Monday, February 16, 2009

சத்தியராஜ்.என்னும் உயர்ந்த மனிதன்..

ஆரம்ப காலங்களில் வில்லனாக நடித்த நடிகர்கள் பின்னர் கதாநாயகனாக ஆவது ஒரு சில நடிகர்களுக்கே நடந்துள்ளது.

சிவாஜி கணேசன் கூட..தன் ஆரம்பகாலங்களில் துளிவிஷம்,பெண்ணின் பெருமை,கூண்டுக்கிளி போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.அந்தநாள்,திரும்பிப்பார் படங்களில் வில்லத்தனமான நாயகன்.
ரஜினி,மூன்றுமுடிச்சு,பதினாறு வயதினிலே,அவள் அப்படித்தான் போன்ற சில படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

சத்தியராஜிற்கும்..24 மணிநேரம்,காக்கிசட்டை,நூறாவது நாள் என பட்டியல் தொடரும்.கதாநாயகன் ஆவதற்கு முன் அதிகப் படங்களில் வில்லனாக நடித்தவர் இவர்தான்.பின்..இவர் நாயகனாக நடித்த பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன.இவர் நடிக்க..மணிவண்ணன் இயக்க வெளிவந்த பல படங்கள் வெற்றிதான். வாசு இயக்கத்தில் இவர் நடித்த நடிகன் படம் இவர் நடிப்புக்கு ஒரு மைல்கல் எனலாம்.

தமிழ்த்திரையுலகில்..சில நடிகர்கள் படம் எடுக்கவும் அதிகம் செலவழிக்க வேண்டாம்..அவர்கள் நடித்த படமும் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாது. ஜெய்ஷங்கருக்குப் பிறகு அப்படிப்பட்ட நடிகர் சத்தியராஜ் ஒருவரே!

நடிப்பைப்பொறுத்தவரை இவர் பாணி தனி.சிவாஜி,ரங்காராவ்,எம்.ஆர்.ராதா ஆகியவர்களின் கலவை இவர் எனலாம்.

அமைதிப்படையில் இவர் பாத்திரத்தை வேறு எவராலும் அவ்வளவு அழகாக செய்திருக்க முடியாது.

ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில்..தன் இமேஜைப் பற்றிக்கவலைப்படாமல்..பாத்திரத்திற்கு ஏற்றாற்போல..கிராமவாசி போலவே..கோவணம் கட்டி..குளித்தார்.மற்ற நடிகர்கள் இப்படி(கமல் நீங்கலாக)நடிப்பார்களா?தெரியாது.

பகல்நிலா..காமராஜர் கெட்டப்பில், அதே சமயம்..வஞ்சக அரசியல்வாதியாக...அருமை. கவுண்டமணியும்..இவரும் சேர்ந்தால்..ரசிகன் வயிற்றுவலியுடன் தான் அரங்கத்தை விட்டு வெளியே வருவான்.

பெரியார்...சிவாஜி ஆசைப்பட்டு..நடிக்க முடியா பாத்திரம்..இவருக்கு அதற்கான அதிர்ஷ்டம் இருந்தது.சிவாஜிகணேசன்.. சத்ரபதி சிவாஜியாக தத்ரூபமாக நடிப்பதைக் கண்டு..பெரியார் சிவாஜி என்ற பட்டத்தைக் கொடுத்தார்.அவர் இருந்திருந்தால்..'பெரியார்' படம் பார்த்ததும் சத்தியராஜிற்கு பெரியார் பட்டம் கொடுத்து..பெரியார் சத்தியராஜ் ஆக்கி இருப்பார்.

அது சரி..தலைப்புக்கு இன்னும் வரவில்லையே..அவர் பகுத்தறிவுவாதி என்பதால் அந்த தலைப்பா..6'2" உயரம் என்பதால் அந்த தலைப்பா என்றால்..அவை எல்லாவற்றிற்கும் மேலே..பாகுபாடு பார்க்காமல் அனைவரிடமும்..பந்தா இல்லாமல் பழகுபவர் என்பதால்தான் இந்த தலைப்பு.

11 comments:

வருண் said...

***அது சரி..தலைப்புக்கு இன்னும் வரவில்லையே..அவர் பகுத்தறிவுவாதி என்பதால் அந்த தலைப்பா..6'2" உயரம் என்பதால் அந்த தலைப்பா என்றால்..அவை எல்லாவற்றிற்கும் மேலே..பாகுபாடு பார்க்காமல் அனைவரிடமும்..பந்தா இல்லாமல் பழகுபவர் என்பதால்தான் இந்த தலைப்பு***

What a BIG JOKE!

மேடையில் கேவலமாக பேசி, த தலையில் மண்ணள்ளிப்போட்ட சத்யராசு, பாகுபாடு இல்லாமல் பழகுவாரா?

கொஞ்சம் உண்மையையும் சேர்த்து எழுதுங்க.

அப்போத்தான் நல்லா இருக்கும்.

ரசினிகாந்து கர்னாடகாவிலிருந்து வந்தவர்னு அவர் பாகுபடுத்தியதில்லையா என்ன?

ஆமா, நீங்க எந்த சத்ரராசு பற்றி சொல்றீங்க?

வெட்டிப்பயல் said...

//சிவாஜி,ரங்காராவ்,எம்.ஆர்.ராதா ஆகியவர்களின் கலவை இவர் எனலாம்//

இதுல யாருக்கு நிகராகவும் இன்னைக்கு இருக்கற தமிழ் இண்டஸ்ட்ரில யாரும் நடிக்க முடியாது. Not even Kamal Hassan

வெட்டிப்பயல் said...

//'பெரியார்' படம் பார்த்ததும் சத்தியராஜிற்கு பெரியார் பட்டம் கொடுத்து..பெரியார் சத்தியராஜ் ஆக்கி இருப்பார்.//

என்ன கொடுமை சரவணன்.

சத்ரபதி சிவாஜியை யாரும் பார்த்ததில்லை. நடிகர் திலகத்தோட நடிப்பு அவரை கண் முன் கொண்டு வந்துச்சுனு அவருக்கு அந்த பட்டம் கொடுத்தாங்க.

ஆனா பெரியார் படம் பெரியாரை முழுசா கண் முன்னாடி கொண்டு வரவில்லை. அதுவுமில்லாமல் பெரியாரோட ஒப்பிடற அளவுக்கு இனிமே தமிழ்நாட்ல ஒரு தலைவர் கிடைப்பாரானும் சொல்ல முடியாது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சத்தியராஜிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தவர்கள் என் கூற்றை ஒப்புக்கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறேன்..மற்றப்படி..உணர்ச்சிவசப்படும்போது..சிலர்..கலைஞர் உள்பட...பேசுவதை கணக்கில் எடுக்கக்கூடாது என்றே நினைக்கிறன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பெரியாருடன் அவரை ஒப்பிடவில்லை..அவரது நடிப்பை பற்றித்தான் எழுதியுள்ளேன்

வருண் said...

***மற்றப்படி..உணர்ச்சிவசப்படும்போது..சிலர்..கலைஞர் உள்பட...பேசுவதை கணக்கில் எடுக்கக்கூடாது***

அப்படியா?

மேடையிலே திட்டுவார், நேரில் கொஞ்சுவாரு. நேரில் கொஞ்சுவதை மட்டும் கணக்கில் எடுத்துக்கனும்?

இது ரொம்ப நல்லா இருக்கு!

You seriously believe in waht you are saying here, Mr. TVR?!

If you do, you are surprizing me! Or now only I am learning about you porperly?!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருண்...தங்கள் வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி...
இப்போதும்...நான் தவறாக ஏதும் எழுதவில்லை என்றே எண்ணுகிறேன்.,சத்யாராஜை ஒரிருமுறை சந்தித்தவன் என்ற முறையிலும் என் திரையுலக நண்பர்கள் மூலம் கேட்டதையும் தான் எழுதியுள்ளேன்.

அக்னி பார்வை said...

என்ன சார் ரொம்ப சூடா விவதம் போகுது அதனால நான் நெக்ஸ்ட் மீட் பண்றேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி...அக்னி பார்வை

கோவி.கண்ணன் said...

உங்களின் இந்த பதிவு 48 மணி நேரம் சூடான இடுகையில் இருக்கு.

என்ன டெக்னிக் ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கோவி.கண்ணன் said...
உங்களின் இந்த பதிவு 48 மணி நேரம் சூடான இடுகையில் இருக்கு.

என்ன டெக்னிக் ?///


கோவி தான் எனக்கு சொல்லணும்...