Thursday, April 1, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(2-4-10)

நாடு முழுதும் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்வி அளிக்கும் சட்டம் அமுலுக்கு வந்துவிட்டது.படிக்காத இந்த வயதுக் குழந்தைகள் எல்லாம் கண்டறியப் பட்டு..தேவையான பயிற்சி அளிக்கப் பட்டு அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கப் படுவார்கள்.இதனால் விரைவில் கல்வி அறிவு நிறைந்த சமுதாயம் ஏற்பட வழி ஏற்படும்.

2)முன்பெல்லாம் ஒருவரிடம் இருந்து ரத்தம் பெற்றால் ஒருத்தருக்கு மட்டுமே பயன்படும்..ஆனால் இப்போதெல்லாம் ஒருவரிடமிருந்து எடுக்கப் படும் ரத்தத்தை..நான்கு பேருக்குக் கொடுக்கலாமாம்.,ரத்தத்தை நான்காகப் பிரித்து..'சிவப்பு அணுக்கள்' அனீமியா உள்ளவர்களுக்கும்..'பிளேட்லெட்ஸ்' எனப்படும் தட்டணுக்கள் புற்றுநோய் நோயாளிகளுக்கும்..தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு நினநீர் (பிளாஸ்மா) தரப்படுகிறது.க்ரையோபிரசிபிடேட்..ரத்தம் உறையாத..ரத்த போக்கு உள்ளவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது

3)இந்தியாவில் விற்கப்படும் செல்ஃபோன்களில் 80 சதவிகிதம் சென்னையில் தயாரிக்கப் படுகிறது.வாகனங்களில் 30 சதவிகிதம் தமிழகத்தில் தயாராகிறது.தோல் பொருள்கள் 45 சதவிகிதமும்..ஜவுளி உற்பத்தி 50 சதவிகிதமும் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

4)எந்த ஒரு பொருளை நாம் துரத்திச் சென்றாலும்..அது நம்மை விட்டு ஓடிப் போகும்..அப்படித் துரத்துவதை நிறுத்தினால் அந்தப் பொருள் தானே நம்மைத் தேடி வரும்

5)கடந்த பத்து நாட்களாக பதிவர்களிடையே புரிதல் இல்லை என்பதை பல இடுகைகள் காட்டுகின்றன..எழுதுவதும்..பேசுவதும்..அடிப்படை உரிமை என எண்ணுபவர்கள்..அதே உரிமை அடுத்தவர்களுக்கும் உள்ளது என்பதை ஏன் புரிந்துக் கொள்வதில்லை என்று தெரியவில்லை

6)விலங்குகளுக்கு ஐந்து அறிவு..மனிதனுக்கு ஆறு அறிவு..என்று சொல்கிறோம்..ஆறறிவு என்றால் என்ன என்று பார்த்தோமானால்..உடல்,நாக்கு,மூக்கு,கண்.காது, இதயம் ஆகியவற்றால் அறிவதே ஆறறிவு

7)உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
இக்குறள் சொல்வது போல நடந்துக் கொண்டு கற்றுக் கொள்ள இனி தீர்மானித்துள்ளேன்..

8)எல்லாம் தெரியும்

என்றிருந்தேன்

எல்லாம் தெரிந்தவர்களை

எள்ளி நகைக்கும் போது

எதுவுமே தெரியாதவன்

என்றுணர்ந்தேன்

எல்லாம் தெரிந்தவர்

எதுவும் தெரியாதவராய்

வாளாயிருந்த போது


9) கொசுறு..ஒரு ஜோக்

ஆசிரியர்- (மாணவனிடம்) உங்கப்பாவிற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து..மாதம் நூறு ரூபாயாக திருப்பித் தரச் சொன்னேன்..ஆறு மாதங்கள் கழித்து..உங்கப்பா எனக்கு எவ்வளவு மீதம் கடன் தர வேண்டியிருக்கும்?

மாணவன்- ஆயிரம் ரூபாய் சார்

ஆசிரியர்- உனக்கு இந்த சின்னக் கணக்குக் கூடத் தெரியவில்லையே

மாணவன்- உங்களுக்குத்தான் எங்கப்பாவைப் பற்றித் தெரியலே

34 comments:

பிரபாகர் said...
This comment has been removed by the author.
பிரபாகர் said...

ஏற்கனவே படித்த நகைச்சுவை என்றாலும், இப்போதும் சிரித்தேன் அய்யா! ரத்தம் பற்றிய தகவல் அருமை.

பிரபாகர்...

vasu balaji said...

வழக்கம் போல் அருமை:)

க.பாலாசி said...

//இந்தியாவில் விற்கப்படும் செல்ஃபோன்களில் 80 சதவிகிதம் சென்னையில் தயாரிக்கப் படுகிறது.வாகனங்களில் 30 சதவிகிதம் தமிழகத்தில் தயாராகிறது.தோல் பொருள்கள் 45 சதவிகிதமும்..ஜவுளி உற்பத்தி 50 சதவிகிதமும் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.//

இவ்ளோயிருந்தும் என்னங்க பண்றது... இதுலையும் அரசியல்வாதிங்களுக்கு பங்கு இருக்கே...

அந்த 5வது பாயிண்ட்... செமயானது....

இராகவன் நைஜிரியா said...

// மாணவன்- உங்களுக்குத்தான் எங்கப்பாவைப் பற்றித் தெரியலே //

கலக்கல்.

// 4)எந்த ஒரு பொருளை நாம் துரத்திச் சென்றாலும்..அது நம்மை விட்டு ஓடிப் போகும்..அப்படித் துரத்துவதை நிறுத்தினால் அந்தப் பொருள் தானே நம்மைத் தேடி வரும் //

ஒரு ஜோக்குக்காக... தப்பா எடுத்துக்காதீங்க... டோண்ட் மிஸ்டேக் மீ...

நாம ஒரு புலியை துரத்துகின்றோம் என வச்சுகுங்க... வேண்டாம் எனவிட்டுவிடும் போது அது நம்ம துரத்த ஆரம்பிச்சா என்ன ஆகும்?

//இதனால் விரைவில் கல்வி அறிவு இல்லா சமுதாயம் ஏற்பட வழி ஏற்படும்.//

இலவசத்திட்டங்களை விட சமுதாயத்திற்கு இந்த திட்டம் நலல் பலன் அளிக்கும்.

//எல்லாம் தெரிந்தவர்

எதுவும் தெரியாதவராய்

வாளாயிருந்த போது //

நிறை குடம் தளும்பாது.

நர்சிம் said...

//
4)எந்த ஒரு பொருளை நாம் துரத்திச் சென்றாலும்..அது நம்மை விட்டு ஓடிப் போகும்..அப்படித் துரத்துவதை நிறுத்தினால் அந்தப் பொருள் தானே நம்மைத் தேடி வரும்//

வருந்தி அழைத்தாலும் வாராதவை வாரா..பொருந்துவன போமினென்றாலும் போகா.. இருந்தேங்கி நெஞ்சம் புண்ணாகி நெடுந்தூரம் தாம் நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில்..
*****
அந்த ஜோக் அட்டகாசம் சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பிரபா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
வழக்கம் போல் அருமை:)//

நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இவ்ளோயிருந்தும் என்னங்க பண்றது... இதுலையும் அரசியல்வாதிங்களுக்கு பங்கு இருக்கே...

அந்த 5வது பாயிண்ட்... செமயானது....//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாலாசி

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// இராகவன் நைஜிரியா said...
// 4)எந்த ஒரு பொருளை நாம் துரத்திச் சென்றாலும்..அது நம்மை விட்டு ஓடிப் போகும்..அப்படித் துரத்துவதை நிறுத்தினால் அந்தப் பொருள் தானே நம்மைத் தேடி வரும் //

ஒரு ஜோக்குக்காக... தப்பா எடுத்துக்காதீங்க... டோண்ட் மிஸ்டேக் மீ...

நாம ஒரு புலியை துரத்துகின்றோம் என வச்சுகுங்க... வேண்டாம் எனவிட்டுவிடும் போது அது நம்ம துரத்த ஆரம்பிச்சா என்ன ஆகும்?//

ஏடாகூடம் என்பதற்கு என்ன அர்த்தம் என அகராதியில் தேடிப்பார்த்தேன்..இராகவன்,நைஜீரியா என்றிருந்தது
கோபம் வேண்டாம்..சும்மா ஜோக் ..அவ்வளவுதான் :-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நைஜிரியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நர்சிம் said...
வருந்தி அழைத்தாலும் வாராதவை வாரா..பொருந்துவன போமினென்றாலும் போகா.. இருந்தேங்கி நெஞ்சம் புண்ணாகி நெடுந்தூரம் தாம் நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில்..//

அருமை நர்சிம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
:)///


நன்றி ஷங்கர்

ஈரோடு கதிர் said...

நல்ல சுவை

மரா said...

ஜோக் சூப்பர் சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நர்சிம் said...
வருந்தி அழைத்தாலும் வாராதவை வாரா..பொருந்துவன போமினென்றாலும் போகா.. இருந்தேங்கி நெஞ்சம் புண்ணாகி நெடுந்தூரம் தாம் நினைந்து துஞ்சுவதே மாந்தர் தொழில்..//



ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்

இராகவன் நைஜிரியா said...

// ஏடாகூடம் என்பதற்கு என்ன அர்த்தம் என அகராதியில் தேடிப்பார்த்தேன்..இராகவன்,நைஜீரியா என்றிருந்தது
கோபம் வேண்டாம்..சும்மா ஜோக் ..அவ்வளவுதான் :-)))//

குபுக்குன்னு சிரிச்சுட்டேன்...

வீட்டில் என் மனைவியிடமும், மகனிடமும் காண்பித்த போது, அவங்க சொன்னது...

உங்களை நேரில் பார்க்காமலேயே இவர் கரெக்டா சொல்கின்றாரே எப்படி அப்படின்னு அவங்க கேட்கறாங்க..

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஈரோடு கதிர் said...
நல்ல சுவை//


வருகைக்கு நன்றி ஈரோடு கதிர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///இராகவன் நைஜிரியா said...
குபுக்குன்னு சிரிச்சுட்டேன்...

வீட்டில் என் மனைவியிடமும், மகனிடமும் காண்பித்த போது, அவங்க சொன்னது...

உங்களை நேரில் பார்க்காமலேயே இவர் கரெக்டா சொல்கின்றாரே எப்படி அப்படின்னு அவங்க கேட்கறாங்க..//

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மயில்ராவணன் said...
ஜோக் சூப்பர் சார்.///

நன்றி மயில்ராவணன்

Ashok D said...

காசு குடுத்து படிககறதே கஷ்டம்.. இதுல இலவச கல்வி எப்படி இருக்குமோ?? தேவுடா? பாவம் பசங்க...சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Ashok

சிநேகிதன் அக்பர் said...

அனைத்து தகவல்களும் புதுசாகவும் அருமையாகவும் இருக்கு சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
அக்பர்

உண்மைத்தமிழன் said...

[[[கடந்த பத்து நாட்களாக பதிவர்களிடையே புரிதல் இல்லை என்பதை பல இடுகைகள் காட்டுகின்றன. எழுதுவதும், பேசுவதும் அடிப்படை உரிமை என எண்ணுபவர்கள் அதே உரிமை அடுத்தவர்களுக்கும் உள்ளது என்பதை ஏன் புரிந்து கொள்வதில்லை என்று தெரியவில்லை]]]

எனக்கும் தெரியலை ஸார்..!

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

http://www.thalaivan.com/button.html


Visit our website for more information http://www.thalaivan.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[கடந்த பத்து நாட்களாக பதிவர்களிடையே புரிதல் இல்லை என்பதை பல இடுகைகள் காட்டுகின்றன. எழுதுவதும், பேசுவதும் அடிப்படை உரிமை என எண்ணுபவர்கள் அதே உரிமை அடுத்தவர்களுக்கும் உள்ளது என்பதை ஏன் புரிந்து கொள்வதில்லை என்று தெரியவில்லை]]]

எனக்கும் தெரியலை ஸார்..!///


வருகைக்கு நன்றி உண்மைத் தமிழன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி
thalaivan

Unknown said...

//நாடு முழுதும் 6 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாய இலவசக் கல்வி அளிக்கும் சட்டம் அமுலுக்கு வந்துவிட்டது.படிக்காத இந்த வயதுக் குழந்தைகள் எல்லாம் கண்டறியப் பட்டு..தேவையான பயிற்சி அளிக்கப் பட்டு அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கப் படுவார்கள்.இதனால் விரைவில் கல்வி அறிவு இல்லா சமுதாயம் ஏற்பட வழி ஏற்படும்.//

அய்யா...கல்வி அறிவு இல்லா சமுதாயம் இல்லைங்க ...கல்வி அறிவு நிறைந்த என்று இருக்க வேண்டும் என என் சிற்றறிவுக்கு படுகிறது.

இளமுருகன்
நைஜீரியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Elamurugan said...
அய்யா...கல்வி அறிவு இல்லா சமுதாயம் இல்லைங்க ...கல்வி அறிவு நிறைந்த என்று இருக்க வேண்டும் என என் சிற்றறிவுக்கு படுகிறது.

இளமுருகன்
நைஜீரியா//

இளமுருகன்..சற்று யோசித்துப் பாருங்கள்..நிறைந்த ..என்னும் போது....சிலர் விட்டுப் போகலாம்...அப்படிக்கூட இருக்கக்கூடாது என மனம் விழைந்ததால்...கவ்லி அறிவு இல்லா என எழுதினேன்..ஒரு 'ஏ"காரம் போட்டிருந்தால்..(அறிவே) உங்களுக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டிருக்காது என எண்ணுகிறேன்..வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி

இளமுருகன் said...

நன்றி அய்யா...இருந்தாலும் ''கல்வி அறிவு இல்லா சமுதாயம்'' என்பது தவறான வரிகள்தான்.
கல்வி அறிவு இல்லா சமுதாயம் ஏற்படவா கட்டாய இலவசக் கல்வி அளிக்கும் சட்டம் கொண்டு வந்தார்கள்?

இளமுருகன்
நைஜீரியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

///இளமுருகன் said...
நன்றி அய்யா...இருந்தாலும் ''கல்வி அறிவு இல்லா சமுதாயம்'' என்பது தவறான வரிகள்தான்.
கல்வி அறிவு இல்லா சமுதாயம் ஏற்படவா கட்டாய இலவசக் கல்வி அளிக்கும் சட்டம் கொண்டு வந்தார்கள்?

இளமுருகன்//
நைஜீரியா


உங்கள் எண்ணத்தை ஏற்று..அப்படியே திருத்தம் செய்து விட்டேன்..நன்றி இளமுருகன்

இளமுருகன் said...

''மேன் மக்கள் மேன் மக்களே''

நன்றி அய்யா

இளமுருகன்
நைஜீரியா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி இளமுருகன்..தமிழா..தமிழா முகப்பில் உள்ள குறளை பார்த்தீர்களா?