Tuesday, October 28, 2008

தி.மு.க.வில் ஆற்காட்டார் இடத்தை பிடிக்கிறாரா பாலு?

தி.மு.க.வில்..இக்கட்டான நேரங்களில்..முரசொலி மாறன் இருந்தவரை அவரை கலைஞர் பேச விடுவார்.ஒரு சமயம் கலைஞர் முன்னிலையிலேயே..அமைச்சர்கள்..எம்.எல்.ஏ.க்கள் என அனைவரையும் ஒரு பிடி பிடித்தார்.
அவரது மறைவுக்குப் பின்..அந்த வேலையை ஆற்காடு வீராசாமியை விட்டு செய்ய வைத்தார் கலைஞர்.பா.ம.க. கூட்டணியில் தி.மு.க.,வை காராசாரமாக விமரிசித்து வந்த போது..அக்கட்சியைச் சேர்ந்த காடுவெட்டி பற்றி பேச வைத்து..பா.ம.க.வை கழட்டி விடும் வேலைக்கு உபயோகித்துக் கொண்டார்.
ஆனால்..பா.ம.க., பிரிந்து சென்றதும்..கம்யூனிஸ்ட்கள் விலகியதும்..தி.மு.க.விற்கு சற்றே கவலையை ஏற்படுத்தியது.எப்படியாவது அக்கட்சியை திரும்ப இழுத்துக் கொள்ள முயன்று வருகிறது.
ஆனால்..மின்வெட்டு...ஆற்காட்டாரை ஓரளவு கலைஞரிடமிருந்து தள்ளி வைத்திருக்க...கலைஞர் பா.ம.க.,வை திரும்ப கொண்டுவரும் வேலையை டி.ஆர்.பாலு விடம் ஒப்படைத்திருக்கிறார் போலிருக்கிறது.
திண்டிவனத்தில்..நான்கு வழி சாலை திறப்பு விழாவில்..பிரிந்தவர்கள்..மீண்டும் கூடி..வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்..என மறைமுகமாக..பா.ம.க.,விற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
கலைஞர் சம்மதம் இல்லாமல் அவர் இவ்வேலையை செய்திருக்க மாட்டார் என நம்பலாம்.

11 comments:

நசரேயன் said...

/*கலைஞர் சம்மதம் இல்லாமல் அவர் இவ்வேலையை செய்திருக்க மாட்டார் என நம்பலாம்.
*/
நானும் நம்புகிறேன்

பூச்சாண்டியார் said...

//மீண்டும் கூடி..வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்..

அய்யயோ.. நாடு தாங்காது.. :(

குடிமகன் said...

அது எப்படிங்க நீங்க மட்டும் ...கலைஞர் பின்னாடியே வால் புடிச்சி வந்த மாதிரி எழுதுறீங்க

குடிமகன் said...

அது எப்படிங்க நீங்க மட்டும் ...
கலைஞர் பின்னாடியே வால் புடிச்சி வந்த மாதிரி எழுதுறீங்க..?


http://tamilkudimagan.blogspot.com/

T.V.ராதாகிருஷ்ணன் said...

// குடிமகன் said...
அது எப்படிங்க நீங்க மட்டும் ...கலைஞர் பின்னாடியே வால் புடிச்சி வந்த மாதிரி எழுதுறீங்க//


வால் பிடித்துக்கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை...40 ஆண்டு அரசியலை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்த அனுபவம் போதும்.
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பூச்சாண்டியார்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//"தி.மு.க.வில் ஆற்காட்டார் இடத்தை பிடிக்கிறாரா பாலு?"//


ஆம்,
ஆற்காடு மின் வெட்டு என்கிறார்.
பாலு ரோட்டை வெட்டு பாலத்த போடு என்கிறார்.
மொத்தத்தில் இருவரும் வெட்டி, துண்டு போட்டுக் கொள்கிறார்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மேலே குறிப்பிட்ட பின்னூட்டத்தில் வெட்டி என்பதை வேட்டி என்று தேவைப்பட்டால் படித்து கொள்ளுங்கள். சரியான ஞாபக மறதி எனக்கு.
நன்றி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// ஜோதிபாரதி said...
//"தி.மு.க.வில் ஆற்காட்டார் இடத்தை பிடிக்கிறாரா பாலு?"//


ஆம்,
ஆற்காடு மின் வெட்டு என்கிறார்.
பாலு ரோட்டை வெட்டு பாலத்த போடு என்கிறார்.
மொத்தத்தில் இருவரும் வெட்டி, துண்டு போட்டுக் கொள்கிறார்கள்.////

மற்றவர்களுக்கு பங்கு?...
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோதிபாரதி said...
மேலே குறிப்பிட்ட பின்னூட்டத்தில் வெட்டி என்பதை வேட்டி என்று தேவைப்பட்டால் படித்து கொள்ளுங்கள். சரியான ஞாபக மறதி எனக்கு.//
நன்றி!

:-))))