Monday, December 15, 2008

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்....

தமிழ்..

தமிழன்..

இச்சொற்களைக் கேட்கும்போதே..தேன் வந்து பாயுது காதினிலே..

மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கையில்லை.அப்படி என்று ஒன்று இருந்தால்,அப்பிறப்பும் தமிழனாகவே பிறக்க ஆசை.வள்ளுவன் முதல் கலைஞர் வரை உலகினுக்கு அளித்த தமிழ் மொழியின் சிறப்பு பற்றி ஒரு சில வார்த்தைகள்.

உலகத்திலேயே இறைவனுக்கு தமிழ் மொழியில் உள்ள சொல் போல் எதிலும் இல்லை."கடவுள்".கட எல்லாவற்றையும் கடந்தவர்.உள்.. எல்லாவற்றின் உள்ளும் உள்ளவர்.எவ்வளவு பெரிய தத்துவத்தை இச்சொல் அடக்கியிருக்கிறது.

தமிழில் "ழ" என்ற அருமையான எழுத்து இருக்கிறது."ழ " வரும் சொல் எல்லாமே இனிமை.பழம்,யாழ்,குழல்,குழந்தை,மழலை-இப்படி...

அடுத்து ..மாதா-பிதா-குரு-தெய்வம் என்று சொல்வார்கள்.அதனைப்பாருங்கள்.

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்.தமிழின் முதல் உயிரெழுத்து "அ".அந்த எழுத்திலேயே ஆரம்பமாகியுள்ளன முதல் தெய்வங்கள் அம்மா..அப்பா.

இவர்களுக்கு அடுத்து குரு.அதாவது "அ" விற்க்குஅடுத்த எழுத்து "ஆ"...ஆசிரியர்.தமிழின் இரண்டாம் எழுத்தில் ஆரம்பம்.

இவர்களுக்குப்பின் தெய்வம்.அ,ஆ விற்கு பிறகு மூன்றாவது உயிரெழுத்து "இ"..இறைவன்.

நமக்கு இன்றியமையாத தேவைகள் மூன்று.உணவு,உடை,உறையுள்..

இங்கும் முதல் தேவை உணவு..தமிழின் முதல் எழுத்து..அன்னம்.

அடுத்து மானம் காக்க உடை தமிழின் இரண்டாம் எழுத்து.. ஆடை.

மூன்றாவதாக வசிக்க உறையுள்.தமிழின் மூன்றாம் எழுத்து இருப்பிடம்.

இப்படி பலப்பல பெரிய செய்திகளை தனக்குள் அடக்கிய மொழி தெய்வீகத் தமிழ்.

ஆகவே "தேன்மதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்வோம்".

********** *********** ********

ஒரு உபரிச்செய்தி:- தமிழில் ஒன்று முதல் 899 வரை உள்ள அனைத்து சொற்களுமே "உ" கரத்தில் தான் முடியும்.உதாரணம் - ஒன்று.. கடைசி எழுத்து "று".ற் + உ.

899 கடைசி எழுத்து "து" த் +உ.

25 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழில் ஒன்று முதல் 899 வரை உள்ள அனைத்து சொற்களுமே "உ" கரத்தில் தான் முடியும்.//


???/

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இறைவனுக்கு தமிழ் மொழியில் உள்ள சொல் போல் எதிலும் இல்லை//



go od , goood, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்

Unknown said...

அருமை! அருமை!! அருமை!!!

CA Venkatesh Krishnan said...

ரொம்ப நல்லாருக்கு.

வடுவூர் குமார் said...

அருமையாக சொல்லியுள்ளீர்கள்.

bala said...

//உலகத்திலேயே இறைவனுக்கு தமிழ் மொழியில் உள்ள சொல் போல் எதிலும் இல்லை."கடவுள்".கட எல்லாவற்றையும் கடந்தவர்.உள்.. எல்லாவற்றின் உள்ளும் உள்ளவர்.எவ்வளவு பெரிய தத்துவத்தை இச்சொல் அடக்கியிருக்கிறது.//

ராதகிருஷ்ணன் அய்யா,
அட,இதனால் தான் தாடிக்கார தீவிரவாதி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லியதா?

பாலா

தமிழ் said...

/தமிழ்..

தமிழன்..

இச்சொற்களைக் கேட்கும்போதே..தேன் வந்து பாயுது காதினிலே..

மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கையில்லை.அப்படி என்று ஒன்று இருந்தால்,அப்பிறப்பும் தமிழனாகவே பிறக்க ஆசை/


அருமை

நசரேயன் said...

ரெம்ப நல்லா இருக்கு

குடுகுடுப்பை said...

தமிழனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன்.

குடுகுடுப்பை said...

bala said...

//உலகத்திலேயே இறைவனுக்கு தமிழ் மொழியில் உள்ள சொல் போல் எதிலும் இல்லை."கடவுள்".கட எல்லாவற்றையும் கடந்தவர்.உள்.. எல்லாவற்றின் உள்ளும் உள்ளவர்.எவ்வளவு பெரிய தத்துவத்தை இச்சொல் அடக்கியிருக்கிறது.//

ராதகிருஷ்ணன் அய்யா,
அட,இதனால் தான் தாடிக்கார தீவிரவாதி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லியதா?

பாலா//

இந்த பின்னூட்டத்தின் நோக்கம் என்ன?தயவு செய்து ஒரு பதிவின் நோக்கத்தை சிதறடிக்காதீர்கள்

மணிகண்டன் said...

சார். நல்ல பதிவு. ஆதி என்ற சொல்லின் பெருமையை விட்டுவிட்டீர்கள்.

ஆனா, இந்த தமிழுக்கு கொடுப்பேன் மூச்சு அப்படிங்கறது எல்லாம் ரொம்பவே அரசியலா போச்சு !

குடுகுடுப்பை :- பதிவின் நோக்கத்தை பின்னோட்டங்கள் சிதறடிக்காது. சற்றே திசை திருப்பும். அவ்வளவு தான் !

T.V.ராதாகிருஷ்ணன் said...

////SUREஷ் said...
இறைவனுக்கு தமிழ் மொழியில் உள்ள சொல் போல் எதிலும் இல்லை//



go od , goood, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்///





வருகைக்கும்...கருத்துக்களுக்கும் நன்றி SUREஷ்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///Xavier said...
அருமை! அருமை!! அருமை!!!///


வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி Xavier

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இளைய பல்லவன் said...
ரொம்ப நல்லாருக்கு//


வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி இளைய பல்லவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வடுவூர் குமார் said...
அருமையாக சொல்லியுள்ளீர்கள்.//

வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// bala said...
//உலகத்திலேயே இறைவனுக்கு தமிழ் மொழியில் உள்ள சொல் போல் எதிலும் இல்லை."கடவுள்".கட எல்லாவற்றையும் கடந்தவர்.உள்.. எல்லாவற்றின் உள்ளும் உள்ளவர்.எவ்வளவு பெரிய தத்துவத்தை இச்சொல் அடக்கியிருக்கிறது.//

ராதகிருஷ்ணன் அய்யா,
அட,இதனால் தான் தாடிக்கார தீவிரவாதி தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொல்லியதா?

பாலா///


வருகைக்கு நன்றி பாலா...உங்கள் கேள்விக்கு பதில்...குடுகுடுப்பையின் பின்னூட்டம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

////திகழ்மிளிர் said...
/தமிழ்..

தமிழன்..

இச்சொற்களைக் கேட்கும்போதே..தேன் வந்து பாயுது காதினிலே..

மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கையில்லை.அப்படி என்று ஒன்று இருந்தால்,அப்பிறப்பும் தமிழனாகவே பிறக்க ஆசை/


அருமை////


வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி திகழ்மிளிர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நசரேயன் said...
ரெம்ப நல்லா இருக்கு
வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி/// ...
ரெம்ப நல்லா இருக்கு நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///குடுகுடுப்பை said...
தமிழனாக பிறந்ததில் பெருமை அடைகிறேன்.///

ஆம்...ஆம்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

///குடுகுடுப்பை said...
இந்த பின்னூட்டத்தின் நோக்கம் என்ன?தயவு செய்து ஒரு பதிவின் நோக்கத்தை சிதறடிக்காதீர்கள்///

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
சார். நல்ல பதிவு. ஆதி என்ற சொல்லின் பெருமையை விட்டுவிட்டீர்கள்.//



அதுதான் சொல்லியிருக்கிறேனே மணி...
தமிழின் பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம்..
அந்தமும்..ஆதியும்...இல்லாதவன்.
இதிலும் அ..ஆ..இ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மணிகண்டன் said...


ஆனா, இந்த தமிழுக்கு கொடுப்பேன் மூச்சு அப்படிங்கறது எல்லாம் ரொம்பவே அரசியலா போச்சு !///


நல்ல வேளை...நான் அப்படி சொல்லலை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
குடுகுடுப்பை :- பதிவின் நோக்கத்தை பின்னோட்டங்கள் சிதறடிக்காது. சற்றே திசை திருப்பும். அவ்வளவு தான் !//

சொல்லிக்கொண்டே போகலாம்

கோவி.கண்ணன் said...

தமிழின் தோற்றம் அறியப்படதா ஒன்று அதைவிட வேறு பெருமை என்ன ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோவி.கண்ணன் said...
தமிழின் தோற்றம் அறியப்படதா ஒன்று அதைவிட வேறு பெருமை என்ன ?///

வருகைக்கு நன்றி