Friday, February 13, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(14-2-09)

1. நெப்போலியன் காதல் விஷயத்திலும் மன்னனாம்.14 வயதிலிருந்து 60 வயது வரை அவனுக்கு காதலிகள் இருந்தனராம்.அவன் காதலித்து மணந்துக் கொண்ட ஜோஸஃபைனுக்கு எழுதிய காதல் கடிதங்கள் உலக பிரசத்திப் பெற்றவை.எகிப்தின் மீது அவர் படையெடுத்த போது..ஃபோரே என்னும் இருபது வயது பெண் மீது காதல் வயப்பட்டு..அவளைப் பிரிய மனமின்றி..அவளுக்கு ராணுவவீரன்
போல உடை அணிவித்து...தன்னுடன் யுத்தகளத்துக்கு அழைத்துச் சென்றானாம்.

2.பராசக்தி படத்தில்..பாரதிதாசனின் 'வாழ்க..வாழ்கவே..வளமான எமது திராவிடநாடு' என்ற பாடல் இடம் பெற்றது.திராவிட நாடு என்ற சொல்..திரையில் அப்போதுதான் முதன்முறையாக வந்ததாம்.

3.காதலர்தினத்தன்று எனக்கு ஞாபகம் வருவது...என்னைச் சுற்றி எப்பொதும் இருந்த ஃபிகர்கள்.அதிலிருந்து நான் தப்ப முயன்றாலும்..ஃபிகர்கள் என்னை விடவில்லை.இருங்க..இருங்க..அதுக்குள்ள அவசரப் படாதீங்க..நான் வேலை பார்த்த வங்கியில்..தினமும் கணக்குகள் balance ஆகாமல்..ஃபிகர்களை அதாவது எண்களை பார்த்ததைதான் சொல்கிறேன்.

4.கடலில் கலந்த பனித்துளி தன்னை இழப்பதில்லை..மாறாக தன்னை கடலளவு பெரிது படுத்திக் கொள்ளும்.

5.நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் சாதனையாளர் என்று நான் சொன்னால் நம்பமாட்டீர்கள்..ஆனால்..இச் செய்தியைப் பாருங்கள்.இந்த பூமியில் பிறப்போர் அனைவரும்..பத்துக் கோடிப் பேருடன் ஓட்டப்பந்தயத்தில் ஜெயித்தப் பிறகே பிறக்கிறார்கள்.ஆம்...தாம்பத்ய உறவின் போது..கிட்டத்தட்ட பத்துக் கோடி விந்தணுக்கள் உருவாகின்றனவாம்.அவற்றுள் ஒரே ஒரு விந்தணு மட்டுமே..எல்லாவற்றையும் தாண்டி..கரு முட்டையை அடையுமாம்.இப்போது சொல்லுங்கள்..பிறக்கும் முன்னரே நீங்கள் சாதனை புரிந்துள்ளீர்கள்.

6.ஒரு கவிதை-
நீ பருவமகள்
உண்மைதான்
குளித்து முடித்த உன்
கூந்தலில்
நீர் சொட்டும்போது
மழைக்காலம்
சீவும்போது
இலையுதிர்காலம்
நீ பூச்சூடும்போது
வசந்தகாலம்
அதை அள்ளி
நான் போர்த்திக்
கொள்ளும் போது
குளிர்காலம்.

- பழநிபாரதி

10 comments:

அகநாழிகை said...

// காதலர்தினத்தன்று எனக்கு ஞாபகம் வருவது...என்னைச் சுற்றி எப்பொதும் இருந்த ஃபிகர்கள்.அதிலிருந்து நான் தப்ப முயன்றாலும்..ஃபிகர்கள் என்னை விடவில்லை.இருங்க..இருங்க..அதுக்குள்ள அவசரப் படாதீங்க..நான் வேலை பார்த்த வங்கியில்..தினமும் கணக்குகள் balance ஆகாமல்..ஃபிகர்களை அதாவது எண்களை பார்த்ததைதான் சொல்கிறேன் //
மனச தேத்திக்கோங்க பிரதர்... நமக்கு வைச்சது அவ்வளோதான்.

மத்தபடி நீங்க (தொடர்ந்து) பதியற எல்லாமே சிறப்ப இருக்கு. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அகநாழிகை

முரளிகண்ணன் said...

ஒரிஜினல் பீச் சுண்டல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
முரளிகண்ணன்

கோவி.கண்ணன் said...

//3.காதலர்தினத்தன்று எனக்கு ஞாபகம் வருவது...என்னைச் சுற்றி எப்பொதும் இருந்த ஃபிகர்கள்.அதிலிருந்து நான் தப்ப முயன்றாலும்..ஃபிகர்கள் என்னை விடவில்லை.இருங்க..இருங்க..அதுக்குள்ள அவசரப் படாதீங்க..நான் வேலை பார்த்த வங்கியில்..தினமும் கணக்குகள் balance ஆகாமல்..ஃபிகர்களை அதாவது எண்களை பார்த்ததைதான் சொல்கிறேன்.//

இதெல்லாம் நம்ப முடியாது, இளம் வயதில் அரவிந்தசாமி போல் தான் இருந்திருப்பிங்க.

காஞ்சனா அம்மாவைக் கேட்டால் எல்லாம் தெரிஞ்சிடும்.

இப்பவும் பளிச்சின்னு தான் இருக்கிங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இதெல்லாம் நம்ப முடியாது, இளம் வயதில் அரவிந்தசாமி போல் தான் இருந்திருப்பிங்க. //

வஞ்சப்புகழ்ச்சி ?????

goma said...

தேங்காய் மாங்காய் சுண்டல் எதுவுமே சுவை குறையாமல் சுடச் சுட கார சாரமாய் பக்குவமாய் ஆக்கியிருக்கிறீர்கள்.
வாசிக்கும் போதே கடல் அலைகள் காலைத் தொடுகின்றன, மணல் தள்ளி வரும் காற்று முகத்தை வருடிச் செல்கிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி goma

கோவி.கண்ணன் said...

//T.V.Radhakrishnan said...
//இதெல்லாம் நம்ப முடியாது, இளம் வயதில் அரவிந்தசாமி போல் தான் இருந்திருப்பிங்க. //

வஞ்சப்புகழ்ச்சி ?????
//

வஞ்சப்புகழ்ச்சி அல்ல நெஞ்சப்புகழ்ச்சிதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கோவி.