Wednesday, February 4, 2009

இதுவரை கலைஞர் செய்தது என்ன?

கலைஞர் சமீப காலங்களில் இலங்கை தமிழர்கள் பிரச்னையில்..ஒன்றும் செய்யவில்லை என பரவலாக பேச்சு இருக்கிறது.கலைஞரின் உண்மைத் தொண்டர்களும் இந்த விஷயத்தில் அவரிடம் சற்று வருத்தமே..அடைந்துள்ளனர்.அப்படி எண்ணுபவர்கள் நினைவிற்கு...

1.பாராளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரும்,தமிழக ராஜ்ய சபா உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய வேண்டும்.இதற்கு முன்னோடியாக கனிமொழி தன் தந்தையிடம் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தார்.

2.மனித சங்கிலி போராட்டம்...சென்னையில் இருந்து கிட்டத்தட்ட செங்கை வரை...அனைத்து கட்சியினர்,பொது மக்கள்,கல்லூரி மாணவ..மாணவியர்.பள்ளி மாணவ..மாணவியர்..கொட்டும் மழையில்
நின்றனர்.கலைஞரும்..ஸ்டாலினும்...காரில் பயணித்தபடி குரோம்பேட்டை வரை சென்று வந்தனர்.

3.தமிழக எம்.பி.க்கள் பிரதமரைப்பார்த்து பேசினர்.

4.அனைத்து கட்சி தலைவர்களும்..கலைஞர் தலைமையில் பிரதமரை சந்தித்து..இலங்கையில் போர் நிறுத்தம் கோரினர்.பிரதமரும்..பிரணாப் முகர்ஜியை இலங்கை அனுப்புவதாக உறுதிமொழி அளித்தார்.

5.பொதுக்குழு கூட்டத்தில்...பிரதமர் உறுதிமொழி காப்பாற்ற கோரிக்கை.தாமதிக்கும் ஒவ்வொரு மணித்துளியும் ஒரு தமிழன் அங்கு இறக்கிறான்..என கண்களில் கண்ணீருடன் கலைஞர் உரை.

6.சட்டசபையில்..மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் விடப்பட்டது.

பிரணாப் இலங்கை பயணம்..தி.மு.க., பிரதமர் உறுதிமொழி படி நடந்ததாக சொன்ன போது...ராஜபக்சே..தன் அழைப்பின் பேரில்தான் பிரணாப் வந்ததாகக் கூறியது.இதன் நடுவில்..தமிழக அரசியல் வாதிகளை கோமாளிகள் என பொன்சேகா கூறியது.

48 மணி நேரம் போர்நிறுத்தம் அறிவிப்பு வந்தும்...போர் நீடித்தது

7..மருத்துவ மனையில் செயற்குழு கூடி...மக்களிடம் விளக்கக் கூட்டங்கள், மனித சங்கிலி போரட்டம் ஆகியவை நடத்தி...மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி..மக்கள் கருத்தை மத்திய அரசு அறிய வைப்பது என முடிவெடுத்தது.

இப்போது சொல்லுங்கள்..எவ்வளவு உருப்படியான காரியங்கள் நடந்துள்ளன. இது தெரியாமல்..கலைஞரை குறை.சொல்லக்கூடாது.

11 comments:

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கலைஞர் தமிழார்வம் உள்ளவர். அதனால் அவரைக் குறை சொல்வது தமிழர்க்கு அழகல்ல!

கோவி.கண்ணன் said...

//இப்போது சொல்லுங்கள்..எவ்வளவு உருப்படியான காரியங்கள் நடந்துள்ளன. இது தெரியாமல்..கலைஞரை குறை.சொல்லக்கூடாது. //

திமுக சார்பில் வெறும் சன் (குழும) டிவியையே நம்பி இருக்காமல் கலைஞர் (குழும) தொலைகாட்சி கிடைக்கும் படி செய்து நாட்டுக்கு கலைச்சேவை ஆற்றுகிறாரே அது பெரிய சாதனை இல்லையா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...

//இப்போது சொல்லுங்கள்..எவ்வளவு உருப்படியான காரியங்கள் நடந்துள்ளன. இது தெரியாமல்..கலைஞரை குறை.சொல்லக்கூடாது. //

திமுக சார்பில் வெறும் சன் (குழும) டிவியையே நம்பி இருக்காமல் கலைஞர் (குழும) தொலைகாட்சி கிடைக்கும் படி செய்து நாட்டுக்கு கலைச்சேவை ஆற்றுகிறாரே அது பெரிய சாதனை இல்லையா ?//





வீம சேன மகராஜா மரத்தேப் புடிங்கினாரே!
ஆமாமா டிங்கினாரே மரத்தே பு டிங்கினாரே!

மணிகண்டன் said...

இதையும் படிங்க.

http://dinamalar.com/fpnnews.asp?News_id=2922&cls=row3

T.V.ராதாகிருஷ்ணன் said...

///ஜோதிபாரதி said...
கலைஞர் தமிழார்வம் உள்ளவர். அதனால் அவரைக் குறை சொல்வது தமிழர்க்கு அழகல்ல!///

:-))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

////கோவி.கண்ணன் said...
//இப்போது சொல்லுங்கள்..எவ்வளவு உருப்படியான காரியங்கள் நடந்துள்ளன. இது தெரியாமல்..கலைஞரை குறை.சொல்லக்கூடாது. //

திமுக சார்பில் வெறும் சன் (குழும) டிவியையே நம்பி இருக்காமல் கலைஞர் (குழும) தொலைகாட்சி கிடைக்கும் படி செய்து நாட்டுக்கு கலைச்சேவை ஆற்றுகிறாரே அது பெரிய சாதனை இல்லையா ?///

கண்டிப்பாக பெரிய சாதனை..அதுவும் ஒரு மாதத்திற்குள்..அனுமதி பெற்று ஆரம்பிக்கப்பட்ட சேனல் ஆயிற்றே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோதிபாரதி said...

வீம சேன மகராஜா மரத்தேப் புடிங்கினாரே!
ஆமாமா டிங்கினாரே மரத்தே பு டிங்கினாரே!//
ஆமாம் மரத்தே பு டிங்கினாரே!!!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மணிகண்டன் said...
இதையும் படிங்க.

http://dinamalar.com/fpnnews.asp?News_id=2922&cls=row3///

:-)))))))))

நசரேயன் said...

சொல்லமா அவரு எவ்வளவு செய்து இருக்காரோ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
சொல்லமா அவரு எவ்வளவு செய்து இருக்காரோ?//

சொல்லாமல் செய்வர் பெரியோர்.(!!!!!) என்கிறீர்களா?