமா ?

/*
ஆனாலும் உலகம் சுற்றும் வாலிபன் மஞ்சுளாவுக்காக பார்க்கலாம்:)
*/
யோவ்.. அடங்க மாட்டீரா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

// குடுகுடுப்பை said...
லொள்ளு ரொம்ப அதிகமா போச்சே.
ஆனாலும் உலகம் சுற்றும் வாலிபன் மஞ்சுளாவுக்காக பார்க்கலாம்:)//


குடுகுடுப்பை..மஞ்சுளா ரசிகரா நீங்க சரியாப்போச்சு...நான் சௌகார் ஜானகி ரசிகரா இருப்பீர்னு நினைச்சேன்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
ஒ.. இப்படியும் விமர்சனம் எழுதலாமா ?//


நசரேயன்...விமரிசனம் நம் பிறப்புரிமை...எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்...