Saturday, December 20, 2008

அரக்கியிடம் மாட்டிக் கொண்ட பொதுஜனம்

மிஸ்டர் பொதுஜனம்...தீவிரமாக அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தார்..அப்போது அவர் அலைபேசி சிணுங்கியது.அழைக்கும் எண்ணைப் பார்த்தார்..புதியதாக இருந்தது...அவர் தன் அலைபேசி எண்ணை முக்கியமான சிலரைத் தவிர வேறு யாருக்கும் தருவதில்லை..ஆனால் இது யாராய் இருக்கும்? 'ஹலோ'என்றார்..அவர் மூதாதையர் பெயருடன் அவர் பெயரையும் இணைத்து சொல்லி..சார் நாங்க..**** பாங்கிலிருந்து பேசறோம்...உங்களுக்கு கிரெடிட் கார்ட் வேணுமா?வாங்கிற பொருளுக்கு வட்டி இல்லாமல் 30 நாட்களில் கட்டலாம்..அவசர தேவைன்னா 3 வட்டிக்கு கேஷ் கிடைக்கும்...என தூண்டில் போட்டது ஒரு சர்க்கரைக் குரல்.

எலிப்பொறியில்..மசால்வடைக்கு ஆசைப்பட்ட எலியானார் அவர்.

ஒரு சுபயோக சுப தினத்தில்..கிரெடிட் கார்ட் உரிமையாளர்கள் லிஸ்டில் சேர்ந்தார்.

பின் சில பொருள்களை..கார்டை தேய்த்து.. தேய்த்து வாங்கினார்.அந்த மாத ஸ்டேட்மென்ட் வந்தபோது தான் தெரிந்தது.பில்லிங் தேதி 15..அவர் பொருள் வாங்கியது 13ம் தேதி..அவருக்கு 2 நாட்கள் தான் வட்டியில்லா சலுகை.மேலும் கடனில் வாங்கிய பொருளுக்கான முழுத்தொகையும் சலுகைக் காலத்தில் கட்டினால் தான் வட்டி கிடையாது.அதில் கொஞ்ச பாக்கி இருந்தாலும்,அல்லது...முந்தைய மாதம் எதேனும் பாக்கி இருந்தாலோ சலுகை கிடையாது.

இப்படியாக..பொதுஜனம்..தேவை..தேவை இல்லாதவை என பொருள்களை வாங்கிவிட்டு...கார்டின் தவணைத்தொகையில் சிறு பகுதியை மாதா மாதம் கட்டி வந்தார்.லிமிட் தாண்டியது அந்த கார்டுக்கு.தவணைப் பணம் கட்ட முடியவில்லை.அவர்கள் போடும் வட்டியும் 40 சதவிகிதம் மேல்.

வேறு ஒரு பாங்கின்..நுனி நாக்கு ஆங்கில குரல் கேட்டு அந்த பாங்க் கார்டு வாங்கினார்..இப்படியாக ஒரு கடன் அடைக்க ஒரு கடன் என 4 கிரெடிட் கார்ட் அவரிடம்..கடனில் தத்தளிக்கிறார்.
மூழ்காமல் வெளியே வர வழி தெரியவில்லை.வங்கிகளோ அவரிடமிருந்து கடன் வசூலிக்க குண்டர்களை அனுப்ப ஆரம்பித்து விட்டனர்.

ஒழுங்காக தான் உண்டு..தன் வேலை உண்டு என இருந்தவரை..தூண்டில் போட்டு இழுக்கும்..வங்கி தொலைபேசி அழைப்புகள் சிக்கலில் மாட்டிவிட்டன..

முதல் அழைப்பு வரும் போதே நிராகரித்து விடுங்கள்...மேலும்..மேலும்..தொந்தரவு கொடுத்தால்..ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் bankingombudsman அமைப்பில் புகார் செய்யுங்கள்.

கிரெடிட் கார்ட் ..முதலில் அழகான பெண் போலத்தான்..தெரியும்...மாட்டிக்கொண்டுவிட்டால்தான்..அரக்கி எனத் தெரியும்

16 comments:

மதிபாலா said...

தமிழ் மண நட்சத்திரத்திறகான் வாழ்த்துகள் நண்பரே.

க்ரெடிட் கார்டு , உபயோகிக்கத் தெரிந்தவர்களுக்கு ஒரு வரம்.

தெரியாதவர்களுக்கு அது ஒரு சாபம்.
ஆக பிரச்சினை எங்கிருக்கிறது. உங்களுக்கு அதை உபயோகிக்கத் தெரிகிறதா இல்லையா என்பதில்தான்.

நன்றி.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//.என தூண்டில் போட்டது ஒரு சர்க்கரைக் குரல்.//

இதெல்லாம் ஒரு பொழப்பு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//
க்ரெடிட் கார்டு , உபயோகிக்கத் தெரிந்தவர்களுக்கு ஒரு வரம்.

தெரியாதவர்களுக்கு அது ஒரு சாபம்.//




இதே வார்த்தைகளை வேற மேட்டருக்கும் சொல்லலாம்..........

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மதிபாலா said...
தமிழ் மண நட்சத்திரத்திறகான் வாழ்த்துகள் நண்பரே.

க்ரெடிட் கார்டு , உபயோகிக்கத் தெரிந்தவர்களுக்கு ஒரு வரம்.

தெரியாதவர்களுக்கு அது ஒரு சாபம்.
ஆக பிரச்சினை எங்கிருக்கிறது. உங்களுக்கு அதை உபயோகிக்கத் தெரிகிறதா இல்லையா என்பதில்தான்.
நன்றி.///

மதிபாலா தங்கள் வாழ்த்துக்கு நன்றி..
நீங்கள் சொல்வது உண்மைதான்.ஆனால் கிரெடிட் கார்ட் பயன் படுத்துவோர் எவ்வளவு பேருக்கு அவற்றின் முழு விவரங்கள் தெரியும் சொல்லுங்கள்.காட்டப்பட்ட இடத்திலெல்லாம் கையெழுத்தைப் போட்டுவிட்டு..பின்னர் அவதிப்படுபவர் எத்தனைப் பேர்.என் நண்பர் ஒருவர்..இதனாலேயே கடனாளி ஆனார்.இப்பதிவும்..நான் அவரை நினைத்து எழுதியதுதான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//SUREஷ் said...
//.என தூண்டில் போட்டது ஒரு சர்க்கரைக் குரல்.//

இதெல்லாம் ஒரு பொழப்பு//


நன்றி SUREஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// SUREஷ் said...
//
க்ரெடிட் கார்டு , உபயோகிக்கத் தெரிந்தவர்களுக்கு ஒரு வரம்.

தெரியாதவர்களுக்கு அது ஒரு சாபம்.//




இதே வார்த்தைகளை வேற மேட்டருக்கும் சொல்லலாம்..........///

:-))))))

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அண்ணா!
இந்த தொலைபேசி மூலம் பெண்களை
வைத்து வங்கிகள் தங்கள் கடன் அட்டைகளை பரப்புவது இந்தியாவில்
அதிகம் போல் உள்ளது.

இங்கு கடனட்டைகள் இப்படிக் கழுத்தை நெரிப்பதில்லை.

அதற்கான சட்டப் பாதுகாப்பு நுகர்வோர்க்கும் உண்டு.
அதை அரசு சரிவரக் கடைப்பிடிக்க
வங்கிகளை நிர்ப்பந்திக்க வேண்டும்.

ஆனால் பொதுவாக வியாபாரம் எனும் தொழிலில் அழகுப் பெண்களின் பங்கு உலகம் பூராகவும் தவிர்க்க முடியாததாகிவிட்டது.

ஆகவே ' முருங்கந் தடிக்கும் சேலை சுற்றிவிட்டால் முறைத்து முறைத்து பார்க்கும் ' பேர்வழிகள் மாட்டி அவலப்படுவது தவிர்க்க முடியாததே.

தேவதை தான் வந்தாலும் ,இல்லை என்பதில் முடிவாக இருக்கும் முடிவை
எடுத்து விடவேண்டும்.

சட்டதிட்டங்களைத் தெளிவாக வாசித்து
விளங்கிய பின்பே உரிய இடத்தில் கையொப்பமிட வேண்டும்.

தொலை பேசியில் பேசுவதால் மீண்டும் எடுக்க வேண்டாம் ,எனக் தெளிவாகக் சொல்லலாம்.
தொடர்ந்தால் அதட்டியும் சொல்லலாம்.

இல்லையோ,அவரிடம் நாம் கேள்விகள் கேட்டுப் பொழுதைப் போக்கலாம்...அவருக்கே அலுப்புத் தட்டும் வரை....

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி யோகன் பாரிஸ்(Johan-Paris)

மதிபாலா said...

மதிபாலா தங்கள் வாழ்த்துக்கு நன்றி..
நீங்கள் சொல்வது உண்மைதான்.ஆனால் கிரெடிட் கார்ட் பயன் படுத்துவோர் எவ்வளவு பேருக்கு அவற்றின் முழு விவரங்கள் தெரியும் சொல்லுங்கள்.காட்டப்பட்ட இடத்திலெல்லாம் கையெழுத்தைப் போட்டுவிட்டு..பின்னர் அவதிப்படுபவர் எத்தனைப் பேர்.என் நண்பர் ஒருவர்..இதனாலேயே கடனாளி ஆனார்.இப்பதிவும்..நான் அவரை நினைத்து எழுதியதுதான்.//

நண்பருக்கு,

முழு விபரத்தைக் கேட்டு அறியாததும் உபயோகிப்பாளரின் குற்றமே.

இந்தியாவின் க்ரெடிட் கார்டு நடைமுறைகள் இன்னும் தெளிவாக்கப்படவில்லை. இங்கெல்லாம் நுகர்வோர்கள் அரசால் கவனமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள்.

என்ன செய்ய , புலம்புவதைத் தவிர?

Sanjai Gandhi said...

ஒரு அனுபவசாலியாக மதிபாலாவை நான் கன்னாபின்னவென்று வழி மொழிகிறேன். உண்மையில் க்ரடிட் கார்ட் எனக்கு பெரிய வரமாக இருக்கிறது.

//ஆனால் கிரெடிட் கார்ட் பயன் படுத்துவோர் எவ்வளவு பேருக்கு அவற்றின் முழு விவரங்கள் தெரியும் சொல்லுங்கள்.//

இதைக் கூட தெரிந்துக் கொள்ளாமல் எதற்கு வாங்க வேண்டும். பணம் சம்பந்த பட்ட விஷ்யம் தானே.. தெளிவாக இருக்க வேண்டியது நம் கடமை. குறைந்த பட்சம் ஏற்கனவே உபயோகிப்பவர்களின் ஆலோசனையாவது பெற வேண்டும். க்ரடிட்கார்ட் நிருவங்களின் மீது குறை சொல்வதை ஏற்ற்க் கொள்ளவே முடியாது. நம் பேராசைக்கும் நிதானமின்மைக்கும் அவர்களா பொறுப்பு?

arun said...

We have to understand the terms and conditions of credit card. If you are not educated and can't control your expenditure, better don't buy. I'm using for a long time and I find very convenient to use. I use it only for convenience and not for loan. When we are buying we must know we've to pay for it too.We should not be simply fooled by the ease of swiping and weeping later when your bill exceeds and you fail to pay.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மதிபாலா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பொடியன்-|-SanJai

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி arun

VIKNESHWARAN ADAKKALAM said...

அருமையான தகவல்... வங்கிகளில் வியாபார மந்தம் ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் அளவுக்கு அதிகமாகவே இந்த மாதிரியான அழைப்புகள் வருக்கின்றன...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//VIKNESHWARAN said...
அருமையான தகவல்... வங்கிகளில் வியாபார மந்தம் ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் அளவுக்கு அதிகமாகவே இந்த மாதிரியான அழைப்புகள் வருக்கின்றன...//

வருகைக்கு நன்றி VIKNESH