Wednesday, December 10, 2008

பிரசாதமும்...கடவுளும்...நானும்..

TBCD ஐயா பிரசாதத்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் சாப்பிடலாமா? என்று பதிவு போட்டிருந்தார்.

எனக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும்..எங்க வீட்டு அம்மாவோட கோவிலுக்குப் போவேன்..வாசல்லயே நின்னுக்கிட்டு அவங்களை உள்ளே போய் கும்பிட்டுட்டு வரச்சொல்வேன்.நீங்க உள்ள வரல்லேனா..அவசர அவசரமா கும்பிட்டுட்டு வரவேண்டியிருக்கும்பாங்க.

அப்போ நான் சொல்லுவேன்..கோவிலுக்குப் போற உன்னைவிட எனக்குத்தான் புண்ணியம்னு.

நீ போனா என்னைப்பத்தியே நினைச்சுக்கிட்டு இருக்கே..ஆனா நான்..நீ இவ்வளவு நேரம் சிவன் கோயிலை முடிச்சிருப்பே,இப்போ அம்மன் சன்னதி வந்திருப்பே,அடுத்து நவகிரகம் மீதின்னு நீ கும்பிடற ஆண்டவனை நினைச்சுக்கிட்டு இருக்கேன்னு.

சரி விஷயத்திற்கு வரேன்..

ஒவ்வொரு கோவில்ல ஒவ்வொரு பிரசாதம் ருசி.

பெருமாள் கோவில் புளியோதரை ருசி..வேற எங்கேயும் பார்க்க முடியாது.

திருப்பதி தேவஸ்தான லட்டுவாயிருந்தாலும் சரி..வெளி கடைகள்ல விற்கும் லட்டுவானாலும் சரி..அதன் டேஸ்டே..வேறு எந்த இடத்து லட்டுலேயும் இல்லை.மடப்பள்ளி சக்கரைபொங்கல் நன்றாயிருக்கும்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வடை பிரமாதம் (டோண்டு சார்...நான் சொல்றது சரிதானே)

சிவன் கோவில்,முருகன்கோவில்ல ..அதிரசம்.முறுக்கு நல்லாயிருக்கும்.

ஸ்ரீரங்கம் கோவில் தயிர்சாதம்..

அமெரிக்கா பிட்ஸ்பர்க்ல பாலாஜி கோவில் கேண்டீன்ல சாம்பார் சாதம்.மிக்ஸர் ருசி.

வேறு எங்கங்க பிரசாதம் நல்லாயிருக்கும் சொல்லுங்க..ஒரு விஸிட் அடிச்சிடுவோம்.

11 comments:

Joe said...

நான் ஒரு கிருஸ்துவன் என்றாலும், இந்து நண்பர்களோடு சில கோவில்களுக்கு சென்றதுண்டு. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், மலைகோட்டை உச்சிபிள்ளையார் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், மதுரை மீனாக்ஷி கோவில், ராமேஸ்வரம் (அந்த கோவிலில் இருக்கும் கடவுள் யாருப்பா?). ஆனால் எங்கேயும் பிரசாதம் வாங்கி சாப்பிட நின்றதில்லை.

சில வருடங்களுக்கு முன்பு பெங்களூர்-இல் இஸ்கான் கோவிலில் பிரசாதம் சாப்பிட்டேன். தொன்னையில் சாம்பார் சாதம், தேங்காய் சாதம் கொடுத்தார்கள், பிரமாதம்!

//திருப்பதி தேவஸ்தான லட்டுவாயிருந்தாலும் சரி..வெளி கடைகள்ல விற்கும் லட்டுவானாலும் சரி..அதன் டேஸ்டே..வேறு எந்த இடத்து லட்டுலேயும் இல்லை.// அங்கே போயிட்டு வரும் நண்பர்கள் கொண்டு வந்து கொடுத்ததை தின்று பார்த்ததில் நீங்கள் சொல்வது கண்டிப்பாக உண்மை என்று தான் சொல்ல வேண்டும்.

கோவி.கண்ணன் said...

//ஒவ்வொரு கோவில்ல ஒவ்வொரு பிரசாதம் ருசி.பெருமாள் கோவில் புளியோதரை ருசி..வேற எங்கேயும் பார்க்க முடியாது.
//

பாய்ஸ் படத்தில் செந்தில் பேசுற வசனம் நீங்க தான் எழுதி கொடுத்திங்களா ?

:)

நசரேயன் said...

பார்சல் சர்வீஸ் இருக்கா?

மணிகண்டன் said...

***** பெருமாள் கோவில் புளியோதரை ருசி ******

சீரங்கத்துல புளியோதரை ஏதோ மண்ணோட மிக்ஸ் பண்ணினா மாதிரி இருக்கும் ! இது overstated cliche ன்னு தான் சொல்லணும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Joe

T.V.ராதாகிருஷ்ணன் said...

////கோவி.கண்ணன் said...
/////ஒவ்வொரு கோவில்ல ஒவ்வொரு பிரசாதம் ருசி.பெருமாள் கோவில் புளியோதரை ருசி..வேற எங்கேயும் பார்க்க முடியாது.
//

பாய்ஸ் படத்தில் செந்தில் பேசுற வசனம் நீங்க தான் எழுதி கொடுத்திங்களா ?////


நீங்கள் சப்பிட்டதில்லையா கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// மணிகண்டன் said...
***** பெருமாள் கோவில் புளியோதரை ருசி ******

சீரங்கத்துல புளியோதரை ஏதோ மண்ணோட மிக்ஸ் பண்ணினா மாதிரி இருக்கும் ! இது overstated cliche ன்னு தான் சொல்லணும்.///


மணி ஸ்ரீரங்கம் தயிர் சாதம் பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நசரேயன் said...
பார்சல் சர்வீஸ் இருக்கா?///

:-))))

குடுகுடுப்பை said...

சிகாகோ அரோரா கோவில்ல எல்லா பிரசாதமும் நல்லா இருக்கும்.ஆனா காசு கொடுத்து கேண்டீன்ல தான் சாப்புடனும்.

டாலஸ் dfw கோவில்ல சனிக்கிழமை பெரும்பாலும் யாராவது அன்னதானம் போடுவாங்க எல்லாமே நல்லாதான் இருக்கும்.

மணிகண்டன் said...

தயிர்சாதம் மோசம் கிடையாது. ஆனா சம்பா தோசைன்னு வருடத்துக்கு ஒரு நாள் பண்ணுவாங்க (வைகுண்ட ஏகாதேசி - 10 நாட்களில் ஒரு நாள்). ரொம்ப சூப்பரா இருக்கும். கொட்டாரத்துல ஒருத்தர இதுக்காகவே friend புடிச்சி வச்சி இருந்தோம். அது தான் சீரங்கம் கோவில் speciality.

T.V.ராதாகிருஷ்ணன் said...

////மணிகண்டன் said...
தயிர்சாதம் மோசம் கிடையாது. ஆனா சம்பா தோசைன்னு வருடத்துக்கு ஒரு நாள் பண்ணுவாங்க (வைகுண்ட ஏகாதேசி - 10 நாட்களில் ஒரு நாள்). ரொம்ப சூப்பரா இருக்கும். கொட்டாரத்துல ஒருத்தர இதுக்காகவே friend புடிச்சி வச்சி இருந்தோம். அது தான் சீரங்கம் கோவில் speciality.////


வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி மணி