Friday, February 27, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(28-2-09)

1.தமிழ்...தமிழனால்தான் கெட்டுப்போய் இருக்கிறது.பேசும்போது கொச்சை பதங்களுக்கு அளவுக்கு மிஞ்சி இடம் கொடுத்துவிடுவது.இரண்டாவது ஆங்கில மொழிகளைத் தயக்கமின்றி எல்லாக் காரியங்களுக்கும்..எல்லாச் சமயங்களிலும் கலந்து பேசும் வழக்கம்..மூன்றாவது..பேசும்போது..கைகளையும்..தலையையும் ஆட்டி..பேச்சுக்குப் பதிலாக உடலை உபயோகித்து பேசுவது.மொத்தத்தில்..சோம்பேறிகளைப் பெற்ற தாயைப்போல தமிழன்னை அவதிப் படுகிறாள்.இப்படிச் சொன்னவர் மூதறிஞர் ராஜாஜி.

2.இந்தியாவில்...1997 முதல் 2007 வரை..பத்தாண்டுகளில் மட்டும் விவசாயிகள் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 936 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.சராசரி ஆண்டுக்கு 18700 பேர்.நமக்கு சாப்பாடு போடும்..இந்திய விவசாயிகள் நிலை பாரீர். ஜெய் கிசான்..

3.ஸ்லம்....படத்தில்..வரும் தாராவி குப்பம் 520 ஏக்கர் பரப்பில் 93 பகுதிகளைக் கொண்ட 3600 குப்பங்களாம்.ஆசியாவிலேயே பெரிய குப்பம் இதுதானாம்.ஆனால்...2001ல் ஐ.ஏ.எஸ்.,தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வு பெற்றவர்..இந்த குப்பத்தை சேர்ந்தவராம்.தற்போது மும்பை கூடுதல் முனிசிபல் கமிஷனர் எஸ்.எஸ்.ஷிண்டே இங்கே பிறந்து வளர்ந்தவராம்.தற்போது 46 மருத்துவம் படிக்கும் மாணவர்களும்,38 பொறியியல் படிக்கும் மாணவர்களும் உள்ளனராம்.எங்கள் குப்பம் பற்றி..ஸ்லம்...படத்தில் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயமும்...அப்பட்டமான பொய் என்கின்றனராம் இப்பகுதி மக்கள்.

4.வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் தெரியுமா?..தாமரையைப் போல.,தாமரை சேற்றில் புதைந்து விடுகிறது.தாமரை மலர் மிகப் புனிதமானது.சேற்றின் நாற்றமோ,தண்ணீரின் சலசலப்போ..அதன் அழுக்கோ அதனை பாதிப்பதில்லை.தாமரை இலையோ இன்னும் நேர்த்தியாக ஒரு துளி தண்ணீர்கூட ஒட்டாமல்..'என்னைப்பார்..எவ்வளவு சுத்தம்..'என நம்மைப் பார்த்து சிரிக்கிறது.'வெள்ளத்தனைய நீர் மட்டம்' என்பது போல தண்ணீர் எந்த அளவு இருக்கிறதோ..அந்த அளவிற்கு தண்டுகளைச் சுருக்கி தாமரை அது பாட்டிற்கு..எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்கிறது.

5.ஒரு கவிதை

கடைசி சவம் விழுந்ததும்
கட்டாயம் அறிவிக்கப்படும்
போர் நிறுத்த அறிவிப்பு.

6.ஒரு ஜோக்

டாக்டர்-(அரசியல்வாதி நோயாளியிடம்) இரண்டுநாள் டயட் ரெஸ்ட் ரிக்ட் பண்ணினா உடம்பு குணமாயிடும்.
அரசியல்வாதி- அப்போ..மக்கள் ஒற்றுமையா இருக்கணும்னு இரண்டு நாள் உண்ணாவிரதம் அறிவிச்சுடறேன்.ஒரே கல்லில இரண்டு மாங்காய்

16 comments:

நிஜமா நல்லவன் said...

:)

நாமக்கல் சிபி said...

//கடைசி சவம் விழுந்ததும்
கட்டாயம் அறிவிக்கப்படும்
போர் நிறுத்த அறிவிப்பு.//

நச்சுன்னு இருக்கு!

/ஒரு ஜோக்/

செம காரம்!

மொத்தத்தில் நல்ல 'ஆ'காரம்!

தமிழ் said...

/1.தமிழ்...தமிழனால்தான் கெட்டுப்போய் இருக்கிறது.பேசும்போது கொச்சை பதங்களுக்கு அளவுக்கு மிஞ்சி இடம் கொடுத்துவிடுவது.இரண்டாவது ஆங்கில மொழிகளைத் தயக்கமின்றி எல்லாக் காரியங்களுக்கும்..எல்லாச் சமயங்களிலும் கலந்து பேசும் வழக்கம்..மூன்றாவது..பேசும்போது..கைகளையும்..தலையையும் ஆட்டி..பேச்சுக்குப் பதிலாக உடலை உபயோகித்து பேசுவது.மொத்தத்தில்..சோம்பேறிகளைப் பெற்ற தாயைப்போல தமிழன்னை அவதிப் படுகிறாள்.இப்படிச் சொன்னவர் மூதறிஞர் ராஜாஜி.
/

உண்மை தான்

தமிழ் said...

//நாமக்கல் சிபி said...

//கடைசி சவம் விழுந்ததும்
கட்டாயம் அறிவிக்கப்படும்
போர் நிறுத்த அறிவிப்பு.//

நச்சுன்னு இருக்கு!

/ஒரு ஜோக்/

செம காரம்!

மொத்தத்தில் நல்ல 'ஆ'காரம்!//அதே

Unknown said...

நல்ல திரட்டு.
தமிழ் பேசுவது என்பது என்னமோ செந்தமிழில் பேசுங்கள் என்பதல்ல. சாதாரணமாக பிறமொழிச் சொல் கலக்காமல் பேசுவது எளிது. கொஞ்சம் மெனக்கெட வேண்டும் முதலில். அவ்வளவுதான்.
தாராவிக் குப்பம் குறித்து நீங்கள் எழுதியது முழுக்க உண்மை. ஸ்லம்டாக் மில்லியனர் ஒரு திரைப்படம். ஆஸ்கர் கிடைத்தது - அதன் திரைவடிவுக்குத்தானே ஒழிய, உண்மையை உண்மையாகச் சொன்னதற்கு இல்லை.

வெட்டிப்பயல் said...

சுண்டல் நல்ல ருசி :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை ஐயா!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நிஜமா நல்லவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்...பாராட்டுக்கும் நன்றி சிபி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி திகழ்மிளிர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///திகழ்மிளிர் said...
//நாமக்கல் சிபி said...

//கடைசி சவம் விழுந்ததும்
கட்டாயம் அறிவிக்கப்படும்
போர் நிறுத்த அறிவிப்பு.//

நச்சுன்னு இருக்கு!

/ஒரு ஜோக்/

செம காரம்!

மொத்தத்தில் நல்ல 'ஆ'காரம்!//அதே///


நன்றி திகழ்மிளிர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Srimangai(K.Sudhakar)

T.V.ராதாகிருஷ்ணன் said...

///வெட்டிப்பயல் said...
சுண்டல் நல்ல ருசி :)//

நன்றி வெட்டிப்பயல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோதிபாரதி said...
அருமை ஐயா!//


நன்றி ஜோதிபாரதி

முரளிகண்ணன் said...

இரண்டாவது விஷயம் மனம் கனக்க வைத்தது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி முரளி