Tuesday, November 11, 2008

பார்ப்பனர்களுக்கு அடுத்து இப்போது தாக்கப்படுபவர்களாக..இவர்கள் இருக்கிறார்கள்..

சமீப காலமாக..மென்பொருள் வல்லுனர்களைப் பற்றி பத்திரிகைகள் மனம் போனபடி எழுதி வருகின்றன..

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல..ஒரு நிகழ்ச்சி சமீபத்தய படம் ஒன்றில் வந்துள்ளது.

வேலையில்லாத ஒருவனுக்கு மென்பொருள் தொழில் வல்லுநராக வேலைகிடைக்கிறது.முதல் வருடம்..நண்பர்களுக்கு இனிப்பு வழங்கும்..அவன்..அடுத்த ஆண்டு 5000 ரூபாய் வரை செலவழித்து ஒரு பார்ட்டி கொடுக்கிறான்..

இரண்டு ஆண்டுகள் கழித்து..சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்குகிறானாம்..

இப்போது அவன் மாத சம்பளம் 85000 ரூபாய்.இப்படி வந்த படம் அறை எண் 305ல் கடவுள்..

ரஜினி நடித்த சிவாஜியில் 20ஆண்டுகள் ஆர்கிடெக்சல் இஞ்சினீயர் ..அமெரிக்காவில் 200கோடி ரூபாய் வரை சம்பாதித்ததாக வருகிறது.

பார்ப்பனர்களுக்கு அடுத்து இப்போது தாக்கப்படுபவர்களாக..இவர்கள் இருக்கிறார்கள்..

இப்படி எல்லாம் அவர்கள்மீது பொறாமை படும் நண்பர்களே...அந்த நிலைக்கு வர ..அவனது உழைப்பு ..மென்டல் டென்ஷன் ஆகியவை எவ்வளவு இருந்திருக்கும்...அதை எண்ணிப்பாருங்கள்.ஒரு படத்தில் நடிக்க கோடிகணக்கில்..நீங்கள் வாங்கும்போது...மாத உழைப்புக்கு 85000 வாங்குவது கூடாதா?(இப்பணத்தில்..வருமான வரி..படிக்க வாங்கிய வங்கி கடன் மாதத் தவணை..அவனது மருத்துவசெலவு ஆகியவை போக)..அவன் வீட்டுக்கு எடுத்துப் போகும் சம்பளம்..பாதி கூட தேறாது.

அவனே பாவம்...உலக பொருளாதார வீழ்ச்சியால்...தினம் செத்து..பிழைத்துக் கொண்டிருக்கிறான்.அவனை ..திரை உலகமே..பத்திரிகை துறையே..தயவு செய்து விட்டு விடுங்கள்.

68 comments:

நசரேயன் said...

எங்களுக்காக பரிதாப பட நீங்க ஒருத்தராவது இருகீங்களே, ரெம்ப சந்தோசம்

குடுகுடுப்பை said...

எங்களுக்காக பரிதாப பட நீங்க ஒருத்தராவது இருகீங்களே, ரெம்ப சந்தோசம்

வருண் said...

பொறாமையால் இப்படி செய்வது இயற்கைதான்.

சரி, நான் ஒண்ணு கேட்கிறேன், அதற்கு பதில் சொல்லுங்க!

ஐ டி மக்கள் நிறைய சம்பாரிக்கிறார்கள். சரி.

நிறைய செல்வழிக்கிறார்கள். சரி.

அவங்க கல்ச்சர் கொஞ்சம் வேற மாதிரி இருக்கிறதா சொல்றாங்க. இருந்துட்டுப் போகட்டும்.

ஏதாவது ஒரு ஆர்கனைஷேசன் மாதிரி வைத்து நல்லது ஏதாவது இவர்கள் செய்கிறார்களா?

இப்போ சின்ன கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்கு பண உதவி. இதுபோல்.

சமுதாயத்தை ஒரு பக்கம் சீரழிப்பதாக சொல்லட்டும். அதை பொய்னே நம்புவோம்.

இவ்வளவு நல்ல நிலையில் உள்ள அவர்கள் ஏதாவது செய்யலாமே?
செய்றாங்களா?

இல்லை இவ்வளவு இண் கம் டேக்ஸ் கட்டுவதே நாட்டுக்கு பெரிய உதவினு நினைக்கிறார்களா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

சமுதாயத்தை சீரழிப்பதாகச் சொல்வதை ஏற்கமுடியாது..
எத்தொழிலிலும்..இங்கொன்றும்..அங்கொன்றுமாக சில ஒழுங்கீனங்கள் நடைபெற்றுதான் வருகின்றன.
திரைஉலகின் மீதும்..இவர்கள் மீதும் வெளிச்சம் விழுவதால்..அவை பெரிதாக்கப்படுகின்றன.

வெளி நாட்டில் வேலை செய்யும் மென் பொருள் வல்லுனர்களால்..நாட்டின் அன்னிய செலவாணி கை இருப்பு கணிசமான அளவு அதிகரித்துள்ளது .

சுனாமி தாக்கிய போது..இவர்களால் அளிக்கப்பட்ட நன்கொடையை மறந்து விடலாமா? ஹிந்து நாளேடு..மூலம் இவர்கள் உதவி செய்துள்ளனர்.

மேலும் தர்மகாரியங்கள் செய்வதென்பது..ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்..அதனால் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் குறை சொல்லலாமா?

வருகைக்கு நன்றி வருண்

தமிழ் ஓவியா said...

பார்ப்பான் எங்கே தாக்கப்பட்டான். பார்ப்பான் ஒருவன் கூட கைக்கு சிக்கமாட்டான். தூண்டிவிட்டு தப்பித்துக் கொள்வான். இது பார்ப்பனர்களின் பரம்பரைப் புத்தி.


அண்ணா இரட்டை நாக்குக்காரர்கள் பார்ப்பனர்கள் என்று. ஆனால் நடைமுறையில் அவர்கள் பல நாக்குகாரர்களாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

Indian said...

இதுக்குப் பேர்தான் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது என்பதா?

வருண் said...

****தமிழ் ஓவியா said...
பார்ப்பான் எங்கே தாக்கப்பட்டான். பார்ப்பான் ஒருவன் கூட கைக்கு சிக்கமாட்டான். தூண்டிவிட்டு தப்பித்துக் கொள்வான். இது பார்ப்பனர்களின் பரம்பரைப் புத்தி.****

நீங்கள் இப்போ என்ன செய்றீங்கனு நினைக்கிறீங்க?

அனாகரீகமாக பார்ப்பணர்களை தாக்குறீங்க!

இதைத்தான் சொல்றாங்க!

வருண் said...

***T.V.Radhakrishnan said...
சமுதாயத்தை சீரழிப்பதாகச் சொல்வதை ஏற்கமுடியாது..****

இல்லைங்க, அதில் ஓரளவு உண்மை இருக்கிறது என்பது என் எண்ணம்.

***சுனாமி தாக்கிய போது..இவர்களால் அளிக்கப்பட்ட நன்கொடையை மறந்து விடலாமா? ஹிந்து நாளேடு..மூலம் இவர்கள் உதவி செய்துள்ளனர்.****

அப்படியா?

தனிப்பட ஐ டி துறையை சேர்ந்த ஆர்கனைஷேசன் செய்தார்களா?

பாராட்டுகிறேன் :)

Unknown said...

அதிலும் காமெடி, 2 வருடம் எக்ஸ்பீரியன்ஸ்க்கு 85,000
2 வருட ஜாவா எக்ஸ்ப்பீரியன்ஸ்கு 45,000 (கற்றது தமிழ்)

உச்ச கட்ட காமெடி.;. சிவாஜியில் - 200 கோடி என்பது..

கவனிக்க - ரஜினி வெளிநாடு சென்ற போது எதுவும், இல்லாத ஏழை போலத்தான் சொல்லப்படுகிறார்.. பின்பு அத்தனை பெரிய வீடு, மாத செலவு, இன்கம்டாக்ஸ், அவரின் செலவுகள் எல்லாம் போய் அவர் வைத்திருப்பது 200 கோடி..

அவர் வயது ஒரு 30+ என்றாலும் அவர் 10 - 12 வருடத்தில் சம்பாதித்தது 250 கோடி (அவரின் ஆடம்பர செலவுகள் சேர்த்து) , வர்டத்துக்கு 21 கோடி.. மாதத்துக்கு 1 கோடியே 75 லட்சம்.. (43,750 டாலர்)...
அமெரிக்கால் ஆர்கிடெக்ட் ஆக இருப்பவர்க மாதத்திற்கு 43,750 டாலர் வாங்குவதாக எங்கும் கேள்விப்பட்டது இல்லை.. அதிகப்பட்சம் 8000 - 10,000 டாலர்..

அந்த கணக்கின் படி பார்த்கால் செலவுகள் எல்லாம் போக 10 வருடத்திற்கு 5 கோடிகள் மட்டுமெ வரும் அதிகபட்சமாக

ரஜினியை ஆர்கிடெக்ட் என்பதை விட சமூக விரோத செயல்கள் செய்து சம்பாதித்தது போல அல்லது அரசியல்வாதி போல காட்டியிருக்கலாம்.. அதில் வேண்டுமானால் 250 கோடி என்ன , 5000 கோடிகள் கூட சம்பாதிக்காலம் 10 வர்டத்தில்

வீ. எம் said...

திரு வருண், என்ன இப்படி பொசுக்குனு இப்படி கேட்டுப்புட்டீங்க??
மருத்துவர்கள் என்ன சம்பாதிக்கறாங்க தெரியுமா?

ஐ டி துறையில் சம்பாதிப்பவன் தான் ஒரு ரூபாய்க்கு கூட முறையாக வருமான வரி கட்டுகிறான்...

அவ்வாறே டாக்டர்கள், தொழிலதிபர்கள் , வனிகர்கள் செய்கிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?

மேலும், எத்துனை சமூக அக்கறையுள்ள விஷயங்கள், உதவிகள் செய்யப்படுகிறது என்று தெரியுமா?? ஆராய்ந்துவிட்டு தான் சொல்கின்றீரா??

அனைத்து முன்னனி ஐ டி கம்பெனிகளும், தங்கள் கோல் (annual Goal, Objective) என்று ஒன்று இருக்கும் , அதில் SR (social responsibility) CSR (corporate social responsibility) என்ற ஒரு பகுதியை வைத்து, அதில் ஓவ்வொருவரும் இத்துனை மணி நேரம் சமுக பணிகள் செய்திடல் வேண்டும் என்று ஒரு வரைமுறையே வைத்துள்ளது என்பதை அறிவீரா?

குஜராத் பூகம்பம் முதல், சுனாமி, ஒரிசா வெள்ள நிவரானம் வரை, ஐ டி துறையினர் எவ்வளவு உதவிகள் செய்தனர் என்று தெரியுமா??


ஐ டி கம்பெனிகளில் தண்ணார்வ குழுக்கள் எத்துனை உள்ளது என்று தெரியுமா?

வேறு எந்த துறையிலாவது தண்ணார்வ குழுக்கள் இருந்ததாக சொல்ல முடியுமா?

உதாரணத்துக்கு எங்கள் கம்பெனியில் மட்டும்... (ப்ராஜக்ட்ல் தனி தனி யாக செய்வது இல்லாமல்). ஒட்டுமொத்த கம்பெனியும் சேர்ந்து வருடத்திற்கு 11 - 15 லட்சம் ரூபாயளவுக்கு பல விஷயங்கள் செய்கிறோம்.. 3 அனாதை ஆசிரமங்களையும் , 2 கிராமங்களையும் தத்தெடுத்து கடந்த 4 வருடங்களாக பராமரத்து வருகிறோம்.. பணம் ஒவ்வொரு ஐ டி காரனும் விரும்பி தருகிறார்கள்..
இது எங்கள் கம்பெனி மட்டும் தான்.. இன்போசிஸ், டி சி எஸ், சத்யம் ஐ பி எம் என்று கம்பெனிகள் அனைத்தும் இது போன்ற குழு அமைத்து உதவிங்கள் புரிவது தெரியுமா??

www.helptolive.org என்ற தளத்திற்கு சென்று பார்க்கவும்.. எங்கள் அலுவலக நன்பர்கள் சேர்ந்து ஆரம்பித்து இப்போது பல ஐ டி கம்பெனி சார்ந்தவர்களும் இதிl உறுப்பினர்.. எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி வருடத்திற்கு ஒரு தொகையை ஏழைகளுக்கும் , தேவையானோருக்கும், தருகிறார்கள்.. குறிப்பாக படிக்க வைக்கிறொம் பலரை. சோறு போடுவதை விட படிப்பு தருவது எத்துனை பயன் அளிக்கும் தெரியுமா?
please visit that site and see what has been done so far . this is just an example and could get you more and more details with facts and figures


100 ரூ கொடுத்தாலும் 2000 ரூ செலவு செய்து விளம்பரம் தேடி, பத்திரிக்கையில் படம் போட்டுக்கொள்ளும் மக்கள்,. 40 ரூ ட்யூப் லைட் கொடுத்து, அதில் பாதியை மறைத்து உபயம் - இன்னார் என்று போடுவர் மத்தியில் சத்தமில்லாது ஐ டி துறையில் நடக்கும் நல்ல விஷயங்கள் வெளியில் வராததில் ஆச்சரியம் இல்லை..

சென்னையை சுற்றியுள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லம் சென்று விசாரித்துப்பாருங்க:ள்.. யாரிடம் இருந்து உதவி, ஆதரவு அதிகம் வருகிறதென்று.. விஷயம் புரியும்..

மேலும் விவரம் வேண்டுமா?


http://www.eds.com/about/community/downloads/community.pdf


http://www.infosys.com/beyond-business/default.asp

http://www.karmayog.org/csr500companies/csr500companies_8539.htm

வீ. எம் said...
This comment has been removed by the author.
அன்பு said...

பார்ப்பனர்கள் பெரும்பாலும் மென்பொருள் துறையில் தான் இருக்கிறார்கள். மென்பொருள் துறையில் இருப்பவர்கள் தங்களை பார்ப்பனர்களாக கருதுகிறார்கள். அதனல் இதுவும் சரி தான் பெரிசு

வருண் said...

A Desi Internet Predator Caught By NBC & GA Police
« Thread started on: Sep 22nd, 2006, 10:29pm »

--------------------------------------------------------------------------------
Today Dateline NBC aired another show on Internet Predators that prey on young teens online. A 34 year old married Indian man was jailed for appearing at a home who he thought was a young teen; for sex. He was telling the host Chris Hansen how he was having a troublesome marriage at home. The man had conversation at his work to this so called "13 year old" and drove to her house taking a day off from work.
When Dateline had a show earlier months in DC or around that area, another Desi male appeared to a house to have sex with a minor, but he got away from cameras by running away covering his face with an umbrella.
What this show taught me today, that Desi's can also get involved in serious problems that we Desi's would call "American problems".

A full transcript of the show of this Indian predator what he said on the show to Chris Hansen along with other predators conversations are on the Dateline NBC link.
I think that Indian familes should talk to their children that any person who they talk online regardless their age, gender, nationality are strangers. Even if you talk to an Indian person, don't be fooled that Desi's are innocent. Whether you are a young teen, college student, or working person all people need to be aware that talking online to strangers is dangerous. Don't assume just because that person is your race, that person is safe talk or meet up with. Desi people need a reality check that rape, beatings, murder, and abuse can happen to them, don't think it can happen to you or to Desi people.
Obviously Reena's Article have acknowledged that too that no one is safe.
http://www.msnbc.msn.com/id/14960266/page/5/

வருண் said...

****வீ. எம் said...
திரு வருண், என்ன இப்படி பொசுக்குனு இப்படி கேட்டுப்புட்டீங்க??
மருத்துவர்கள் என்ன சம்பாதிக்கறாங்க தெரியுமா? ****

நான் இப்படிபொசுக்குனு கேட்டதால்தான் உங்களுக்கு சொல்ல வாய்ப்பு கிடைத்தது! :-)

பூச்சாண்டியார் said...

நன்றி ஐயா.. ரொம்ப சந்தோசமா இருக்கு..

ஆட்காட்டி said...

சரி, விடுங்க. அவங்களே பாவங்கள். கஷ்டப் பட்டு மத்தவனுகளுக்கு உழைச்சு குடுக்கிறாங்க. நீங்க வேற்?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

தமிழ் ஓவியா
Indian
வருண்
புலிகேசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..விவரமான பின்னூட்டத்திற்கும் நன்றி Sanjeev

T.V.ராதாகிருஷ்ணன் said...

நிறைய விவரங்களை சொல்லி இருக்கிறீர்கள்...தனியாக மின்னஞ்சல் அனுப்பி இருந்தால் ..ஒரு பதிவாகவே போட்டிருக்கலாம்.நன்றி வீ.எம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பூச்சாண்டியார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஆட்காட்டி

தமிழ் ஓவியா said...

//நீங்கள் இப்போ என்ன செய்றீங்கனு நினைக்கிறீங்க?

அனாகரீகமாக பார்ப்பணர்களை தாக்குறீங்க!

இதைத்தான் சொல்றாங்க!//

அநாகரிகமாக தாக்குவ்து பார்ப்பனர்களா? தமிழர்களா?

தமிழர்களை சூத்திரன் என்று சொல்லி தாக்கியது யார்?

"பறையனைத் தொட்டால் தீட்டு ; சாணானைக் கண்டாலே தீட்டு" என்ற சொலவடை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
பனையேறும் தொழில் செய்யும் எங்கள் தமிழனை சாணான் (நாடார்) என்று அடையாளப்படுத்தி, அவர்களைப் பார்ப்பது கூட தீட்டு என்று பார்ப்பனர்கள் வரையறுத்து வைத்திருந்தார்கள். பார்ப்பான் நடந்து வரும்போது, பனைமரத்தின் உச்சியில் இருக்கும் தொழிலாளி, இரண்டு கைகளையும் தட்டி, "சாமி நான் மரத்தில ஏறியிருக்கேன்" என்று கூவ வேண்டுமாம்; அப்போதுதான் கீழே நடந்துபோகும் பார்ப்பான் மேலே பார்க்க மாட்டானாம். அவனது நிழலையொட்டி நடக்க மாட்டானாம்.

இவன் பார்க்கக் கூடாது என்பதற்காக மரத்தில் ஏறியிருப்பவன் கைகளை விட்டுவிட்டு கைதட்டி சொல்ல வேண்டும் என்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?



இதோ "இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா" என்ற நூலிலிருந்து சில வரலாற்றுச் செய்திகள் உங்களுக்கு இவையெல்லாம் தெரியுமா என்று பாருங்கள்.

* நாடார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்று 1829 ஆம் ஆண்டு திருவாங்கூர் அரசாங்கமே உத்திரவிட்டது என்ற கொடுமையான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

* 19 ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், நகைஅணியவோ, மாட்டிடமிருந்து பால் கறக்கவோ, ரவிக்கை அணியவோ , இடுப்பில் தண்ணீர்க்குடம் எடுத்துச்செல்லவோ பார்ப்பனர்கள் தடை போட்டிருந்தார்கள் என்ற கொடுமையான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?


* சென்ற நூற்றாண்டில் நாகர்கோயில் பகுதியில் குறிப்பிட்ட சில சாதிப்பெண்கள், மார்பை மூடி, ரவிக்கைப் போடக்கூடாது என்ற முறை இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

* 1895 ஆம் ஆண்டுகளில்- நெல்லை மாவட்டம் கழுகுமலை கிராமப்பகுதிகளில் நாடார் சமூகத்தினர் தேரடித் தெருக்கள் வழியே மத ஊர்வலம் போக தடை போடப்பட்டது என்பதும், இதற்குப் பதிலளிக்கும் வகையில் அப்பகுதி நாடார்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவமதத்தில் சேர்ந்துவிட்டார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?


* 1874 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபடவந்த நாடார்களை- பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதோடு - அது தொடர்பாக நடந்த வழக்கில் - நாடார்கள் கோயிலுக்குள் நுழைய உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?


* வேலை கேட்டு மனுச் செய்த ஒரு நாடார் சமூகத்தைச் சார்ந்த டாக்டருக்கு தென்னங்கன்றுகளை வாங்கிக் கொடுத்து, குலத்தொழிலை செய்யச் சொன்னவர், திருவாங்கூர் சமஸ்தான திவான் சர்.சி.பி ராமசாமி அய்யர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

* திருத்தங்கல் பகுதியில் உள்ள நாடார் சமூகத்தினர் கோயிலுக்குள் நுழையக் கூடாது தேங்காயும் உடைக்கக் கூடாது என்று 1878ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் மாவட்ட முன்சீப் தீர்ப்பு வழங்கினார் என்ற கொடுமை உங்களுக்குத் தெரியுமா?

* திருச்செந்தூர் முருகன் கோவில் வாசலில், பஞ்சமர்களும், சாணார்களும் உள்நுழையக்கூடாது என்று கடந்த 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததே தெரியுமா?

இன்னும் எவ்வளவோ கொடுமைகளை பார்ப்பனர்கள் செய்தனர் செய்துவருகின்றனர்.


காந்தியை கொன்றது பார்ப்பனன் என்பதவாது உங்களுக்கு தெரியுமா?

சங்கராச்சாரி ஜெயில் மலம்கழிப்பதற்கு வாழை இலையை பயன்படுத்தினான் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா?

இது போல் எண்ணற்ற ஆதாரங்களைச் சொல்ல முடியும்

ஆமா தமிழா தமிழா என்று
சொல்லும் நீங்கள், அனைவருக்கும் ஒரே நீதியை வலியிறுத்தும் நீங்கள் பார்ப்பனரின் அநாகரிகத்திற்கு ஆதரவாய் செயல்படுவது எப்படி?

நீங்கள் தமிழனா? பார்ப்பானா? அல்லது பார்ப்பன அடிவருடியா?

இன்னும் எவ்வளவ்வோ எழுதலாம். இறுதியாக பெரியாரின் சிந்தனையுடன் முடிக்கிறேன்.
இதோ பெரியாரின் கருத்து:


"சுசீந்திரம் சத்தியாக்கிரகம்
திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த சுசீந்திரம் என்னுமிடத்தில் சத்தியாக்கிரகம் நடைபெறும் விஷயத்தைப் பற்றி இதற்கு முன் நமது பத்திரிகை மூலமாகத் தெரியப்படுத்தியிருப்பதை வாசகர் களறிவார்கள். அது விஷயமாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் விஷயத்தையும் இந்த இதழ் 3-வது பக்கம் பிரசுரித்திருக்கிறோம்.

வைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடைந்து வெகுநாட்களாகிவிட வில்லை. அதற்குள்ளாக மற்றோர் இடத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட தோன்றியுள்ள சத்தியாக்கிரகத்தைக் காண நாம் மகிழ்ச்சியுறுகிறோம். அநீதியும், அக்கிரமமும் தொலைய வேண்டு மானால் வெறும் சட்டங்களாலும், எழுத்தாலும், பேச்சாலும் முடியா தென்றும், சத்தியாக்கிரகமும் தியாகமுமே உற்ற சாதனமாகுமென்றும் பல தடவைகளில் வற்புறுத்தியிருக்கிறோம். நமது நாட்டில் ஜாதிக் கொடுமையும், பிறவியினால் உயர்வு - தாழ்வு என்னும் அகங்காரமும் உடனே தொலைய வேண்டியது அவசியமாகும். இக்கொடுமைகளை ஓர் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஜம்பமாக தென் ஆப்பிரிக்கா இந்தியருக்காகப் பரிந்து பேசுவதும், எழுதுவதும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நன்மையையே பெரிதும் கவனிப்பதுபோல் நடித்து நீலிக்கண்ணீர் விடுவதும் தன் மனசாட்சி அறியச் செய்யும் மகத்தான அக்கிரமமேயன்றி வேறல்ல.

மேலும், இவர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு பொது .ஜனங்களை ஏமாற்றுவதும், எலெக்ஷன் பிரசாரம் செய்வதும் மிக மோசமான செய்கையாகும். தாங்கள் பிழைக்க வேண்டும், தங்கள் மக்கள் நன்றாயிருக்கவேண்டும், தங்கள் சமூகத்தார் மேன்மையான ஸ்திதியிலிருக்க வேண்டும், மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாய் சாஸ்திரங் களையும், புராணங்களையும், இதிகாசங்களையும், மனு தர்மசாஸ்திரம் என்னும் அயோக்கிய நூலொன்றையும் காட்டிக்கொண்டு வயிறு வளர்ப்பதுடன், தங்கள் கட்சியைப் பலப்படுத்திக்கொள்ள சுயமரியாதையற்ற ஆண்மையற்ற சிலரைச் சேர்த்துக்கொண்டும் செய்யும் சூழ்ச்சிகளெல்லாம் நொறுக்கப்படவேண்டுமாயின், பொதுமக்கள் சர்வ ஜாக்கிரதையுடனிருந்து விழித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இவைகளையெல்லாம் சுட்டிக் காட்டவல்லது சுயமரியாதையும், சத்தியாக்கிரகமும், உண்மையான தியாகமுமே என்று கூறலாம்.

நமது நாட்டிலேயே பிறப்பால் மனிதர்களாயிருந்தும், தாழ்த்தப் பட்டவர்கள் - கண்ணில் தென்படக் கூடாதவர்கள் - தங்கள் தெய்வங்களைத் தரிசிக்கக் கூடாதவர்கள் - தங்கள் வேதத்தைப் படிக்கக் கூடாதவர்கள் என எத்தனையோ லட்சம் பேர்களை ஒதுக்கி வைத்திருக்கிறோம். நாய்களுக்கும் பன்றிகளுக்கும் கொடுத்துள்ள உரிமையைக்கூட அவர்களுக்கு அளிக்க மறுக்கின்றோம். இந்நிலையில் நமக்கு சுயராஜ்யமும், விடுதலையும் அத்தியாவசியமா? அல்லது முன் கூறியவர்களின் முன்னேற்றமும், சுயமரியாதையும் அத்தியாவசியமா வென்பதை பொது ஜனங்களே சிந்திக்க வேண்டும்.

சமத்துவம், சுயமரியாதை என்பது நமது நாட்டிலுள்ள மக்களனைவருக்கும் ஏற்பட்டாலன்றி, அதற்கு முன்னர் கிடைக்கும் சுயராஜ்யம் ஓர் ஜாதியார் பிழைப்பதற்கு ஆதாரமாயிருக்குமேயல்லாது வேறல்ல. சுயராஜ்யம் கிடைக்கும் முன், நம்மவர்களுக்குள் எவ்விஷயத்திலும் ஒற்றுமை , சமத்துவம், சுயமரியாதை ஏற்படக்கூடிய விதமான வேலைகளைச் செய்து கொள்ளவேண்டியது மிக்க அவசியமாயிருக்கின்றது. சமத்துவம் ஏற்படுமானால் பிராமணர்கள் பாடு திண்டாட்டமாகிவிடுமென்பது உண்மையே. முன்னர் கூறிய நூல்களைக் காட்டிக்கொண்டு பிராமணர்கள் வயிறு வளர்ப்பது நின்று போய்விடும். சுயமரியாதை உண்டாகிவிடுமானால் பிராமணர்கள் நிலைமை இப்போதிருப்பது போலிராமல் கீழ் நிலையடையலாம். இங்ஙனம் நேரிடுமென்பதைக் கருத்தாகக் கொண்டே ராஜீய பிராமணர்களாகட்டும், சில சர்க்கார் உத்தியோக பிராமணர்களாகட்டும் அவர்கள் மிதவாதிகளோ, சுயேச்சைக் கட்சியோ, ஆச்சாரியாரோ, ஐயங்காரோ, ஐயரோ, பந்துலுவோ எவராயிருந்தபோதிலும் சரி ஒன்றுகூடிக்கொண்டு பிராமணரல்லாதாரை - தமிழர்களை எதிர்த்து நிற்கிறார்கள்.

நிற்க, பிராமணர்கள் அநியாயம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; திருவிதாங்கூரிலும் அதிகமாக இருக்கின்றதை வைக்கம்சத்தியாக்கிரகத்தின் மூலியமாய் யாவரும் அறிவார்கள். திருவாங்கூர் கவர்மெண்டார் இவ்வநியாயங்களுக்கு உடந்தையாயிருக்கிறார் களோவெனச் சிலர் சந்தேகிக்கக்கூடும். திருவிதாங்கூர் ராஜ்யத்திலுள்ள பொது ரஸ்தாக்களும், பொதுக் குளங்களும் ஜாதிமத வித்தியாச மில்லாமல் பொது ஜனங்கள் அநுபவிக்கலாம் என சில வருஷங் களுக்கு முன்னரே உத்தரவு போட்டிருக்கின்றனர். ஆக கவர்மெண்டார் பேரில் குற்றமில்லை. பிராமணர்கள் தவிர்த்த ஏனைய ஜாதியர்களான நாயர் முதலானவர்கள் தங்கள் சமூக மகாநாடுகளில், பொது ரஸ்தாக் களிலும், பொதுக் குளங்களிலும் ஜாதி மத வித்தியாசங் காட்டலாகாது எனத் தீர்மானம் செய்திருக்கின்றனர் - செய்து வருகின்றனர். ஆக பொது ஜனங்களின் சமத்துவத்துக்கும் - சுயமரியாதைக்கும் இடைஞ்சலா யிருப்பவர்கள் பிராமணர்களேயாகும். இதிலும் மலை யாள நம்பூதிரிப் பிராமணர்களைவிட அங்கு பிழைக்கவும் அங்குள்ள கோவிற் சோற்றைச் சாப்பிடவும் சென்றுள்ள தமிழ்நாட்டுப் பிராமணர் களே அதிக இடைஞ்சல் செய்பவர்களென்று கூறத் தகுந்த ஆதாரமுண்டு.

இவர்களின் இடைஞ்சல்களும், தொந்தரவும் தொலைய வேண்டுமானால், சத்தியாக்கிரகந்தான் சிறந்த வழி. சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நோக்கமெல்லாம் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கேயாகும்.

தமிழ்நாட்டினர், வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு எவ்வாறு பணம் கொடுத்தும், ஆட்கள் உதவியும், ஒத்தாசை செய்தார்களோ அவ்வாறே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும், தாங்கள் நன்கொடை யளித்து ஆட்கள் உதவியும் முழு ஒத்தாசையும் அளிப்பார்களென்று நம்புகிறோம்.

பிராமணர்கள் பலரும், மற்ற வகுப்பைச் சார்ந்த சில சுயநலக் காரர்களும் இச்சத்தியாக்கிரகத்திற்கு எதிரிடையாயிருப்பார்களென்பது உண்மையே. இத்தகைய குறுகிய நோக்கமுடையோர் வெகு சிலரேயானபடியால் பொதுமக்கள் இவர்களைப் பற்றிக் கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை. தங்கள் கடமை எதுவோ; எது நியாயமென தங்கள் மனதில் படுகிறதோ அதை மாத்திரம் கெட்டியாக பிடித்துக்கொண்டு இப்பேர்ப்பட்ட சமயத்தில், இத்தகைய சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறோம். தமிழ்நாட்டு தேசீய வாலிபர்களானாலும் சரி, மற்றும் எந்தக் கட்சியைச் சேர்ந்த எவரேயானாலும் சரி அனைவரும் சத்தியாக்கிரகத்திற்குத் தொண்டு செய்ய அவசியமேற்படும் போது தயாராயிருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

தமிழ்நாட்டார் சுசீந்திரத்தில் உரிமைப் போர் நடப்பதற்கு தங்களால் இயன்ற நன்கொடையைக் கொடுக்கவும் தயாராயிருக்க வேண்டுமென்பதே நமது வேண்டுகோளாகும்.

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெறுமாக !

---------தந்தைபெரியார்- "குடிஅரசு" - 31.1.26 "


படியுங்கள்! உன்மையைஉணருங்கள்! தெளிவடையுங்கள்!
நன்றி.

தமிழ் ஓவியா said...

//நீங்கள் இப்போ என்ன செய்றீங்கனு நினைக்கிறீங்க?

அனாகரீகமாக பார்ப்பணர்களை தாக்குறீங்க!

இதைத்தான் சொல்றாங்க!//

அநாகரிகமாக தாக்குவ்து பார்ப்பனர்களா? தமிழர்களா?

தமிழர்களை சூத்திரன் என்று சொல்லி தாக்கியது யார்?

"பறையனைத் தொட்டால் தீட்டு ; சாணானைக் கண்டாலே தீட்டு" என்ற சொலவடை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
பனையேறும் தொழில் செய்யும் எங்கள் தமிழனை சாணான் (நாடார்) என்று அடையாளப்படுத்தி, அவர்களைப் பார்ப்பது கூட தீட்டு என்று பார்ப்பனர்கள் வரையறுத்து வைத்திருந்தார்கள். பார்ப்பான் நடந்து வரும்போது, பனைமரத்தின் உச்சியில் இருக்கும் தொழிலாளி, இரண்டு கைகளையும் தட்டி, "சாமி நான் மரத்தில ஏறியிருக்கேன்" என்று கூவ வேண்டுமாம்; அப்போதுதான் கீழே நடந்துபோகும் பார்ப்பான் மேலே பார்க்க மாட்டானாம். அவனது நிழலையொட்டி நடக்க மாட்டானாம்.

இவன் பார்க்கக் கூடாது என்பதற்காக மரத்தில் ஏறியிருப்பவன் கைகளை விட்டுவிட்டு கைதட்டி சொல்ல வேண்டும் என்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?



இதோ "இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா" என்ற நூலிலிருந்து சில வரலாற்றுச் செய்திகள் உங்களுக்கு இவையெல்லாம் தெரியுமா என்று பாருங்கள்.

* நாடார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்று 1829 ஆம் ஆண்டு திருவாங்கூர் அரசாங்கமே உத்திரவிட்டது என்ற கொடுமையான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

* 19 ஆம் நூற்றாண்டின் துவக்க காலங்களில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், நகைஅணியவோ, மாட்டிடமிருந்து பால் கறக்கவோ, ரவிக்கை அணியவோ , இடுப்பில் தண்ணீர்க்குடம் எடுத்துச்செல்லவோ பார்ப்பனர்கள் தடை போட்டிருந்தார்கள் என்ற கொடுமையான வரலாறு உங்களுக்குத் தெரியுமா?


* சென்ற நூற்றாண்டில் நாகர்கோயில் பகுதியில் குறிப்பிட்ட சில சாதிப்பெண்கள், மார்பை மூடி, ரவிக்கைப் போடக்கூடாது என்ற முறை இருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

* 1895 ஆம் ஆண்டுகளில்- நெல்லை மாவட்டம் கழுகுமலை கிராமப்பகுதிகளில் நாடார் சமூகத்தினர் தேரடித் தெருக்கள் வழியே மத ஊர்வலம் போக தடை போடப்பட்டது என்பதும், இதற்குப் பதிலளிக்கும் வகையில் அப்பகுதி நாடார்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவமதத்தில் சேர்ந்துவிட்டார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?


* 1874 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழிபடவந்த நாடார்களை- பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதோடு - அது தொடர்பாக நடந்த வழக்கில் - நாடார்கள் கோயிலுக்குள் நுழைய உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?


* வேலை கேட்டு மனுச் செய்த ஒரு நாடார் சமூகத்தைச் சார்ந்த டாக்டருக்கு தென்னங்கன்றுகளை வாங்கிக் கொடுத்து, குலத்தொழிலை செய்யச் சொன்னவர், திருவாங்கூர் சமஸ்தான திவான் சர்.சி.பி ராமசாமி அய்யர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

* திருத்தங்கல் பகுதியில் உள்ள நாடார் சமூகத்தினர் கோயிலுக்குள் நுழையக் கூடாது தேங்காயும் உடைக்கக் கூடாது என்று 1878ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் மாவட்ட முன்சீப் தீர்ப்பு வழங்கினார் என்ற கொடுமை உங்களுக்குத் தெரியுமா?

* திருச்செந்தூர் முருகன் கோவில் வாசலில், பஞ்சமர்களும், சாணார்களும் உள்நுழையக்கூடாது என்று கடந்த 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்ததே தெரியுமா?

இன்னும் எவ்வளவோ கொடுமைகளை பார்ப்பனர்கள் செய்தனர் செய்துவருகின்றனர்.


காந்தியை கொன்றது பார்ப்பனன் என்பதவாது உங்களுக்கு தெரியுமா?

சங்கராச்சாரி ஜெயில் மலம்கழிப்பதற்கு வாழை இலையை பயன்படுத்தினான் என்ற உண்மை உங்களுக்கு தெரியுமா?

இது போல் எண்ணற்ற ஆதாரங்களைச் சொல்ல முடியும்

ஆமா தமிழா தமிழா என்று
சொல்லும் நீங்கள், அனைவருக்கும் ஒரே நீதியை வலியிறுத்தும் நீங்கள் பார்ப்பனரின் அநாகரிகத்திற்கு ஆதரவாய் செயல்படுவது எப்படி?

நீங்கள் தமிழனா? பார்ப்பானா? அல்லது பார்ப்பன அடிவருடியா?

இன்னும் எவ்வளவ்வோ எழுதலாம். இறுதியாக பெரியாரின் சிந்தனையுடன் முடிக்கிறேன்.
இதோ பெரியாரின் கருத்து:


"சுசீந்திரம் சத்தியாக்கிரகம்
திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த சுசீந்திரம் என்னுமிடத்தில் சத்தியாக்கிரகம் நடைபெறும் விஷயத்தைப் பற்றி இதற்கு முன் நமது பத்திரிகை மூலமாகத் தெரியப்படுத்தியிருப்பதை வாசகர் களறிவார்கள். அது விஷயமாக அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் விஷயத்தையும் இந்த இதழ் 3-வது பக்கம் பிரசுரித்திருக்கிறோம்.

வைக்கம் சத்தியாக்கிரகம் முடிவடைந்து வெகுநாட்களாகிவிட வில்லை. அதற்குள்ளாக மற்றோர் இடத்தில் சமத்துவத்தை நிலைநாட்ட தோன்றியுள்ள சத்தியாக்கிரகத்தைக் காண நாம் மகிழ்ச்சியுறுகிறோம். அநீதியும், அக்கிரமமும் தொலைய வேண்டு மானால் வெறும் சட்டங்களாலும், எழுத்தாலும், பேச்சாலும் முடியா தென்றும், சத்தியாக்கிரகமும் தியாகமுமே உற்ற சாதனமாகுமென்றும் பல தடவைகளில் வற்புறுத்தியிருக்கிறோம். நமது நாட்டில் ஜாதிக் கொடுமையும், பிறவியினால் உயர்வு - தாழ்வு என்னும் அகங்காரமும் உடனே தொலைய வேண்டியது அவசியமாகும். இக்கொடுமைகளை ஓர் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஜம்பமாக தென் ஆப்பிரிக்கா இந்தியருக்காகப் பரிந்து பேசுவதும், எழுதுவதும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நன்மையையே பெரிதும் கவனிப்பதுபோல் நடித்து நீலிக்கண்ணீர் விடுவதும் தன் மனசாட்சி அறியச் செய்யும் மகத்தான அக்கிரமமேயன்றி வேறல்ல.

மேலும், இவர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு பொது .ஜனங்களை ஏமாற்றுவதும், எலெக்ஷன் பிரசாரம் செய்வதும் மிக மோசமான செய்கையாகும். தாங்கள் பிழைக்க வேண்டும், தங்கள் மக்கள் நன்றாயிருக்கவேண்டும், தங்கள் சமூகத்தார் மேன்மையான ஸ்திதியிலிருக்க வேண்டும், மற்றவர்கள் அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாய் சாஸ்திரங் களையும், புராணங்களையும், இதிகாசங்களையும், மனு தர்மசாஸ்திரம் என்னும் அயோக்கிய நூலொன்றையும் காட்டிக்கொண்டு வயிறு வளர்ப்பதுடன், தங்கள் கட்சியைப் பலப்படுத்திக்கொள்ள சுயமரியாதையற்ற ஆண்மையற்ற சிலரைச் சேர்த்துக்கொண்டும் செய்யும் சூழ்ச்சிகளெல்லாம் நொறுக்கப்படவேண்டுமாயின், பொதுமக்கள் சர்வ ஜாக்கிரதையுடனிருந்து விழித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். இவைகளையெல்லாம் சுட்டிக் காட்டவல்லது சுயமரியாதையும், சத்தியாக்கிரகமும், உண்மையான தியாகமுமே என்று கூறலாம்.

நமது நாட்டிலேயே பிறப்பால் மனிதர்களாயிருந்தும், தாழ்த்தப் பட்டவர்கள் - கண்ணில் தென்படக் கூடாதவர்கள் - தங்கள் தெய்வங்களைத் தரிசிக்கக் கூடாதவர்கள் - தங்கள் வேதத்தைப் படிக்கக் கூடாதவர்கள் என எத்தனையோ லட்சம் பேர்களை ஒதுக்கி வைத்திருக்கிறோம். நாய்களுக்கும் பன்றிகளுக்கும் கொடுத்துள்ள உரிமையைக்கூட அவர்களுக்கு அளிக்க மறுக்கின்றோம். இந்நிலையில் நமக்கு சுயராஜ்யமும், விடுதலையும் அத்தியாவசியமா? அல்லது முன் கூறியவர்களின் முன்னேற்றமும், சுயமரியாதையும் அத்தியாவசியமா வென்பதை பொது ஜனங்களே சிந்திக்க வேண்டும்.

சமத்துவம், சுயமரியாதை என்பது நமது நாட்டிலுள்ள மக்களனைவருக்கும் ஏற்பட்டாலன்றி, அதற்கு முன்னர் கிடைக்கும் சுயராஜ்யம் ஓர் ஜாதியார் பிழைப்பதற்கு ஆதாரமாயிருக்குமேயல்லாது வேறல்ல. சுயராஜ்யம் கிடைக்கும் முன், நம்மவர்களுக்குள் எவ்விஷயத்திலும் ஒற்றுமை , சமத்துவம், சுயமரியாதை ஏற்படக்கூடிய விதமான வேலைகளைச் செய்து கொள்ளவேண்டியது மிக்க அவசியமாயிருக்கின்றது. சமத்துவம் ஏற்படுமானால் பிராமணர்கள் பாடு திண்டாட்டமாகிவிடுமென்பது உண்மையே. முன்னர் கூறிய நூல்களைக் காட்டிக்கொண்டு பிராமணர்கள் வயிறு வளர்ப்பது நின்று போய்விடும். சுயமரியாதை உண்டாகிவிடுமானால் பிராமணர்கள் நிலைமை இப்போதிருப்பது போலிராமல் கீழ் நிலையடையலாம். இங்ஙனம் நேரிடுமென்பதைக் கருத்தாகக் கொண்டே ராஜீய பிராமணர்களாகட்டும், சில சர்க்கார் உத்தியோக பிராமணர்களாகட்டும் அவர்கள் மிதவாதிகளோ, சுயேச்சைக் கட்சியோ, ஆச்சாரியாரோ, ஐயங்காரோ, ஐயரோ, பந்துலுவோ எவராயிருந்தபோதிலும் சரி ஒன்றுகூடிக்கொண்டு பிராமணரல்லாதாரை - தமிழர்களை எதிர்த்து நிற்கிறார்கள்.

நிற்க, பிராமணர்கள் அநியாயம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல; திருவிதாங்கூரிலும் அதிகமாக இருக்கின்றதை வைக்கம்சத்தியாக்கிரகத்தின் மூலியமாய் யாவரும் அறிவார்கள். திருவாங்கூர் கவர்மெண்டார் இவ்வநியாயங்களுக்கு உடந்தையாயிருக்கிறார் களோவெனச் சிலர் சந்தேகிக்கக்கூடும். திருவிதாங்கூர் ராஜ்யத்திலுள்ள பொது ரஸ்தாக்களும், பொதுக் குளங்களும் ஜாதிமத வித்தியாச மில்லாமல் பொது ஜனங்கள் அநுபவிக்கலாம் என சில வருஷங் களுக்கு முன்னரே உத்தரவு போட்டிருக்கின்றனர். ஆக கவர்மெண்டார் பேரில் குற்றமில்லை. பிராமணர்கள் தவிர்த்த ஏனைய ஜாதியர்களான நாயர் முதலானவர்கள் தங்கள் சமூக மகாநாடுகளில், பொது ரஸ்தாக் களிலும், பொதுக் குளங்களிலும் ஜாதி மத வித்தியாசங் காட்டலாகாது எனத் தீர்மானம் செய்திருக்கின்றனர் - செய்து வருகின்றனர். ஆக பொது ஜனங்களின் சமத்துவத்துக்கும் - சுயமரியாதைக்கும் இடைஞ்சலா யிருப்பவர்கள் பிராமணர்களேயாகும். இதிலும் மலை யாள நம்பூதிரிப் பிராமணர்களைவிட அங்கு பிழைக்கவும் அங்குள்ள கோவிற் சோற்றைச் சாப்பிடவும் சென்றுள்ள தமிழ்நாட்டுப் பிராமணர் களே அதிக இடைஞ்சல் செய்பவர்களென்று கூறத் தகுந்த ஆதாரமுண்டு.

இவர்களின் இடைஞ்சல்களும், தொந்தரவும் தொலைய வேண்டுமானால், சத்தியாக்கிரகந்தான் சிறந்த வழி. சுசீந்திரம் சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நோக்கமெல்லாம் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்கேயாகும்.

தமிழ்நாட்டினர், வைக்கம் சத்தியாக்கிரகத்திற்கு எவ்வாறு பணம் கொடுத்தும், ஆட்கள் உதவியும், ஒத்தாசை செய்தார்களோ அவ்வாறே சுசீந்திரம் சத்தியாக்கிரகத்திற்கும், தாங்கள் நன்கொடை யளித்து ஆட்கள் உதவியும் முழு ஒத்தாசையும் அளிப்பார்களென்று நம்புகிறோம்.

பிராமணர்கள் பலரும், மற்ற வகுப்பைச் சார்ந்த சில சுயநலக் காரர்களும் இச்சத்தியாக்கிரகத்திற்கு எதிரிடையாயிருப்பார்களென்பது உண்மையே. இத்தகைய குறுகிய நோக்கமுடையோர் வெகு சிலரேயானபடியால் பொதுமக்கள் இவர்களைப் பற்றிக் கவனிக்க வேண்டிய அவசியமே இல்லை. தங்கள் கடமை எதுவோ; எது நியாயமென தங்கள் மனதில் படுகிறதோ அதை மாத்திரம் கெட்டியாக பிடித்துக்கொண்டு இப்பேர்ப்பட்ட சமயத்தில், இத்தகைய சத்தியாக்கிரகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறோம். தமிழ்நாட்டு தேசீய வாலிபர்களானாலும் சரி, மற்றும் எந்தக் கட்சியைச் சேர்ந்த எவரேயானாலும் சரி அனைவரும் சத்தியாக்கிரகத்திற்குத் தொண்டு செய்ய அவசியமேற்படும் போது தயாராயிருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளுகிறோம்.

தமிழ்நாட்டார் சுசீந்திரத்தில் உரிமைப் போர் நடப்பதற்கு தங்களால் இயன்ற நன்கொடையைக் கொடுக்கவும் தயாராயிருக்க வேண்டுமென்பதே நமது வேண்டுகோளாகும்.

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் வெற்றி பெறுமாக !

---------தந்தைபெரியார்- "குடிஅரசு" - 31.1.26 "


படியுங்கள்! உன்மையைஉணருங்கள்! தெளிவடையுங்கள்!
நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழ் ஓவியா

வருண் said...

தமிழ் ஓவியா!

இப்போ இங்கே ஜாதிச்சண்டை போடனுமா என்று தெரியவில்லை.

நாடார்கள் மிகவும் புத்திசாலிங்க, தமிழ் ஓவியா. அவர்கள் என்றுமே உங்களைப்போல் உணர்ச்சி வசப்படவில்லை. உழைப்பு மற்ரும் தன் சமூகத்தைப்பற்றி கவலைப்பட்டு முன்னேறி இன்று "ஹை க்ளாஸ்" ஆக எல்லோரும் மதிக்கத்தக்க உள்ளார்கள்.

உங்களைப்போல் உணர்ச்சிவசப்பட்டு தேவையில்லாத சண்டையில் கலந்து இருந்தால், இன்று இந்தளவு மேலே வந்திருக்க முடியாது.

இந்தப்பழைய கதையை இன்னும் எவ்வளவு நாட்கள் பேசப்போகிறோம்?! :(

If you ask me, Brahmins are outrageously attacked by anybody for whatever happened or calimed to be happened in the past.

It is also true, IT people are primary target these days!

We will meet elsewhere to talk about who abused SC and Nadars besides brahmins! Take care!

புருனோ Bruno said...
This comment has been removed by the author.
புருனோ Bruno said...

//அதில் SR (social responsibility) CSR (corporate social responsibility) என்ற ஒரு பகுதியை வைத்து, அதில் ஓவ்வொருவரும் இத்துனை மணி நேரம் சமுக பணிகள் செய்திடல் வேண்டும் என்று ஒரு வரைமுறையே வைத்துள்ளது என்பதை அறிவீரா?//

அப்படியா. CSR என்பது IT மட்டும் அல்ல. அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் பொதுவானது என்று தெரியாதா

புருனோ Bruno said...

நான் வேலை பார்த்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் அருகிலிருக்கும் ஸ்பிக் மற்றும் ஸ்டெர்லைட் நிறுவனங்கள் CSRல் பல உதவிகள் செய்திருக்கிறார்கள்

CSR என்பது அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும், தனியார் மருத்துவமனைகள் உட்பட. என்னவோ IT மட்டும் அதை செய்வது போல் கூறுவது சரியா

புருனோ Bruno said...

//100 ரூ கொடுத்தாலும் 2000 ரூ செலவு செய்து விளம்பரம் தேடி, பத்திரிக்கையில் படம் போட்டுக்கொள்ளும் மக்கள்,. 40 ரூ ட்யூப் லைட் கொடுத்து, அதில் பாதியை மறைத்து உபயம் - இன்னார் என்று போடுவர் மத்தியில் சத்தமில்லாது ஐ டி துறையில் நடக்கும் நல்ல விஷயங்கள் வெளியில் வராததில் ஆச்சரியம் இல்லை.. //

இதையே IT நிறுவனங்களும் செய்கின்றன. இல்லை என்று கூற முடியுமா

//சென்னையை சுற்றியுள்ள ஆதரவற்றோர், முதியோர் இல்லம் சென்று விசாரித்துப்பாருங்க:ள்.. யாரிடம் இருந்து உதவி, ஆதரவு அதிகம் வருகிறதென்று.. விஷயம் புரியும்..//

அப்படியா, 1990க்கு முன்னர் இந்த நிறுவனங்கள் எங்கிருந்து ஆதரவு பெற்றன

பிற தனியார் நிறுவனங்களிலிருந்து தானே

புருனோ Bruno said...

IT துறையில் உள்ளவர்கள்

1. பிறரைப்போல் சம்பாதிக்கிறார்கள்
2. பிறரைப்போல் உதவுகிறார்கள்
3. பிறரைப்போல் விமர்சிக்கப்படுகிறார்கள்

இதில் எல்லாம் எந்த வித்தியாசமும் இல்லை.

ஆனால் ஒரே ஒரு வித்தியாசம்

இவர்களுக்கு விமர்சனத்தை தாங்கும் பக்குவம் இல்லை.

புருனோ Bruno said...

என் வாதம்

மென்பொருள் துறையிம் பிற துறைகளைப்போலத்தான்.

இங்கும் பலர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார்கள்
பலர் கஷ்டப்பட்டும் சம்பாதிக்க முடியவில்லை
சிலர் கஷ்டப்படாமல் சம்பாதிக்கிறார்கள்

பலர் நேர்மையாக இருக்கிறார்கள்
சிலர் நேர்மையாக இல்லை

பலர் வரி கட்டுகிறார்கள்
சிலர் வரி கட்டுவதில்லை

இது அனைத்து துறைகளிலும் உள்ளது தான்

அப்படியிருக்க ”எங்களை விமர்சிக்க கூடாது” என்று வாதம் ஏன் என்று தான் கேள்வி ??

எந்த வக்கீலாவது, மருத்துவராவது, தொழிலதிபராவது “எங்களை விமர்சிக்க கூடாது” என்று கூறுகிறார்களா

நீங்கள் ஒரு தொழிலதிபர் வரி கட்ட வில்லை என்று எழுத உரிமையிருக்கும் போது ஒரு தொழிலதிபருக்கு உங்களை விமர்சிக்க (கஷ்டப்படாமல் அதிக ஊதியம், படித்த படிப்பை விட பன்மடங்கு ஊதியம்) உரிமை கிடையாதா.

புருனோ Bruno said...

தொடர்புடைய இடுகை : கற்றது தமிழும் சிலந்தியும் மண்குடம், ரமணா மட்டும் பொற்குடமா

Arun said...

//எந்த வக்கீலாவது, மருத்துவராவது, தொழிலதிபராவது “எங்களை விமர்சிக்க கூடாது” என்று கூறுகிறார்களா//

ஐயா, மறந்திட்டீங்கன்னு நெனைக்கிறேன். இப்போ தான் சில வருடங்கள் முன்பு, "வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்." என்ற திரைப்படத்தின் பெயரை எதிர்த்து அத்தனை மருத்துவர்கள் திரண்டெழுந்தனர்; பின்னர், நீதிமன்றம் வரை சென்று கடைசியில் செம்ம பல்பு வாங்கினர்.

Arun said...

இந்தப் பதிவின் தொடர்பாக ஒரு மூன்று-நான்கு தனித்தனி இழைகள் தென்படுகின்றன.

* ஐ.டி. துறையினரின் போக்கு
* ஐ.டி. துறையினரின் மீது மற்ற துறையினர் வைக்கும் விமர்சனம்
* மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் எடுக்கும் நிலைப்பாடு
* பார்ப்பனர்கள் தொடர்பான கருத்துக்கள்

ஒவ்வொன்றாகப் பார்ப்போமா.

வருண் said...

நிறைய க்ளாரிஃபிக்கேஷனுக்கு நன்றி திரு. புரூனோ அவர்களே!

விமர்சனத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ல முடியாததற்கு காரணம் நிறைய பேரிடம் உள்ள பக்குவமின்மை னு நினைக்கிறேன்!

Arun said...

ஐ.டி. துறையினர் பலர் இளவயதிலேயே பெரும் பணம் பார்ப்பதால், அவர்களுக்கு உலகின் உச்சியை அடைந்து விட்டது போன்ற ஒரு நினைப்பும், தேவையற்ற தன்னம்பிக்கையும் ('திமிர்' என்றும் சொல்வார்கள்) உருவாவதென்னவோ அவ்வளவு எளிதில் மறுக்க முடியாத உண்மையே. (பண்பட்டவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்; ஆனால், பிரச்சினையைப் பற்றிப் பேசும் போது, இவர்களைக் கணக்கில் கொண்டு, தவறிழைப்பவர்களை விமர்சிக்காமலோ கண்டுகொள்ளாமலோ விடமுடியாது.)

கார்ப்பொரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிடி என்பதெல்லாம் புகையிலை விக்கிற கம்பெனி பரிகாரம் செய்ய மரம் நடுற மாதிரி என்பது கொஞ்சம் சிந்தித்தால் புரிந்து விடும். ஒரு நிறுவனம் இது போன்ற "நல்ல" விஷயங்களில் ஈடுபட்டாலே, "எந்தத் திருட்டுத்தனத்தை மறைக்கிறதுக்கு இந்த வேலை?" என்ற சந்தேகம் தானே எழ வேண்டும் நியாயப்படி!

Arun said...

அதே நேரம், "அவன் செய்யிற அயோக்கியத்தனத்தையெல்லாம் நம்மால செய்ய முடியலையே" என்கிற பொறாமை காரணமாகவே ஐ.டி. துறையினரைக் கண்டாலே வெறுப்பவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். குறிப்பாக மீடியா துறையினர். இவர்கள் என்ன யோக்கியம்ன்னு எல்லாருக்கும் தெரியும். (எல்லா இடங்களைப் போலவும் இங்கும் நல்லோர் இருக்கத் தான் செய்கின்றனர்; ஆனால், ஐ.டி. துறையினரை வையும் போது மட்டும் எல்லாரும் ஒண்ணாக் கூடிக்கிறது, சமூகத்தின் மேலுள்ள அக்கறையால் மட்டுமே என்று சொன்னால், அது நம்புவதற்கு அவ்வளவு ஏற்புடையதாக இல்லையே.) ஆகையால், இவர்கள் சொல்வதைப் பிரதானமாக வைத்து மட்டுமே ஐ.டி. துறையினருக்குக் கண்டனம் தெரிவிக்க முடியாது. இப்படிக் குற்றம் சாட்டும் பலர் உண்மையில் ஐ.டி. துறையினர் வாழும் வாழ்க்கைக்காக ரகசியமாய் ஏங்குபவர்களே. "ச்சீச்சீ! இந்தப் பழம் புளிக்கும்" கதை தான்.

Arun said...

இதில், மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் ஒரு ஸ்பெஷல் கேஸ். தலைமுறை தலைமுறையாக, சமுதாயத்தில் உச்சபட்ச மரியாதைக்கும் பணவரத்திற்குமான இடத்தில் அமர்ந்திருந்தவர்கள் அவர்கள். குறிப்பாக, கல்யாணச் சந்தையில், டாக்டர் மாப்பிள்ளை என்றால் ஒரு காலத்தில் இருந்த மதிப்பே தனி தான். ஆனால், இப்போது நிலைமையே தலைகீழ்.

அதுவும், பள்ளியிறுதியில் உயர்ந்த மதிப்பெண் பெற்று, மாங்கு மாங்கென்று அடிப்படை இளங்கலைப் பட்டத்திற்கே ஐந்து வருடம் படித்துவிட்டு, அதற்கு மேல் முதுகலை பட்டத்திற்குப் படித்து, அப்படி இப்படி பணத்தப் பொறட்டி, க்ளினிக்கத் தொறந்தா . . . ப்ளஸ் டூ-வில இவன விட கொறச்ச மார்க்கு வாங்குன பயபுள்ள ஐ.டி. - ஆப் சைட்டு - அமெரிக்கா - அலர்ஜின்னு சொல்லிக்கிட்டு லேட்டஸ்ட்டு மாடல் கார்ல வந்து எறங்குனா . . . வாயில எகனை மொகனையா வரத்தானே செய்யும்!

புரியுது இவங்க எரிச்சல்; ஆனா, அதுக்கு என்னாங்க செய்ய முடியும்; காலச் சுழற்சியில இதெல்லாம் சகஜமப்பான்னு விட்டுட்டு போயிட்டே இருக்கணுமே தவிர, வேறொன்றும் செய்ய முடியாது.

எது எப்படியோ, குறிப்பாக மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஐ.டி. துறையினரைக் கண்டால் அறவே பிடிப்பதில்லை என்பது கண்கூடாகக் காணக்கிடைக்கிறது! நான் நிறைய இடங்களில் பார்த்துக் கொண்டும் வருகிறேன்; என் மருத்துவ நண்பர்கள் சிலர் மூலமாகவும் அறிகிறேன்.

அய்யா, மேன்மக்கள் மேன்மக்களாகவே இருந்துட்டுப் போங்களேன்; இந்த ஐ.டி. பசங்க புதுப் பணக்காரங்க மாதிரி; உலகமே நாங்க தான் என்கிறது மாதிரி குதிப்பாங்க தான்; ஆனால், எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தானே. ஆயிரந்தான் சொன்னாலும் உயிரைக் காப்பாத்துற தொழில் செய்யிறவங்க நீங்க தானே. நீங்க போயி சின்னப் பசங்களுக்குச் சமமா "யார் பெரியவன்"-ங்கிற சண்டை போடலாமா? சொல்லுங்க.

வருண் said...

****அய்யா, மேன்மக்கள் மேன்மக்களாகவே இருந்துட்டுப் போங்களேன்; இந்த ஐ.டி. பசங்க புதுப் பணக்காரங்க மாதிரி; உலகமே நாங்க தான் என்கிறது மாதிரி குதிப்பாங்க தான்; ஆனால், எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தானே. ஆயிரந்தான் சொன்னாலும் உயிரைக் காப்பாத்துற தொழில் செய்யிறவங்க நீங்க தானே. நீங்க போயி சின்னப் பசங்களுக்குச் சமமா "யார் பெரியவன்"-ங்கிற சண்டை போடலாமா? சொல்லுங்க.***


Mr. Arun!

As far as I can see Dr. Bruno did not start this issue. It is some of you who criticized doctors instead of defending yourself!

That also shows your immaturity! :(

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்...தங்கள் கருத்துக்களுக்கும் நன்றி ப்ருனோ ஐயா

Arun said...

கடைசியாக, பார்ப்பனர் பற்றிய இழை. இதைப் பற்றிப் பேசிப் பயனில்லை. ஐ.டி. துறையினரையும் அவர்களை விமர்சிப்பவர்களையும் கூடக் கைகுலுக்க வைத்துவிடலாம்.

"ஓஹோ! அட ஆமாம்; எங்கள் துறையில் இது போன்ற தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன; மேலும், வெளியிலிருந்து பார்க்கும் போது சில விஷயங்கள் எப்படித் தெரிகின்றன; எங்கள் சில செய்கைகளால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள் என்று இப்போது தான் உணர்கிறோம்" என்று ஐ.டி. துறையினரும் "அடடா! ஐ.டி. துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பதில் இது போன்ற இன்னல்கள், பிரச்சனைகள், சங்கடங்கள் உண்டா! நாங்கள் அறிந்திருக்கவில்லை. உங்கள் எல்லோரையுமே நாங்கள் தவறாக நினைத்திருந்தோம்" என்று ஐ.டி. துறையைச் சாராதவர்களும் கூட பேசி விட வாய்ப்புண்டு.

பார்ப்பனரையும் பார்ப்பன எதிர்ப்பாளர்களையும் மேசைக்கழைக்கவே முடியாது. அதுவும், தமிழ் ஓவியா போன்றோர், பார்ப்பன வெறுப்பு என்பதை மட்டுமே ஒரே தனிப்பெரும் குறிக்கோளாக வைத்துக்கொண்டு இணையத்தில் பிழைப்போட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவரது பதிவுகளைப் பார்த்தால் யாருக்கும் புரிந்து போகும். இது போன்றவர்களிடம் யார் என்ன பேசிவிட முடியும்? ஆனால் ஒன்று, அவரின் பின்னூட்டங்கள் பதிவின் தலைப்பை மேலும் நியாயப்படுத்தவே செய்கின்றன என்பது மட்டும் உண்மை.

போச்சுடா! நானும் இந்நேரம் தமிழ் ஓவியா போன்றோரின் அகராதியில் "பார்ப்பன அடிவருடி" ஆகிவிட்டிருப்பேன்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Arun

Arun said...

/As far as I can see Dr. Bruno did not start this issue. It is some of you who criticized doctors instead of defending yourself!

That also shows your immaturity!//

Hi Varun, you got me wrong.

//some of you//
//your immaturity//

Do you know whether or not I belong to the IT industry? :) Dude, you cannot hold me responsible for your assumptions.

Now, let me clarify.

It was not about Dr.Bruno at all. In fact, I fully endorse his views about IT people's lack of maturity/strength at taking criticism. (Just read the blog to which he has linked from here.) More, I would even go one step further to say that it is not just lack of strength; it is a matter of double standards on the part of IT people, which I too condemn unequivocally.

But, the fact still remains that the people from the medical fraternity, in particular, find it difficult to digest the fact that people over whom they have proved their intelligence way back in school are doing much much better than them everywhere, including but not limited to the marriage market.

And, I did not make up that argument in response to Dr.Bruno's post. This has been my observation at least for the past five years. The timing of our comments incidentally gave you a picture as if I'm attacking him. Let me make it clear once and for all: I have tried to give an all-round view. May be reading them in full might give you a better perspective.

வருண் said...

Well, well, well,

***வீ. எம் said...

அவ்வாறே டாக்டர்கள், தொழிலதிபர்கள் , வனிகர்கள் செய்கிறார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?***

Here is where the doctors are brought up and there were some informations given are NOT CORRECT.

Then Dr. Bruno comes up with some criticisms becos doctors were broguht up.

Then Arun, you started all these!

Thatis the reason for my post! Well, if you really want to talk about doctors, start a thread!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருண்..அருண்..வீஎம்.,
உங்கள் பின்னூட்டங்கள் காரசாரமாக..பதிவிலிருந்து விலகியிருந்தாலும்..சுவை குன்றாமல் இருந்தது.,நான் சில விஷயங்களை தெளிவாக்க ஆசைப்படுகிறேன்.முதலில்..வேறு தொழில் செய்பவர்களை இழுத்ததே தவறு. சாதாரண எம்.பி.பி.எஸ்., படித்தால் மட்டும் ..மருத்துவர்கள் போதாது..முதுகலை படிக்க வேண்டும்..ஏதாவது ஒரு துறையில் specialise பண்ணியிருந்தால்
அவருக்கும் லட்சக்கணக்கில் பணம் ஈட்ட வாய்ப்புண்டு..அதற்குள் அவர் 35 வயது தாண்டியிருப்பார்..

வக்கீல்களும் அப்படித்தான்..சரியான திறமை இருந்தாலும் யாரிடமாவது ஜூனியர் ஆக பல ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இவ்வளவு இருந்தும்..இவர்கள் மாத சம்பளத்தில்..எங்காவது வேலையில் இருந்தால்..இன்கம்டாக்ஸ் கட்டத்தான் வேண்டும்...மற்றபடி சொந்தமாக practice செய்தால்..வருமானவரி சிறிது ஏய்க்கலாம்..இது அரசியல்வாதியிலிருந்து...எல்லாத்துறையிலும் உள்ளது.,அதுவும் இன்று மருத்துவம் படிப்பவர்கள்..சற்று அதிபுத்திசாலிகளாகத்தான் இருக்க வேண்டிய கட்டாயம்..அதனால் மருத்துவத்துறையினரை....இதில் இழுத்திருக்கவே வேண்டாம்.

இனி..ஐ.டி.க்கு வருவோம்..எல்லோரும்..பிரமாதமாக சம்பாதிக்க வில்லை..சிலர் நிறைய சம்பாதிக்கிறார்கள்..இல்லை ..என்று சொல்ல முடியாது..அதனால்...அவர்களைப்பற்றி என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?

யாராலும்...சமுதாய சீர்குலைவை ஏற்படுத்தி விட முடியாது..ஒரு சிலர்..இப்படி..அப்படி இருக்கலாம்..அதனால் ஒட்டு மொத்தமாக குறை சொல்வது தவறு.மற்றபடி..என் பதிவில் சொல்லி இருந்தபடி...மீடியாக்கள் ..இவர்களைப் பற்றி மிகைப்படுத்தியே எழுதுகின்றன.

டாக்டர்..பிருனோ ஐயாவுக்கு என் நன்றி

Arun said...

Varun,

You are connecting things unnecessarily and inappropriately.

If வீ. எம் said something about doctors, industrialists, and businessmen and Dr.Bruno replied to him, the matter ends there, whether the information given by வீ. எம் was correct or not. I was nowhere in the picture at that point.

//Then Arun, you started all these!//

What do you mean, I "started all these"?

They are all clearly organised subsections in my main comment. If you see, in my second comment, I would've said that there are 3-4 strands, and that we could consider them one by one; so, the rest of my comments were just an elaboration of these points. Was that so difficult to understand?

Do you realise that my first direct response to Dr.Bruno was my denial of his view that doctors have never protested criticism against them?

He said: எந்த வக்கீலாவது, மருத்துவராவது, தொழிலதிபராவது “எங்களை விமர்சிக்க கூடாது” என்று கூறுகிறார்களா, which is obviously baseless, as illustrated by the example that I cited about doctors protesting against the title for Vasoolraja MBBS. There could be many other examples, too.

Do you realise that this way, I'm trying to imply that even doctors do protest sometimes, but does that make them "immature"? If doctors protesting against criticism does not make the doctors immature, then IT people protesting against criticism must also be considered similarly.

Did you even read through my comments in order? I think you just read the first comment and came to a conclusion that I belong to IT, that I am here for attacking Dr.Bruno, etc. Did you at least read my last comment in which I have clearly explained that that is not so?

//Well, if you really want to talk about doctors, start a thread!//

See, you don't realise a few things. First of all, you're not the owner of this blog, so by what authority are you asking me to start a thread?

To my knowledge, I haven't said anything disrespectful or objectionable about doctors, nor about anyone. Read my comments once again if that would help you see things in the right perspective.

In fact, do you even understand that I'm only placing doctors in high esteem when I say things like, "பள்ளியிறுதியில் உயர்ந்த மதிப்பெண் பெற்று" or "மேன்மக்கள்" or "ஆயிரந்தான் சொன்னாலும் உயிரைக் காப்பாத்துற தொழில் செய்யிறவங்க நீங்க தானே", etc.

Dude, I certainly believe, Dr.Bruno would take my views in the right spirit. You are the one who is reading between lines and connecting things inappropriately.

வருண் said...

Arun!

I know you would come up with this thing saying, "you dont own this thread" to say that!

You are right, I did not know that I should own this thread to say that! LOL!

I am winding up my worthless contribution here.

Have fun Arun! :) :)

Arun said...

//அதனால் மருத்துவத்துறையினரை....இதில் இழுத்திருக்கவே வேண்டாம்.//

I agree.

But, Dr.Bruno's this comment necessitated it:
'அப்படியிருக்க ”எங்களை விமர்சிக்க கூடாது” என்று வாதம் ஏன் என்று தான் கேள்வி ??'

If doctors have the right to stand in protest to say "எங்களை விமர்சிக்க கூடாது", as they did just a few years ago, (in the Vasoolraja MBBS movie title example that I cited), then what right do they have to say that IT people cannot take the same standpoint in their own defence?

Also, when Dr.Bruno went on to claim:
எந்த வக்கீலாவது, மருத்துவராவது, தொழிலதிபராவது “எங்களை விமர்சிக்க கூடாது” என்று கூறுகிறார்களா
then, I just had to point out to him that, "எந்த . . . மருத்துவராவது" எல்லாம் இல்லை, பல மருத்துவர்கள் ஒன்று கூடி "எங்களை விமர்சிக்கக் கூடாது" என்ற இதே நிலைப்பாட்டைத் தான் எடுத்திருந்தனர், just a few years ago.

In addition, his comment also confirmed my own five-year observation about doctors vs. IT people.

Arun said...

//I know you would come up with this thing saying, "you dont own this thread" to say that!//

So, even after knowing that, you posted it?

//You are right, I did not know that I should own this thread to say that! LOL!//

Well, now you know. (And it's another matter that seasoned bloggers don't do that even in the context of their own blogs, except in case of stray comments with objectionable/irrelevant content. These are people who know how to live and get along with others who might have different viewpoints.)

The problem is that you didn't show any inclination to discuss or debate any of those points I had raised. In a healthy discussion, there can always be differences of opinion, and good feeling can continue to exist even with all the differences; but what did you do? You didn't even have valid points to counter my arguments, and so you just said the Net equivalent of saying, get out from here. Do you even realise, at least now, that that is not Net etiquette; that it is a cheap way to end a discussion?

I had explained SO MANY things in my reply to you. Without even acknowledging any of the points I had clarified, you give me your discourteous "start a thread"! Now, who's being immature?

//I am winding up my worthless contribution here.//

See, I'm not calling it a "worthless contribution". You're doing it yourself. In fact, I patiently explained the whole thing to you, but if you choose to concentrate only on my "you're not the owner of this blog", well, I can only say, "Isn't that true?"

You must've thought BEFORE giving me your unasked-for advice to "start a thread".

வருண் said...

***You must've thought BEFORE giving me your unasked-for advice to "start a thread".***

Really?!

You never make any mistakes in your life, Mr. Perfect?!

I make lots of mistakes, this is one of them!

Dont think everybody is as perfect as you are. They are NOT!

வருண் said...

***See, I'm not calling it a "worthless contribution". You're doing it yourself.***

I know, it is ME who is calling it. I hope you let me to call myself whatever I wish! Thank you! :) :) :)

வருண் said...

***Do you know whether or not I belong to the IT industry? :) Dude, you cannot hold me responsible for your assumptions.***

You dont know my background either. Right. May be I am another "shivaji"!

Arun!

Dont take anything so personally. I am just having fun arguing with you as you dont let it go. That is all.

BTW, I never ever believe I can convince anybody in any debate!

So, take it easy and let TVR have some peace in his blog :) :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருண்..அருண்...உங்கள் இருவரையும் பேசவிட்டு நான் நடுவராய் இருந்தால் எப்படி இருக்கும்..என மனதில் ஓட விட்டேன்..ஒரு ஆரோக்யமான போட்டியாகவே இருந்திருக்கும்.,
வருகைக்கும்..கருத்துகளுக்கும் நன்றி.

தமிழ் ஓவியா said...

//பார்ப்பனரையும் பார்ப்பன எதிர்ப்பாளர்களையும் மேசைக்கழைக்கவே முடியாது. அதுவும், தமிழ் ஓவியா போன்றோர், பார்ப்பன வெறுப்பு என்பதை மட்டுமே ஒரே தனிப்பெரும் குறிக்கோளாக வைத்துக்கொண்டு இணையத்தில் பிழைப்போட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவரது பதிவுகளைப் பார்த்தால் யாருக்கும் புரிந்து போகும். இது போன்றவர்களிடம் யார் என்ன பேசிவிட முடியும்? ஆனால் ஒன்று, அவரின் பின்னூட்டங்கள் பதிவின் தலைப்பை மேலும் நியாயப்படுத்தவே செய்கின்றன என்பது மட்டும் உண்மை.

போச்சுடா! நானும் இந்நேரம் தமிழ் ஓவியா போன்றோரின் அகராதியில் "பார்ப்பன அடிவருடி" ஆகிவிட்டிருப்பேன்!//

எங்களுக்கு தனிப்பட்டமுரையில் எந்தப் பார்ப்பனரும் எதிரிகள் அல்ல. இன்னும் கேட்டால் எங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் பார்பனர்கள் நிறைய இருக்கிறார்கள்.

பார்ப்பனகள் இன்றும் பார்ப்பனரல்லாதவர்களை இழிவாகத்தான் நடத்திவருகிறார்கள். அதற்கு எத்தனையோ சான்றுகளைக் காட்ட முடியும்.

பார்ப்பனர்களிடம் எதிர்ப்பாக இருப்பது ஏன்?
பெரியாரிடம் விளக்கம் கேட்போம்.

இதோ பெரியார் உங்களைதெளிவடைவதற்காகபேசுகிறார்:

"
பார்ப்பனத் தோழர்களே! நான் மனிதத் தன்மையில் பார்ப்பனர்களுக்கு எதிரி அல்லன். தமிழ்நாட்டிலேயே அநேக பார்ப்பனப் பிரமுகர்கள் - பெரியோர்கள் ஆகியோர்களுக்கு அன்பனாகவும், மதிப்புக்குரியவனாகவும் நண்பனாகவும் கூட இருந்து வருகிறேன். சிலர் என்னிடத்தில் அதிக நம்பிக்கையும் வைத்திருக்கிறார்கள். சமுதாயத் துறையில் பார்ப்பனர்கள் அனுஷ்டிக்கிற உயர்வு, அவர்கள் அனுபவிக்கிற அளவுக்கு மேற்பட்ட விகிதம் - ஆகியவைகளில்தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. இது பார்ப்பனர்களிடம் மாத்திரமல்ல, இந்த நிலையில் உள்ள எல்லோரி டத்திலுமே நான் வெறுப்புக் கொள்கிறேன். இந்நிலை என்னிடத்தில் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம், ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக்கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது.

மற்றும், அந்தத் தாய் தனது மக்களில் உடல் நிலையில் இளைத்துப் போய், வலிவுக்குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போஷணையை விட எப்படி அதிகமான போஷணையைக் கொடுத்து மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள குழந் தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத் தான் நான் மற்ற வலுக்குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். இந்த அளவு தான் நான் பார்ப்பனர்களிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்.

உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது.

நான் காங்கிரஸில் இருந்த காலத்தில் - அதாவது எனது நல்ல நடுத்தர வயதான 40-வது வயது காலத்தில் - நான் ஒரு சுயநலமும் எதிர்பாராமல், எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லாமல் (உயர்ந்த அந்தஸ்தில்) இருக்கும் போதே, பார்ப்பன சமுதாயத்தில் இரண்டறக் கலந்து, எவ்வளவு தொண்டு செய்திருக்கிறேன் என்பது எல்லாப் பார்ப்பனர்களுக்கும் தெரியும். நான் காங்கிரஸிலிருந்து பிரிந்ததே, பார்ப்பன வெறுப்புணர்ச்சி ஏற்பட்டுத்தான் பிரிந்தேனேயொழிய, மற்றபடி எந்தவிதமான சுயநலம் காரணமாகவும் பிரியவில்லை. பிரிந்த பிறகு பார்ப்பன வெறுப்புணர்ச்சியோடு தொண்டாற்றுகிறேன் என்றால், அத்தொண்டில் எனக்குச் சுயநலம் என்ன இருக்கிறது? அல்லது எனது தொண்டில் நான் வெளிப்படையாகச் சொல்லுகின்ற கருத்தல்லாமல் வேறு உட்கருத்து என்ன இருக்கிறது?

என்னைப் போலவே என் கருத்துகளுக்கெதிரான கொள்கைகளின் மீது உண்மையாகப் பாடுபடுகிற இராஜாஜி அவர்களுக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும். எப்படியோ நாங்கள் இரு பிளவாகப் பிளந்து ஒன்றுக் கொன்று ஒட்டமுடியாத அளவு விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

எனக்கு, "நான் தோல்வியடைய மாட்டேன்; நிதானமாகவாவது வெற்றியடைவேன்" என்கிற நம் பிக்கை உண்டு. இராஜாஜியோ, எப்படியோ யோசனையின்றி ஆத்திரப்பட்டுத் தவறான வழியில் இறங்கிவிட்டார். உண்மையிலேயே வருணாசிரம சாதி முறையைப் புதுப்பித்து நிலைநிறுத்துவது சாத்தியமாகுமா? காந்தி இப்படிச் சொல்லித் தப்பித்துக் கொண்டார் என்றால், அது இன்றைக்கு 35 ஆண்டுகளுக்கு முந்திய காலம். இந்தக் காரணத்தினால் தான், அவர் கொல்லப்பட்டதற்குத் தமிழர்கள் அவ்வளவாக வருந்தவில்லை. இன்றைய இராஜாஜியின் கருத்தை, என்னை அவர் காங்கிரஸில் இழுத்த காலத்தில் சொல்லியிருப்பாரேயானால், அவருக்கு ஏற்பட்ட பெருமையும், பதவி வாய்ப்பும், செல்வ வளர்ச்சியும் ஏற்பட்டு இருக்க முடியுமா? ஆகவே அவருடைய இன்றைய நிலைமை மக்களை ஏய்த்து வளர்த்தவர் என்றுதானே பொருள்? நான் அப்படியொன்றும் ஏய்க்கவில்லையே; உளறவும் இல்லையே?

நான் - எனக்கு ஞாபகமிருக்கிற வரையில் - என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன்; சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கையில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில் கூட, மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத் தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்பு கொடுத்தவனும் அல்லன். பணம், காசு, பண்டம் முதலியவைகளில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தையாவது காட்டியிருப்பேனேயொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசி இருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனதறிந்த மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்கமாட்டேன்.

இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும், சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசையுடையவன். இதற்கு முட்டுக் கட்டையாகப் பார்ப்பன சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்.

தாங்கள் அப்படி இல்லையென்பதைப் பார்ப்பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மையிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு இருந்திருக்குமானால் நம் நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டு வர என்னால் முடிந்திருக்கும்.

நம் நாடு இன்று அடைந்திருக்கிற இந்தப் போலி சுதந்திரம் என்பது ஒன்றைத் தவிர - மற்ற எல்லா வளர்ச்சிக்கும் பார்ப்பன சமுதாயம் எதிரியாக இருந்திருக்கிறது. இதுமாத்திரம் அல்லாமல், நாட்டில் சமயம், தர்மம், நீதி, அரசியல் என்னும் பேரால் இருந்து வளர்ந்து வரும் எல்லாக் கேடுகளுக்கும் பார்ப்பன சமுதாயம் ஆதரவளித்தே வந்தி ருக்கிறது, வருகிறது. அவர்களின் எதிர்ப்பையும் சமாளித்துத்தான் இந்த நாடும் இந்தச் சமுதாயமும் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. இனி வளர்ச்சியை மெதுவாக்கலாமே தவிர, யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைமையைக் காண்கிறேன்."

இன்றும் கூட அனைத்துசாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்களா? தமிழர்களா?

கோயிலில் தமிழில் தேவாரம் திருவாசகம் பாடக்கூடாது என்று பெரியவரை அடித்து உதைத்துக் கொண்டிருப்பவர்கள் பார்ப்பனர்களா? தமிழர்களா?

இதுபோல் அடுக்கிக் கொண்டே போகலாம் சான்றுகளை.

இதுஎல்லாம் பழையகதையல்ல்.
இப்போது நம் கண்முன்னே நடைபெறும் நிகழ்சிகள்.

ஜாதியை ஒழிக்கும் நோக்கில் செயல்படும் எங்களைப் பார்த்து ஜாதிசண்டை போடுகிறோம் என்று கூசாமல் சொல்லுவ்து எந்த வகையில் நியாயமானது.

பார்ப்பானின் முதுகில் தொங்கும் பூணுலுக்கு என்ன அர்த்தம் ? நான் உங்களைவிட உயர்ந்த ஜாதியான் என்பதை சொல்லாமல் சொல்லும் ( தமிழன்கழுத்தை அறுக்கும் சுருக்கு)கயிறு என்பதை மறந்து விட வேண்டாம்.

நீங்கள் உண்மையை உணரவேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு பாடுபடுகிறோம்.

தனிப்பட்ட முறையில் எங்களுக்கு இதில் எந்த ஆதாயமும் இல்லை.

பார்ப்பான் பால் படியாதீர்.

நன்றி.

தமிழ் ஓவியா said...

நீங்கள் மேலும் தெளிவடைய பெரியாரின் கர்த்தைத் தருகிரேன். படியுங்கள். தெளியுங்கள்.

"
பார்ப்பனர்களுக்கே நன்றாய்த் தெரியும். என்னவென்றால், வருணாசிரமத்தையும், பார்ப்பனீயத்தையும் பத்திரப்படுத்திவிட்டு எப்படிப்பட்ட பொதுவுடைமையை ஏற்படுத்தி விட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பானிடம் தானாகவே வந்து விடும் என்றும், சாதி இருக்கிறவரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும், பார்ப்பனர்களுக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு முன்போலவே நடைபெறும் என்றும் தைரியம் கொள்ளத் தெரியும்.

பொதுவுடைமை வேறு; பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு என்பதாகும்; பொது உரிமை என்பது சம அனுபவம் என்பதாகும். ‏இந்நாட்டில், பார்ப்பனீயத்தால் சாதியால் கீழ்ப்படுத்தப்பட்ட மக்களுக்கு சம உடைமை இருந்தாலும் சம உரிமை (அனுபவம்) இல்லை என்பது குருடனுக்கும் தெரிந்த சங்கதியாகும். அதனாலேயே அவர்கள் உடைமை கரைந்துகொண்டே போகிறதுடன் உடைமைக்கு ஏற்ற அனுபவமும் இல்லாமல் இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தனி உரிமையை முதலில் ஒழித்துவிட்டோமானால், தனிஉடைமையை மாற்ற அதிகப்பாடுபடாமலே இந்த நாட்டில் பொதுவுடைமை ஏற்பட வசதி உண்டாகும். உண்மையான பொதுவுடைமையும் நிலைத்து நிற்கும்.

குறிப்பமாகச் சொல்ல வேண்டுமானால், சாதி காரணமாகத்தான் பலர் மேன்மக்களாய் பணக்காரர்களாய் இருக்கிறார்கள்; இருக்கவும் முடிகிறது. சாதி காரணமாகத்தான் எல்லோரும் கீழ் மக்களாய், ஏழைகளாக இருக்கிறார்கள்; இருக்கவும் வேண்டியிருக்கிறது. இது, இன்றையப் பிரத்தியட்சக் காட்சியாகும்.

ஆங்கிலத்தில் "கேஸ்ட்', "கிளாஸ்' என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன. அதாவது, தமிழில் சாதி வகுப்பு என்று சொல்லப்படுவனவாகும். சாதி பிறப்பினால் உள்ளது; வகுப்பு தொழில் தன்மையினால் ஏற்படுவது. தொழிலும், தன்மையும் யாருக்கும் ஏற்படலாம். சாதி நிலை, அந்தந்தச் சாதியில் பிறந்தவனுக்குத்தான் உண்டு; பிறக்காதவனுக்குக் கிடையவே கிடையாது. மேல் நாட்டில் சாதி இல்லாததால், அங்கு பொதுவுடைமைக்கு முதலில் வகுப்புச் சண்டை துவக்க வேண்டியதாயிற்று. இங்கு சாதி இருப்பதால், பொதுவுடைமைக்கு முதலில் சாதிச் சண்டை துவக்க வேண்டியதாகும்.

பார்ப்பானும், பார்ப்பனீய உணர்ச்சியும் உள்ள மக்கள் பொதுவுடைமை வேஷம் போடுவதால் சாதிச் சங்கதியை மூடிவிட்டு, காத காரியமான ஆனாலும் தங்களுக்குக் கேடில்லாததான வகுப்பு உணர்ச்சியைப் பற்றிப் பேசி சாதியை ஒழிக்கப்பாடுபடும் கட்சிகளோடு ஏழைகளை மோதவிடுகிறார்கள்; சாதியை ஒழிக்கச் செய்யப்படும் முயற்சியையும் அழிக்கப் பார்க்கிறார்கள்.

பார்ப்பனர்களுக்கும் மற்றும் மேல்சாதிக்காரர்களுக்கும் இருக்கும் உயர்வை முதலில் ஒழித்தாக வேண்டும். இதிலேயே அரைப்பாகம் பொதுவுடைமை ஏற்பட்டுவிடும். அதாவது, சாதியினால் அனுபவிக்கும் ஏழ்மைத்தன்மையும், சாதியினால் சுரண்டப்படுபவர்களாக இருக்கும் கொடுமையும் நம் பெரும்பான்மை மக்களிடமிருந்து மறைந்துவிடும்.

பொது உரிமை இல்லாத நாட்டில் ஏற்படும் பொதுவுடைமை, மறுபடியும் அதிக உரிமை இருக்கிறவனிடம்தான் போய்ச் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பது, பொதுவுடைமைத் தத்துவத்திற்குப் பாலபாடம் என்பதை மக்கள் உணர வேண்டும்."

மேலும் உங்களின் சிந்தனைக்காக பெரியார் தரும் தகவல்:

"வகுப்புரிமையா? வகுப்புத் துவேஷமா?

வகுப்புவாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும், சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூக வாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது. நமது ‘குடி அரசு’ தோன்றியபின் இதன் இரகசியங்கள் வெளியாகி, இவைகள் எல்லாம் மறைந்து, இப்போது வகுப்புவாதிகளை ஒழிப்பது என்பது தவிர, வேறு எவ்விதக் கொள்கையும் திட்டமும் இல்லாமல் போய்விட்டது. வகுப்புவாதிகள் யார், அல்லாதவர்கள் யார் என்று பார்த்தாலோ அது இவைகளை எல்லாம்விட மிக யோக்கியமானதாக இருக்கும். அதாவது, வகுப்பு வித்தியாசம், சாதி உயர்வு - தாழ்வு, ஒரு வகுப்புக்கு ஒரு நீதி ஆகியவைகள் அடியோடு கூடாது என்றும், எல்லா வகுப்புக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இருக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவர்கள் தாம் இக்கூட்டத்தாருக்கு வகுப்புவாதிகளாகத் தென்படுகின்றார்கள்.

உயர்ந்த வகுப்பு என்பதாக ஒன்று உயர்ந்திருக்க வேண்டும். தாழ்ந்த வகுப்பு என்பதாக ஒன்று தாழ்ந்திருக்கவேண்டும்; பார்ப்பனர்கள் உயர்ந்த வகுப்பு மற்றவர்கள் அவர்களைவிடத் தாழ்ந்த வகுப்பு; சூத்திரர், பஞ்சமர் என்கின்ற வித்தியாசம் இருக்க வேண்டும். இந்த வித்தியாசங்களை ஒழிக்க யாரும் முயற்சிக்கக் கூடாது; எவ்வித சட்டமும் செய்யக்கூடாது - என்பவர்கள் இவர்களுக்கு வகுப்புவாதிகள் அல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால், அவர்கள் கொள்கைப்படி பார்ப்பனர்களும் அவர்களை நத்திப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களும் அவர்களது கூலிகளும் தவிர மற்றவர்கள் எல்லோரும், அதாவது பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் வகுப்புவாதிகள் ஆவார்கள்.

எப்படியென்றால், நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். அதாவது, சர்க்காரையும், தேசத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். சமூகவாதிகளை முதலில் அழிக்க வேண்டும் என்பதேயாகும். இந்தத் தேசம் பாழாய்ப் போவதற்கும், இந்த சர்க்கார் இங்கு இவ்வளவு அநீதியான ஆட்சி புரிவதற்கும், சமத்துவக் கொள்கை பரவாதிருப்பதற்கும் எந்த சமூகத்தார் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து எதிரிகளாய் இருக்கின்றார்களோ அந்தச் சமூகத்தார் முதலில் அழிக்கப்பட வேண்டுமென்பதேயாகும்."

- ‘குடிஅரசு’, தலையங்கம்,
19-5-1929

நாங்கள் உண்மையை சொல்லுகிறோம்,ஆனால்
நீங்கள் பார்ப்பனன் மேல் பரிதாபப் படுகிறீகள். அந்த பரிதாபத்தை நூற்றில் ஒரு பங்கு ஊரெல்லம் அடிவாங்கும் என் தமிழனிடத்தில் காண்பிக்க வேண்டுகிறேன்.

Arun said...

நன்றி, தமிழ் ஓவியா. முழுவதும் படித்தேன்.

ஓரிடத்தில், " ... என்று சரியாகவோ, தப்பாகவோ கருதுகிறேன்" என்று கூறுகிறார். ஆக, ஒருவேளை தான் கருதுவது தப்பாக இருக்குமோ என்று அவர் கூட அதற்கு ஒரு விலக்களிக்கிறார்; அந்தப் பெருந்தன்மை அவருக்கிருந்திருக்கிறது. உங்களைப் போன்றோர் தான், நீங்கள் கண்டதே காட்சியென்று விடாப்பிடியாக வன்மத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒன்று புரிகிறது. எப்படி கம்யூனிசம் என்பது மனிதநேயத்தில் ஊறி உருவானதோர் அற்புத சித்தாந்தமாக இருந்தாலும், நடைமுறைப்படுத்தும் மனிதர்களால் அது திசை திருப்பி விடப்பட வாய்ப்புள்ளதோ (முந்தைய சோவியத் ரஷ்யாவில் நடந்ததைப் போல), அது போலவே பெரியார் சொன்ன பல விஷயங்கள் அடிப்படையில் சமுதாய மேன்மையை முன்னிட்டு சொல்லப்பட்டிருந்தாலும், இன்றைய நிலையில் அதில் பெரும்பான்மையானவை தவறான பிரச்சாரத்தாலும் தனிமனித துவேஷத்தாலும் சீரழிந்து கொண்டு தான் இருக்கின்றன.

நீங்களே பாருங்களேன்.
பெரியார் என்ன சொன்னார்:
"உண்மையிலேயே பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்றும், இந்நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றும், தாயின் செல்வத்துக்கும், வளப்பத்துக்கும் தாங்கள் எல்லோரும் சரிபங்கு விகிதத்துக்கு உரிமை உடையவர்கள் என்றும் கருதுவார்களேயானால், இந்நாட்டிலே சமுதாயப் போராட்டமும், சமுதாய வெறுப்பும் ஏற்பட வாய்ப்பே இருக்காது."

சொன்னாரா?

ஆனால், பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்று நினைக்கிறார்களா இல்லையா என்பதைக் கருத்திலேயே கொள்ளாமல், அதைப் பற்றிய வாதத்திற்கு கூட வாய்ப்பே கொடுக்காமல், முன்முடிவுடன், "பார்ப்பனனா, தமிழனா" என்று, ஏதோ பார்ப்பனன் என்றாலே அவன் தமிழனாகவே இருக்க முடியாதென்பது போன்றதொரு முரண்வாதத்தை முன்வைத்தே எந்தப் பேச்சையும் துவங்குகிறீர்களே , அது ஏன்?

இது தான் வீண் குசும்புங்கிறது.

நீங்கள் இது போன்ற விஷயாங்களை ஏதோ ஒரு தவறான புரிதலினால் செய்து வந்திருக்கிறீர்கள் என்றால், இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை. மாற்றிக்கொண்டால் போயிற்று.

பார்ப்பனர்கள் மாற்றிக்கொண்டார்களா என்று கேட்காதீர்கள். நீங்கள் தானே சமுதாயத்துக்காகவே பாடுபடுவதாகச் சொல்லிக்கொள்கிறீர்கள்; அப்படியென்றால் உங்களிடம் தான் எல்லோரையும் (பார்ப்பனர்களையும் தான்) அரவணைத்துச் செல்லும் பக்குவமும், பெருந்தன்மையும் எதிர்பார்க்கப்படும்.

ஒரு வாதத்திற்கு, பெரியார் சொன்ன எடுத்துக்காட்டையே பார்ப்போம். ஒரு தாயின் பல குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் முரடாக இருந்தால், அந்தத் தாய் அந்தக் குழந்தையையும் தானே அரவணைத்து நல்வழிப்படுத்துகிறாள். அப்படி ஒரு தாய் சமயத்தில் கண்டிக்கலாமே தவிர வெறுப்பதில்லையே!

நீங்கள் ஏன் பார்ப்பனர்பால் வெறுப்பைக் கக்குகிறீர்கள்?

நீங்கள் ஏன் சமுதாயத்தில் மற்றவர்களையும் பார்ப்பனர்களை வெறுக்க வைக்க இவ்வளவு மன்றாடுகிறீர்கள்? எந்தத் தாயாவது, தன் பிற குழந்தைகளை ஒரே ஒரு குழந்தையை மட்டும் வெறுக்கத் தூண்டுவாளா?

தயவுசெய்து தாய்மையுணர்ச்சியை, மக்கள் நடுவில் வெறுப்புணர்ச்சியைத் தூண்டும் இது போன்ற கீழான நோக்கங்களுக்கு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

தமிழ் ஓவியா said...

//பார்ப்பனர்கள் தங்களை இந்நாட்டு மக்கள் என்று நினைக்கிறார்களா இல்லையா என்பதைக் கருத்திலேயே கொள்ளாமல், அதைப் பற்றிய வாதத்திற்கு கூட வாய்ப்பே கொடுக்காமல், முன்முடிவுடன், "பார்ப்பனனா, தமிழனா" என்று, ஏதோ பார்ப்பனன் என்றாலே அவன் தமிழனாகவே இருக்க முடியாதென்பது போன்றதொரு முரண்வாதத்தை முன்வைத்தே எந்தப் பேச்சையும் துவங்குகிறீர்களே , அது ஏன்?//

பார்ப்பான் தமிழன் இல்லை என்பதற் ந்கு ஆதாரம் காட்டுவதற்கு முன் தற்போது பார்ப்பனர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை இன்றைய விடுதலை தலையங்கம் சுட்டிக்காட்டுகிறது. அதை அப்படியே தருகிறேன்.
படியுங்கள், தெளிவடையுங்கள்.

"பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிப்போம்!

சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், எதியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ள மாட்டான் என்று சொன்ன டாக்டர் டி.எம். நாயர் வாயில் சர்க்கரையைத்தான் போடவேண்டும்.

ஒவ்வொரு நிமிடத்திலும் நாடு அந்த நிலையைப் பார்த்துக்கொண்டுதான், அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறது.

குறிப்பாக, ஈழத் தமிழர் பிரச்சினையில் பார்ப்பன மக்கள் நடந்துகொண்டு வரும் போக்கைக் கவனிக்கும் எவரும் பொறுமையை இழக்கத்தான் செய்வார்கள்.

தமிழர்களை சிங்களவர்கள் வெறுப்பதைவிட பல மடங்கு அதிகமாக இந்தப் பார்ப்பனர்கள் வெறுப்பதை அறிய முடிகிறது.

அதுவும் ஏடு நடத்தும் பார்ப்பனர்கள், எழுதுகோல் பிடிக்கும் பார்ப்பன எழுத்தாளர்கள் தமிழர்கள் மீதான தங்களின் பரம்பரை வன்மத்தை, இந்தச் சந்தர்ப்பத்தில் பல மடங்கு பெருக்கியே காட்டுகிறார்கள்.

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் பற்றி எரியும் ஈழமும் - பார்ப்பனப் பத்திரிகைகளும் என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவு (6.11.2008) பார்ப்பன ஏடுகள், ஊடகங்களின் தமிழர் விரோதப் போக்கினை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி, கடைசியாக தமிழர்களே, பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிக்கவேண்டாமா? என்ற வினாவை எழுப்பியபோது, புறக்கணிப்போம்! புறக்கணிப்போம்! என்று பார்வையாளர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று ஓங்கிக் குரல் கொடுத்தனர்.

தமிழர்களின் இந்த உணர்வைக்கூட அவர்கள் கொச்சைப்படுத்துவார்கள் - கேலி செய்வார்கள் என்பதை அறியாதவர்களா நாம்?

இந்தியா டுடே என்ற தமிழ் வார ஏட்டில் (5.11.2008) வாஸந்தி என்ற பார்ப்பன அம்மையார் ஏன் இந்த வார்த்தைப் போர்? என்ற தலைப்பில் நஞ்சைப் பிழிந்து கொடுத்துள்ளார்.

தமிழினத் தலைவர் என்ற பட்டப் பெயர், மனத்துக்குத் தெம்பைத் தருவது; முக்கியமாக அவரது பரம வைரியான அ.தி.மு.க. தலைவி, திடீரென்று ஈழத் தமிழரின் பிரச்சினைக்கு ஆதரவுக் கரம் நீட்டி கருணாநிதி வெறும் வேஷதாரி என்று சொன்னதும், அடிபட்ட வேங்கையாகப் பொங்க வைப்பது. எதிர்க்கட்சியி னரின் பொறுப்பற்ற விமர்சனத்துக்கெல்லாம் பதில் சொல்ல முதல்வர் ஏன் மெனக்கிடுகிறார் என்பது புரியவில்லை. இலங்கைப் பிரச்சினையில் ஆழம் தெரியாமல் காலை விட்டதில் தேசியத் தலைவராக உருவாகி வந்த பிம்பத்தில் கீறல் விழுந்ததை அவர் கவனிக்கவில்லை. முரசொலியில் வெளியிடப்படும் அறிக்கைகளும், மடல்களும் அவரது தன்னம்பிக்கை தளர்ந்து போனதைத் தெரிவிக்கின்றன. தன்னைவிட ஜெயலலிதா தமிழினப் பற்றுடையவர் இல்லை என்பதை பக்கம் பக்கமாக விளக்கும் பலவீனம் அவருக்கு ஏற்பட்டு இருப்பது விசித்திரம். புலிகளின் பகிரங்க அபிமானியான ம.தி.மு.க. தலைவர், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகங்களை வாபஸ் பெறவேண்டும் என்று சொன்னால், அதை யாரும் கவனத்தில் கொள்ளப்போவதில்லை. ஆனால், மத்திய அரசில் முக்கிய பங்கு உள்ள தி.மு.க. தலைவர் தாமே முடுக்கிவிட்டுக் கொண்ட உணர்ச்சி வேகத்தில் சிக்குண்டு, அண்டை நாட்டின் இறையாண்மையை கவனத்தில் கொள்ளாமல் பேசுவது சர்ச்சைக்குரியது.

பழுத்த அரசியல்வாதியான முதல்வருக்கும், சட்ட சாஸனத்தின் மேல் பதவிப் பிரமாணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கை என்பது வேறு நாடு என்பது அவர்களை நிர்ப்பந்திப்பதோ, எச்சரிக்கை விடுவதோ அந்த நாட்டின் இறையாண்மைக்கு விரோதமானது என்பதும் தெரியாதா? வங்கதேசப் போர் நடத்தி கிழக்குப் பாகிஸ்தானுக்கு விடுதலை பெற்றுத் தரவில்லையா என்று நமது தமிழ் உணர்வுள்ள கட்சித் தலைவர்கள் ஈழப்போருக்கு உதவச் சொல்கிறார்கள். நாம் பாகிஸ்தானுக்குச் சொந்தமாக இருந்த கிழக்குப் பகுதியில் நுழைந்து போரிட்டது மாபெரும் தவறு.

- இதுதான் பார்ப்பன அம்மையாரின் கடைந்தெடுத்த நச்சு எழுத்துகள்.

தமிழினத் தலைவர் என்ற பட்டப் பெயர் கலைஞருக்குத் தெம்பைத் தருகிறதாம்.

எடுத்த எடுப்பிலேயே இப்படிக் கேலி, லோகக் குரு என்ற பட்டப் பெயர் மட்டும் இவர்களுக்கெல்லாம் இனி இனி என்று இனிக்கும்.

ஆமாம்! அவர்கள் நம்பிக்கைப்படி ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் அவர்தான் தலைவர். வாடிகன் நகருக்குக்கூட சங்கராசாரிதான் குரு - இதனை நாம் நம்பவேண்டும் - அப்படி நம்பாவிட்டால், ஏற்காவிட்டால் அதற்காக அவர் தயாராகச் சூட்ட வைத்திருக்கும் பட்டம் இனத் துவேஷம்!

கடலைத் தாண்டிச் செல்லுவதே தோஷம் என்று எழுதி வைத்திருக்கிற அதே கூட்டம்தான் சங்கராச்சாரியாரை லோகக்குரு - உலகத்துக்கே குரு என்று சொல்லுகிறது - இப்படியெல்லாம் நாம் கேள்வி எழுப்பினால், அதற்கும் ஒரு பட்டத்தை நமக்குச் சூட்ட தயாராக வைத்திருக்கிறார்கள் - அதுதான் விதண்டாவாதம் என்னும் பட்டம்.

பயங்கரவாதம் என்பதில்கூட அவர்களுக்கு இரட்டை அளவுகோல் உண்டு. இராமன், சம்பூகன் என்ற சாதுவை வாளால் வெட்டிக் கொன்றால் அவர்கள் தயாராக வைத்திருக்கும் சொலவடை தர்மத்தைக் காப்பாற்ற அதர்மத்தைச் செய்வதும் ஒருவகை தர்மம்தான் என்பதுதான்.

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி - அவர்கள் கண்ணோட்டத்தில் மகாசமர்த்தன் - நிருவாகி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். ஒரே வாரத்தில் கலவரத்தை அடக்கிய திறமைசாலி - பிரதமர் பதவிக்கு மிகவும் தகுதியானவர் என்று நூல் பிடித்ததுபோல பார்ப்பனர்கள் எழுதுவார்கள்.

கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு, பிணையில் வெளிவந்த சங்கராச் சாரியாரை வரவேற்று தம் சொந்த காரில் அழைத்து வந்து காஞ்சி மடத்துக்குக் கொண்டு வந்து அமர்த்துவார் இந்து ஏட்டின் ஆசிரியர் என். ராம்.

தம் இன மக்களின் மான வாழ்வுக்காக ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியத்துக்கு ஆளானவர்களை இந்த யோக்கியதையில் உள்ளவர்கள்தான் பயங்கரவாதிகள் என்று நாமகரணம் சூட்டுகிறார்கள்.

இலங்கை இன்னொரு நாடாம். அதில் தலையிடக்கூடாதாம். இந்த நிலையை எடுப்பதற்கு - பாகிஸ்தானோடு இந்தியா போர் நடத்தி வங்க தேசத்தை உருவாக்கித் தந்தது தவறு என்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வக்காலத்துப் போட்டு எழுதுகிறார் பார்ப்பன அம்மையார் இந்தியா டுடே இதழில்!

இந்தச் சாமர்த்தியம் எல்லாம் யாருக்கு வரும் - அவாளைத் தவிர!

தமிழில் ஏடு நடத்தி, தமிழர்களிடத்திலே விற்றுப் பணம் பறித்து தமிழர்களையே கொச்சைப்படுத்தும் இந்தப் பார்ப்பன ஏடுகளைப் புறக்கணிக்க வேண்டாமா?

தமிழர்களே சிந்திப்பீர் - செயல்படுவீர்!"

-------------------நன்றி: "விடுதலை" தலையங்கம் 13-11-2008

தமிழ் ஓவியா said...

பார்ப்பானாவது - தமிழனாவது என்று பேசும் அதிமேதாவிகள் சிந்திப்பார்களா?



துக்ளக் (20.8.2008 பக்கம் 11) இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில் கீழ்க்கண்ட பதிலைத் தந்துள்ளார் திருவாளர் சோ ராமசாமி அய்யர்வாள்.

லட்சக்கணக்கான ஹிந்துக்கள், காஷ்மீரிலிருந்து வெளியேறி, அகதிகளாக டெல்லியிலும், நாட்டின் வேறு பகுதிகளிலும் வசிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. சொந்த நாட்டிலேயே ஒரு பகுதி மக்களுக்கு இப்படிப்பட்ட கதி நேர்ந்ததும், அவர்களை இந்நிலைக்கு ஆளாக்கிய சூழ் நிலைகளை மாற்றுகிற முயற்சி எதுவும் நடக்கவில்லை? என்று மிகவும் மனம் நொந்து போய் எழுதும் இந்த சோதான். இலங்கைத் தீவிலே, சொந்த நாட்டிலே மூன்று லட்சம் தமிழர்கள் அகதிகளாக அல்லாடிக் கொண்டு இருக்கிறார்களே - அதுபற்றி மூச்சு விடுவதில்லை - அந்நிலைக்கு ஆளாக்கிய ஆளும் ராஜபக்சேக்களுக்கு வெண் சாமரம் வீசுகிறார்.

காஷ்மீரிலிருந்து வெளியேறும் ஹிந்துக்கள் என்று பூடகமாகச் சொல்லுகிறார் அல்லவா - அவர்கள் யாரும் அல்லர் - பண்டிட்கள் என்று கூறப்படும் பார்ப்பனர்கள்தாம்.
சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆகும் நிலைக்கு ஆளாக்கிய சூழ்நிலைகளை மாற்றுகிறது ஏதும் நடக்க வில்லையே என்று கண்ணீர் விடுகிறார். பாதிப்புக்கு ஆளானவர்கள் பார்ப்பனர் என்றால் பாசம் பொத்துக் கொண்டு கிளம்புகிறது.

ஈழத் தமிழர்கள் உள்நாட்டிலேயே லட்சக்கணக்கில் அகதிகளாக ஆக்கப்பட்டு இருக்கின்றனர் என்றால் - அதற்குக் காரணமான - அந்நிலைக்கு ஆளாக்கியவர்கள் பற்றி எழுத அவருடைய எழுதுகோல் மறுக்கிறது. இதற்குக் காரணம் என்ன?

பார்ப்பானாவது - தமிழனாவது என்று பேசும் அதிமேதாவிகள் சிந்திப்பார்களா?

---------------- நன்றி: "விடுதலை" ஞாயிறுமலர் 1-11-2008

அடுத்து இன்னொரு செய்தியும் உங்கள் சிந்தனைக்கு


ரயில்வே ஸ்டேஷன்களில் பிராமணாள் - இதராள் சாப்பிடும் இடங்களின் நிலை என்ன? அறிந்து கொள்ளுங்கள்.
பார்ப்பான் தமிழன் என்று பிரிப்பது யார்? என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.


"தென் இந்திய ரயில்வே ஸ்டேஷன்களில் சாப்பாட்டு விடுதிகள்

இதைப்பற்றி 'குடிஅரசு' பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம். தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டியாரும் ரயில்வே அதிகாரிகளுக்கு இதைப்பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள். பிராமணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது. அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்றுபாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்துவிட்டு, நாலில் ஒரு பாகத்தை 'சூத்திரர்', 'பஞ்சமர்' , 'மகமதியர்' , 'கிறிஸ்தவர்' , 'ஆங்கிலோ இந்தியர்' என்கின்ற பிராமணரல்லாதவருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும்,கை கழுவுவதற்கும்,வாய் கொப்பளிப்பதற்கும் விளக்குமாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம் சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடத்தையே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர்களை வகுப்பு துவேஷத்தை கிளப்புகிறார்கள்; இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள்; எழுதுகிறார்கள், அத்தோடு மாத்திரமல்ல, அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும்கூட ஒத்துப் பாடுகிறார்கள். ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்கு பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? அவர்களின் எண்ணிக்கையென்ன? நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும், உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக்கொண்டு நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக்கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை, சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவைகளையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்? கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா? என்பதை " உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா" என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் " உத்தம தேசபக்தர்களை" வணக்கத்துடன் கேட்கிறோம்."

-------------------தந்தைபெரியார் - "குடிஅரசு" -6.6.26

பார்ப்பனர்கள் தமிழர்களா? என்பது பற்றி பேரறிஞர் அண்ணா கூறுகிறார் கேளுங்கள்.



"தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்டபோதிலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்கநூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்புக் கொள்வதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின்மீது தான்!

------------------------ அண்ணா - "திராவிட நாடு", 2.11.1947

பார்ப்பனர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்த்து வந்தார்கள் வருகிறார்கள் என்பது பற்றி பெரியார் தரும் தகவலும் உங்கள் பர்வைக்கு..

"முளையிலேயே வெறுப்பு

பார்ப்பனர் தங்கள் குழந்தைகளை சிறுபிராயம் முதற் கொண்டே நம்மை தாழ்ந்த ஜாதியார் என்று நினைக்கும்படி பழக்கி வருகிறார்கள். அதாவது, தங்கள் குழந்தைகளை "அடி!அடி!! அவள் மீது படாதடி; அவள் சூத்திரச்சிடி; அவள் மீது பட்டு விட்டையே! போய் பாவாடையை நனைத்து குளித்து விட்டுவா" என்று பெண் குழந்தைகளுக்கும், அடே சூத்திரன்கள் மேலெல்லாம் பட்டு அவன்களை தொட்டுட்டு வந்துட்டையே! போ! போ! போயி குளிச்சுட்டு வா என்றும், பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குப் போனவுடன் பாவாடையை அவிழ்த்து வை, துண்டை அவிழ்த்து வை என்றும் சொல்லி நம்மிடம் அதுகளுக்கு ஒரு இழிவைச் சொல்லி கற்பிக்கிறார்கள். அந்தக் குழந்தைகள் ஏதாவது ஏனம்மா பள்ளிக்கூடத்திற்கு போனதற்காக துண்டை அவிழ்த்து வைக்கச் சொல்லுகிறாய் என்று கேட்டால், "என்னடி அங்கு போய் சூத்திரக் குட்டிகளோடு நெருங்கி உட்கார்ந்து அவர்களை எல்லாம் தொட்டுவிட்டு இங்கு வந்து வீட்டிற்குள் புகலாமா?" என்கிறார்கள். இதிலிருந்து அந்தக் குழந்தைகளுக்கு முளையில் இருந்தே பிராமணரல்லாதாரிடம் அருவருப்பும், அவர்கள் தொடக் கூடாத ஜாதி என்கிற உணர்ச்சியும் ஏற்பட்டு விடுகிறது.

இந்தக் கொடுமைகளையெல்லாம் நமது பெரியவர்கள் அறிந்தேதான் பார்ப்பனன் என்பது அமங்கலவஸ்த்து வென்றும், அவனைக் காண்பதே சகுனத் தடை, அதாவது கெட்ட சகுனம் என்றும், நாம் போகும் காரியங்கள் அவன் கண்ணுக்குத் தெரிந்தால் கூட அவற்றைக் கெடுத்துதான் வாழப் பார்ப்பான் என்கிற எண்ணமும் அதில் வைத்து அவ்வளவு தாழ்மையாய் கருதி அனுபவத்தில் நமது பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்து வந்தார்கள்.

ஆனால், நாம் அவற்றையெல்லாம் மறந்து அதற்கு நேர் விரோதமாய் பார்ப்பனர் எழுதி வைத்ததை ஒப்புக்கொண்டு நாமும் நம்ம குழந்தைகளுக்கு அய்யர் மேல் பட்டுவிடாதே, அம்மாமி மேல் பட்டு விடாதே, அவர்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லுவதுடன் நாமும் நம்மைத் தாழ்ந்தவர்கள் என்றே நினைத்துக் கொள்கிறோம்.

ஆதலால் நமது குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடப் படிப்பிலிருந்தே இதை ஒரு பாடமாய் வைத்து இவைகளின் உண்மைகளைப் பற்றி சொல்லிக் கொடுத்து அவர்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்ற தகுந்த ஏற்பாடு செய்து வந்தால்தான் நமது சுயமரியாதையையாவது அடைய முடியும்.

------------------------ தந்தைபெரியார் - "குடிஅரசு" 5.9.26

இப்போது சொல்லுங்கள் பார்ப்பான், தமிழன் என்று பேதப்படுத்தியது, பார்ப்பனர்களா? தமிழர்களா?

இன்னும் ஆதாரங்கள் கேட்டால் தருவதற்கு எப்போதும் தயார்.

எந்தப் பெரியார் தொண்டனும் ஆதாரங்கள் இன்றி எதையும் எழுத மாட்டார்கள். பிரச்சினைகளின் மூலத்திற்கு சென்று அக்கு வேறாக அலசி ஆராய்ந்துதான் எதையும் எழுதுவார்கள்.வீண் குசும்பு (இது உங்கள் சொல்லாக்கம்)க்காக எதையும் எழுத மாட்டார்கள்.

சிந்தியுங்கள்.

நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தமிழ் ஓவியா...இந்த பதிவுக்கு சம்பந்தமில்லா பின்னூட்டங்கள் நிறைய வந்துவிட்டன..இனியும்..இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் தேவையில்லை என்றே கருதுகிறேன்.ஓரளவு என் பதிவுகளை படித்து வருவீர்கள் என ஏண்ணுகிறேன்..பாராட்டப்பட வேண்டிய சமயங்களில் கலைஞரை பாராட்டி..பல பதிவுகள் எழுதி உள்ளேன்.அவரது..செயல்கள் பற்றி எதிர் விமரிசனமும் செய்துள்ளேன்..
நான் பார்ப்பனனா...தமிழனா...பார்ப்பனரின் அடிவருடியா...என்ற உங்கள் சந்தேகத்துக்கு விடை ..நான் மனித இனம்...இன்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்..இனி...எனது வேறு பதிவுகளைப் படித்து..அதற்கான கருத்துக்களை கூறுங்கள்...
நன்றி..வணக்கம்.

தமிழ் ஓவியா said...

மென்பொருள் வல்லுநர்களைப் பற்றி எழுதும் போது பார்ப்பனர்களைப் பற்றியும் இணைத்து அதுவும் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களைப் பற்றித் தலைப்பு கொடுத்து எழுதும் போது அது பற்றிய விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.

உங்களைப் போல் நானும் ஜாதி மதம், போன்ற இட்டுக்கட்டியதிலிருந்து விலகி மனித இனம் என்ற அடிப்படையில் இயங்கி வருபவன்தான். அப்படி இயங்கும் போது குறுக்கே வருபவைகளை அப்புறப்படுத்தும் செயல்களைத் தான் செய்து வருகிறேன்.

மனிதநேயக்காரனாக வாழ்ந்து வருகிறேன்.நீங்கள் யாராக வேண்டுமானலும் இருந்து விட்டு போங்கள். ஆனால் நியாயமானவனராக இருக்க வேண்டும் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி..தமிழ் ஓவியா

Arun said...

பதிவர் ராதாகிருஷ்ணன் அவர்களின் எண்ணத்திற்கு மதிப்பளித்து இந்த ஒரு பின்னூட்டத்துடன் விடை பெற்றுக் கொள்கிறேன். ராதாகிருஷ்ணன் அய்யா, இறுதியாக இந்தப் பின்னூட்டத்திற்கு மட்டும் இடங்கொடுக்கவும். நன்றி.
___________________________

தமிழ் ஓவியா,

நீங்கள் கூறியிருப்பவை "பார்ப்பனர்கள் மீது ஏன் வெறுப்பைக் கக்குகிறீர்கள்?" என்ற கேள்விக்கான விளக்கமாகத் தான் தெரிகின்றன. அப்படியென்றால், அவர்களை வெறுப்பது, அவர்கள் மீது வெறுப்பைக் கக்குவது, மற்றவர்களையும் அவர்களை வெறுக்க வைக்க முனைவது, இதெல்லாம் உண்மை தான் என்று வாக்குமூலம் கொடுப்பதாகவே எடுத்துக்கொள்ளலாமா?
___________________________


மேலும், பெரியார் சொன்னார் அண்ணா சொன்னார் வீரமணி சொன்னார் என்பதையே தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே தவிர, மற்றபடி நான் எழுப்பிய கேள்விகளுக்கு பெரியார் முதலானவர்கள் சொன்னவை சாராத எதையும் நீங்கள் நிறுவிவிடவில்லை. அவர்கள் சொன்ன விஷயங்களோ சென்ற நூற்றாண்டுச் செய்திகள்.

கண்ணைத் திறந்து பாருங்கள்; இன்றைய நிலைமையே வேறு. இன்றைய பள்ளிகளில், மாணவர்கள் ஒரே உணவுப் பாத்திரத்திலிருந்து உணவு பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு வந்துவிட்ட பிறகு, "பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குப் போனவுடன் பாவாடையை அவிழ்த்து வை, துண்டை அவிழ்த்து வை என்றும் சொல்லி நம்மிடம் அதுகளுக்கு ஒரு இழிவைச் சொல்லி கற்பிக்கிறார்கள்" என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்களே, பாவாடையும் துண்டும் தொலைந்து போயே பல பத்தாண்டுகள் போய் விட்டன, தெரியுமா? அய்யா, காலை வணக்கம்! விழித்துக் கொள்ளுங்கள்.

எப்படி சோ முதலானவர்கள் இப்படித் தான் பேசுவார்கள், இந்த நிலைப்பாடு தான் எடுப்பார்கள் என்று உங்களைப் போன்றவர்கள் திட்டவட்டமாகக் கூறி அவர்கள் சொல்வது எதையும் காதில் போட்டுக்கொள்வதில்லையோ, அதே போல, பெரியார் முதலானவர்கள் பார்ப்பனர்களைப் பற்றி நல்லதாக எதையாவது கூறினால் தானே வியக்க வேண்டும்.

இங்கு பேசப்படும் பொருளே அது தானே! அதற்கு அதையே சான்றாகக் காண்பித்தால், அதற்கு அதை வைத்தே விளக்கம் கூற முற்பட்டால் எப்படி?

முதலாமவன்: நீ ஏனப்பா எப்போது பார்த்தாலும் மாட்டு வாலில் பட்டாசு கட்டி வெடிக்கிறாய்?
இரண்டாமவன்: ஏனென்றால் மாடு ஒரு தந்திரமான உயிரினம்!
முதலாமவன்: அப்படியா, எதை வைத்து அவ்வாறு சொல்கிறாய்?
இரண்டாமவன்: எதை வைத்தா? அது தந்திரமான உயிரினமாக இல்லாதிருந்தால், என் அப்பா, தாத்தா என எல்லோரும் அதன் வாலில் வெடி வைத்திருப்பார்களா?


இப்படி இருக்கிறது உங்க லாஜிக்.

இந்த அழகில், "எந்தப் பெரியார் தொண்டனும் ஆதாரங்கள் இன்றி எதையும் எழுத மாட்டார்கள். பிரச்சினைகளின் மூலத்திற்கு சென்று அக்கு வேறாக அலசி ஆராய்ந்துதான் எதையும் எழுதுவார்கள்" என்ற தேவையற்ற ஜல்லி வேறு! "எந்தப் பெரியார் தொண்டனும்" என்று "நாம்–பிறர்" (Us vs. Other) பாணியில் எப்போது பேசத் தொடங்கி விட்டீர்களோ, அப்போதே பெரியாரிசமும் ஒரு சாதிக்கான இயல்புகளைப் பெறத் துவங்கி விட்டது ஐயமறப் புரிகிறது. சாதிச் சான்றிதழ் வாங்கிட்டீயளா?

___________________________

//மென்பொருள் வல்லுநர்களைப் பற்றி எழுதும் போது பார்ப்பனர்களைப் பற்றியும் இணைத்து அதுவும் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களைப் பற்றித் தலைப்பு கொடுத்து எழுதும் போது அது பற்றிய விமர்சனங்கள் வரத்தான் செய்யும்.//

இல்லாட்டி மட்டும் . . . ! சும்மா காமெடி பண்ணாதீங்க தமிழ் ஓவியா!

___________________________

சிந்தியுங்கள் சிந்தியுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே, நான் சிந்திப்பது இருக்கட்டும், சிந்திக்கிறேன். நீங்களும் கொஞ்சம் மாத்தி யோசிச்சுத் தான் பாருங்களேன்.

சன்னலையே உத்துப் பாத்திட்டு, அப்புறம் சுவத்தப் பாத்தாக் கூட சுவரெல்லாம் சன்னல் மாதிரியே தெரியும். அதே போல, இவர்கள் சொல்வதையெல்லாம் படித்து/கேட்டுவிட்டு அந்த ஹேங்கோவருடனே சமுதாயத்தைப் பார்க்கிற போது, இயல்பான செயல்கள் கூடத் தவறாகவே தான் தெரியும். வண்ணக் கண்ணாடியைக் கழற்றி வைத்து விட்டுப் பார்க்கவும்.

ராமர் சாமி சொன்னார் என்பதனால் மட்டுமே ஒரு சங்கதி சரியெனக் கொள்ளலாகாது என்பதைப் போன்றே ராமசாமி சொன்னார் என்பதனால் மட்டுமே ஒரு சங்கதி சரியெனக் கொள்ளலாகாது என்பதையும் ராமர் சாமி, ராமசாமி இருவருமே ஒப்புக்கொள்வர் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

___________________________

மற்றபடி, இரயில் நிலைய கேண்டீன் போன்ற நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களைக் குறித்து நானும் கண்டனம் தெரிவிக்கவே செய்கிறேன். அதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், ஒரு தேசத்தின் தலைவரையே கொன்ற விஷயம் ஒரு இலேசான "துன்பியல் சம்பவம்", அதை வைத்து அதைச் செய்தவர்களின் செயல்பாடுகளை ஒட்டுமொத்தமாக எடைபோடக் கூடாது என்று சொல்லப்படும் போது, இந்த கேண்டீன் விஷயம் போன்றவைகளை வைத்து மட்டும் ஒரு சாராரை ஒட்டுமொத்தமாக வெறுத்துக் கொண்டே இருப்பீர்கள் என்றால், உங்கள் உணர்வுகளை நீங்களே கொஞ்சம் சீர்தூக்கிப் பார்த்துக் கொள்வது நல்லது.

முதலாமவன்: நீ ஏன் அவனை வெறுக்கிறாய்?
இரண்டாமவன்: என்ன ஆளப்பா அவன்? அவனுக்கு யார் மேலும் அன்பே இல்லை!


இது எப்படி இருக்கு? இது போலத் தான் இருக்கிறது உங்கள் பேச்சும். பார்ப்பானை விஷம் விஷம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையிலேயே நீங்கள் உமிழும் காழ்ப்பு மட்டும் எந்த வகையைச் சேர்ந்தது என்று என்றேனும் சிந்தித்ததுண்டா?

ஒரு மனிதனின் இதயம் காஷ்மீரத்தில் இருக்கும் மனிதனுக்காகத் துடிப்பதோ இலங்கையில் மடிபவனுக்காகக் கலங்குவதோ, பாலஸ்தீனத்தில் துன்புறுபவனுக்காகக் கண்ணீர் சிந்துவதோ தவறே இல்லை. ஆனால், ஒரு சாராருக்காக இளகும் அதே இதயம், இன்னொரு சாராரைக் கொலைவெறியோடு பார்ப்பது மனிதநேயப் பண்பாட்டில் அரைகிணறே தாண்டிய நிலையே ஆகும் என்பதை "மனிதநேயக்காரனாக வாழ்ந்து வருகிறேன்" என்று சொல்லிக் கொள்ளும் உங்களைப் போன்றவர்கள் தன்னளவிலாவது சிந்தித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

'மனிதநேயம்' என்பது எல்லா மக்களையும் நேசிப்பது. '(தன்) இன அபிமானம்' என்பதை 'மனிதநேயம்' என்று தப்பர்த்தம் பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். (நான் அழுத்தம் குறைத்து 'அபிமானம்' என்று கூறியிருக்கிறேன்; சரியான சொல் எதுவென்று உங்களுக்குத் தெரியும்.) முதல் கோணல் முற்றும் கோணல். மீண்டும் தொடக்கத்திலிருந்து தொடங்கவும். பெரியாரிஸ்டு, பார்ப்பனன், பார்ப்பன அடிவருடி போன்ற பேதங்களையெல்லாம் தூக்கி மூட்டை கட்டி வைத்து விட்டு, மனிதனை மனிதனாகப் பார்க்கப் பழகுங்கள்.

அடிப்படை மனித நேயம் புரியாத மனிதர்கள் கையில் பெரியார், மார்க்ஸ், முதலானோர் சிக்குவது குழந்தை கையில் கத்தி இருப்பதைப் போன்றது. அடுத்த முறை ஒரு மனிதரைப் பார்க்கும் போது, இவர் பெரியாரிஸ்டா, பார்ப்பனனா, பார்ப்பன அடிவருடியா, நம்மாளா, இல்லை 'அவாளா' என்று கூக்குரலிட்டுக் குதித்துக் கிளம்பும் மனத்தை நறுக்கென்று குட்டி, இவர் அடிப்படையில் 'மனிதர்' ஆகையால் யாவரும் 'நம்மாளே' என்று அடக்கி நல்வழிப்படுத்த வேண்டும் என்பது நினைவில் வரட்டும்.

"கொல்ல வரும் புலி தன்னையும் சிந்தையில் அன்போடு நோக்கிடுவாய்" என்ற பாரதியின் கருத்தையும், "நாத்திகம் பேசும் நல்லவர்க்கெல்லாம் அன்பே சிவமாகும்" என்று திரைப்படம் எடுத்த கமல்ஹாசனின் கருத்தையும் கூட சாதிக்கண்ணாடி கொண்டே பார்ப்பவர்களை, சமூக அக்கறை என்னும் பசுத்தோல் போர்த்திய சாதிவெறிப் புலிகளாகவன்றி வேறேன்னவாகக் கருத முடியும்?

___________________________


ஆயினும், இறுதியாக, நீங்கள் கூறிய "நீங்கள் யாராக வேண்டுமானலும் இருந்து விட்டு போங்கள். ஆனால் நியாயமானவனராக இருக்க வேண்டும்." என்பதையே உங்களுக்கும் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

அந்த வாக்கியத்தில் நாம் இருவரும் ஒத்துப் போகிறோம்.

நன்றி.

தமிழ் ஓவியா said...

//கண்ணைத் திறந்து பாருங்கள்; இன்றைய நிலைமையே வேறு. இன்றைய பள்ளிகளில், மாணவர்கள் ஒரே உணவுப் பாத்திரத்திலிருந்து உணவு பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு வந்துவிட்ட பிறகு//

நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.முதலில் பார்ப்பரல்லாதவர் யாரும் பார்ப்பனரை வெறுக்கவில்லை. (எல்லாரும் அடிமைப்பட்டுத்தான் இருந்தனர்.)

நீ சூத்திரன் என்று எங்களை ஒதுக்கி இழிவு படுத்தியது பார்ப்பனர்கள்தான்

சங்கராச்சாரி நடத்தும் கல்லூரியிலே பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பேத நி கடந்து ஒரு சில் ஆண்டுகளுக்கு முன் கடைபிடிக்கப்பட்டதே, மறந்து விட்டதா?

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று 1971 ஆம் ஆண்டு சட்டம் கொண்டுவந்ததை எதிர்த்து கோர்ர்ட்டுக்குப் போய் தடுத்து நிறுத்தியவர்கள் பர்ப்பனர்கள் தானே.

ஓஒ இதுகூட 1971 ஆம் ஆண்டு நடந்தது. இப்பச்ச் சொல்லுங்க என்று கேட்டாலும் கெட்பீர்கள்.

இப்ப கலைஞர் வந்தவுடன் மீண்டும் அந்தச் சட்டத்திற்கு உயிரூட்டி முறையான பயிற்சி பெற்ற பார்ப்பனர் உட்பட அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை தடுத்து நிறுத்திக் கொண்டிருப்பவர்கள் யார்? உங்கள் பார்வையில் எப்போதும் தாக்கப்படும் பார்ப்பனகள்தானே.

இன்று வரை எங்கள் மீது வெறுப்பை கக்கி வருபவர்கள் பர்ப்பனர்கள்தானே தவிர பார்ப்பனரல்லாதவர்களல்ல.

இன்று வரை தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று பூணுலை தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் கூட்டம் பார்ப்பனர்கள்தானே. அதற்கு அரசாங்க விடுமுறை இன்றளவும் உண்டே.

இப்படி நடை முறையில் எவ்வளவோ உண்டு .வேத காலம் தொட்டு பார்ப்பன -பார்ப்பனரல்லாதர் பிரச்சினை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

நாம்தான் உண்மையை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். கடவுளை மற! மனிதனை நினை! என்பது பெரியாரின் சூத்திரங்களில் ஒன்று. இதில் பார்ப்பானைத் தவிர்த்து என்று பெரியார் சொல்லவில்லை.

ஆனால் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரிடமிருந்து இப்ப மட்டுமல்ல எப்பவுமே விலகித்தான் இருக்கிறார்கள் என்பதைவிட பார்ப்பனரல்லாதாரை விலக்கித்தான் வைத்திருக்கிறார்கள்.

இன்னும் எவ்வளவோ எழுதலாம்.காந்தியை வீட்டுக்குள் விட மறுத்தது போன்ற வரலாற்றுச் செய்திகள் ஏராளம் இருக்கின்றன.

இதுவே போதும் என்று நினைக்கிறேன்.

நடுநிலையுடன் சிந்திப்போம். உண்மையை ஏற்றுக் கொள்வோம்.

நீங்கள் நினைப்பது போல் பார்பனர்களை வெண்டும் என்றே யாரும் விமர்சிப்பதில்லை. அவர்கள் நடத்தையும் செயலும் பார்ப்பனரல்லாதாருக்கு எதிராக இருப்பதால் விமர்சிப்பது தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.

நன்றி

புருனோ Bruno said...

//Also, when Dr.Bruno went on to claim:
எந்த வக்கீலாவது, மருத்துவராவது, தொழிலதிபராவது “எங்களை விமர்சிக்க கூடாது” என்று கூறுகிறார்களா
then, I just had to point out to him that, "எந்த . . . மருத்துவராவது" எல்லாம் இல்லை, பல மருத்துவர்கள் ஒன்று கூடி "எங்களை விமர்சிக்கக் கூடாது" என்ற இதே நிலைப்பாட்டைத் தான் எடுத்திருந்தனர், just a few years ago.//

இல்லை. நிலைப்பாடு அது வல்ல. தங்களின் கருத்து தவறு என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

விமர்சிக்கக்கூடாது என்று யாரும் கூறவில்லை.

முன்னாபாய் என்ற இந்தி படத்தை வசூல்ராஜா என்ற தலைப்பில் தமிழில் எடுக்கும் போது அந்த தலைப்பிற்கு எதிர்ப்பு காட்டப்பட்டது. பிறகு கமலின் வேலையே வசூல் செய்வது என்பது தெரிந்த போது அந்த வழக்கு தள்ளுபடி ஆனது.

எனவே உங்கள் கருத்து முற்றிலும் தவறானது என்று தெரிவித்துக்கொள்கிறேன்

புருனோ Bruno said...

//ஐயா, மறந்திட்டீங்கன்னு நெனைக்கிறேன். இப்போ தான் சில வருடங்கள் முன்பு, "வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்." என்ற திரைப்படத்தின் பெயரை எதிர்த்து அத்தனை மருத்துவர்கள் திரண்டெழுந்தனர்; பின்னர், நீதிமன்றம் வரை சென்று கடைசியில் செம்ம பல்பு வாங்கினர்.//

ஐயா மறக்க வில்லை.

1. மருத்துவர்கள் தலைப்பை மட்டும் தான் எதிர்த்தார்கள். விமர்சிக்கக்கூடாது என்று கூறவில்லை

2. தலைப்பு கதையுடன் சேர்ந்து வருவது என்று தெரிந்த பின் எதிர்ப்பு கைவிடப்பட்டது

3. தாங்கள் உபயோகித்த சொற்கள் தங்களை பற்றி எங்களுக்கு நன்றாக தெரிவிக்கிறது

கோவி.கண்ணன் said...

பூனை செய்வது குறும்பு அடிச்சா பாவம் !
(பின்னூட்டம் தலைப்புக்கு மட்டும்)
:)