Sunday, February 15, 2009

ஐ.டி.யும்..மற்ற சில தொழில்களும்..

கடந்த சில மாதங்களாக உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலையால்..ஐ.டி., ஊழியர் பலர் வேலை இழந்துள்ளனர்.பலரின் மாத வருமானம் குறைந்துள்ளது.காலையில் வேலைக்குப் போகும் ஊழியர்கள்..அன்று நம் வேலையைக் காப்பாற்றிக்கொள்ளமுடியுமா? என்ற..கிலியுடன் செல்கின்றனர்.

இந்நிலையில்..இத் துறையால் பாதிக்கப்படும் மற்ற சில தொழில்கள்..

சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 200 ஐ.டி.அலுவலகங்களும்..அதில் வேலை செய்யும் 2.5 லட்சம் ஊழியர்களும் உள்ளனர்.தரமணி..டைடல் பூங்கா அருகே உள்ள..ஆட்டோ நிறுத்தத்தில்..ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரும் முன்பெல்லாம்..ஒருநாளைக்கு 1000 ரூபாய் சம்பாதிப்பார்களாம்.அதில்..450 ரூ.வண்டி வாடகை,150ரூ டீசல் செலவு போக ஒருநாளைக்கு 400 ரூபாய் வருமானம் இருக்குமாம்..ஆனால்..இப்போதோ 30 சதவிகிதம் வருமானம் குறைந்துவிட்டதாம்.ஒருவருக்கு இன்றைய வருமானம் இப்போதெல்லாம் 100 அல்லது 150 தானாம்.

விடு வாடகைக்கு விட்டவர்கள்..அநியாய வாடகை வாங்கிக் கொண்டிருந்தனர்.இரண்டு படுக்கை அறைக் கொண்ட அடுக்ககம்..15000 முதல் 20000 வரை வாடகை வாங்கப்பட்டது..ஆனால்..இப்போது 10000 வாடைகை என்றாலும் வர ஆளில்லையாம்.ரியல் எஸ்டேட் துறையினரோ..கமிஷனாக முன்பெல்லாம் 30000 வரை மாதம் சம்பாத்திதனராம்..இப்போது 10000 கூட கிடைப்பதில்லையாம்.

கார் விற்கும் தொழில் நடத்துபவர் ..ஒருவர்..26 வருடங்களாக இந்த வியாபாரத்தில் இருக்கிறேன்..ஆனால் இதுவரை எனக்கு இப்படிப்பட்ட நிலையில்லை.இப்போதெல்லாம் என்னால் மாதம் ஒரு கார் கூட விற்கமுடிவதில்லை என்கிறார்.

மின்சாதன பொருள்கள் விற்பனை செய்பவரோ..எனக்கு 40 சதவிகிதம் வருமானம் குறைந்து விட்டது என்கிறார்.

பல ஐ.டி.நிறுவனங்கள் தாங்கள் ஏக்கர் கணக்கில் வாங்கிப் போட்டிருந்த இடங்களை விற்க தயாராய் இருந்தும்..வாங்க ஆட்கள் இல்லை என்கின்றன.

விலைஉயர்ந்த ஷூக்கள் விற்கும் கடைகளில் கூட 50 சதவிகித தள்ளுபடி என்றாலும் வாங்க ஆட்களில்லையாம்.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில்..சாஃப்ட்வேர் தொழிலுக்கான வரிச்சலுகை..வரும் நிதி ஆண்டும் நீடிக்கப்படுமா..எனத் தெரியவில்லை என்கிறார்..ஒரு தொழிலதிபர்.

தோல் ஆடை,ஷூக்கள்,தோல் அணிகலன்கள் வியாபாரமும் படுத்து விட்டதாம்.

முன்பெல்லாம் என்ன விலையென்றாலும் வாங்கும் மக்கள்..இப்போது ஒவ்வொன்றிற்கும் விலை கேட்கின்றனர் என்கிறார்..சில்லறை பொருள்கள் விற்கும் வியாபாரி ஒருவர்.

வாழ்க்கைசக்கரம் என்பார்கள்.அந்த சக்கரத்தின்..நேற்றுவரை..மேலே இருந்த பகுதி கீழே சென்றுள்ளது..அது திரும்ப மேலே வந்துதானே ஆக வேண்டும்.

பொறுத்திருப்போம்.

8 comments:

நசரேயன் said...

வேற வழி இல்லை பொறுமையை தவிர

வடுவூர் குமார் said...

இப்போதைக்கு சக்கரம் நின்றுகொண்டிருக்கிறது.அனைவரும் வாழ யாராவது சீக்கிரம் சுற்ற வைத்தால் சரி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வடுவூர் குமார்

GNU அன்வர் said...

மாற்றம் ஒன்றே மாறாமல் இருப்பது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிந்தா மணி

goma said...

ஐ.டி.யால் எத்தனை பேர் அநியாயமாகப் பொருள் ஈட்டி வந்திருக்கின்றனர் என்பதை புள்ளி விவர்க்கணக்கில் கண்டேன்.
20 ரூபாய்,வண்டிச் சத்தத்துக்கு 200ம் 250ம் பெற்று வந்த ஆட்டோ ஓட்டுனர் தொடங்கி ’பேட்டா’ஷூ வரை தொழில் மந்தமானது குறித்து அவர்கள் வருத்தப் பட்டால் அதில் நியாயம் இல்லை.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற தத்துவத்தில் இருந்தார்கள்..

எந்த நிலையிலும் கஷ்டப் படும் நடுத்தர வர்க்கத்துக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?

[’அடுக்ககம்’ தமிழ் அருமை]

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஐ.டி.யால் தொடர் பாதிப்பு பற்ரித்தான் பதிவு.நடுத்தர வர்க்கம்..சாபம் வாங்கி வந்த வர்க்கம்..கடைசிவரை 'ஸீஸா' தான்..ஒரு அங்குலம் மேலே ஏறினால்..இரண்டங்குலம் இறக்கம்.