Thursday, November 20, 2008

2011ல் முதல்வர் பதவியை பிடிக்க ஜெயலலிதா..விஜய்காந்த் ..போடும் கணக்கு...

முதல்வர் பதவியைப் பிடிக்க..கட்சித் தலைவர்கள்..இப்போதே கணக்கு போட ஆரம்பித்து விட்டனர்...

அ.தி.மு.க.வில் இளைஞர்கள் பாசறைகள் அமைக்கப்படுகின்றன.சுமார் 70000 பாசறைகள் அமைக்கப்பட்டு..அவற்றின் செயலாளர்களுக்கு ஜெ..கடிதம் எழுதி உள்ளார்.கடந்த சட்ட மன்ற தேர்தலில் சுமார் 25 தொகுதிகளில் சுமார்..1000ஓட்டு வித்தியாசத்திலும்...30தொகுதிகளில் ..சுமார்..3000 முதல் 5000 ஓட்டு வித்தியாசத்திலும்...கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.(1000 முதல்.5000 ஒட்டுகளுக்குள் வெற்றி பெற்ற தொகுதிகளை ஜெ கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை போலிருக்கிறது)இந்த பாசறைகள் மூலம்...தொகுதிக்கு 5000புதிய வாக்காளர்கள் கிடைத்தால் போதும்...எளிதாக முதல்வர் ஆகிவிடலாம்...என்பது ஜெ யின் கணக்கு.பாசறை உறுப்பினர்களுக்கு..கணினி,டிரைவிங்,தையல் போன்றவை இலவசமாய் சொல்லிக்கொடுக்கப்படும்

விஜய்காந்தைப் பொறுத்தவரை..அவர் நடத்திய பேரணிக்கு...5 லட்சம் தொண்டர்கள்..வந்ததாகவும்...ஒரு தொண்டன்..100 வாக்குகள் பெற்று தந்தாலும்..5 கோடி வாக்குகள் கிடைத்துவிடும்..பின் தானே முதல்வர் என்று கணக்கு போடுகிறார்.(தமிழக மொத்த வாக்காளர்களே 4.58கோடிதான்)

தி.மு.க., மீண்டும் பா.ம.க.வை இணைத்துக் கொண்டால் போதும்...வெற்றி நிச்சயம்..

பா.ம.க..இன்னும் இது பற்றி பேசவில்லை..

2011 வேண்டாம்...2016ல் பார்த்துக்கொள்ளலாம்..என்கிறார் விஜய்.

ரஜினி ..வழக்கம் போல...எல்லாம் ஆண்டவன் செயல் என்கிறார்..

காங்கிரஸ் ..யார் முதுகில் ஏறும் என்றும் தெரியாது.

5 comments:

வடுவூர் குமார் said...

இதெல்லாம் நேரம் நெருங்க நெருங்க மாறுங்க.
நம் ஆட்களைப் பற்றி நமக்கு தெரியாது.

நசரேயன் said...

என்னோட வெற்றி வாய்ப்பை பத்தி சொல்லாம விட்டுடீங்களே

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வடுவூர் குமார்

அத்திரி said...

போனவாட்டியே விசயகாந்த் வந்த குழப்பத்துல மைனாரிட்டி அரசு அமைந்தது. இப்ப கூட்டணி குழப்பத்துல என்னென்ன கூத்து நடக்கப்போவுதோ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
போனவாட்டியே விசயகாந்த் வந்த குழப்பத்துல மைனாரிட்டி அரசு அமைந்தது. இப்ப கூட்டணி குழப்பத்துல என்னென்ன கூத்து நடக்கப்போவுதோ?//

:-)))))))