Sunday, February 22, 2009

தவறு செய்பவரா நீங்கள்...

மனிதனாய் பிறந்த நாம் தவறுகள் செய்வது சகஜம்.ஆனால் செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்.அதை நாம் செய்கிறோமா?

வளர..வளர ..நம் உடல் அளவிலும்...மனதளவிலும் இறுகி விடுகிறோம்.நமக்கென ஒரு அடையாளம் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.அதனால் நம்மால் நேர்மையாக இருக்க முடிவதில்லை.தவறிழைத்து விட்டோம் என்று தெரிந்ததுமே...தவறிழைத்த நபரிடம்...'மன்னித்து விடு..தெரியாமல் நடந்து விட்டது..' என்று பணிந்து சொல்வதில் குறைந்து விட மாட்டோம்.

ஆனால்..நாம் அப்படி செய்வதில்லை...என்ன செய்கிறோம்...நாம் செய்த தவறை நியாயப் படுத்துகிறோம்..

நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்.

சில சமயங்களில்..தவறு என அறியாது..சில வார்த்தைகளாலும், செயல்களாலும்..அடுத்தவரை காயப்படுத்தி விடுகிறோம்..அவர்கள் அதை சுட்டிக்காட்டினாலும் ஒப்புக்கொள்ளமாட்டோம்.

வாழைப்பழத்தோல் வழுக்கி..ஒருவர் கீழே விழுந்தால்...நம் மனதில் உள்ல கயமைத்தனம் நம்மை முதலில் சிரிக்க வைத்து விடுகிறது.பின்னர்தான்..மனித நேயம் விழித்துக்கொண்டு..அவருக்கு உதவி செய்ய விரைய சொல்கிறது.

நான்..ஒரு சமயம்...ஒரு  பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்.எனக்கு நகைச்சுவையாக இருந்தது...அவருக்கு வேதனையாக இருந்தது..என்பதை..அவர் பின்னுட்ட பதிலில் பார்த்தேன்.உடனே மின் அஞ்சலில்..அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்..ஆனால்..அவர் இதுநாள் வரை அதை புரிந்துக்கொண்டாரா என தெரியவில்லை.ஆனால்..என் மனம் நிம்மதி அடைந்தது.

ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.

தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம்.

15 comments:

கோவி.கண்ணன் said...

//தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம். //

:)

ஒப்புக் கொள்ளாததன் மூலம் நண்பர்கள் எதிரிகள் ஆகிவிடுவார்கள்.

goma said...

வாழ்த்தை தவறுதலால் எத்தனை தவறுகள் உருவாகின்றன.
யோசித்துப் பேசவேண்டும் என்று யோசிக்காமலேயே நிறைய பேர் பேசுகின்றனர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

அடியார் said...

நல்ல கருத்துக்கள்...

நிச்சயமாக, எப்போது ஒருவன் செய்த தவறிற்காக மனம்வருந்தி மன்னிப்பு கேட்கின்றானோ அப்போதே அவன் தவறுகள் காணாமல் போய்விடுகின்றன. அவன் தவறிழைக்காதவனாகின்றான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அடியார்

மணிகண்டன் said...

ரொம்ப நல்ல பதிவு சார். படிக்க எளிமையானதாக இருந்தாலும் கடைபிடிக்க மிகவும் கடினமான விஷயம். நிச்சயமாக முயற்சி செய்ய வேண்டும்.

குடுகுடுப்பை said...

சரியா சொல்லிருக்கீங்க..

வருண் said...

***மணிகண்டன் said...
ரொம்ப நல்ல பதிவு சார். படிக்க எளிமையானதாக இருந்தாலும் கடைபிடிக்க மிகவும் கடினமான விஷயம். .***

LOL! இப்போ என்ன சொல்ல வர்றீங்க?

***ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.

தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம்.***

நம்ம ரஜினி பாலிஸி மாதிரி இருக்கு. அதுக்கும் திட்டத்தான் செய்வார்கள்!

பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா!

பொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா!

நன்றி கெட்ட மாந்தரடா நான் அறிந்த பாடமடா!

பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு துன்பமடா! :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

நம்ம ரஜினி பாலிஸி மாதிரி இருக்கு.

:-)))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வருண்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

senthil said...

நீங்க‌ள் குறிப்பிட்டிருப்ப‌து அனைத்தும் ச‌ரி தான்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சூர்யா