Thursday, February 12, 2009

திரையுலகில் ஒரு முத்து முத்துராமன்

முத்துராமன்...ஸ்ரீதரால் திரையில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர்.சஹஸ்ரநாமம் நாடகக் குழுவில் நடித்திக்கொண்டிருந்த இவரை நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் அறிமுகப் படுத்தினார் ஸ்ரீதர்.

நட்புடன் பழகும் குணம், மிகையில்லா யதார்த்த நடிப்பு ஆகியவை இவரை கிட்டத்தட்ட 25 வருஷங்கள் ... அவர் அமரர் ஆகும்வரை திரையுலகம் ஆதரித்தது.

இவர் நகைச்சுவை வேடத்தில் நடித்த படங்கள்..காதலிக்க நேரமில்லை,அனுபவி ராஜா அனுபவி, காசேதான் கடவுளடா..ஆகியவை.

சிவாஜியுடன் இவர் நடித்த பல படங்கள் வெற்றிப் படங்கள்.அவற்றுள் சில..அன்னை இல்லம்,பார் மகளே பார்,நெஞ்சிருக்கும் வரை,ஊட்டி வரை உறவு

குணச்சித்திர வேடத்தில் இவர் நடித்து வெற்றிப் பெற்றபடங்கள்..தீர்க்க சுமங்கலி,எதிர் நீச்சல்(நாயர்),வாழ்க்கைப்படகு
எந்த பாத்திரமானாலும் இமேஜ் பார்க்காமல் நடிக்கக் கூடியவர் இவர்.போலீஸ்காரன் மகள் படத்தில்..கதானாயகின் சகோதரனாக நடித்த இவரின் நடிப்பு..பாசமலர் ராஜசேகர் நடிப்புக்கு ஒப்பிடும் தன்மையானது.

இவர் நடிப்பில் வெற்றிப் பெற்ற சில படங்கள்..சித்தி,கற்பகம்,நத்தையில் முத்து. தாகம் என்ற ஆர்ட் ஃபில்மிலும் நடித்துள்ளார்.

பழக இனிமையானவர்..கால் பந்து ஆட்ட ரசிகர்., உடற்பயிற்சிகள் மூலம் தன் உடலை கட்டுமஸ்தாக வைத்திருந்தவர்...எந்த கிசு கிசுவிலும் சிக்காதவர்..தான் உண்டு தன் வேலையுண்டு..என தயாரிப்பாளர்களுக்கு தலைவலி தராதவர்..எந்த பாத்திரமானாலும் நடிக்கக் கூடியவர்..மொத்தத்தில்..ஒரு முத்தாய் இருந்தவர் முத்துராமன்.

தன் 55 வயதில்..ஊட்டியில்..ஒருநாள் காலை..உடன் பயிற்சி செய்துக்கொண்டிருந்த போது..மரணமடைந்தார்.

இவர் கடைசியாக நடித்த படம்'போக்கிரி ராஜா'...
..அதில்..ரஜினியின் வில்லன் இவர்.ஒரு வேளை..இந்த நல்ல மனிதர் வில்லனாக மாறுவதை பொறுத்துக் கொள்ள முடியாததால்..இயற்கை இவரை சீக்கிரமே தன்னிடம் அழைத்துக் கொண்டதோ???

22 comments:

பாலராஜன்கீதா said...

சூர்ய காந்தியிலும் நன்றாக நடித்திருப்பார்.

எதிர்நீச்சலில் சில காட்சிகளிலே வந்தாலும் மறக்க இயலாத நடிப்பு அவருடையது.

சின்னப் பையன் said...

நல்ல தொகுப்பு...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி
பாலராஜன்கீதா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ச்சின்னப் பையன்

வல்லிசிம்ஹன் said...

சினிமா உலகில் மிகவும் கவர்ந்த்வர் முத்துராமன். அவரைக் கொண்டாடாமல் விட்டோமே என்று வருத்தமாக இருக்கும். உங்கள் பதிவைப் படித்ததில் ஏதோ நிம்மதி. முகத்திலியே ஒரு அமைதி. காதலிக்க நேரமில்லையில் காட்டும் அசட்டுக் கம்பீரம்:)
எதிர்நீச்சலின் நயர், தீர்க்க சுமங்கலியின் கணவர்,பாமாவிஜயத்தின் நடுப்பிள்ளை இன்னும் எத்தனையோ.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன்

goma said...

அலட்டல் இல்லாத அருமையான நடிகர்.திரை உலகின் , ரசிகர்களின் இன்றைய ரசனையையும் போக்கையும் அவர் இருந்து பார்த்திருந்தால் மனம் வெதும்பிப் போயிருப்பார்

கோவி.கண்ணன் said...

//இந்த நல்ல மனிதர் வில்லனாக மாறுவதை பொறுத்துக் கொள்ள முடியாததால்..இயற்கை இவரை சீக்கிரமே தன்னிடம் அழைத்துக் கொண்டதோ??? //

கட்டுரை நன்றாக இருக்கிறது, பொருத்தமில்லாதா கடைசி வரிகளை தவிர்த்திருக்கலாம். பல நடிகர்கள் வில்லனாக இருந்து கதாநாயகனாக மாறியவர்கள்.

நம்பியார் தனது 90 விழுக்காடு படங்களில் கொடுமையான வில்லன் தான். திரைப்படத்தில் போடும் நிழல் வேடத்தை நிஜத்துக்கு பொருத்தி பார்க்க முடியாது.

முரளிகண்ணன் said...

ராதா கிருஷ்ணன் சார், அருமையான் பதிவு. சுவையான தகவல்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கோவி.கண்ணன் said...
பொருத்தமில்லாதா கடைசி வரிகளை தவிர்த்திருக்கலாம்.//


சாதாரணமாக பேச்சு வழக்கில்...விளையாட்டுக்கு கூட சொல்லாதே !.என்றெல்லாம் சொல்வதில்லையா? அதுபோல நடிப்புக்குக்கூட அவர் வில்லனாவது இயற்கைக்கு பிடிக்கவில்லை என்பதாக எடுத்துக் கொள்ளவும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..பாராட்டுக்கும் நன்றி முரளி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

இலைமறை காய்களாக விடப்பட்ட நடிகர்களைப் பற்றி அழகாகப் பகிர்வதற்கு நன்றி!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜோதிபாரதி

Anonymous said...

அவர் கடைசியாக ரஜினிக்கு வில்லனாக நடித்த படம் 'போக்கிரி ராஜா'...
'பாயும் புலி' அல்ல...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி
மாற்றி விட்டேன் புகழேந்தி

நானானி said...

உலகம் கண்டுகொள்ளாமல் விட்டாலும் ரசிகர்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்தவர் முத்துராமன். தன் நிதானமான நடிப்பால் கவர்ந்தவர். எந்த பாத்திரம் கொடுத்தாலும் அனாயாசமாக செய்து முடிப்பவர். குறிப்பாக நகைச்சுவை வேடம். கௌரவமாக வாழ்ந்ததில் சிவக்குமாருக்கு நிகரானவர்.

அவருக்கு நீங்கள் செலுத்தும் அஞ்சலியில் நானும் சேர்ந்துக்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நானானி

வருண் said...

பாலராஜன் கீதா சொன்னது போல் "சூரியகாந்தி" முக்கியமான கருத்தாழம்மிக்க ஒரு படம்!

அப்புறம்,

* அவந்தான் மனிதன் (சிவாஜியின் 175 வது படம்)

* சவாலே சமாளி (சிவாஜியின் 150 வது படம்)

* திருவிளையாடல் (கூந்தலில் மணம் இருக்கானு இவருக்குத்தான் சந்தேகம் வரும்).

போன்ற படங்களிலும் நடிகர் திலகத்துடன் நடித்து உள்ளார்!

*

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி நானானி

அன்பு said...

//எந்த கிசு கிசுவிலும் சிக்காதவர்//

ஆனால் இவர் பையன்???

T.V.ராதாகிருஷ்ணன் said...

//புலிகேசி said...
//எந்த கிசு கிசுவிலும் சிக்காதவர்//

ஆனால் இவர் பையன்???//

:-)))))))))