Monday, December 8, 2008

ஒரு தோல்வி படம் ரீமேக்கில் வெற்றிப்படமானது..

நடிகர்,இயக்குநர் விசு விஸ்வசாந்தி என்று ஒரு நாடகக்குழு நடத்திக்கொண்டிருந்தார்.அப்போது அவர் கதை,வசனம் எழுதி ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கி 'உறவுக்கு கை கொடுப்போம்'என்ற நாடகம் நடத்தப்பட்டது.மாபெரும் வெற்றி பெற்ற இந் நாடகத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திரைப்படமாக்க விரும்பினார்.

திரைக்கதையை அவர் பார்த்துக்கொண்டார்.சினிமாவிற்காக மனம் இல்லை என்றாலும் அவர் சொன்ன மாற்றங்களுக்கு விசு ஒப்புக்கொண்டார்.மகேந்திரன் இயக்கத்தில்,கே.எஸ்.ஜி., மேற்பார்வையில் அதே பெயரில் ஜெமினி கணேசன் நடிக்க வெளிவந்தது திரைப்படம்...மாபெரும் தோல்வி.

சில ஆண்டுகள் கழித்து..அதே கதையை விசு திரைக்கதை,வசனம்,இயக்கத்தில் ஏ.வி.எம்.,நிறுவனம் படமாக எடுத்தது.படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன்..சிறந்த குடும்பக்கதை என்று ஜனாதிபதியின் தங்கப்பதக்கத்தையும் பெற்றுத் தந்தது.

அந்த படம்தான் 'சம்சாரம் அது மின்சாரம்'

10 comments:

குடுகுடுப்பை said...

"சம்சாரம் ஒரு மின்சாரம்' "

பேரு அப்படி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

nagoreismail said...

ஜெமினி கணேசன் அவர்கள் நடித்து தோல்வி அடைந்த படத்தின் பெயர் என்ன?

அத்திரி said...

மேட்டர் புதுசா இருக்கே மெய்யாலுமா?

அர டிக்கெட்டு ! said...

பிரதர்ஸ் படத்து பேரு
'சம்சாரம் அது மின்சாரம்'
@#$%

T.V.ராதாகிருஷ்ணன் said...

// nagoreismail said...
ஜெமினி கணேசன் அவர்கள் நடித்து தோல்வி அடைந்த படத்தின் பெயர் என்ன?//


உறவுக்கு கை கொடுப்போம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அத்திரி said...
மேட்டர் புதுசா இருக்கே மெய்யாலுமா?//

YES

T.V.ராதாகிருஷ்ணன் said...

///அர டிக்கெட்டு ! said...
பிரதர்ஸ் படத்து பேரு
'சம்சாரம் அது மின்சாரம்'//



தவறு திருத்தப்பட்டது..நன்றி

Chezhian said...

Visuvin kadhai irandu murai padamavadhu eppodhum nadappadhu polum. Rajinikanthum, Sreekanthum naditha "Sadhurangam" padam thaan pinnalil Pandian S.Ve.Sekhar nadikka "Thirumadhi oru Vegumadhi" aaga veli vandhadhu. Munnadhil Kadhai vasanam Visu. Pinnadhil Iyakunarum avarthaan.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சதுரங்கம் தான் திருமதி ஒரு வெகுமதியாக வந்த செய்தியை பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி செழியன்