Wednesday, March 31, 2010

நினைவில் நிற்கவேண்டியவை

அவள் அதி புத்திசாலி பெண்..தனக்கு எல்லாம் தெரியும் என்று சற்று கர்வமும் உண்டு..திருமண வயதை எட்டியதும்..தந்தை அவளுக்கு ஒரு மாப்பிள்ளையைப் பார்த்தார்.ஆனால் பெண்ணோ..'என் அறிவிற்கு..இந்த உலகில் மிகவும் உயர்ந்த ஒருவரைத்தான் நான் மணப்பேன்..'என்று தந்தைப் பார்த்த வரனை புறக்கணிக்க..தந்தையும்..'சரி உன் விருப்பப்படி ஒருவனைத் தேர்ந்தெடுத்துச் சொல்' என்றார்.

மகள் தேட ஆரம்பித்தாள்..உலகில் உயர்ந்த ஒருவர் வேண்டும்..அது யாராய் இருக்கக் கூடும்..என எண்ணியவளுக்கு..அந்நாட்டு இளவரசர் பட்டத்து யானை மீது பவனி வரும் காட்சி பட்டது.'ஆகா..இவர்தான் உயர்ந்தவர்..எனக்குத் தகுதியானவர்' என்று எண்ணிய போது..யானை மீது வந்த இளவரசர் கீழே குதித்து..எதிரே வந்த சந்நியாசி ஒருவர் காலில் விழுந்தார்.

அப்படியெனில்..இந்த சந்நியாசியே உயர்ந்தவர்..என அவள் எண்ணியபோதே..அந்த சந்நியாசி பக்கத்தில்..ஒரு ஆலமரத்தினடியில் இருந்த கடவுளை வணங்கினார்.

அப்போது அந்த சந்நியாசியைவிட அந்த சிலை உயர்ந்தது என எண்ணினாள்.அந்த நேரம் ஒரு நாய் வந்து..தன் ஒரு காலைத் தூக்கியது..சிறுநீர் அபிஷேகம் சிலைக்கு..

ஆகா..இந்த நாயே உயர்வானது என நினைக்கும் நேரத்தில்..ஒரு சிறுவன் கல்லால் நாயை அடித்து விரட்ட..அந்த சிறுவனே உயர்ந்தவன் என நினைத்தாள்.

அப்போது அந்த சிறுவனை ஒரு இளைஞன் வந்து.."ஏன் அந்த நாயைக் கல்லால் அடிக்கிறாய்?' என கண்டித்தான்.

உடன் அவள் அந்த இளைஞன் தான் உயர்ந்தவன் என தீர்மானித்து தந்தையிடம் சொல்ல..அவன் வேறு யாருமல்ல.முதலில் தந்தைப் பார்த்த மாப்பிள்ளையே என அவள் அறியவில்லை.

உயர்ந்தவர் ..தாழ்ந்தவர் என்பதை யார் தீர்மானிப்பது..அதற்கான அளவுகோல் என்ன..

ஒரு கோவில் திருவிழா...புகழ் வாய்ந்த அக்கோவில் தேர்த்திருவிழா..ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியுள்ளனர்...நூறு அடிகளுக்கும் மேலான உயரத் தேர்.வடம் பிடித்து நூற்றுக்கணக்கான நபர்கள் இழுக்கின்றனர்.தேர் நகர்கிறது..ஆனால் அது நகர ஆதாரமான அச்சாணி சமர்த்தாக வாயை மூடிக் கொண்டிருக்கிறது. ஆணவத்தோடு..தேரோட்டத்திற்கு நான் தான் காரணம் என ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.ஆகவே இங்கு உயர்ந்தது அச்சாணியே..தேர் அல்ல..இதையே வள்ளுவர்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்கிறார்.

செய்யும் செயல்களே எதையும் தீர்மானிக்கிறது..

18 comments:

செந்தில் நாதன் Senthil Nathan said...

நான் கூட "6 அடி 4 அங்குலம்" உயர்ந்த செந்தில் நாதன் தான் உயர்ந்தவன் என்று சொல்லிடுவாள்னு பயந்துட்டேன் :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

///செந்தில் நாதன் said...
நான் கூட "6 அடி 4 அங்குலம்" உயர்ந்த செந்தில் நாதன் தான் உயர்ந்தவன் என்று சொல்லிடுவாள்னு பயந்துட்டேன் :-)//

ஆளும் வளரணும்..அறிவும் வளரணும் ..அதுதாண்டா வளர்ச்சி..என்பது ஒரு பிரபல கவிஞரின் வரிகள்

சே.ராஜப்ரியன் said...

நன்று

goma said...

தமிழ் இலக்கியம் உருளுவதே ,வள்ளுவர் எழுத்தாணியில் தோன்றிய ,அச்சாணியால்தானே

Chitra said...

செய்யும் செயல்களே எதையும் தீர்மானிக்கிறது..

.... :-) nice write-up!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சேரா.ப்ரியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
தமிழ் இலக்கியம் உருளுவதே ,வள்ளுவர் எழுத்தாணியில் தோன்றிய ,அச்சாணியால்தானே//

நன்று gOma

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Chitra said... .
... :-) nice write-up!//

நன்றி Chitra

மணிகண்டன் said...

அழகான குறள் விளக்கம். கலக்குங்க சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மணிகண்டன்

"உழவன்" "Uzhavan" said...

சூப்பர் சார்..

உண்மைத்தமிழன் said...

ஸார்.. அருமையான விளக்கம்..! நன்றி..!

மாதேவி said...

நல்ல இடுகை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//"உழவன்" "Uzhavan" said...
சூப்பர் சார்..//


நன்றி Uzhavan

T.V.ராதாகிருஷ்ணன் said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஸார்.. அருமையான விளக்கம்..! நன்றி..!//


வருகைக்கு நன்றி உண்மைத் தமிழன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மாதேவி said...
நல்ல இடுகை.//


நன்றி மாதேவி

இளமுருகன் said...

குறளுக்கு புதுமையான பொருள் விளக்கம்,எளிமையானதுகூட.
கலக்குங்கள்.T.V.ராதாகிருஷ்ணன் என்பதை விட ''திருக்குறள்'' ராதாகிருஷ்ணன் என்றே அழைக்கலாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இளமுருகன்