Monday, October 27, 2008

இந்த குட்டிக்கதைக்கு வேறு அர்த்தம் கற்பிக்காதீர்....

இப்போது ..இந்த பதிவில் ..உங்களில் பலருக்குத் தெரிந்த குட்டிக்கதை ஒன்றை சொல்கிறேன்..
இதை படித்துவிட்டு..உடனே...மணிகண்டன்..போன்றோர்..வேறு ஏதாவது அர்த்தம் கண்டுபிடிக்காதீர்கள்...

ராமர்..ஒரு சமயம் வனத்தில் நடந்துக்கொண்டிருந்த போது...அடக்கமுடியா தாகம் ஏற்பட்டது..பக்கத்தில் எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா?என்று தேடிப்பார்த்த போது...அருகாமையில் ஒரு பொய்கை இருப்பதைப்பார்த்தார்.கையில் இருந்த அம்பை..தரையில் ஊன்றி விட்டு..தண்ணீர் குடிக்கச்சென்றார்.குடித்து விட்டு திரும்பும்போது..அம்பை எடுக்க குனிந்தார்..அம்பு..தரையில் இருந்த ஒரு தவளை மீது குத்தி இருந்தது..தவளையும்..குற்றுயிராய்..மரணத்திற்கு போராடிக்கொண்டிருந்தது.

உடனே..ராமர்..'ஏ..தவளையே...நான் அம்பை தரையில் ஊன்றுவதற்கு முன்..நீ இருப்பதை தெரிவித்திருக்கலாமே?'என்றார்..

அதற்கு..தவளை'ராமா..வேறு..யாராவது இக்காரியத்தை செய்திருந்தால்..நான்..ராமா..எனக்கு உதவு..என உன்னை அழைத்திருப்பேன்..ஆனால்..நீயே இக்காரியத்தை செய்துவிட்டதால்...என்னால் உன்னை அழைக்கமுடியாமல் போயிற்று'என்றதாம்.

இது ஆத்திகவாதிகள் மட்டும் அல்ல..நாத்திகவாதிகளும்..ஒரு கதையாகவே எடுத்துக் கொள்ளவும்.

21 comments:

நசரேயன் said...

நான் கதையை மட்டும் தான் படித்தேன், வேறு ஏதும் அர்த்தம் கண்டுபிடிக்க வில்லை

ஆட்காட்டி said...

வேலியே பயிரை மேயிறது இதுதானே? அல்லது மு. கவின் பல்டிய சொல்லுறிங்களா?

ARV Loshan said...

விளங்கி விட்டதையா.. எனக்கு.. எமக்கு.. அவருக்கு (கதையில் ராமர்- வாழ்க்கையில் அவர் தான் ராமர் இல்லையே.. )விளங்குமா?
கருணை நிறைந்த அவர் ஏன் இலங்கை விஷயத்தில் மட்டும் கஞ்சனாக இருக்கிறார்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
நான் கதையை மட்டும் தான் படித்தேன், வேறு ஏதும் அர்த்தம் கண்டுபிடிக்க வில்லை//

நீங்கள் இதை வெறும் கதையாகத்தான் பார்ப்பீர்கள் என நான் அறிவேன் நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஆட்காட்டி said...
வேலியே பயிரை மேயிறது இதுதானே? அல்லது மு. கவின் பல்டிய சொல்லுறிங்களா?//


ஆட்காட்டி..இதுதானே வேணாம்கிறது...(!!)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//sivam said...
அருமையான எழுத்து.//

nanri

T.V.ராதாகிருஷ்ணன் said...

//LOSHAN said...
விளங்கி விட்டதையா.. எனக்கு.. எமக்கு..//


எனக்கு விளங்கவில்லை..ஒருவேளை கருணையே இல்லையோ என்னவோ...

மணிகண்டன் said...

குட்டிகதைன்னு லேபில் பார்த்த உடன நான் எதிர்பார்த்ததே வேற !

T.V.ராதாகிருஷ்ணன் said...

மணிகண்டணுக்கு சாட இந்த பதிவில் இடமில்லையா?

நாமக்கல் சிபி said...

//குட்டிகதைன்னு லேபில் பார்த்த உடன நான் எதிர்பார்த்ததே வேற !

//

ம்ஹூம்! நானும்தான்!

நாமக்கல் சிபி said...

//ஆட்காட்டி said...
வேலியே பயிரை மேயிறது இதுதானே? அல்லது மு. கவின் பல்டிய சொல்லுறிங்களா?//


:))

மணிகண்டன் said...

நான் உங்களை சாடியது இல்லை. அப்படி உங்களுக்கு தோன்றி இருந்தால், மன்னிக்கவும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணிகண்டன் said...
நான் உங்களை சாடியது இல்லை. அப்படி உங்களுக்கு தோன்றி இருந்தால், மன்னிக்கவும்.//
mani..take it easy..it is only a joke....cool

மணிகண்டன் said...

நீங்களும் என்னைய மாதிரியே ஜோக் பண்றீங்க. எதிராளிக்கு புரியாத மாதிரி !

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணிகண்டன் said...
குட்டிகதைன்னு லேபில் பார்த்த உடன நான் எதிர்பார்த்ததே வேற !

நாமக்கல் சிபி said...
//குட்டிகதைன்னு லேபில் பார்த்த உடன நான் எதிர்பார்த்ததே வேற !//

:-)))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணிகண்டன் said...
நீங்களும் என்னைய மாதிரியே ஜோக் பண்றீங்க. எதிராளிக்கு புரியாத மாதிரி !//

nanri mani

அன்பு said...

இந்த கதையில் வரும் தவளை வாயை "மூடி" கொண்டு தானே இருந்தது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புலிகேசி said...
இந்த கதையில் வரும் தவளை வாயை "மூடி" கொண்டு தானே இருந்தது//


வாயைத் திறந்தால் மேலும் சில அம்புகள் தைத்துவிட்டால்...(?!)
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணிகண்டன் said...
குட்டிகதைன்னு லேபில் பார்த்த உடன நான் எதிர்பார்த்ததே வேற !

நாமக்கல் சிபி said...
//குட்டிகதைன்னு லேபில் பார்த்த உடன நான் எதிர்பார்த்ததே வேற !//



ஐயா..புண்ணியவான்களா..இப்படி ஏதாவது சொல்லிட்டு..தமிழ்மணத்திலே 'குட்டி"க்கும் தடை கொண்டுவந்து விடப் போறீங்க
;-)))))))))

கயல்விழி said...

சாரு ஸ்டைல் கதையாக இருக்குமோ என்று நினைத்தேன். ரொம்ப நாள் முன்னால் கேட்ட கதை, நினைவுப்படுத்தியதற்கு நன்றி :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கயல்விழி