Wednesday, December 17, 2008

அந்த கிரகமும்..அதன் மக்களும்.. (சிறுகதை )

(இது ஒரு மீள் பதிவு)

அந்த கிரகத்தில் அரைகுறையாக ஆடை அணிந்திருந்த ஒரு பெண்ணைச்சுற்றி..ஒரு கூட்டம்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது போல ..சேட்டிலைட் மூலம் எடுக்கப் பட்டிருந்த புகைப்படத்துடன்
செய்தி ஒன்று அன்றைய செய்தித் தாள்களில் வந்திருந்தது.
அத்துடன் அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சத்தியக்கூறுகள் இருப்பதாகவும்..உயிர்கள்
வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறி இருந்தனர்.
விண்வெளி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள்..அடுத்ததாக உயிருள்ளவர்களை அந்த கிரகத்திற்கு அனுப்பி
வைக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி,பிரதமர் முதல் குப்பன்..சுப்பன் வரை பாராட்டு
தெரிவித்திருந்தனர்.
சில வல்லரசு நாடுகள் இந்த கண்டுபிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல்..விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ச்சியில்
ஈடுபடலாயினர்.
பத்து விண்வெளி வீரர்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டு...நான்கு பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அதில் சாதனா சாவ்லா என்று ஒரு பெண்ணும் இருந்தார்.
நாட்டின் பொருளாதார நிலை சரியாய் இல்லாததாலும்..பணவீக்கம் அதிகரித்து வருவதாலும்..
மேற்கொண்டு ஆராய்ச்சிகளுக்கு பண ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் இருப்பதாக நிதி அமைச்சர்
பட்டினியார்...தெரிவிக்க..அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சில கட்சிகள்..ஆதரவை..வாபஸ் வாங்கப்போவதாகவும்..அவர்கள்
தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுமென்றால்..விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான பணம்
ஒதுக்க வேண்டும் என்றும்..நிதி அமைச்சர் பட்டினியார் பதவி விலக வேண்டும் என்றும் நிபந்தனைகள்
விதித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல்..பிரதமர் தன் தலைப்பாக்குள் கையை விட்டு முடியை பிய்த்துக்
கொண்டார்.கட்சித் தலைவர் மானியா..விண்வெளி ஆராய்ச்சிக்கு...தடை இல்லை என்றும்..
தொடர்ந்து நிதி ஒதுக்கப் பட்டு..திட்டமிட்டப்படி வீரர்கள் அனுப்பப்படுவர் என்றும் கூறி
தற்காலிகமாக ஆட்சியை காப்பாற்றினார்.
நான்கு வீரர்களுடன் விண்கலம் புறப்படும் நாள் வந்தது.விண்வெளி விஞ்ஞானி சங்குண்ணி
மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார்.
10..8...7..6..5..4..3..2..1..0..
உஷ் என கலம் புகையைக் கக்கிக்கொண்டு பறந்தது.
**** ***** ***** *****
இரண்டு மாதம் தன் பயணத்தை முடித்துக்கொண்டு..சில புகைப்படங்களை அனுப்பிய வீரர்கள்
திரும்பினர்.
அவர்கள் பின் அளித்த அறிக்கை..

'நாங்கள் போன இடம் பூமி எனப்பட்டது.அதில் மக்கள் வாழ்கிறார்கள்.மூன்று பாகம் கடல்..ஒரு பாகம் நிலம்.
நாங்கள் இறங்கிய இடத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாய்..தியேட்டர் எனப்படும் இடத்தில் கூடுகின்றனர்.
வறுமையில் வாடினாலும்..ஒலி,ஒளி நிகழ்ச்சியான இவற்றுக்கு மக்கள் பணத்தை செலவழிக்க தயங்குவதில்லை.
அரைகுறையாக உடை உடுத்தியுள்ள நடிகைகளை பார்ப்பதிலும்..தனக்குப் பிடித்த நடிகர்களுக்கு பால்..பீர் போன்ற
திரவ பொருள் கொண்டு அபிஷேகம் செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை.இந்த பகுதிக்கு தமிழ்நாடு என்கிறார்கள்.
அவர்கள் பேசும் மொழி தமிழ்.இதுபோல பல மொழி பேசுபவர்கள் மற்ற இடங்களிலும் இருக்கிறார்களாம்.
தண்ணீருக்கு இவர்கள் மாற்றி...மாற்றி..அடித்துக் கொள்கிறார்கள்.
இப்படி இவர்கள் அறிக்கை நீண்டுக்கொண்டே போகிறது.
அவை அனைத்தும்..செவ்வாய் கிரக பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தன.
உடன்...நமீதாவின் ஒரு குத்தாட்ட புகைப்படமும் பிரசுரமாகி இருந்தது.

12 comments:

குடுகுடுப்பை said...

புகைப்படத்த போடாம ஏமாத்திட்டீங்களே.

கதை ரசிக்கும்படி இருந்தது.

நசரேயன் said...

/*
தண்ணீருக்கு இவர்கள் மாற்றி...மாற்றி..அடித்துக் கொள்கிறார்கள்
*/
தண்ணிக்கும் அடிச்சுக்குவோம், தண்ணிய போட்டும் அடிச்சுக்குவோம்

குடுகுடுப்பை said...

நசரேயன் said...


*/
தண்ணிக்கும் அடிச்சுக்குவோம், தண்ணிய போட்டும் அடிச்சுக்குவோம்//

தண்ணிய போட்டா சில சமயம் சேந்துக்குவோம்ல.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///குடுகுடுப்பை said...
புகைப்படத்த போடாம ஏமாத்திட்டீங்களே.

கதை ரசிக்கும்படி இருந்தது.///


கூகுள் ரீடர்ல நமீதாவை அதிகம் பேர் பார்த்ததில்...சிலர் உங்க பதிவி மூலம் பார்த்த பெருமை உங்களுக்கு போதாதா..புகைப்படம் வேற வேணுமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நசரேயன் said...
/*
தண்ணீருக்கு இவர்கள் மாற்றி...மாற்றி..அடித்துக் கொள்கிறார்கள்
*/
தண்ணிக்கும் அடிச்சுக்குவோம், தண்ணிய போட்டும் அடிச்சுக்குவோம்///

அது தெரிஞ்ச விஷயம்தானே

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நசரேயன் said...
/*
தண்ணீருக்கு இவர்கள் மாற்றி...மாற்றி..அடித்துக் கொள்கிறார்கள்
*/
தண்ணிக்கும் அடிச்சுக்குவோம், தண்ணிய போட்டும் அடிச்சுக்குவோம்///

அது தெரிஞ்ச விஷயம்தானே

துளசி கோபால் said...

:-))))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// துளசி கோபால் said...
:-))))))))))))))///

nanri madam

மங்களூர் சிவா said...

/
நமீதாவின் ஒரு குத்தாட்ட புகைப்படமும் பிரசுரமாகி இருந்தது.
/

பத்திரிகை சர்குலேஷன் எகிறியிருக்குமே!!!
:)))))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
/
நமீதாவின் ஒரு குத்தாட்ட புகைப்படமும் பிரசுரமாகி இருந்தது.
/

பத்திரிகை சர்குலேஷன் எகிறியிருக்குமே!!!//



செவ்வாய் கிரகத்தில் தினகரனோ,தினத்தந்தியோ கிடையாதாம்.
வருகைக்கு நன்றி சிவா..
எங்க ரொம்ப நாட்களாக காணோம்...

Shakthiprabha (Prabha Sridhar) said...

கதை மிக நன்றாய் இருந்தது :)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி
Shakthiprabha