Friday, April 16, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(16-4-10)

1)பேராசிரியர் ஆல்பர்ட் ஈன்ஸ்டீனிடம்..'வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி" என்று கேட்ட போது..அவர் கொடுத்த கணித சூத்திரம்
A = X+Y+Z

A.. என்பது வாழ்க்கையில் வெற்றி
X என்பது கடின உழைப்பு
Y என்பது ஆரோக்கியமான விளையாட்டு
Z என்பது அதிகம் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது

2)கால் தடுமாறினால் சமாளித்துக் கொண்டுவிடலாம்..ஆனால் நாக்குத் தவறினால் மீளவே முடியாது

3)இந்த வார விகடனில் வந்த எனக்குப் பிடித்த புதிர்..எழுதியவர் பி.கிருஷ்ணசாமி..சேலம்

ஆங்கில வசனத்தில் I am, I was என்று ஆரம்பிக்கப் பார்த்திருக்கிறோம்..ஆனால் I is என்று ஆரம்பிக்குமா?

4)கடவுள் என்பது வாய்மையும்,அன்பும் தான்..கடவுள் என்பது ஒழுக்க நெறியும், அற வழியும்தான், கடவுள் என்பது வெளிச்சத்திற்கும் வாழ்க்கைக்கும் மூல ஊற்றாகும்..கடவுள் என்பது மனசாட்சி..நாத்திகவாதிகளின் நாத்திகமாகவும் கடவுள் இருக்கிறார்

5)மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்..சிகரெட்,குட்கா போன்றவற்றின் அட்டைப்பெட்டிகளில் எச்சரிக்கும் விதமாக தேள், மற்றும் உருக்குலைந்த நுரையீரல்களின் படங்களைப் போட இருக்கிறார்கள்.ஜூன் முதல் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது.

6)பெண்களுக்கு மட்டுமே அழகுக் குறிப்புகள் வருகிறது..ஆண்களுக்கென ஏதும் இல்லையா ...
இருக்கிறது..நீங்கள் முகம் மழிக்கும் முன்..இரண்டு சொட்டு தேங்காய் எண்ணெய்யை கையில் விட்டு குழைத்து..முகத்தில் ரோமப் பிரதேசங்களில் தடவி விட்டு..பின் சோப்போ, ஜெல்லோ தடவியபின் மழிக்கவும்..கன்னம்..மழ மழ தான்

7)கொசுறு - ஒரு ஜோக்

எங்க டாக்டர் பை பாஸ் சர்ஜரி செய்துமுடித்ததும்..அது பை ஃபெயில் சர்ஜெரி ஆகிடும்

(புதிருக்கான விடை - ஆரம்பிக்கும்..'I' is the ninth letter in English alphabet)

31 comments:

VELU.G said...

அழகுக்குறிப்புக்கு நன்றி

வானம்பாடிகள் said...

/ஜெல்லோ தடவியபின் மழிக்கவும்..கன்னம்..மழ மழ தான்/

வெண்ணை 0.00 க்கு உள்குத்து இல்லையே:))

என்னதான் சொல்லுங்க. இடுகை போட சரக்கில்லைன்னா வரட்டு வரட்டுன்னு சொறிஞ்சிக்க இது உதவாது:))

எல்லாம் வழக்கம் போல சூப்பர்

வித்யா said...

அழகான பகிர்வு..

dondu(#11168674346665545885) said...

I is the eighth letter of the English alphabet.

அன்புடன்,
டோண்டு ராகவன்

முனைவர்.இரா.குணசீலன் said...

ஆண்களுக்கான அழகுக்குறிப்பா?

அடடே!!

முரளி said...

dondu sir, you meant to say "I is not the eight letter....???

:)

க.பாலாசி said...

நல்ல தகவல் தொகுப்பு... I is செம.....

முரளி said...

கால் தடுமாறினால் சமாளித்துக் கொண்டுவிடலாம்..ஆனால் நாக்குத் தவறினால் மீளவே முடியாது///

என்ன இப்படி சொல்லிட்டிங்க சார்... இப்போ எல்லாம் கால் தடுமாறினா சமாளிக்கறதை விட .. நாக்கு தடுமாறினா சமாளிக்கறது தான் easy ! மூத்த பதிவர் உங்களுக்கு தெரியாததா . :)

கே.ஆர்.பி.செந்தில் said...

இந்த தடவை சுண்டல் கொஞ்சமா இருக்கு..

பிரபாகர் said...

அய்யா,

அத்தனையும் அருமை. இந்த புதிர் எனக்கு என் மாமா சொல்லி நிறைய பேரிடம் சொல்லியிருக்கிறேன்.

எண்ணெய் தடவி ஷேவ் செய்வது பற்றிய தகவலுடன் ஒரு கூடுதல் செய்தி. குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக முகத்தில் எண்ணையை தடவிக்கொண்டு குளித்து முடித்தபின் ஷேவ் செய்து மறுபடியும் ஷவரில் நின்று வரலாம். ரொம்பவும் சாஃப்டாக இருக்கும். நிறைய ஷேவிங்குக்கு ரேசர் வரும்.

சிங்கையில் இருக்கும் அட்டைகளில் அப்படித்தான் இருக்கிறது. இங்கு வந்த எனது நண்பன் ஒரு சிகரெட் கேஸை முதலில் வாங்கி, சிகரெட்டினை வாங்கி மாற்றி வைத்துக்கொண்டு அட்டையைப்பர்க்காமல் தூக்கிப்போடுவான், அந்த அளவுக்கு பயங்கரமாக இருக்கும்.

பிரபாகர்...

Anonymous said...

:)

இராகவன் நைஜிரியா said...

கலக்கல்..

// வானம்பாடிகள் said...
என்னதான் சொல்லுங்க. இடுகை போட சரக்கில்லைன்னா வரட்டு வரட்டுன்னு சொறிஞ்சிக்க இது உதவாது:))//

இது அண்ணன் வானம்பாடிகள் டச்...

கார்க்கி said...

//dondu(#11168674346665545885) said...
I is the eighth letter of the English alphabet.//

என்ன ஆச்சு இவருக்கு?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

VELU.G
வானம்பாடிகள்
வித்யா
Dondu sir
முனைவர்.இரா.குணசீலன்
முரளி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கே.ஆர்.பி.செந்தில்
பாலாசி
பிரபாகர்
சின்ன அம்மிணி
இராகவன் நைஜிரியா
கார்க்கி

மங்குனி அமைச்சர் said...

//கடவுள் என்பது மனசாட்சி///இத தான் சார் ரொம்ப நாளா நம்புறேன் , மனசாட்சி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மங்குனி அமைச்சர்

மணிகண்டன் said...

I is the 12th letter of english alphabet.

Simulation said...

"I" is one of the vowels in English.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

மணிகண்டன்
Simulation

எம்.எம்.அப்துல்லா said...

I is a pronoun

I is a first person singular

Chitra said...

I is for Ice-cream :-)

இராமசாமி கண்ணண் said...

எல்லாம் ரொம்ப நல்லாருக்குங்க. அழகு குறிப்புக்கு ரொம்ப நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

எம்.எம்.அப்துல்லா
Chitra
இராமசாமி கண்ணண்

மோனி said...

"I" is the 5-th Letter in Engl"i"sh...

என் பங்குக்கு...
ஹி ஹி ஹி..........

மோனி said...

விகடனால “I” க்கு இவ்வளவு Problem Create ஆகும்-னு விகடனே எதிர்ப்பார்த்திருக்காது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மோனி

ரோஸ்விக் said...

நல்ல சுண்டல் சார். :-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ரோஸ்விக்

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

:)

/ஜெல்லோ தடவியபின் மழிக்கவும்..கன்னம்..மழ மழ தான்/

வெண்ணை தடவி மழித்தால் ஜெல்லொவே தேவையில்லை.

சூப்பர் மழ மழவிற்கு.:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெண்ணை தடவி மழித்தால் ஜெல்லொவே தேவையில்லை.

சூப்பர் மழ மழவிற்கு.:)///

!!!!!!