
அண்ணாவால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்ட பாரதிதாசனின் 120ஆம் பிறந்தநாள் விழா இன்று.
பாரதிதாசனின்..புகழ் பெற்ற நம்மால் மறக்க முடியா வரிகள்..
'புதியதோர் உலகம் செய்வோம்..கெட்ட
போரிடும் உலகை வேருடன் சாய்ப்போம்'
மற்றும்..
தமிழுக்கு அமுதென்று பெயர்-அந்தத்
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்'
'சங்கே முழங்கு' என்ற பாடலும் திரைப்படத்திலும் பாடப்பட்டு புகழ் பெற்றது..
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? என்ற பாடலும் பிரசித்தம்.
உவமைகள் சொல்வதில் மன்னர் இவர்.இவர் தன் படைப்புகளில் 900 க்கும் மேற்பட்ட உவமைகளை சொல்லியிருப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.
உவமை என்பதை ஆங்கிலத்தில் simile என்பர்.உவமை என்பது தெரிவிக்க விரும்பும் பொருளைத்..தெரிந்த பழைய பொருளோடு ஒப்பிட்டுச் சொல்வதே யாகும்..
உதாரணமாக..பாரதிதாசன் மணல் மேட்டை உவமைப்படுத்தும் போது..அந்த மணலின் மென்மைத் தன்மையை..'கீரியின் உடல் வண்ணம் போல்..மணல் மெத்தை' எம்கிறார்.
கணவனும், மனைவியும் தேனும்..வண்டும் போல இருக்க வேண்டுமாம்..அப்படிப்பட்ட இல்லறமே சிறக்குமாம்.
அதேபோல கல்வி இல்லா பெண்களை களர் நிலத்திற்கு ஒப்பிடுகிறார்..
கல்வியில்லாத பெண்கள்
களர் நிலம்!.அந்நிலத்தில்
புல் விளைந்திடலாம்..நல்ல
புதல்வர்கள் விளைவதில்லை
கல்வியை உடைய பெண்கள்
திருந்திய கழனி
என்கிறார்.
குழந்தையைப் பற்றிக் கூறுகையில்..
பெற்ற தாயின் மடியின் மீது யாழ் கிடப்பது போல பிள்ளை ..என்கிறார்..
குழந்தைகளின் வளரும் புருவத்தை
'எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம்' என்கிறார்
எறும்புகள் செல்லும் வரிசையை புருவத்திற்கு ஒப்பிடுகிறார்.
எந்த ஒரு இலக்கியவாதியும்..உவமைகள் அற்ற இலக்கியத்தை படைக்க முடியாது..அதுபோல பாவேந்தரும் உவமைகளை விடவில்லை..
மேலே குறிப்பிட்டுள்ள சில உவமைகள் மாதிரிக்கே..இவை பாவேந்தரின்..'குடும்பவிளக்கு' காவியத்திலிருந்து எடுக்கப்பட்டது.
இவரது படைப்புகள் 1990 அரசுடமையாக்கப்பட்டன.
1970ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் இவர்.
14 comments:
பாவேந்தரை பற்றிய அருமையான தகவல்களை கொடுத்துள்ள இடுகைக்காக நன்றி.
பாரதி, பாவேந்தர் இருவரும் எனது பிரியமானவர்கள். பாரதிதாசனின் எளிமையான வரிகள், சொற்களின் வீரியம் ரொம்ப பிடிக்கும்...
பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!
பிரபாகர்...
அரிய தகவல்களை அறியதந்ததற்கு நன்றி சார்.
//அண்ணாவால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்ட பாரதிதாசனின் 120ஆம் பிறந்தநாள் விழா இன்று.//
பாவேந்தரின் பிறந்தநாளை நினைவூட்டியதற்கு நன்றி.
வருகைக்கு நன்றி Chitra
நன்றி பிரபா
//அக்பர் said...
அரிய தகவல்களை அறியதந்ததற்கு நன்றி சார்.//
நன்றி அக்பர்
//அமைதி அப்பா said...
பாவேந்தரின் பிறந்தநாளை நினைவூட்டியதற்கு நன்றி.//
வருகைக்கு நன்றி அமைதி அப்பா
மறக்க முடியுமா பாவேந்தனையும் அவர்தம் பாடல்களையும்
பகிர்வுக்கு நன்றி
இளமுருகன்
நைஜீரியா
நன்றி இளமுருகன்
இத்தலைமுறையினர் அனைவரும் தவறாமல் தெரிந்து கொள்ள வேண்டியவர் பாவேந்தர்...
அவரைப்பற்றிய அருமையான பதிவு....�
நன்றி sangvi
Congratulations!
I checked your youthful vikatan post. :-)
நன்றி Chitra
Post a Comment