Thursday, December 4, 2008

ஒயிட் காலர் ஊழியர்களே உஷார்

சமீபத்திய ஆய்வின்படி ..ஒயிட் காலர் எனப்படும், முழு நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இதய நோய்க்கான தாக்கம் அதிகம் இருக்கிறது என தெரிய வந்திருக்கிறது.அதிலும் குறிப்பாக ஐ.டி.,துறையினரிடையே இது அதிகம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது,

நம் ரத்தத்தில் HDL.,LDL.,இரு வகை கொலஸ்ட்ரால் உண்டு.இதில் HDL எந்த தீங்கும் விளைவிக்காது.மேலும் இது LDL கொலாஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால்..HDLஐ நல்ல கொழுப்பு என்கிறோம்.சாதாரணமாக இந்தியர்கள் ரத்தத்தில் இது குறைவாகவே இருக்கிறது.இது அதிகரிக்க வேண்டுமாயின் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

பொதுவாக நாம் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுவதில்லை.சிலருக்கு நேரமும் இருப்பதில்லை.இதனால் LDL என்னும் கெட்ட கொழுப்பு அதிகரித்து ஹார்ட் அட்டாக்கிற்கு வழி வகுக்கிறது.
உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.ஆண்களுக்கு 36 முதல் 38 அங்குலங்களும்..பெண்களுக்கு 30 முதல் 32 அங்குலங்களுக்குள்ளும் இடுப்பளவு இருக்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறையேனும் ரத்தக்கொழுப்பு,நீரிழிவு பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.தினமும் 6 மணி நேரமாவது தூங்குங்கள்.ஒரு மணி நேரமாயினும் உடற்பயிற்சி செய்யுங்கள்.எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.

சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்.

வாழ்வில் பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் இல்லை..ஆரோக்யமான வாழ்வுதான் செல்வம்.

9 comments:

anujanya said...

சுருக்கமான, அவசியமான, பயனுள்ள பதிவு. 'ஒரு மணிநேரம் உடற்பயிற்சி' சிரமமாக இருக்கும் பலருக்கும். இருந்தும் முயல வேண்டும்.

அனுஜன்யா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
அனுஜன்யா

குடுகுடுப்பை said...

நல்ல பதிவு

HDLஐ நல்ல கொழுப்பு என்கிறோம்.சாதாரணமாக இந்தியர்கள் ரத்தத்தில் இது குறைவாகவே இருக்கிறது.இது அதிகரிக்க வேண்டுமாயின் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.//

உடற்பயிற்சியே சுத்தமா இல்ல இங்க.

கபீஷ் said...

ரொம்ப நல்ல பதிவு! :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கபீஷ்

நசரேயன் said...

நல்ல தாக்கல் ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

மங்களூர் சிவா said...

நல்ல தகவல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மங்களூர் சிவா