நிருபர்-(நடிகரிடம்) தொடர்ந்து உங்க படங்க தோல்வி அடையுதே..உங்க தோல்வியின் ரகசியம் என்ன?
2)தலைவர்-(வாக்கு சேகரிக்கும் வீட்டில்) நான் உங்க வீட்டுப் பிள்ளை
வாக்காளர்-ஐயோ..வேணாம்யா..ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை வைச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்
3)மன்னர்-(அமைச்சரிடம்) மந்திரியாரே!..யானை ஏற்றம் தெரியும்..குதிரை ஏற்றம் தெரியும்..ஆனால்..விலைவாசி ஏற்றம் என்கிறார்களே...அப்படி என்றால் என்ன
4)கோமா நிலையில் உள்ள நம்ம தலைவர் திடீர்னு எழுந்தா என்ன ஆகும்
'கோமா வெற்றி கொண்டான்'னு பட்டம் தரச்சொல்லி..பாராட்டுவிழாவும் நடத்தச் சொல்லுவார்
5)தயாரிப்பாளர்-(கதாசிரியரிடம்) உங்க கதையைச் சொல்லுங்க
கதாசிரியர்-கதாநாயகி ஒரு ஏழை..உடுத்தக் கூட கந்தல் துணிதான்..அதுல அவ அரை நிர்வாணமாத்தான் தெரிவாள்..
தயாரிப்பாளர்-அடடா..ஆரம்பமே..அசத்தலான கதை சார் இது
6)லீவு வேணும்னு கைல காயம்னு கட்டு கட்டிண்டு போனியே..என்ன ஆச்சு..
என் மேலதிகாரி..'காயமே இது பொய்யடா' ன்னு சொல்லிட்டார்
7)டாக்டர்..போலி மருந்துகள் அதிகம் வர ஆரம்பிச்சுடிச்சே..
போலி மருத்துவர்கள், போலி மருந்துகள்..ம்..ம்..வர வர மருத்துவமே போலி ஆயிடுச்சு..நாட்டில போலி மருத்துவக் கல்லூரிக் கூட எங்கயாவது இருக்கலாம்..அது எப்போ வெளியே வரப்போவுதோ?
16 comments:
//யானை ஏற்றம் தெரியும்..குதிரை ஏற்றம் தெரியும்..ஆனால்..விலைவாசி ஏற்றம் என்கிறார்களே...//
இவர்களுக்கு (மாதம் மும்மாரி) மழை பெய்ததா என்பதையே கேட்டுதான் தெரிந்து கொள்கிறார்கள்,விலைவாசி பற்றி எங்கு தெரிய போகிறது.
வாய் விட்டு சிரித்தேன்
இளமுருகன்
நைஜீரியா
"தலைவர்-(வாக்கு சேகரிக்கும் வீட்டில்) நான் உங்க வீட்டுப் பிள்ளை
வாக்காளர்-ஐயோ..வேணாம்யா..ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை வைச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்"
நல்ல ஜோக்!!:-D
வழக்கம் போல் இருக்குங்கய்யா!
தோல்வியின் ரகசியம் ஹா...ஹா...
பிரபாகர்...
விஜயை ஏன் ஐயா கேக்கறீங்க...
அவரே என்ன செய்றதுன்னு தெரியாம முழிக்கிறார்
ha,ha,ha,ha.... good jokes.
ஜோக்குகள் அனைத்தும் அருமை சார்.
very good Jokes.....
//லைவர்-(வாக்கு சேகரிக்கும் வீட்டில்) நான் உங்க வீட்டுப் பிள்ளை
வாக்காளர்-ஐயோ..வேணாம்யா..ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை வைச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்//
arumai thala
தோல்வியே வெற்றியின் முதல் படிக்கட்டு என்பதை தவறா புரிஞ்சுகிட்டாரோ...
4 வது ஜோக் - கலக்கல். உள்குத்து எதுவுமில்லை என நம்புகின்றேன்.
5 பிழைக்கத் தெரிந்த கதாசிரியர்.
/////////நிருபர்-(நடிகரிடம்) தொடர்ந்து உங்க படங்க தோல்வி அடையுதே..உங்க தோல்வியின் ரகசியம் என்ன?
2)தலைவர்-(வாக்கு சேகரிக்கும் வீட்டில்) நான் உங்க வீட்டுப் பிள்ளை
வாக்காளர்-ஐயோ..வேணாம்யா..ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை வைச்சுக்கிட்டு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்
///////
இது நகைச்சுவை என்றாலும் . உண்மையில் இதுதான் பலரின் உண்மையான நிலை .
கலக்கல்ஸ்
வருகைக்கு நன்றி
இளமுருகன்
Vijay Ramaswamy
பிரபாகர்
கே.ஆர்.பி.செந்தில்
chitra
வருகைக்கு நன்றி
அக்பர்
Sangkavi
LK
இராகவன் நைஜிரியா
வருகைக்கு நன்றி
.பனித்துளி சங்கர்
Bala
அருமை சார்.:)
//'மனசேதான் கடவுளடா'
எனது 'சௌம்யா' குழுவினரின்'மனசேதான் கடவுளடா' என்னும் நாடகம்(என் கதை,வசனம்,இயக்கத்தில்)25-4-10 அன்று மாலை 7 மணிக்கு 'நாரத கான சபா; அரங்கில் நடைபெறுகிறது.நாடகத்திற்கு அன்புடன் அழைக்கிறேன் //
வாழ்த்துகள் சார்..:))
////ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
அருமை சார்.:)
//'மனசேதான் கடவுளடா'
எனது 'சௌம்யா' குழுவினரின்'மனசேதான் கடவுளடா' என்னும் நாடகம்(என் கதை,வசனம்,இயக்கத்தில்)25-4-10 அன்று மாலை 7 மணிக்கு 'நாரத கான சபா; அரங்கில் நடைபெறுகிறது.நாடகத்திற்கு அன்புடன் அழைக்கிறேன் //
வாழ்த்துகள் சார்..:))////
நன்றி ஷங்கர்
Post a Comment